3 months 2 weeks ago
பட்டிலந்த விவகாரம் பேச முடியும் என்றால்,சிங்கள பயங்கரவாத ஜெ.வி.பி யினரின் செயல்களை அங்கிகரிக்க முடியும் என்றால் இனஅழிப்பும் பேசப்பட வேண்டும்...இவற்றை பேசாமல் பக்க சார்பாக பேசுவது என்பது சிங்கள அதிகார வர்க்கத்தின் அதிகார போக்கு ... எனது பார்வையில் ...இடதுசாரிகள் செய்தால் சரி மற்றவர் செய்வது எல்லாம் பிழை என வாதாட வேண்டிய வசியமில்லை... மலையக தமிழர்,சாதி வேறுபாடு,வர்க்க வித்தியாசம் என கூறுவது முப்போக்கு என இலங்கை கொம்னிஸ்ட் கட்சி காலத்திலிருந்து இன்று வரை சொல்லிகொண்டே இருக்கின்றோம் ..ஆனால் இன சுத்திகரிப்பில் எந்த வித மாற்றமும் இல்லை ...
3 months 2 weeks ago
முதலமைச்சர் நானே நேற்றிலிருந்து வெளிக்கிட்டு இருக்கிறேன். இடையில் இருந்து கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ? திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG நாளைக்கு லக்னோ வெல்லுது. ஈழப்பிரியன் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பான். டெல்லிக்கு ஆதரவு கொடுத்து பிரட்டுற வேலை ஒன்றும் வைக்கக் கூடாது.
3 months 2 weeks ago
அரசியல் தலைவர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது
3 months 2 weeks ago
மூன்று காணியை இரண்டு நாட்களில எழுதேலாது. என்ன செய்வம்? பெரிய அன்ரியின் பெயரில் எழுதுவமா என்கிறேன். ஒருத்தற்ற பெயரிலையும் வேண்டாம். நீ நிண்டு காணியை எழுதிவிட்டு வா. நாங்கள் முதல் போறம் என்கிறார் ஆத்துக்காரர். என் ஒன்றுவிட்ட தங்கையின் கணவர் கொஞ்சம் விபரம் தெரிஞ்சவர். எந்த லோயர் உடனே செய்து தருவார் என்று கேட்க, மணிவண்ணதான் உடனே செய்துதரக்கூடிய ஆள். அவர் எனக்கு நன்கு தெரிந்தவர். நான் நாளை உங்களைக் கூட்டிக்கொண்டு போறன் என்கிறார். ஒரு மாத விடுமுறையில் வந்த நான் இன்னும் மூன்று வாரங்களுக்கு நிற்கும்படி கடவுச் சீட்டை மாற்றிவிட்டு நிக்க, ஒரு ஏழு நாட்களுக்குள் காணி என் பெயரில் எழுதியாச்சு. மின்சாரத்தையும் என் பெயரில் மாற்றிவிட்டு சோலை வரிக்குப் பதியப் போனால் அது உடனே முடியும் காரியமாக இருக்கவில்லை. வீட்டில் இருக்கும் பெடியனிடம் சோலை வரியையும் கரண்ட் காசையும் ஒழுங்காகக் கட்டிவிட்டு எனக்கு வைபரில் படம் எடுத்துப் போடுங்கோ என்று கூறி மாத வாடகை 3000 ரூபாய் என்று வாடகை ஒப்பந்தமும் எழுதிவிட்டு வந்தாச்சு. அதன் பின் ஏழு தடவை நான் வாங்கிய வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டில் வங்கியில் வேலை செய்யும் அந்தப் பெடி, அவர் தாய், சகோதரி மூவர் மட்டும்தான். நான் போகும்போது அந்தத் தம்பி வேலைக்குப் போய்விடும். நான் போய் வளவை ஆசை தீரப் பார்த்துவிட்டு மாமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலிலும் ஆடிவிட்டு வந்துவிடுவேன். ஓட்டோவில் அங்கு சென்று வர 1000 ரூபாய்கள். வளவுக்குள் சென்றாலே அங்கு அதை நட்டால் நன்றாய் இருக்கும். இதை நட்டால் நன்றாய் இருக்கும் என்று மனதில் கற்பனை ஓடினாலும் நிற்கும் சில நாட்களில் எதுவும் செய்ய முடியாது என்று மனதை ஆறுதல் படுத்தியபடி லண்டன் வருகிறேன். அவர்கள் ஒழுங்காக வாடகை, கரண்ட் பில் எல்லாம் கட்டிக்கொண்டுவர அதன்பின் காணியைப் பற்றிக் கவலைப்பட எனக்கு நேரம் இருக்கவில்லை. அதன்பின் ஐந்து ஆண்டுகள் பிள்ளைகளின் திருமணம், வேலை, பல்கலைக்கழகப் படிப்பு என்று ஓடிப்போக அதன்பின்னர்தான் எனக்கு மீண்டும் ஊரில் போய் இருக்கும் ஆசை தலைதூக்க ஊருக்குப் போகப்போறன் என்று அடிக்கடி கூற ஆரம்பிச்சன். கணவருக்கும் ஊரில் போய் இருந்து நிறைவேற்றவேண்டிய பல ஆசைகள் இருந்ததுதான். ஆனாலும் ஏதோ ஒரு பயமும் இருக்க எதிர்மறையாக ஏதாவது சொல்ல ஆரம்பிக்கிறார் எப்போதும். இப்ப உழைக்கிற காலத்தில உழைக்கவேணும். இன்னும் ஒரு ஐந்து ஆண்டில் எனக்குப் பென்ஷன் எடுக்கலாம். அதுக்குப் பிறகு போவம் என்று நான் ஊர்க் கதை எடுக்கும் நேரம் எல்லாம் கூறிக்கொண்டிருக்க, எனக்குக் குடும்பத்தோடு இருந்து அலுத்துப்போச்சு. நான் ஊரில போய் இருக்கப்போறன் என்று ஆரம்பிச்சன். முதலில் மறுத்த கணவர் என் நச்சரிப்புத் தாங்காமலும் பிள்ளைகள் எனக்குச் சாதாகமாகக் கதைத்ததனாலும் சரி என்று தலையாட்டினாலும் வேலையை ஒரேயடியா விட்டிட்டுப் போகப்போறியா? திரும்ப வந்தால் உப்பிடி வேலை எங்க எடுப்பாய்? எவ்வளவு காசு நட்டமாகும் தெரியுமோ என்று திரும்பத்திரும்பப் புலம்பினாலும் நான் என் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளாமல் அதிலேயே நிற்க, கணவருக்கு பிள்ளைகள் ஒழுங்காகச் சமைத்துக் கொடுப்பார்களா என்ற யோசனையும் எழ மனதில் குற்ற உணர்வும் எழுகிறது. “அப்பா உங்களுக்கு நாங்கள் உங்களுக்குச் சமைத்துத் தாறம். அம்மா போயிற்று வரட்டும் என்று கூற அதற்குப் பின் கணவர் தடை போடவில்லை. என் நண்பனின் தபாலகத்தில் வேலை செய்ததால் அவரிடம் ஆறு மாதம் லீவு கேட்க, “நல்ல ஒரு மனிசிதான் நீர், பிள்ளையளையும் புருசனையும் தனிய விட்டிட்டு ஆம்பிளையள் செய்யிறமாதிரி அங்க போய் ஆறுமாதம் நிண்டிட்டு வரப்போறீரோ. நீர் வரும் வரையும் வேலை காத்திருக்காது. எதுக்கும் யோசியும்” என்று கூற, நான் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறேன். வீட்டில் இருந்தவர்களும் தாம் புதிதாக வீடு வாங்கப் போகிறோம். ஒரு ஐந்து ஆறு மாதங்களில் போய்விடுவோம் என்று சொல்ல அது எனக்கு நல்ல வாய்ப்பாகப் போய்விடுகிறது. நானும் வாங்கிய காணியையும் வீட்டையும் வடிவாப் பார்க்கவில்லை. நானும் வாறன் என்று கணவர் கூறுகிறார். ஐந்து ஆண்டுகளின் பின் செல்லப்போகிறேன். நான் ஆறு மாதகாலம் நிற்க தேவையான பல பொருட்களையும் ஆட்களுக்குக் கொடுக்க சொக்கற், பிஸ்கற், சோஸ், சூப் வகைகள், இன்னும் பலவும் வாங்கி நான்கு பெட்டிகளை மனிசனுக்குத் தெரியாமல் ஊருக்கு அனுப்பியபின் கணவருக்கும் எனக்கும் ரிக்கற் போடுகிறேன். நாம் போய் இறங்கிக் கணவரின் தங்கை - மச்சாள் வீட்டில் சூட்கேஸ்களை இறக்கிவிட்டு கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு நான் விற்ற தங்கையின் வீட்டுக்கு வருகிறேன். மச்சாளின் வீடு பளிச் பளிச் என்று மாபிள்கள் பளபளக்க வெளிநாட்டு வீடுகளை விஞ்சியதாய் இருக்கிறது. என் தங்கையின் வீடு சாதாரணமாக இருந்தாலும் சுத்தமாக இருக்கிறது. வெளியே சாதாரண டாய்லெட் ஒன்றும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய மாடர்ன் டாய்லெட் ஒன்றும் உண்டு. அறை ஒன்றுடன் கூடிய மாடர்ன் டாய்லெட் ஒன்றையும் ஐந்து ஆண்டுகளின் முன்னர் என் தம்பி இலங்கை சென்ற போது கட்டிக் கொடுத்திருந்தான். நான் இலங்கையில் நிற்கும் ஆறு மாதங்களில் கணவருடன் ஒருமாதம் போக மிகுதி என் தங்கையின் வீட்டிலேயே சித்தியுடன் நிற்பதாக ஏற்பாடு. டாய்லெட்டுடன் உள்ள அறையை எனக்காக ஒதுக்கியிருப்பதாக சித்தி சொல்ல அதைப் போய் பார்க்கிறேன். டாய்லெட் முழுதும் கால்சியம் படிந்து பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. கணவரும் பார்த்துவிட்டு அப்ப என் தங்கை வீட்டிலேயே தங்கு. அங்கு எல்லாம் சுத்தமாகத்தானே இருக்கு என்கிறார். நான் வளர்ந்த வீட்டில் இருப்பதுதான் என் விருப்பம் என்று கூறி அவர் வாயை அடைக்கிறேன்.
3 months 2 weeks ago
இந்த கத வேணாம் புள்ளி எங்க
3 months 2 weeks ago
எனக்கு விருப்பு வாக்குகளை இட்ட புங்கை, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான்,யாயினி, நந்தன், சுவி அண்ணா,கவி அருணாச்சலம் அண்ணா ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.
3 months 2 weeks ago
உதுதானே வேண்டாம் எண்டுறது. 😀 யேர்மனியில் 68 இல் தானே பென்ஷன் ? குசா அட நீங்களும் 0 4- 04 தானா எந்தக் கதையைப் பற்றிச் சொல்கிறீர்கள் வாத்தியார்?
3 months 2 weeks ago
ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”
3 months 2 weeks ago
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாது தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவினதும், ருதுராஜ் கைக்வாட்டினதும் அரைச் சதங்களுடன் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
3 months 2 weeks ago
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன். புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார். பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது. அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன. சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும். நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.
3 months 2 weeks ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் வீரர்கள் அனைவரினதும் நெருப்படிகளால், குறிப்பாக இஷான் கிஷான் ஆட்டமிழக்காது பெற்ற 106 ஓட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகூடிய இலக்கை, சஞ்சு சாம்ஸனினதும், துருவ் ஜுரேலினதும் அரைச் சதங்களுடன் வேகமாக அடிக்க முனைந்தும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதரபாத் 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
3 months 2 weeks ago
இஸ்ரேலியர்களுக்கு வாழ்த்துக்கள்....
3 months 2 weeks ago
குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் ........! 😍
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் .........! ஆண் : { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை ஆண் : செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது ஆண் : தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள் ஆண் : கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா ஆண் : என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா ஆண் : ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனம்மா தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனம்மா ஆண் : மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன் .........! --- ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ---
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
வாழ்த்துக்கள் முதலமைச்சரே ...இப்பவும் நான்தான்....பிரதி முதலமச்சரோ
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
என்ன அமெரிக்கன் கட்டத்துரை அண்ணா மூன்று விளையாட்டையும் சரியா கனிச்சி விட்டிங்கள் போல் இருக்கு................. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சென்னை தான் அதிக ஓட்டம் எடுக்கும் என்று தெரிவு செய்து இருக்கிறீங்கள் இன்று SHR அடிச்ச 286 தான் இந்த ஜபிஎல்ல அதிக படியான பெரிய ஸ்கோர் இதை வேறு எந்த அணியாலும் அடிக்க முடியாது😁..........................
3 months 2 weeks ago
Sam Curran சிறந்த மட்டையடி வீரர் வந்த கையோட அடிச்சு ஆட முடியாது நண்பா , இங்லாந்தில் நடக்கும் 100பந்துக்கான போட்டியில் அதிக ரன்ஸ் Sam Curran அடிச்சு இருந்தார் இந்தியா வீரர் தீபக் கொடா இவர் உப்பு சப்பு இல்லா வீரர் போன ஜபிஎல்ல லக்கோவுக்கு விளையாடி பெரிசா சாதிக்க வில்லை , இவரை ஏன் சென்னை ஏலத்தில் எடுத்தார்கள் தெரிய வில்லை........................
3 months 2 weeks ago
நான்தான் முதலமைச்சர் உள்ள தூக்கி போட்டுவிடுவேன் கவனம்.