Aggregator

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. பத்திரிகை காணொளிகளில் வரும் செய்திகளையே பார்ப்பது. உங்களைப் போன்றோர் எழுதும் போதே முழுவிபரமும் தெரிகிறது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும் ( விக் வாஸ் போட்டியில்) 20ஓவ‌ருக்கு அவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அடிக்கும் ர‌ன்ஸ் 140தில் இருந்து 168 போன்ற‌ ர‌ன்ஸ் தான் அடிப்பின‌ம் , அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ வீர‌ர்க‌ள் இந்தியா மைதான‌ங்க‌ள் 20 வ‌ருட‌த்துக்கு முத‌ல் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌ங்க‌ள்...................ராஜிவ் காந்தி மைதான‌த்தில் 200ர‌ன்ஸ்ச‌ 16 ஓவ‌ரில் அடித்து விட‌லாம்....................சென்னை மைதான‌த்தை த‌விர்த்து ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌து இதே ஜ‌பிஎல் தொட‌ரை டுபாயில் ந‌ட‌த்தின‌ கால‌த்தில் எந்த‌ அணியும் 200ர‌ன்ஸ் அடிச்ச‌தில்லை டுபாய் மைதான‌த்தில்....................... டெல்லி எதிர் ல‌க்னோ விளையாடின‌ விளையாட்டை பார்த்தேன் ம‌ட்டையால் மெதுவாய் அடிக்க‌ ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகுது............................... இல‌ங்கை , அவுஸ்ரேலியா , சிம்பாவே , வெஸ்சின்டீஸ் , இப்ப‌டியான‌ நாட்டு மைதான‌ங்க‌ளில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்................ஜ‌மேக்காவில் இருக்கும் மைதான‌த்தில் முந்தி ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் , இந்தியா மைதான‌ங்க‌ள் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள்........... இங்லாந் மைதான‌ங்க‌ளில் 200ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் அப்ப‌டி ஏதாவ‌து ஒரு மைச்சில் அடிச்சால் நூற்றுக்கு நூறு வெற்றி உறுதி👍..........................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆 பத்துப்பேர் கொண்ட அணி 🤣 யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது😉

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 1 week ago
யாழ் நூலக எரிப்பை வைத்து அரசியல் செயவது போல அல்ல இது....புத்தகங்களை விட மனித உயிர்கள் பெறுமதியானவை...

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மகிந்த

3 months 1 week ago
என்னடாப்பா இப்படி போட்டிருக்கு இலங்கை அரசாங்கம் தடை வித்தித்துள்ளது என்று >>>>பிரித்தானிய அரசாங்கம் தானே தடை வித்துள்ளது

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
இது என்ன alvayan 🙏 இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை நானும் பம்பலாகத்தான் எழுதினேன் என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா... வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
இவருக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் அதிகாமாக இந்த பழமொழியை பாவிக்கின்றார் முதலில் பாராளுமன்றிலும் பாவித்துள்ளார் ...சிவபக்தன் பேசும் பழமொழியை சிவபக்தன் இல்லாதவர் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் . நீங்கள் இப்படியான சண்டைக்கு எப்படி பதில் வழங்குவது என‌ பாடமாக்கி கொண்டு வரவில்லைத்தானே 🤣...யாழ்ப்பாணிஸ் செந்தமிழில் பேசும் பொழுது அதற்கு உடனடியாக பதில் வழங்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ கஸ்டமாக இருந்திருக்கும்...உங்கள் பிறோப்பளம் புரிகிறது எனக்கு அடுத்த கூட்ட தொடரில் நீங்கள் சரியாக பாடமாக்கி கொண்டு வந்து பதிலடி கொடுங்கள் ....செந்தமிழில்🤣

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
பாவம் அப்பாவி ஆண்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு பின்னுமா உங்களை நம்புகிறார் அவர்? நான் பயந்தது சரியாய்ப்போச்சா? நீங்கள் நின்று கொண்டு அவர்கள் வெளியேறியபின் நீங்களே பூட்டை மாற்றி பூட்டி எடுத்திருக்கலாம். பின்னும் பாருங்கள், அவர்களிடம் காணாமல் போன பொருட்கள் பற்றி கேள்வி கேட்க்காமல், நஷ்ட ஈடு வாங்காமல் விட்டு விட்டீர்களே? பலாமரம் தறித்த உடனேயே, இவர் ஒரு ஏமாந்த சோணகிரி என்று தெரிந்து செயற்பட்டிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்த பணம், களவெடுத்தவர்களுக்கு நிலைத்து நிற்காது. எல்லாரும் சேர்ந்த கள்ளர், வெளிநாட்டுக்காரரை மொட்டியடித்து விடுவார்கள். தாங்கள் செயல்வீரர் என்று நினைப்பர், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படும்போது விளங்கும் வலி. அட இன்னும் ஊருக்கு போகவில்லையா? இனிப்போய் இருக்கும் போது இந்த நபர்களை தூரவே வையுங்கள். யார் என்ன சொன்னாலும் உடனேயே முடிவு எடுக்காதீர்கள், தீர யோசித்து, விசாரித்து செய்யுங்கள். பாவம் அப்பாவி மனிதனை ஏமாற்றாதீர்கள். பின் வேறு யாராவது உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும். ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்). ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

3 months 1 week ago
வட மாகாணசபை நடை பெறுவதில்லை பிறகு எப்படி இவர் அவை தலவராக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்...யாராவ்து இதற்கு விளக்கம் சொல்ல முடியுமோ?ஆளுனர் அரச பிரதிநிதி வடமாகாணத்தை அரசு சார்பாக பிரதிநித்துவம் பண்ணுகின்றார் ஆனால் இயங்காத வடமாகாணசபைக்கு இவருக்கு என்ன வேலை?

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை

3 months 1 week ago
இது தோழர் அனுராவின் ஆட்சியை கவிழ்க்க வலதுசாரிகள் செய்யும் திட்டமிட்ட செயல் ...சுற்றுலா பயணிகள் கடற்கரையில் சுதந்திரமாக திரிவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி..இதனால் சுற்றுலா துறை பாதிப்படைய போகின்றது....டொலர் நாட்டுக்குள் வருவது குறைந்து விடும்...இதை சாட்டாக வைத்து ரணில் ,மகிந்தா போன்றவர்கள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் ....😅 மீன்பிடி அமைச்சர் இந்த முதலைகளை வடபகுதி கடற்கரைக்கு துரத்தி விட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்த நடவடிக்கை எடுக்கலாம் 😅

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
இது மோட்டார் கழட்டி எடுப்பதாகற்கான. அவகாசம் இல்லையென்றால் திறப்பை அந்த இடத்தில் வைத்திருக்கலாம். ஒப்பந்தத்தில் மோட்டார் இருப்பது பற்றி எழுதவில்லையா??? ஜேர்மனியில் லண்டனில் வாழ்ந்த நீங்கள் இப்படி ஏமாந்தது நம்ப முடியவில்லை

இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்

3 months 1 week ago
அருகில் உள்ள பங்களதேஸ் பிரதமரை இன்னும் மோடி சந்திக்கவில்லையாம் சந்திக்க மாட்டேன் என அடம் பிடிக்கின்றாராம் (இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்படி) ஆனால் தோழர் அனுராவுக்கு செங்கம்பள வரவேற்பு ....திருகோணமலையை தம் வசப்படுத்த தீயா வேலை செய்யினம் இந்தியா கொள்கை வகுப்பாளர்கள்...

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை

3 months 1 week ago
பிரச்சனைகளுக்கு காரணம் சொல்ல தேசிய மக்கள் சக்திக்கு (ஜேவிபி இற்கு) விலங்குகள் வரிசைக்கட்டிக் கொண்டு வருகின்றன. முதலில் குரங்குகள், பிறகு தெரு நாய்கள், இப்ப முதலைகள் என்று வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன. நுளம்புகளும் தம் பங்குக்கு சிக்கன் குனியா, டெங்கு என்று அடுத்த வரிசையில் வந்து நிற்கின்றன. இவற்றை காரணம் காட்டியே 5 வருடங்களை ஓட்டி விடுவார்கள் போலிருக்கு. @putthan இந்த பக்கம் வரவும். வந்து இந்த இடதுசாரிகள் பற்றி நறுக்கென்று நாலு வார்த்தை எழுதுங்கோ,