3 months 2 weeks ago
🤣............. இந்த திரியில் எது மெயின் டிராக், எது காமடி டிராக் என்று பிரிக்க இயலாத அளவிற்கு இரண்டும் பின்னிப் பிணைந்து போய்க் கொண்டிருக்கின்றன............... நண்பனும் அப்படித்தான்................ பிரிவினை இல்லாதவன், எவராவது கதையுங்கள் என்று இருந்தான். நோக்கம் எல்லாம் ஒன்று தான்.............. வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை நோக்கியதே........ முடிவும் அதே தான்.............. அந்தப் பிள்ளை வீட்டில் பார்த்த ஒருவரை கட்டிக்கொண்டு போனது.....
3 months 2 weeks ago
ஐ பி எல் போட்டிகளில் 12 நபர்கள் விளையாடலாம் (பொதுவாக கிரிக்கெட்டில் 11 நபர் விளையாடும் ஆட்டம்). இந்த பன்னிரண்டாம் ஆட்டக்காரரை (Impact player) இன்னொரு வீரருக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான நூர் அகமடினை இந்த ஆண்டு வாங்கியுள்ளார்கள், அவரை பந்து வீசுவதற்கு மட்டும் பயன்படுத்தி அவருக்கு பதிலாக வேறு ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை 12 ஆவது வீரராக தெரிவு செய்யலாம். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான இலங்கை பந்து வீச்சாளர் மதீச பத்திரன தனது பந்து வீச்சு பாணியினை மாற்றியுள்ளார் எனவும் (தற்போது லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணி) அதனால் அவர் முன்னர் போல் (முன்னர் லசித்தினை விட கிடையாக வீசுவார்) அவரது பந்து வீச்சு இல்லை என கூறப்படுகிறது. அவுஸ்ரேலிய வேக பந்து வீச்சாளரரான நாதன் எலிஸ் சென்னை அணியில் உள்ளார், இறுதி ஓவர்களில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய எலிஸை சென்னை பயன்படுத்துமா என தெரியவில்லை. மொத்தமாக 14 போட்டிகள் கொண்ட ஐ பி எல் போட்டிகளில் தெரிவு போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தமது மைதானத்தில் 7 போட்டிகள் விளையாடுகின்றன, இதில் 5 போடிகளையும் தமது மைதானத்திற்கு வெளியே 3 போட்டிகளையும் வென்றால் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகலாம். சென்னை ஆடுகளம் மெதுவாக இரட்டை தன்மை கொண்ட ஆடுகளமாக கடந்தகாலத்தில் இருந்துள்ளது, கடந்த ஆண்டில் வேக பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள், ஆனால் இந்த ஆண்டு ஜடேயா, அஸ்வின், நூர் அகமட் என 3 முண்ணனி சுழல் பந்து வீச்சாளர்களை சென்னை அணி கொண்டுள்ளது. நூர் அகமட், குல்தீப் போல இடது கை மணிக்கட்டினால் சுழல் பந்து வீசும் பந்து வீச்சாளர். சென்னை அணியே குறைந்த ஓட்டங்களை ஆரம்ப ஓவர்களில் பெற்ற அணியாக உள்ளது, ஆனால் இறுதி ஓவர்களில் மிக அதிக ஓட்டங்களை பெற்ற அணியாகவும் உள்ளது. ஒப்பீட்டளவில் அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணியாக சென்னை அணி இல்லாது இருப்பினும் எப்போதும் போல அரை இறுதிப்போட்டிக்கு இம்முறையும் தெரிவாகுமா(சென்னை வெல்லும் என கணித்துள்ளேன்)?