Aggregator

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன். உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நான் எதிர்பார்த்தேனே. இதில ஒரு அதிர்ச்சியும் இல்லையே. எல்லாம் முறைப்படி நடந்திருக்கு. அத்தனைக்கும் ராகுலும் விளையாடேல்ல. கருண் நாயரும் விளையாடேல்ல. பாவம் நம்ம @வீரப் பையன்26 நிலைமை. பார்த்தா, ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லி விடுங்க. புலம்பிட்டு இருக்கார். தான் சொன்னதையே இப்ப மாற்றி சொல்லிட்டிருக்கார். இதுக்கு பதில் சொல்ல வேணுமா. அவசரப் பட்டுட்டீங்களே. அவளைத் தொடுவானேன். 🤣

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
உண்மை அது தான் பென்சன் கொடுக்காமல் விடுவாதறக்காக. வயதை கூட்டிக்கொணடு போகிறார்கள் குமாரசாமி அண்ணை,.....இல்லை இல்லை தம்பி பென்சன். எடுப்பாரே தெரியவில்லை 🤣

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
அதுதான். என்னமோ நடந்திருச்சு. எப்பிடி இப்பிடி நடக்குது என்று எனக்கே புரியேல. ஆனா சுகம்மா இருக்கு. நன்றி வாத்தியார். பொறுங்க. ஒவ்வொருத்தரா வாறன்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
அப்பவே சொன்னன். விலகி நில்லுங்க அங்க இங்க பட்டுடப் போகுது என்டு. இப்ப வந்து குய்யோ முறையோ என்டா. கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம். காயமடைந்த நெஞ்சங்களை குளிர்விக்க, ஆவன செய்யப்படும். இந்தப் பாடலைக் கேளுங்கள் யார்ரா அந்தப் பையன் நான்தான் அந்தப் பையன் நன்றீங்க. அந்த ஆயின்மென்ற் வாங்கி வைச்சிருக்கிறன். அனுப்பி விடவா. எரியுற இடத்தில தடவிக்கலாம். 😁

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
GMT நேரப்படி நாளை செவ்வாய் 25 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 19 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் சுவி செம்பாட்டான் கோஷான் சே இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
சென்னை மைதான‌த்தை த‌விற‌ ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள் நேற்று SHR 286 ர‌ன்ஸ் அடித்தார்க‌ள் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் டுபாயில் ந‌ட‌ந்த‌ அனைத்து போட்டிக‌ளிலும் 270 ர‌ன்ஸ் எந்த‌ அணியும் அடிச்ச‌தில்லை இந்தியா மைதானங்க‌ள் ப‌ல‌ ர‌சிக‌ர்க‌ளை குசிப் ப‌டுத்த‌ ம‌ட்டைக்கு சாத‌க‌மாய் அமைக்க‌ப் ப‌ட்ட‌ மைதான‌ங்க‌ள்..................ஜ‌பிஎல்ல‌ 200ர‌ன்ஸ் அடிப்ப‌து பெரிய‌ மேட்ட‌ரே கிடையாது............................

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
எனக்கு இன்னும் பத்து வருடம் இருக்கு. நான் யேர்மனியில் வேலை செய்தது 16 ஆண்டுகள்தான். அங்கே குழந்தை பெற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் முதலே பென்சன் எடுக்கலாம் என்று ஒரு சட்டமும் இருக்கு. ஆனால் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்குத்தான் அந்த மூன்று ஆண்டுகள் கணக்கு. உண்மைதான் அண்ணா. வருங்காலத்தில் பென்ஷன் 80 வயதுக்கு என்று கொண்டுவருவார்கள். முன்னரும் சிறு பகுதி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் அண்ணா. எனக்கு நினைவில்லை. இப்ப முழுவதும் எழுதுவதால் அதுக்கும் வந்துவிட்டது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் நான் வரேல்லை நான் வரேல்லை எண்டு இருந்த செம்பாட்டானை துணை மூத்தவர் தான் இழுத்துக் கொண்டு வந்தவர் 😂

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிச்சல் மார்ஷினதும் நிக்கொலஸ் பூரனினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தபோதும் இடைவரிசை வீரர்களான ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், விப்ரஜ் நிகம், ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை எடுத்த அஷுரோஷ் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களால் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: ஐபிஎல் போட்டிகளை இரசிக்க ஆரம்பித்துள்ள @செம்பாட்டான் முதல்வராக அவையமைந்துள்ளார்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
இப்ப‌ தான் க‌ட்லையிட் பார்த்தேன் 19 ஓவ‌ரில் முத‌ல் ப‌ந்தில் ச‌ர்மாவை ல‌க்னோ க‌ப்ட‌ன் அவுட் செய்து இருக்க‌லாம் , அப்ப‌டி செய்து இருந்தால் ல‌க்னோ வென்று இருக்கு , டெல்லி ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் ஆட்ட‌ம் இழ‌ந்து இருப்பின‌ம் ல‌க்னோ க‌ப்ட‌ன் எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல் டெல்லி அணிக்கா க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்டு இருந்த‌ ரிச‌ர்ப‌ந் ஏதும் சாதிக்க‌ வில்லை......................கே ல் ராகுல் , ல‌க்னோ அணியில் இர‌ண்டு ஆண்டு சிற‌ப்பாக‌ செய‌ல் ப‌ட்டார்............................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
🤣..... சும்மா தான் இடையிலிருந்து இந்தப் போட்டியை பார்க்க ஆரம்பித்தேன். நேற்று, முந்தாநாள் எதுவும் பார்க்கவில்லை. நான் லக்னோவா அல்லது டெல்லியா என்பதும் ஞாபகத்தில் இருக்கவில்லை. பின்னர் டெல்லி தான் என்று கிருபன் அனுப்பியிருந்ததைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் டெல்லியின் நிலை என்னை விட பரிதாபமாகவே இருந்தது............ டெல்லி கொஞ்சம் தெரிந்த ஊராக, பெயராக இருக்கின்றதே என்று தான் நான் அதனைத் தெரிவு செய்திருக்க வேண்டும்........... இப்படி ஒரு சம்பவத்தை டெல்லிக்காரர்கள் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை போல.............

செவ்வந்தியில் செவ்வந்தி

3 months 2 weeks ago
செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என்று எவராவது ஆரம்பித்தாலே நான் காதுகளை மூடிக் கொள்கின்றேன்.