நல்ல வேலை நல்ல சம்பளம் இருந்தும் தாய்மண்ணுக்கு ஏதாவது பயனுள்ள விடயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். தான் மட்டுமல்லாது தன்குடும்பத்தையே இந்த விடயத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். அந்த மனசுதான் கடவுள்.
ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக மேற்குறித்த சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளேன். படிமங்கள் புதிய படிமங்களைப் பதிவிடக்கூட அச்சமாக உள்ளது, அவையும் இதே போன்று ஆகிவிடுமோ என்று!
அது தானே பார்த்தேன் ,வன்னி,யாழ் நகரில் இல்லாத ஒற்றுமை ஏனைய பிரதேசத்தில்...அதாவது தமிழர் என்ற அடையாளத்துடன் ஒருத்தனும் அர்சியல் செய்யக் கூடாது என்பது இவரின் கொள்கை போல
நடக்கும் அதற்கு நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக மாறி அதன் பின்பு உங்கள் மதஅடையாளத்தை இழக்க வேண்டும் ...அதற்கு முதல் உங்களுடைய பெயர் "ஈழப்பிரியன்"என்பதை துறக்க வேணும் தயாரா?
கோசான் கொஞ்சம் முதல்த் தான் சேகருடன் பேசினேன். வரிகளைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது. எனக்கு யாருடனும் கோபம் இல்லை அண்ணா செய்யலாம் ஆனால் இதே மெலோடியில் செய்ய விருப்பமில்லை என்றார். இரவு வேலைக்கு வேளிக்கிட்டுக் கொண்டிருந்ததால் அதிகம் இதைப்பற்றி பேசவில்லை. அத்தோடு இசைபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இருவருக்கும் பாலமாக இருப்பதில் எதுவும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன எப்படி வேண்டும் என்பதை விபரமாக எழுதி அனுப்புங்கள்.
@ரசோதரன் 64) வது கேள்விக்கு பதில் இல்லை. RCB அல்லது SRH. எது உங்கள் தெரிவு? எப்படியும் ஒரு அணிக்குக் கொடுப்பார்கள். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தால் மூன்று புள்ளிகள் கிடைக்கக்கூடும். இல்லாவிட்டால் இந்தக் கேள்விக்கு மூன்று முட்டைகள்தான்!
😅 உண்மை அண்ணை. முற்றும் துறந்து ஞானியானாத் தான் பிரச்சினை என்று பாத்தால், இல்லை, முயலுக்கு நாலு கால் தான் என்றாலும் பிரச்சினையாகவெல்லோ இருக்கு. உது பாதி ஆன்மிகம் பாதி சுய எள்ளல்.
@ஏராளன் , உங்கள் தெரிவுகளின்படி CSK நேரடியாக இறுதிப் போட்டிக்குப் போய்விடும். இறுதிப் போட்டியில் KKR வெல்லும் எனக் கணித்துள்ளதால் 76)க்கு KKR பொருத்தமாக வரும். மாற்றவா அல்லது அப்படியே விட்டுவிடவா?
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நெடுக்காலபோவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்வதுடன், ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@வாதவூரான் , உங்கள் தெரிவுகளின்படி 75) ஆவது கேள்விக்கான பதில் KKR அல்லது SRH. ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். அல்லது இப்போது உள்ளமாதிரியே விடலாம் 76) கேள்விக்கு RR (CSK 74 க்கான பதில் என்பதால்) அல்லது 75) க்கான திருத்திய பதிலில் ஒன்றாக இருக்கவேண்டும். மாற்ற விரும்பினால் சொல்லுங்கள்.