வாழும் புலம்

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார்

7 hours 18 minutes ago
லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார்

Published By: RAJEEBAN   26 MAY, 2024 | 02:21 PM

image
 
பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது.

பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது.

சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர். 

லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார்.

இதே வேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர். பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார்.

எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/184514

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!

2 days 10 hours ago

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!
Vhg மே 23, 2024
1000247285.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. 

அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளதுடன் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

spacer.png

spacer.png

https://www.battinatham.com/2024/05/blog-post_636.html

 

உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து .

2 days 18 hours ago
உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து .

K800_belgium-2024.jpg

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.

2 days 18 hours ago
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.

25.05.2024-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%Eதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

 

தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத் துச்செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன்…..
இன்றைய நாளில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களான,
1. வீரவேங்கை ஜெமிலன்.
2. வீரவேங்கை இளஞ்செழியன்.
3. வீரவேங்கை கலைமகன்.
4. வீரவேங்கை கவிதா.
5. வீரவேங்கை தேவதாஸ்.
6. வீரவேங்கை சுரதன்.
7. வீPரவேங்கை சேரன்.
8. வீரவேங்கை காந்தா/அவிர்.
9. வீரவேங்கை யோகநாதன்.
10. வீரவேங்கை நரேன்.
11. வீரவேங்கை நிரஞ்சினி.
12. வீரவேங்கை முகுலினி.
13. வீரவேங்கை மொழித்தேவன்.
14. வீரவேங்கை முரளி.
15. வீரவேங்கை பேரம்மான்.
ஆகியோருககான வீரவணக்க நிழ்வில் தமிழீழமக்கள் அனைவரும் கலந்துகொள்ள உருமையுடன் அழைக்கின்றோம்.

Puthiyavan_Seite_1.jpg
Puthiyavan_Seite_2.jpg
Puthiyavan_Seite_3.jpg
Niraigisai_Seite_1.jpg
Niraigisai_Seite_2.jpg
Niraigisai_Seite_3.jpg

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். – குறியீடு (kuriyeedu.com)

வீரவணக்க நிகழ்வு -25.5.2024 யேர்மனி,Ennepetal.

K1024_Veeravanakka-Nikalvu-2024.jpg

 

வீரவணக்க நிகழ்வு -25.5.2024 யேர்மனி,Ennepetal. – குறியீடு (kuriyeedu.com)

வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024

K800_nikalvu.jpg

வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024

IMG-20240508-WA0011.jpg

 

வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024 – குறியீடு (kuriyeedu.com)

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.

3 days 5 hours ago

p0hzkk6r.jpg

p0hzkn8j.jpg

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன்.

https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8xB0rrBVI_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw

பிரின் பிரதாபனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி

5 days 11 hours ago
மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி

WhatsApp-Bild-2024-05-09-um-00.33.15_f03

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024.

5 days 11 hours ago
தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024.

K1024__DSC2668-300x200.jpg18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.
பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பேரணி வந்தடைந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை அரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது.

K1024__DSC1904.jpg

நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோபிபிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக அசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.

K1024__DSC1951.jpg

f2.jpg
f3.jpg
f1.jpg
K1024__DSC1060.jpg
K1024__DSC1062.jpg
K1024__DSC1070.jpg
K1024__DSC1077.jpg
K1024__DSC1082.jpg
K1024__DSC1083.jpg
K1024__DSC1088.jpg
K1024__DSC1090.jpg
K1024__DSC1098.jpg
K1024__DSC1101.jpg
K1024__DSC1102-rotated.jpg
K1024__DSC1111.jpg
K1024__DSC1117.jpg
K1024__DSC1122.jpg
K1024__DSC1133.jpg
K1024__DSC1135.jpg
K1024__DSC1138.jpg
K1024__DSC1143.jpg
K1024__DSC1153.jpg
K1024__DSC1154.jpg
K1024__DSC1157.jpg
K1024__DSC1161.jpg
K1024__DSC1163.jpg
K1024__DSC1171.jpg
K1024__DSC1177.jpg
K1024__DSC1178.jpg
K1024__DSC1181.jpg
K1024__DSC1188.jpg
K1024__DSC1202.jpg
K1024__DSC1206.jpg
K1024__DSC1219.jpg
K1024__DSC1221.jpg
K1024__DSC1229.jpg
K1024__DSC1239.jpg
K1024__DSC1243.jpg
K1024__DSC1248.jpg
K1024__DSC1253-rotated.jpg
K1024__DSC1258.jpg
K1024__DSC1264.jpg
K1024__DSC1274.jpg
K1024__DSC1278.jpg
K1024__DSC1284.jpg
K1024__DSC1288.jpg
K1024__DSC1292.jpg
K1024__DSC1298-rotated.jpg
K1024__DSC1303.jpg
K1024__DSC1309-rotated.jpg
K1024__DSC1314-rotated.jpg
K1024__DSC1318-rotated.jpg
K1024__DSC1324.jpg
K1024__DSC1332.jpg
K1024__DSC1339.jpg
K1024__DSC1344.jpg
K1024__DSC1359.jpg
K1024__DSC1364.jpg
K1024__DSC1367.jpg
K1024__DSC1372.jpg
K1024__DSC1374.jpg
K1024__DSC1383.jpg
K1024__DSC1389.jpg
K1024__DSC1394.jpg
K1024__DSC1398.jpg
K1024__DSC1404.jpg
K1024__DSC1408.jpg
K1024__DSC1419.jpg
K1024__DSC1423.jpg
K1024__DSC1424.jpg
K1024__DSC1433.jpg
K1024__DSC1439.jpg
K1024__DSC1449.jpg
K1024__DSC1453.jpg
K1024__DSC1468.jpg
K1024__DSC1473.jpg
K1024__DSC1478.jpg
K1024__DSC1483-rotated.jpg
K1024__DSC1489-rotated.jpg
K1024__DSC1493.jpg
K1024__DSC1498.jpg
K1024__DSC1503.jpg
K1024__DSC1507.jpg
K1024__DSC1519.jpg
K1024__DSC1523.jpg
K1024__DSC1534.jpg
K1024__DSC1536.jpg
K1024__DSC1544.jpg
K1024__DSC1547.jpg
K1024__DSC1558.jpg
K1024__DSC1569.jpg
K1024__DSC1573-rotated.jpg
K1024__DSC1578.jpg
K1024__DSC1591.jpg
K1024__DSC1601.jpg
K1024__DSC1604.jpg
K1024__DSC1611.jpg
K1024__DSC1613.jpg
K1024__DSC1618.jpg
K1024__DSC1624.jpg
K1024__DSC1639.jpg
K1024__DSC1648.jpg
K1024__DSC1653.jpg
K1024__DSC1658.jpg
K1024__DSC1664-rotated.jpg
K1024__DSC1668.jpg
K1024__DSC1678-rotated.jpg
K1024__DSC1684.jpg
K1024__DSC1704.jpg
K1024__DSC1729.jpg
K1024__DSC1733.jpg
K1024__DSC1737.jpg
K1024__DSC1743.jpg
K1024__DSC1751.jpg
K1024__DSC1753.jpg
K1024__DSC1768.jpg
K1024__DSC1796.jpg
K1024__DSC1798.jpg
K1024__DSC1803.jpg
K1024__DSC1808.jpg
K1024__DSC1816.jpg
K1024__DSC1819.jpg
K1024__DSC1823.jpg
K1024__DSC1829.jpg
K1024__DSC1839.jpg
K1024__DSC1861.jpg
K1024__DSC1863.jpg
K1024__DSC1868.jpg
K1024__DSC1869.jpg
K1024__DSC1870-rotated.jpg
K1024__DSC1871-rotated.jpg
K1024__DSC1872-rotated.jpg
K1024__DSC1873-rotated.jpg
K1024__DSC1874-rotated.jpg
K1024__DSC1883-rotated.jpg
K1024__DSC1886.jpg
K1024__DSC1888.jpg
K1024__DSC1889.jpg
K1024__DSC1897.jpg
K1024__DSC1898.jpg
K1024__DSC1899.jpg
K1024__DSC1903.jpg
K1024__DSC1904.jpg
K1024__DSC1906.jpg
K1024__DSC1908.jpg
K1024__DSC1910.jpg
K1024__DSC1914.jpg
K1024__DSC1916.jpg
K1024__DSC1929.jpg
K1024__DSC1930.jpg
K1024__DSC1939.jpg
K1024__DSC1933.jpg
K1024__DSC1943.jpg
K1024__DSC1950.jpg
K1024__DSC1951.jpg
K1024__DSC1954.jpg
K1024__DSC1958-Kopie.jpg
K1024__DSC1960-Kopie.jpg
K1024__DSC1964-Kopie.jpg
K1024__DSC1966-Kopie.jpg
K1024__DSC1972-Kopie.jpg
K1024__DSC1974-Kopie.jpg
K1024__DSC1975-Kopie.jpg
K1024__DSC1977-Kopie.jpg
K1024__DSC1979-Kopie.jpg
K1024__DSC1981-Kopie.jpg
K1024__DSC1982-Kopie.jpg
K1024__DSC1984-Kopie.jpg
K1024__DSC1989-Kopie.jpg
K1024__DSC1992-Kopie.jpg
K1024__DSC1999-Kopie.jpg
K1024__DSC2001-Kopie.jpg
K1024__DSC2003-Kopie.jpg
K1024__DSC2014-Kopie.jpg
K1024__DSC2018-Kopie.jpg
K1024__DSC2020-Kopie.jpg
K1024__DSC2023-Kopie.jpg
K1024__DSC2024-Kopie.jpg
K1024__DSC2029-Kopie.jpg
K1024__DSC2033-Kopie.jpg
K1024__DSC2036-Kopie.jpg
K1024__DSC2038-Kopie.jpg
K1024__DSC2049-Kopie.jpg
K1024__DSC2051-Kopie.jpg
K1024__DSC2066-Kopie.jpg
K1024__DSC2068-Kopie.jpg
K1024__DSC2070-Kopie.jpg
K1024__DSC2072-Kopie.jpg
K1024__DSC2084-Kopie.jpg
K1024__DSC2090-Kopie.jpg
K1024__DSC2091-Kopie.jpg
K1024__DSC2093-Kopie.jpg
K1024__DSC2094-Kopie.jpg
K1024__DSC2104-Kopie.jpg
K1024__DSC2108-Kopie.jpg
K1024__DSC2109-Kopie.jpg
K1024__DSC2113-Kopie.jpg
K1024__DSC2119-Kopie.jpg
K1024__DSC2123-Kopie.jpg
K1024__DSC2128-Kopie.jpg
K1024__DSC2144-Kopie.jpg
K1024__DSC2154-Kopie.jpg
K1024__DSC2155-Kopie.jpg
K1024__DSC2158-Kopie.jpg
K1024__DSC2174-Kopie.jpg
K1024__DSC2175-Kopie.jpg
K1024__DSC2177-Kopie.jpg
K1024__DSC2182-Kopie.jpg
K1024__DSC2200-Kopie.jpg
K1024__DSC2202-Kopie.jpg
K1024__DSC2219-Kopie-rotated.jpg
K1024__DSC2225-Kopie.jpg
K1024__DSC2230-Kopie.jpg
K1024__DSC2233-Kopie.jpg
K1024__DSC2234-Kopie.jpg
K1024__DSC2236-Kopie.jpg
K1024__DSC2249-Kopie-rotated.jpg
K1024__DSC2254-Kopie-rotated.jpg
K1024__DSC2258-Kopie.jpg
K1024__DSC2273-Kopie.jpg
K1024__DSC2289-Kopie.jpg
K1024__DSC2302-Kopie.jpg
K1024__DSC2305-Kopie.jpg
K1024__DSC2319-Kopie-rotated.jpg
K1024__DSC2324-Kopie-rotated.jpg
K1024__DSC2335-Kopie.jpg
K1024__DSC2354-Kopie-rotated.jpg
K1024__DSC2359-Kopie.jpg
K1024__DSC2363-Kopie.jpg
K1024__DSC2377-Kopie.jpg
K1024__DSC2382-Kopie.jpg
K1024__DSC2392-Kopie.jpg
K1024__DSC2410-Kopie.jpg
K1024__DSC2413-Kopie-rotated.jpg
K1024__DSC2422-Kopie.jpg
K1024__DSC2447-Kopie.jpg
K1024__DSC2448-Kopie.jpg
K1024__DSC2453-Kopie.jpg
K1024__DSC2456-Kopie.jpg
K1024__DSC2466-Kopie.jpg
K1024__DSC2470.jpg
K1024__DSC2471-Kopie.jpg
K1024__DSC2473-Kopie.jpg
K1024__DSC2477.jpg
K1024__DSC2488-Kopie.jpg
K1024__DSC2490-Kopie.jpg
K1024__DSC2492-Kopie.jpg
K1024__DSC2493-Kopie.jpg
K1024__DSC2507-Kopie-rotated.jpg
K1024__DSC2511-Kopie.jpg
K1024__DSC2527.jpg
K1024__DSC2532.jpg
K1024__DSC2535.jpg
K1024__DSC2537-rotated.jpg
K1024__DSC2548.jpg
K1024__DSC2552.jpg
K1024__DSC2554.jpg
K1024__DSC2558.jpg
K1024__DSC2559.jpg
K1024__DSC2561-rotated.jpg
K1024__DSC2566.jpg
K1024__DSC2596.jpg
K1024__DSC2605.jpg
K1024__DSC2607.jpg
K1024__DSC2623.jpg
K1024__DSC2629.jpg
K1024__DSC2635.jpg
K1024__DSC2660.jpg
K1024__DSC2666.jpg
K1024__DSC2668.jpg
K1024__DSC2672.jpg
K1024__DSC2674.jpg
K1024__DSC2679.jpg
K1024__DSC2684.jpg
K1024__DSC2688.jpg
K1024__DSC2689.jpg
K1024__DSC2719.jpg
K1024__DSC2727.jpg
K1024__DSC2731.jpg
K1024__DSC2733.jpg
K1024__DSC2739.jpg
K1024__DSC2755.jpg
K1024__DSC2758.jpg
K1024__DSC2762.jpg
K1024_IMG_3912.jpg
K1024_IMG_3919.jpg
K1024_IMG_3922.jpg
K1024_IMG_3948.jpg
K1024_IMG_3982.jpg
K1024_P1400874.jpg
K1024_P1400890.jpg
K1024_P1400901.jpg
K1024_P1400903.jpg
K1024_P1400911.jpg
 

தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. – குறியீடு (kuriyeedu.com)

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

5 days 12 hours ago

 

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!
adminMay 20, 2024
2-1170x1170.jpeg

இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர்.

இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1-800x600.jpeg

இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் (சிவபாலசுந்தரம் சிவசிதம்பரம்)அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி (விக்டர் விமலசிங்கம் அமரசிங்கம்) அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா (இளையதம்பி பரராஜசிங்கம்) அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன்,

கேணல் கண்ணன் (ஞானச்செல்வம் உதயராஜா) அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்

பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/203205/

 

தமிழினத் துரோகிகளை கிழித்து தொங்கவிட்ட கனடா ஒன்ராறியோ மாகாண அமைச்சர் விஜய்

5 days 22 hours ago

நான் நினைக்கின்றேன், இந்த ஒன்ராறியோ மாகாணத்தில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று. 

 

 

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு

1 week ago

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு
May 18, 2024

 

 

15 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு

15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர்.

ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

17 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வுShoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

14 2 முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வுSouthend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன.

மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/

 

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

1 week ago
IMG-20240519-WA0007.jpg?resize=691,375&s சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.

அத்துடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவும் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருமாறும் கோஷங்களை எழுப்பி போராடியிருந்தனர்.

அத்துடன் இன அழிப்பை நினைவுகூரும் வகையில் டவுனிங் வீதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த தமிழர்கள் அடையாள நினைவுச் சின்னத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தமையைம் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383048

முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி

1 week 2 days ago

முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி FB_IMG_1715503816245-678x381.jpg

12 . Views .

பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதுடன், பல அரசியல் கைதிகள் இன்னமும் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா  அரசாங்கம் போரில் இழந்தவர்களை நினைவுகூருவதைக் கூட தடை செய்கிறது அத்தோடு  எந்தவொரு போராட்ட வரலாறுகள்  மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட  படுகொலைககளின் வரலாறுகளை அழிக்கின்றது. 

இருப்பினும், இது புதிய தலைமுறை தமிழர்களை-இளைஞராகவோ அல்லது முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு பிறந்தவர்களையோ- உண்மையைத் தேடுவதிலிருந்தும் நீதிக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்போவது இல்லை. இந்த தலைமுறையினர் போரின் வடுக்களை சுமந்துகொண்டு அந்த போரின்  பின்விளைவுகளோடு  வளர்கிறார்கள். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை ஏற்க மறுப்பது அவர்களின்  பலவிதமான வெளிப்பாடுகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த புதிய தலைமுறையிலிருந்து வெளிவரும் கலை மற்றும் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில்  பெரும்பாலும் கடந்த கால பயங்கரங்கள்   அல்லது அதன்  பிரதிபலிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. சொலிடாரிடியின்  புரட்சிகர இளையோர் (YRS) என்று தங்களை அடையாளப்படுத்தும் இளம் ஆர்வலர்கள் இந்த புதிய தலைமுறையின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஒரு வாரத்தைக் குறிக்கும் வகையில் மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்ற இக்கண்காட்சியானது சாரங்கனால் ஒழுங்கமைக்கப்பட்டு ரித்திகா மற்றும் YRS யினரால் நடத்தப்பட்டது. அதில் புகைப்பட பத்திரிக்கையாளர் அமரதாஸின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இது முள்ளிவாய்க்காலின் பயங்கரத்தின் தனித்துவமான காட்சிகளை கண்முன்கொண்டுவந்தது, மேலும் உலகளாவிய எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விரிவான கதையுடன். நிகழ்வில் ஒரு புதிய ஆவணப்படமும்  திரையிடப்பட்டது. புகைப்படக்கலைஞர் சபேசன் நிகழ்வுகள் பற்றிய தனது முன்னோக்கை முன்வைத்தார், யுத்தம் எவ்வாறு தினசரி யதார்த்தமாக இருந்தது, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு அது  தொலைதூர விவகாரம் அல்ல. வரலாறு எவ்வாறு கடினமானது என்பதை விமர்சிக்கும் கலைப்படைப்பு மற்றும் வெகுஜன படுகொலை வரலாறுகளை மௌனமாக்கும் பாசாங்குத்தனம், எதிர்ப்பு இயக்கங்களை முன்னிலைப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. “நோ ஃபயர் சோன்(No Fire Zone)” என்ற ஆவணப்படமும் கண்காட்சியின் போது பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களில் கண்காட்சியை பார்வையிட்ட 300 பங்கேற்பாளர்களில் 2009 இல் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த தனிநபர்களும் பிரிட்டனில் போராட்டங்களில் பங்கேற்றவர்களும் அடங்குவர். பல இளம் பார்வையாளர்கள் கண்காட்சியை வெகுவாகப் பாராட்டினர். போரின் இறுதிக் கட்டத்தின் பயங்கரத்தை சித்தரிக்கும் “நோ ஃபையர் சோன்” புகைப்பட பகுதியில் இறுதி வாரத்தில் எவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் கொடூரமாக்கப்படடன என்பது காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப்பகுதி சிறுவர்களுக்கு பார்வையிடுவதற்கு மறுக்கப்பட்டபோதும்  பல பார்வையாளர்கள் நிகழ்வுகளை நேரில் கண்டு அனுபவிப்பதற்காக விடாமுயற்சியுடன் இருந்தனர். போரின் கடைசிக் கட்டத்தில் வேறு உணவு எதுவும் கிடைக்காதபோது, மக்கள் சாப்பிட அரிசி கஞ்சியை   கலந்துகொண்ட அனைவருக்கும் ஒரு தமிழ் குடும்பம்  வழங்கியது. இச்செயல் இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்களிடையேயும் ஒரு பாரம்பரியமாக மாறியுள்ளது, இது பலரின் துன்பங்களை நினைவுகூரும் ஒரு வழியாகும். மே 12 ஆம் தேதி, கிழக்கு இலங்கையின் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தை நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை பலவந்தமாகத் தலையிட்டு,  கஞ்சி வழங்கிய  பெண்களை  கைது செய்தது தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது. அதனையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் கஞ்சி விநியோகம் செய்வதற்கு கிழக்கில் உள்ள நீதிமன்றம் தடை விதித்தது. இந்த அடக்குமுறையானது, இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்  நீதி மறுப்பு மற்றும் வரலாற்றை நினைவில் வைத்து துல்லியமாக பதிவு செய்வதற்கான அடிப்படை உரிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்கள் அந்த மாதத்தை “வெற்றி மாதம்” என்று தொடர்ந்து விளம்பரப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை போரை  பயங்கரவாத எதிர்ப்பு முயற்சி என்றும் “மீட்பு நடவடிக்கை” என்றும் கதை பரப்புகிறார்கள்.

இந்தக் கதையை மீறி, இந்தப் போலித்தனத்தையும், நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையையும் அம்பலப்படுத்த புதிய தலைமுறை இளைஞர்கள் அணிதிரளுகிறார்கள். இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் இருக்கும் அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு இளைஞர்கள் தலைமையிலான ஒரு புதிய முயற்சியான Project Ahenam இன் காட்சிப் பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இக்கண்காட்சியில் தமிழ் சொலிடாரிட்டி உறுதுணையாக இருந்தது, அனைத்து அமைப்பாளர்களும் இப்பணியை ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை வெளிப்படுத்தினர். ஒரு புதிய தலைமுறை ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட வெளிப்பாடுகளை ஒன்றிணைத்து இறந்தவர்களைக் கௌரவிப்பதற்காகவும், முக்கியமாக, உயிருடன் இருப்பவர்களுக்கான போராட்டத்தை உருவாக்குவதே அவர்களின் குறிக்கோள். இந்த நிகழ்வின் வெற்றியானது முக்கிய செயற்பாட்டாளர்களின் தாராளமான ஆதரவின் மூலம் சாத்தியமானது, மேலும் இந்த உதவிக்கு தமிழ் சொலிடாரிட்டி மற்றும் YRS நன்றி தெரிவிக்கின்றன. இத்தகைய ஆதரவு இந்த முக்கியமான திட்டத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானது.

http://ethir.org/wp-content/uploads/2024/05/IMG-20240516-WA0000.jpg

http://ethir.org/wp-content/uploads/2024/05/PXL_20240511_161602753-scaled.jpg

http://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-13.01.07.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-13.01.07-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-12.58.24.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-12.58.23.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-12.58.23-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-12.58.22.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-14-at-12.58.22-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-18.58.34.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-18.57.37.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-23.31.11-3.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-23.31.11-2.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-23.31.11-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-23.31.11.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-12-at-16.00.47-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-18.56.54-1.jpeghttp://ethir.org/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-13-at-18.56.54.jpeg

 

 

https://ethir.org/?p=8922

 

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்

1 week 2 days ago

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்
Vhg மே 17, 2024
1000243405.jpg

புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

கடுமையான காயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்போது வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

 

https://www.battinatham.com/2024/05/blog-post_468.html

பிரித்தானிய இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக இலங்கைத் தமிழர்!

1 week 2 days ago
Sri Lankan refugee 'so proud' to be Ipswich's first Hindu mayorபிரித்தானிய நகரம் ஒன்றின் முதல் இந்து முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு -  தமிழ்வின்

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.

தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார்.

இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறான பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/301812

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!

2 weeks ago

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
adminMay 12, 2024
latvia-sri-lankans.jpg

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று,   லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 

https://globaltamilnews.net/2024/202745/

 

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.

2 weeks 3 days ago
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.
IMG-20240507-WA0012-150x150.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம்

 

என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர்  பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.
 
நூலின் அறிமுக உரையினை திரு.றகு அவர்கள் நிகழ்த்த மதிப்பீட்டு உரையினை தமிழ்க்கலை அறிவு கூட தலைமை ஆசிரியர் திருமதி குமுதா இளமுருகன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து  நூலினை தமிழர் ஒருங்கினைப்பு  குழு பெல்சிய கிளைப்பொறுப்பாளர்  திரு.ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின்  முதல் பிரதியினை பெல்சிய கிளையின் மாவீரர் பனிமனைப்பொறுப்பாளர் செல்வன் கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.பின்னர் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று இனிது நிறைவு பெற்றது.
IMG-20240507-WA0012.jpg
IMG-20240507-WA0016.jpg
IMG-20240507-WA0015.jpg
IMG-20240507-WA0007.jpg
IMG-20240507-WA0008-1.jpg
IMG-20240507-WA0009.jpg
IMG-20240507-WA0010.jpg
IMG-20240507-WA0011.jpg
IMG-20240507-WA0013.jpg
IMG-20240507-WA0014.jpg
 

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். – குறியீடு (kuriyeedu.com)

பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

2 weeks 3 days ago
பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

IMG-20240503-WA0005.jpg

பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி

2 weeks 3 days ago
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி

K1024_Book-Publication.jpg

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024

K1024_Stuttgart.jpg

 
 

பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)

Checked
Sun, 05/26/2024 - 17:19
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed