3 months 2 weeks ago
இது உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளை மேலே தெளிவாக எழுதியுள்ளேன் எல்லோரும் ஒரே கருத்துகள் ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருக்க முடியாது கூடாது புதிய சிந்தனைகள் கருத்துகள் உருவாக. வேண்டுமாயின் எதிர் கருத்துகள் உடையவர்கள் களத்தில் யாழ் களத்தில் இருக்க வேண்டும் அப்போ தான் எங்கள் சித்தனைகளை கருத்துகளாக எழுத முடியும்,....அதற்காக பதிலையும் நாங்கள் பெற முடியும் அங்கே புதுக் கருத்துகள் பிறக்கும் நன்றி வணக்கம் 🙏
3 months 2 weeks ago
நீங்கள் சொல்வதும் சரி அக்கா ஆனால் அங்கை இருக்கும் ஆம்பிளைகள் தமிழ் நாட்டு ஆம்பிளைகளை போல் குடிக்கு அடிமை ஆகி விட்டினம்..............உழைக்கிற காசு பாதி அவர்களின் குடிக்கே போய் விடுது...............இப்பத்த உணவு பெருட்களின் விலைவாசியை உணர்ந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து தகப்பன் மார் பொறுப்புடன் நடந்து கொள்ளனும்..................போன வருடம் மூக்கு முட்ட குடித்து விட்டு மட்டக்களப்பில் ஒரு குடும்ப தறுதலை வீட்டையே நெருப்பால கொழுத்தினவர்....................கனடாவில் வசிக்கும் அண்ணா தான் அந்த வீட்டை கஸ்ரப் பட்ட குடும்பத்துக்கு கட்டி கொடுத்தவர் பல லச்சத்தில்..................நல்ல வேலை மனைவி பிள்ளைகள் ஓடி தப்பி விட்டினம் வீட்டுக்கை நின்று இருந்தால் அவையையும் கொழுத்தி இருப்பான்...................தலைவர் வாழ்ந்த காலத்தில் இப்படி கொடுமைகள் நடந்ததில்லை..............................
3 months 2 weeks ago
கே.பி. ரத்நாயக்க போன்றோர் படித்திருக்கின்றார்கள், அண்ணா. இவை யாவும் ஆங்கில மொழிக் கல்வி இருந்த காலத்திலேயே நடந்தவை என்று நினைக்கின்றேன். ஹாட்லியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி இருக்கின்றது. அங்கே தனியாகவே இவர்கள் தங்கியிருக்கக்கூடும். இந்தப் பாடசாலை ஒரு காலத்தில் கல்விக்கு மட்டும் இல்லாமல், கடுமையான ஒழுக்க விதிகளை கொண்டதாகவும் இருந்தது. சில மிகப் பழைய அதிபர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதே ஒரு மரியாதையுடன் கூடிய பயம் தெரியும், உதாரணம்: அதிபர் பூரணம்பிள்ளை. இதன் காரணமாகவே இங்கு வந்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அன்று யாழ் நகரில் இருந்த எந்தப் பாடசாலையை விடவும் இங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்திருக்கக்கூடும், அதை பல பெற்றோர்கள் விரும்பியும் இருக்கக்கூடும். சுயபாஷா கல்விக் கொள்கை வந்த பின், இப்படி வந்தவர்கள் மிகக்குறைவு அல்லது முற்றாகவே இல்லை என்று நினைக்கின்றேன். 1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்களாக வர ஆரம்பித்த பின் எந்தப் பாடசாலையுமே தப்பவில்லை. விதிவிலக்காக ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைகளிலும் கவனமெடுத்து படிப்பித்தார்கள். இந்தக் காலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து படிக்க வந்தவர்கள் தனியார் கல்வி நிலையங்களில், அதிலும் குறிப்பாக சில ஆசிரியர்களிடம் , படிக்கவே வந்தார்கள். பாடசாலைகள் அதே பழைய பெயர்களுடன் ஏனோ தானோ என்று இயங்கிக் கொண்டிருந்தன.
3 months 2 weeks ago
வாத்தியார் 50 ஆகிறது. நான் அதிலும் வீக்.
3 months 2 weeks ago
புதிய லக்சரி பஸ் வாங்கி அதனை உல்ல்லாசவாகனமாக்கி...பாடசாலை மாணவிகளை பலவந்தமாக கடத்திச் சென்று...அட்டகாசம் புரிந்த நாமல் இன்று மற்றவர்களுக்கு துணிந்து பார்மென்டில் கதைபதற்கு யார் காரணம்... எமது மக்கள் போரினால் பாதிக்கப் பாடு வன்னியில் கம்பிவேலிக்குள் அடைபட்டிருந்தநிலையில்லும் தினமும் வதைபடும் பெண்களை..தந்து இச்சைக்குள்ளாக்கின ரிசாத்து அவையில் அமசடக்காக இருப்பதற்கு யார் காரணம்.. கிழக்கில் வலிமைகுறைந்த தமிழரின் காணிகளை காவாலித்தனத்திமூலம் பறிப்புச்செய்து ..நிலச்சுவாந்தராகிய புல்லாமூச்சுவிடாமல் இருப்பது ஏன்.. இப்படிபலர் அனுரவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபடியால்...தமிழருக்கு சண்டித்தனம் காட்ட அவையில் இருக்கினம்...இவர்கள் செய்த ஊழல்கள் அரசுக்கு தெரியும் ...வாய்மூடி இருக்கினம்...தமிழர் என்றால் மட்டும்...பாயும் நடவடிக்கை
3 months 2 weeks ago
உண்மை தான் பெரியப்பர் செலவிடும் நேரம் அதிகம் தான்.................அதை புரிந்து கொண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கலந்து கொண்ட உறவுகள் ஜபிஎல் போட்டியிலும் கலந்து கொண்டால் சிறப்பாய் இருக்கும்.................10க்கு மேல் பட்ட உறவுகள் போட்டியில் கலந்து விட்டினம்.................இன்னும் 14 , 16 பேர் கூட கலந்து கொண்டால் நல்லா இருக்கும்...................... நாளைக்கு இரண்டு பேரை லாறியில் ஏற்றி தன்னும் இந்த திரிக்குள் கொண்டு வந்து இறக்குவேன் லொள்😁👍..............................
3 months 2 weeks ago
1 வெளிநாட்டு காசுல சொகுசா வாழ பழகிவிட்டினம் 2. உடலைவளைச்சு வேலை செய்ய விருப்பமில்லை. 3. இப்ப பெண்கள்க்கு சமைக்க விருப்பமில்லை ஓடர் பண்ணி பிள்ளைகளுக்கு கொடுத்திட்டு சாப்பிட பழகிவிட்டினம் 4. டிக் டொக் க்கும் செல் போன் உம கெடுத்துவிட்ட்து .
3 months 2 weeks ago
வவுனியவில் வசிக்கும் ஜயா பல ஏக்கரில் தோட்டம் செய்கிறார் வேலைக்கு ஆட்கள் தேவையாம் , வேலைக்கு வார ஆட்கள் இரண்டு நாள் தொடர்ந்து வருவாங்கள் பிறக்கு சொல்லம கொள்ளாம வேலைக்கு வரமாட்டினம் , எப்படி இவையை நம்பி நான் தோட்டத்தை கொண்டு நடத்த முடியும் என்று அந்த வயது போன ஜயா வேதனை பட்டார்...............அப்படி இருந்தும் தனக்கு வேலைக்கு ஆட்கள் இன்னும் தேவையாம்........................எங்கடை ஈழ மக்களுக்கு உழைச்சு முன்னுக்கு வரத் தெரியாது ஈழப்பிரியன் அண்ணா.........................மாதத்தில் 31 நாளில் 27 நாள் தன்னும் வேலை செய்தால் 54ஆயிரம் ரூபாய் உழைக்கலாம்................... நல்ல காசு அதோட மனைவி மார் சிலரின் வீட்டு வேலைக்கு போனால் 4 , 5 மணித்தியாலம் செய்தால் 700ரூபாய் கொடுப்பினமாம்..............அப்படி எங்கட ஈழ மண்ணில் பல வசதி இருக்கு.................................
3 months 2 weeks ago
இப்போ புலிகள் இல்லை, இதையே ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் வங்குரோத்து நிலையே நாடு குட்டிசுவராகி கள்ளரும், கொலைகாரரும் கடத்தல் காரரும் உருவாகி பெருகக் காரணம், உருவாக்கி வளர்த்தவர்களும் அவர்களே. அவர்கள் ஆட்சி நாட்டின் நன்மை கருதி நிஞாயமாக நடந்திருந்தால், நாட்டில் இப்படியான பிரச்சனைகள் உருவாகாமல் தன்னிறைவு கண்டிருக்கும். இனக்கலவரங்கள் நடந்தது தவறில்லை, அதிகாரங்கள் பறிக்கப்பட்டது, துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தவறில்லை, அதை தடுத்தது தவறு. இப்படியான மனநிலை உள்ள இவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?
3 months 2 weeks ago
உலக மகா அதிசயம் பிரியன்....உறுதி... நான் குடிப்பதில்லை ..சிகரட் பிடிப்பதில்லை என்பதில் உறுதியாகா இருந்த்தேன் ...கனடாவந்து 35 வருடம் ...தண்ணி மன்னர்கள் ..ஊதுவோர்கள் மத்தியிலும் ,நக்கல் நளினங்களை கேட்டபடி கோக் குடித்துக் கொண்டிருக்கின்றேன்...குடித்து கும்மாளம் அடிப்பவன் பல் விசயம்களை சாதிப்பார்கள்... அது எனக்கு முடியாமலிருக்கிறது.. கடவுளை நம்புங்கள்...கைவிடப்படமாட்டீர்கள்....எல்லாம் அவனாலேதான் நடக்கும் 60 வய்தும் 10 மாதமும் ...
3 months 2 weeks ago
ஒரு நபரல்ல, பல நபர்கள் பல குற்றங்களில் சிக்கியிருக்கிறார்கள். "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்." எல்லா தமிழர்களையும் புலி என்று அடையாளப்படுத்தி கொன்று குவிக்கும்போது எங்கே போனது உந்த வாதம்? அது உங்களை புனிதர்களாக்குவதற்கே! அதை நீங்கள் யாராவது செய்திருந்தால், இங்கு யாரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் ஆதங்கமெல்லாம் இவற்றை பேசிக்கொண்டிருப்பதால், உங்கள் எதிர்கால அரசியல் கனவு சிதைக்கப்படுகிறேதே என்பதேயாம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து நாட்டை சீரழித்ததன் இரகசியம் அதுதான். அவரே சொல்லியிருக்கிறார், "மஹிந்தவை மின்சாரக்கதிரையிலிருந்து காப்பாற்றியது தனது அரசாங்கமே." என்று. பட்டலந்த தண்டனையிலிருந்து அவரை காப்பாற்றியது அடுத்து வந்த அரசாங்கம். எல்லோரின் கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. அப்போ, நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? இழுத்து மூடுங்கள்! அவர்கள் தண்டிக்கப்படவேண்டும், நீங்கள் தண்டிக்கப்படக்கூடாது. நல்லாய் இருக்கு உங்கள் சித்தாந்தம்! படிக்காமல், பரீட்சை எழுதாமல், சித்தியடைந்த சட்டத்தரணி விவாதம் அப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.
3 months 2 weeks ago
உண்மையில் இது அப்பா பிள்ளைதான்... இனி நீங்களே முடிவு பண்ணுங்க...காலம் பொன்னானது புத்தரே...பெயருக்காக இலங்கைப் புத்தர்போல் இருக்கவேண்டிய அவசியமில்லை...போடுங்க டிக்கட் ஈசாவுக்கு...இது ஒரு பக்தியுடன் கூடிய ஆன்மீக அழகான சந்திப்பாக அமையும்...
3 months 2 weeks ago
இந்தத் திரி ஆரம்பித்த போதே எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு வரி அர்ஜுனா ஒரு விசச் செடி அல்ல விஷயம் தெரியாத சாடியும் அல்ல அரசியலில் பக்குவம் பெறாத ஒரு மனிதன் இது தான் உண்மை அதனால் என்னுடைய வேண்டுகோள் தலையங்கத்தை மாற்றி விடுங்கள் ஓணாண்டியார்
3 months 2 weeks ago
இல்லை இருந்தாலும் பதிலுக்கு நன்றி 😂
3 months 2 weeks ago
நிச்சயமாக... தேர்தலின் முன்னர் அவரின் நடவடிக்கைகளை கவனித்து வைத்தியர் அர்ச்சுனாவை.... அவர் இப்படித்தான்.... என்ற பார்வையில் தான் எனது ஆதரவை அவருக்கு வழங்கியிருந்தேன். தேர்தலில் வென்ற பின்னரும்.... சரி.... வெற்றிக் களிப்பில் சில வார்த்தைப் பிரயோகங்கள் வரும் என்று நினைத்தேன் . ஆனாலும் அவர் தொடர்ந்தும் பாராளு மன்றத்தில் செய்த காரியங்கள் (முதல் நாள் அல்ல சஜித்துடனான முரண்பாடும் அல்ல) எனக்குச் சரியாகப் படவில்லை. சக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களை நையாண்டி செய்வது ஒரு உதாரணம். பின்னர் அதன் உச்ச கட்டமாக தன்னைவிடப் பெரியவர்கள் இந்த மன்றத்தில் இல்லை என்ற தொனியில் கேம் கேட்டார் அத்துடன் இஸ்லாமியர்கள் இழிவானவர்கள் என்ற அவரின் கருத்து இன்னும் காட்டமானது அவர் தனது பிழைகளை திருத்தி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலைச் செய்வார் என்ற நம்பிக்கை மனதில் ஒரு மூலையில் இருந்தாலும்..... இப்படியான பிழைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது அவர் தனது குறைகளை சரி செய்து மீண்டு வரும் போது எனது ஆதரவு எப்போதும் அவருக்கு கிடைக்கும்.
3 months 2 weeks ago
இன்னுமிரு மாதத்தில் உங்கள் 60 ஆவது பிறந்தநாள்.😁
3 months 2 weeks ago
போரால் வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் இப்படியான விளைவுகள் எதிர்பார்த்தவையே. இதைத்தான் சொல்லுறது "பனையாலை விழுந்தவனை மாடேறி உழக்கியது." என்று. தன்னம்பிக்கையற்ற ஆண்களின் இலக்கு, பெண்கள். அவர்களின் எழுச்சியை பொறுக்க மாட்டார்கள், எல்லாவிதத்திலும் அடக்கி, ஒடுக்கி மேலெழ விடாமல் கலாச்சாரம் என்கிற வேலிக்குள் அடைப்பார்கள். முன்னேற முயற்சிக்கும் சமுதாயத்திற்கு இது நல்லதல்ல.
3 months 2 weeks ago
அரசியல் போட்டியால் ஸ்டாலினுக்கு அவமரியாதை ஏற்படுத்தவே இந்த வதந்தியை பரப்பினார்கள் என்பது முற்றிலும் உண்மை.
3 months 2 weeks ago
நான் பத்து வருடங்கள் புகை பிடித்து அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர் மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர் இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் . இப்போது முக்கியமான கேள்வி..... எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄
3 months 2 weeks ago
வருடா வருடம் தைப்பொங்கல்,தீபாவளி பண்டிகைகள் வருவது போல்... வெளிநாட்டு ராஜதந்திரிகளும் சம்பந்தன்,சுமந்திரன் குழுக்களை வருடாவருடம் சந்தித்த வண்ணமே இருக்கின்றனர்.இதன் மூலம் பலாபலன்கள் ஏதாவது நடந்துள்ளதா? இல்லையே.... ஆட்சி மாற்றத்திற்கான சந்திப்பு என இலங்கையில் இருந்து ஒரு செய்தி வந்தது. ஒரு வேளை உண்மையாக இருக்கலாம்.