Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ந‌ட‌ந்து முடிந்த‌ 6 விளையாட்டில் மூன்று விளையாட்டை நாண‌ய‌ம் தான் வென்று கொடுத்த‌து..............நாண‌ய‌த்தில் வெல்லும் க‌ப்ட‌ன் மார் உட‌ன‌ ப‌ந்து வீச்சை தான் தெரிவு செய்கின‌ம்................ இன்றும் கே கே ஆர் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து ராஜ‌ஸ்தானை 151ர‌ன்சில் ம‌ட‌க்கி விட்டின‌ம் உண்மை தான் இந்த‌ வ‌ருட‌ம் ராஜ‌ஸ்தான் அணியில் ந‌ம்பிக்கை த‌ரும் வீர‌ர்க‌ள் யாரும் இல்லை.................ப‌ந்து வீச்சில் சுத‌ப்பும் வீர‌ர்க‌ள் , ம‌ட்டைய‌டியில் அதிர‌டியாக‌ விளையாடும் வீர‌ர்க‌ள் குறைவு......................இர‌ண்டு மூன்று திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வைத்து கொண்டு அணிய‌ வெற்றி பாதைக்கு அழைத்து செல்வ‌து சிர‌ம‌ம்.................ராஜ‌ஸ்தான் தொட‌ர் தோல்வி........................ஏல‌த்தில் உள்ளூர் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வேண்ட‌ ராஜ‌ஸ்தான் கொச் கோட்டை விட்டு விட்டார்.................................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நீங்கள் கூறுவது சரி எனவே கருதுகிறேன், இரட்டை தன்மை கொண்ட மெதுவான ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது over spin வீச வேண்டும் இதனை கொல்கத்தா அணியினர் சரியாக செய்தார்கள், பந்து மேலெழுந்து வரும், குயின்டன் வனிந்து கசரங்கவின் கூக்கிளி பந்தினை சுழலுக்கு எதிராக ஒரு 6 அடிப்பார். ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அளவுகளை மாற்றி வீச வேண்டும், ஆடுகளம் மெதுவாக உள்ள நிலையில் அளவு குறைந்த பந்துகளை வீசும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்தாடுவது இலகு. ராயஸ்தன் அணியின் அணிதலமையும் மோசமாக இருந்தது, இதுவரை காணப்படும் நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த அணி மோசமான அணியாக உள்ளது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஐபிஎல் 2025 இன் 06வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றி இலக்கை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த குயின்ரன் டிகொக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல). அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி. இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே ! சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !) மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு. தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
அவர்தான் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட வைத்தியர் ஶ்ரீ பவானந்தராஜா. 🤣 பாராளுமன்ற உறுப்பினர் பதவி… எவ்வளவு கஸ்ரமானது என்பதை நேற்று அறிந்து இருப்பார். 😂

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
இருவரும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை யாரோ இருவரின் மைக்கை நிப்பாட்டும் படி கேட்டார். யாரென்று தெரியவில்லை. இளங்குமரனுக்கு அருகில் இருப்பவருக்கு காதால் புகை வந்திருக்கும். 😄

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
மூன்று வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். “ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி” “உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” “அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்” “நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்” சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது. அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது. “வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்” முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன். அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை. “எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி? “அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது. பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன். எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை. காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான். அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார். அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா. புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர். மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன். “ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு” “தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி” இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார். ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான். அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ராஜிவ் காந்தி மைதான‌த்தில் 230ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்ச‌ ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளால் சொந்த‌ மைதான‌த்தில் 175 ர‌ன்ஸ் கூட‌ அடிக்க‌ முடிய‌ வில்லை............... தோல்விக்கு இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் வ‌ண்டு ஹ‌ச‌ரங்காவும் கார‌ண‌ம்...............................