3 months 2 weeks ago
ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣. அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣. நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி. குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏 நல்லது நானும் ஒரு தொழிலாளராக. விண்ணப்பிக்கிறேன். .....வேலை ஒப்பந்தை. பதியுங்கள். பார்ப்போம்
3 months 2 weeks ago
பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்குமிடையேயான இன்றைய போட்டி மழையினால் பாதிப்புள்ளாகும் என கூறப்படுகிறது. ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெறவுள்ளது இந்த மைதானம் குறுகிய எல்லைகள் கொண்ட அதிக ஓட்டங்களை எடுக்க கூடிய மைதானம், பெங்களூரு அணியின் முதல் இரு போட்டிகளும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் இடம் பெறவுள்ளது ஆனால் பெங்களூரு அணியில் குருணல் பாண்டியாவும் பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனும் சுழல் பந்து வீசும் நிலை காணப்படுகிறது. பெங்களூருவின் இரண்டாவது போட்டி சென்னையில் இடம் பெறுகிறது. பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் காணப்படுகின்ற நிலையில் பெங்களூரு அணி சுழல் பந்து வீச்சில் பின் தங்கிய நிலையில் காணப்படுவது அதன் அரையிறுதி போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். மறுவளமாக கொல்கத்தா அணி மிக சமனிலை கொண்ட அணியாக காணப்படுகிறது, இந்த போட்டி பெங்களூரு அணி எவ்வாறு மத்திய ஓவர்களில் சுழல் பந்து வீச்சினை பயன்படுத்துகிறது என்பதனை பொறுத்தி சென்னை அணியினுடனான தனது அணித்தெரிவில் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் முக்கிய மத்திய ஓவர்களில் சரியான சுழல் பந்து வீச்சில்லாமல் இந்த தொடரை பெங்களூரு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. மற்றைய அணிகளை விட பெங்களூரு அணி 20 ஓட்டங்களை அதிகம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.