ஊர்ப்புதினம்

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி சபையை விட்டு சென்றதால் சபையில் சர்ச்சை

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 3   09 MAY, 2024 | 04:03 PM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)  

ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து  எழுந்து வெளியேறிச் சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆற்றிய விசேட உரை தொடர்பில்  தெளிவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்க முடியுமா என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் கேட்டதற்கு ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கினார். 

அதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரரேமதாச எழுந்து ஜனாதிபதி தெரிவித்த சில விடயங்களை சுட்டிக்காட்டி, அதனை விமர்சித்துக்கொண்டிருந்தார். அதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எழுந்து, உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ளவே முடியும். உரையாற்ற தற்போது இடமளிக்க முடியாது. அவர்களுக்கு ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் வேண்டுமென்றால் அதனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நடத்தலாம் என்றார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தொடர்ந்து முன்வைக்க ஆரம்பிக்கையில், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் சபையில் விவாதம் நடத்தினால் நல்லது என்றே நினைக்கின்றேன். 

அத்துடன் இவை அனைத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக் கூற வேண்டும். ஏப்ரல் 10ஆம் திகதி பிரதமர் பதவியை அவர்  பொறுப்பேற்றிருந்தால்  இவை எதுவும் நடக்கப் போவதில்லை. நான் எனது பணியை செய்துள்ளேன் என்று கூறி சபையில் இருந்து வெளியேறிச சென்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ஏன் போகின்றீர்கள்? ஏன் பயமா? பதிலளிக்கை முடியாதா? நான் ஜனாதிபதி உரையாற்றும் போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது கேட்கத் தயாராகும் போது  அவரால் கேட்க முடியாது போயுள்ளது என்றார்.

இதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அமைச்சர்  மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி இன்றைய தினத்தில் நேரத்தை பெற்று உரையாற்றினார். ஆனால் அதற்கு பின்னர் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு நேரத்தை வீணடித்து சுற்றி வளைத்து கேள்விகளை கேட்காமல் நேரடியாக பேட்டிருந்தால் ஜனாதிபதி பதிலளித்திருப்பார் என்றார்.

இதன்போது கூறிய சபாநாயகர், நீங்கள் தெளிவுபடுத்தலை மாத்திரம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. எங்களுக்கு சபையின் தின நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்தார்.

https://www.virakesari.lk/article/183072

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் - தேர்தல்கள் ஆணைக்குழு

1 week 4 days ago
செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2024 | 03:17 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/183061

கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

1 week 4 days ago
கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2024 | 11:51 AM
image
 

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இலட்சத்தீவு கடல்  மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கடலில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக அதிகரித்து இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. நாட்டிலுள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் என்பதை நிராகரிக்க முடியாது.

பவளபாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை ஏற்ற இறக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால் பவளபாறைகள் அழிவடைவதை  எதிர்பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள்உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் | Virakesari.lk

நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது

1 week 4 days ago
image
 

(நுவரெலியா நிருபர்)

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாடான நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் வீழ்ச்சிகள் வரண்ட நிலையில் உள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்து உள்ளது.

IMG-20240509-WA0004.jpg

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பாலம், சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த மத விகாரை, அதன் முற்றத்தில் இருந்த போதி மரம், கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றை தற்போது மக்கள் அதிக அளவில் பார்க்க சென்று வருவதை காண கூடியதாக இருக்கின்றது.

IMG-20240509-WA0003.jpg

தற்போது இப்பகுதியில் கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ளதால் காலை மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இப் பகுதிக்கு படை எடுத்து செல்கின்றனர். மலையக பகுதிகளில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கின்றது.

அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வரட்சியின் காரணமாக பல இடங்களிலுள்ள காடுகளை இனம் தெரியாத நாசக்காரர்கள் தீ வைக்கின்றனர். இதனால் வரட்சி மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு காடுகளுக்கு தீ மூட்டுபவர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைபை வழங்கும்படி பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.

நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது | Virakesari.lk

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

1 week 4 days ago
09 MAY, 2024 | 04:24 PM
image
 

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் துபாயிலிருந்து இன்று (9) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது | Virakesari.lk

இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல்

1 week 4 days ago
09 MAY, 2024 | 04:03 PM
image
 

சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை போக்குவரத்து கலாச்சாரம் போன்ற விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவரும் டிரவல் இன்புளுன்சர் வில்டேவிஸ் இலங்கையின் விசா வழங்கும்; அமைப்புமுறையிலிருந்து தரவுகள் வெளியே கசிந்துள்ளமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலாமேற்கொள்ளவுள்ளவர்களிற்கான விசா விபரங்கள் பெயர் முகவரி கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பல மாதங்களிற்கு முன்னரே விசா கிடைத்துள்ள போதிலும் விஎஸ்எவ்விடம் விசாவிற்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

trek.jpg

சில வாரங்களிற்கு இலங்கையில் விசா தொடர்பில் இடம்பெற்ற விடயங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் எனக்கு எப்போதோ விசாகிடைத்துள்ள போதிலும் ஏனைய சுற்றுலாபயணிகளின் பெயர்கள் கடவுச்சீட்டு இலக்கங்கள் உட்பட தனிப்பட்ட  விபரங்களுடன் மின்னஞ்சல்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன என வில்டேவிஸ் தெரிவித்துள்ளார்.

நான் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் ஆனால் பெருமளவானவர்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk

யாழ் நகரில் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 7

09 MAY, 2024 | 02:33 PM
image

(எம்.நியூட்டன்)

வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசன்துறை வீதி சத்திரச் சந்தி வரை வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

01__1___2_.jpg

வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல் பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றன. குறித்த செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள்,  அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து பொலிஸார், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

01__3___1_.jpg

https://www.virakesari.lk/article/183048

சவூதி தூதுவர் வடமேல் மாகாண ஆளுநரின் அழைப்பின் பேரில் ஏறாவூர் விஜயம்

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 3   09 MAY, 2024 | 12:20 PM

image

மட்டக்களப்பு ஏறாவூரில்   இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில்   இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்  காலித் ஹமூத் நாசர் அல்-தாசம்  அல்- கஹ்தானி நேற்று விஜயம் செய்தார்.

இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர்.

1715232422542.jpg

1715232422532.jpg

1715232422520.jpg

1715232422503.jpg

https://www.virakesari.lk/article/183044

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

1 week 4 days ago
புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Published By: VISHNU

09 MAY, 2024 | 02:50 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

IMG-20240508-WA0213.jpg

புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால்  குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

IMG-20240508-WA0233.jpg

இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும்  பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

IMG-20240508-WA0217.jpg

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர்  அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிக்கு  வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில்  முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில்  தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும் அதிக  பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர்.

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு | Virakesari.lk

இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு

1 week 4 days ago
இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு
09 MAY, 2024 | 11:53 AM
image
 

(எம்.நியூட்டன்)

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மகாவலி என்றால்  தமிழர்களுக்கு மரணபொறி காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018 ஆண்டு மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி 2,199 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு என்று மகாவலியால் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆண்டு இது 4  ஆயிரம் ஏக்கராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாவலியின் ஆக்கிரமிப்புக்குள்  முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய்  கருவாட்டுகேணிநில் 6 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த காணிகள் இலங்கை சுதந்திரமடைந்ததற்கு  முன்பிருந்தே  தமிழர்களுடைய பூர்விக காணி என்பதற்கு தெளிவான உறுதிகள் ஆவணங்கள் இருக்கின்றன. இது மட்டுமன்றி 1984 ஆண்டு உதியமலை படுகொலை இடம்பெறுவதற்கு சில காலபகுதியில் விடுதலைப் புலிகள் நூளைந்து விட்டார்கள் என கூறி இப்பகுதி மக்களை கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினர் துரத்தினார்கள் அன்று வெளியேறிய மக்கள் 29 வருடத்திற்கு பின்னரே  மிள்குடியேறினார்கள்  இந்த விரட்டியடுப்பால் விவசாய செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த நிலமானது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்குமே நெல் உற்பத்தியால் அரிசியை வழங்கி  தன்னிறைவு கண்ட மாவட்டமாகும்.

இவ்வாறான நிலப்பரப்புகளை மகாவிலி என்ற பெயரில் ஆக்கிரமித்து விட்டு தமிழர்களை விரட்ட நினைப்பது  எத்தகைய நியாயம். ஆட்சிக்குவரும் இனவாத அரசாங்கங்கள்தான் இத்தகைய முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் மாவட்டத்திற்கு பெறுப்பு கூறவேண்டிய  மாவட்ட செயலர், பிரதேச செயலர் அவர்களும் இந்த இனவாத அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை துரத்தும் செயல்பாட்டில் இருக்கிறார்களா? சொந்த மண்ணிலிருந்து அகற்ற நினைக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் அஞ்சமாட்டோம். எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் சட்டி பானைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவேண்டியவர்களாக உள்ளோம். எனவே மகாவலி திட்டத்தை கைவிட்டு தமிழ்மக்களின் காணிகளை தமிழ்மக்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னேடுக்க வேண்டும் என்றார்.

இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு | Virakesari.lk

அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது

1 week 4 days ago
அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது

thumb_large_mullai-300x219.pngதமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார்.

வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.

கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு  கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நிலையில் குறித்த பிரதேசம் பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம் 1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் திட்டம் திட்டமிட்ட முறையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மூன்று நாட்களில் உங்களை மீண்டும் குறித்த பகுதியில் அனுமதிக்கிறோம் என்றனர்.

ஆனால் முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்குச் செல்வதற்காக நாம் காத்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த நிலையில் எமது காணிகள் எமக்கு ஒப்படைக்கப்படவில்லை.

குறித்த பகுதி  விவசாய காணிகளைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில்  எமது மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது  வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர நன்றாகத் திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டனர்.

சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் காணிகளைப் பிடித்துக் கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வர வில்லை.

ஆகவே தமிழ அரசியல்வாதிகள் இனியாவது உங்கள் வாய்களைப் பாராளுமன்றத்தில் திறவுங்கள்.  முல்லை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது – குறியீடு (kuriyeedu.com)

சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம்

1 week 4 days ago
சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம்

24-663c02f20b2d3-300x203.jpgமுல்லைத்தீவு  மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன்,

 

கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன - புதிய அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்

1 week 4 days ago

Published By: RAJEEBAN   09 MAY, 2024 | 08:16 AM

image
 

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என  தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்  என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை  இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்;டுள்ளது.

 

தமிழர்கள் காணாமல்போதல் சித்திரவதை செய்யப்படுதல் பாலியல்வன்முறைக்குள்ளாக்கப்படுதல் 2025 முதல் 2022 என்ற இந்த அறிக்கை 2022 இல் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பின்னர் 11 தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என குற்றம்சாட்டியுள்ளது.

 

இது குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

தமிழர்களின் காணாமல்போதல்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் 2015-2022"

என்னும் இவ்வறிக்கையில் இந்த ஏழாண்டு காலப்பகுதியில் 139 தடவைகள் சிறிலங்காப் பாதுகாப்புப்

படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு தடுத்துவைத்திருக்கப்பட்ட 20-39

வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட 109 ஆண்களும் 14

பெண்களுமாக 123 தமிழர்களது வாக்குமூலங்கள் ஆராயப்பட்டுள்ளன.

 

பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள்அனைவரும் இப்போது சிறிலங்காவிற்கு வெளியே வசிக்கின்றார்கள்.

 

2009இல் போர் முடிந்த பின்னர் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில்ஐவுதுP முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை சரணடைந்தவிடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல்காணாமல்போகச்செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்தஉடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும்தொடர்வதைக் காட்டுகின்றது.

 

'மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப்பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றதுஇது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழவேரூன்றிப்போயுள்ளது.

 

சிறிலங்காவில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும்பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாகஇத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்புதுறைசீரமைக்கப்படுவதற்கும் தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்க்குப்பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமேஇதனை நிறுத்திக்கொள்ள முடியும்.

 

இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களைவழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒருசிறு பகுதியினர் மட்டுமே" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

 

இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்துவைப்புக்களில் 

24பேரில் 11 பேர் - சம்பவங்கள் யூலை 2022இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு

வந்தபின்னரேயே நிகழ்ந்தன.

 

இந்த 139 சம்பவங்களில் 65 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்துஅல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்டஅமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில்அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இவ்வனைத்துச் சம்பவங்களிலும் தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும் கைகள் பின்னால்கட்டப்பட்டும் பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச்செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒருசில சம்பவங்களைத் தவிர மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கேகொண்டு செல்லப்பட்டதுடன்இ குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும்தெரிவிக்கப்படவில்லை.

இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில் 139 தடுப்புக்காவல்சம்பவங்களில் 130 இல் விசாரணைகளின்போது குறைந்தபட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்படசித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

85 சம்பவங்களில் பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட்அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்திமூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்குஆளாக்கப்பட்டனர்.

 

2022 மார்ச்சில் 28 வயது ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சாதாரண உடைகளில் வந்தநபர்களால் பிடித்துச்செல்லப்பட்டு 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 'அந்த நேரத்தில்தான்பெற்றோலில் நனைக்கப்பட்ட பொலித்தீன் பையால் என்னுடைய தலை மூடப்பட்டது. நான்கு அல்லதுஐந்து தடவைகள் இவ்வாறு அவர்கள் என்மீது போட்டார்கள்.பின்னர் தண்ணீர் நிரப்பப்ட்டிருந்தபிளாஸ்டிக் கொள்கலனுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள்.

 

ஒவ்வொரு முறையும் அவர்கள்என்னுடைய முகத்தினை நீரினுள் அழுத்திப்பிடிக்கும்போது அது அரைமணித்தியாலங்கள்

நீடித்ததுபோன்று எனக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் முகம் வெளியில் எடுக்கப்பட்டு மூச்சுஇழுத்துவிடும்போது உண்மையைச் சொல்லும்படியும் பெயர்களைச் சொல்லும்படியும் எனக்குச்சொல்லப்பட்டது. நான் மிகவும் களைப்படைந்து தரையில் சரிந்து விழுந்தேன். அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு மீண்டும் நான் இழுத்துச்செல்லப்பட்டேன்" இவ்வாறு அவர் கூறினார்.

 

பாலியல் ரீதியான சித்திரவதையும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட 91 தடுத்துவைப்புநிகழ்வுகளில் அனைவருமே பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 82 பேர்பின்வரும் ஐந்து வகையான பாலியல் சித்திரவதைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றுக்காவதுஆளாக்கப்பட்டனர்: விதைப்பைகளை கசக்குதல் வாய்மூலமாக வன்புணர்வு ஆண்குறி மூலமானபலாத்காரம் கம்பிகளை மலவாசல்வழியே செலுத்துதல் சுயஇன்பத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் என்பன

51 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

 

11 பேர் மீது கம்பிகளைப் பயன்படுத்திமேற்கொள்ளப்பட்டது. 40 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஆண்கள் மீதும் 11 சம்பவங்களில்பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.கடத்தல்கள் தடுத்து வைப்புக்கள் சித்திரவதை மற்றும் பாலியல் சித்திரவதைகள் என்பவற்றின்எண்ணிக்கை இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட பரந்துபட்ட பாரதூரமான குற்றச்செயல்களாகநடைபெறுகின்றன என்பதை விளக்குகின்றது.

 

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கெர் ரூர்க் 2024 மார்ச் 1 ம் திகதி இடம்பெற்ற மனிதஉரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றியபோது தனது கவலையினை வெளிப்படுத்திபின்வருமாறு கூறினார்: 'கடத்தல்கள் சட்டவிரோத தடுத்துவைப்புக்கள் பாலியல் வன்முறைகள்உள்ளிட்ட சித்திரவதைகள் சிறிலங்கா காவல்துறையாலும் பாதுகாப்புப் படைகளாலும் திரும்பத்திரும்பமேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த நம்பகரமான தகவல்களால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.இக்குற்றச்செயல்களில் சில 2023 இல் இடம்பெற்றதாகவும் குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும்இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது."

 

சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 ஆண்டிற்கான மனிதஉரிமைகள் அறிக்கையில் அறிக்கையில் 'வடக்கினைச் சேர்ந்த சில தமிழர்கள் காவல்துறை தம்மைச்சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும் விடுதலைப் புலிகளுடன்அவர்களுக்கிருந்த தொடர்பு அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமை தொடர்பாக அவர்களிடம்விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக சில குடியியல் சமூக அமைப்புக்கள்தெரிவித்தன." எனக் கூறப்பட்டிருந்தது.

https://www.virakesari.lk/article/183023

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

1 week 4 days ago

Published By: VISHNU   09 MAY, 2024 | 02:50 AM

image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

IMG-20240508-WA0213.jpg

புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால்  குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

IMG-20240508-WA0233.jpg

இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும்  பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

IMG-20240508-WA0217.jpg

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர்  அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிக்கு  வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில்  முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில்  தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும் அதிக  பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர்.

https://www.virakesari.lk/article/183021

உள்ளுர் இழுவைமடி தொழிலை நிறுத்துமாறு கோரி கடலில் இறங்கி மீனவர்களிடம் மகஜர் கையளித்த என்.வி.சுப்பிரமணியம்

1 week 4 days ago

Published By: VISHNU   09 MAY, 2024 | 02:37 AM

image
 

உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் புதன்கிழமை (8) கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம் மகஜர்களை  கையளித்தார்.

20240508_153008.jpg

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்பிற்கும் பாசத்திற்கும் இனிய எமது தமிழக மீனவ தொப்புக்கொடி உறவுகளே, மற்றும் வடமாகாண யாழ்ப்பாண மீனவ உறவுகளே. உங்கள் அன்பின் மாதகல் N.V.சுப்பிரமணியம் ஆகிய நான் வேண்டி நிற்பது,

20240508_155924.jpg

இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இரண்டும் எமக்குள் செயற்கை முறையில் விரோதம், குரோதம் மற்றும் பிரிவை ஏற்படுத்தி எம்மை வைத்துப் பந்தாடுகின்றனர். இதை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும். எமது வயிற்றுப் பசியே பந்தாக மாறி இருக்கின்றது.

20240508_115051.jpg

1) அழிவு என்று தெரிந்துகொண்டே நாம் கடல் வளத்தை முற்றாக அழிக்கின்றோம்.

20240508_155745.jpg

2) எமக்குத் தேவையான மீன்களை எடுத்துக்கொண்டு மிஞ்சுகின்ற மீன் குஞ்சுகளை சாகடித்து மீன் பெருக்கத்தையும் குறைக்கின்றோம்.

3) சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை சூறையாடி சிறு மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்றோம்.

4) சிறு மீனவனுடைய கடல் உபகரணங்களை ஈவு இரக்கமில்லாமல் அறுத்து நாசம் செய்து அவர்களை பட்டினிச்சாவிற்கு அழைத்துச் செல்கின்றோம்.

இவை அனைத்தும் தெரிந்துகொண்டே சிறு மீனவனுக்கு செய்கின்ற கொடுமைகளாகும். இப்படிப்பட்ட கொடுமைகளை செய்வதுமல்லாமல் அனைத்தையும் அழித்தால் எதிர்காலத்தில்

1) எமது வயிற்றுப் பசியைப் போக்க இந்த கடலை மட்டுமே நம்பி வாழ்கின்ற நாம் எங்கு போவது.

2) நீங்கள் தான் எங்கு போவது?

3)வளங்களை அழித்துவிட்டு எமது வருங்கால சந்ததிக்கு எதைவிட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?

எனவே விரோதங்களை விட்டு, குரோதங்களை விட்டு கொஞ்சம் உங்கள் மனதை கீழே இறக்கி சாந்தப்படுத்திக்கொண்டு சற்று எமது சந்ததிக்காக சிந்தியுங்கள். "விசைப்படகு கொண்டு வீரியமாய் தொழில் செய்தால் விளைவு அழிவைத்தவிர வேறொன்றுமில்லை."

எனவே இந்த பேரழிவைத் தருகின்ற இழுவை மடித்தொழிலைவிட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வாருங்கள். மாற்றுமுறைத் (சட்டத்திற்குட்பட்ட) தொழிலை மேற்கொண்டால் இருநாட்டு தமிழ் மீனவனுடைய வாழ்வு சிறக்கும். வயிற்றுப் பசிபோகும். நாம் நினைத்தபடி எமது பின் சந்ததியையும் காப்பாற்ற முடியும். அத்தோடு தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்களை மோதவைத்து வேடிக்கை பார்க்கின்ற நரித் தந்திரோபாய அரசுகளின் திட்டம் முறியடிக்கப்படும். எமது தொப்புள்கொடி உறவுகள் பலப்படும். உடன் பிறவா சகோதரர்களினுடைய அன்பு, பாசம் பெருக்கும். எம் அன்பிற்கினிய சகோதரர்களாக வாழ முடியும்.

1) கடல் வளங்களை அழிக்கின்ற

2)வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற மீன் பெருக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கின்ற

3) தொழில் உபகரணங்களுக்கு நாசம் ஏற்படுத்தி அதனூடாக எமது அன்பிற்கும், பாசத்திற்கும் பேரிடியாக நிற்கின்ற இந்த இழுவைமடித் தொழிலை விட்டு விலகி மாற்று முறைத் தொழிலுக்கு வரும்படி எனது அன்பிற்கினிய தமிழக மற்றும் வடமாகாண தமிழ் மீனவ உறவுகளை அன்பாக வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/183019

2,100 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்

1 week 4 days ago

டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன. பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த திட்டங்களில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

https://thinakkural.lk/article/301174

பொருளாதார நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும் - கம்மன்பில அழைப்பு

1 week 4 days ago
08 MAY, 2024 | 04:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்,அவரும் தெரிந்து கொள்வார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற  இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில்  மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.மின்சார சபையை  மறுசீரமைப்பதை  நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் அரச நிறுவனங்களுக்குச் சுயாதீனம் வழங்குவதை ஏற்க முடியாது.ஏனெனில் அரசியல்வாதிகளைக் காட்டிலும் அரச அதிகாரிகள் மோசடியாவார்களாக உள்ளார்கள்.மத்திய வங்கிக்குச் சுயாதீனம் வழங்குவதற்கும் இதுபோன்ற சட்டமே முன்வைக்கப்பட்டது.

மத்திய வங்கி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதன் பிரிவுகளை ஆராய்ந்து சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால்  மத்திய வங்கி நாட்டு மக்களுக்குப் பொறுப்பு கூறுவதை விடுத்து சர்வதேச நிறுவனங்களுக்குப் பொறுப்புக் கூறும்  நிலைக்குத் தள்ளப்படும் என்பதை உணர்ந்து சட்ட மூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குப்படுத்தினோம்.72  திருத்தங்களை உயர்நீதிமன்றம் முன்வைத்தது.இதன் பின்னரே மத்திய வங்கி சட்டமூலம் சட்டமாக்கப்பட்டது.

மத்திய  வங்கி  2022 ஆம் ஆண்டு 374 பில்லியன் ரூபா,2023 ஆம் ஆண்டு 114  பில்லியன் ரூபா  என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளது.தொடர்ச்சியாக நட்டமடைந்துள்ள நிலையில்  சம்பளத்தை அதிகரித்துள்ளது நியாயமானதா? என்று கடந்த  திங்கட்கிழமை   ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பியிருந்தேன்.

நான் குறிப்பிட்ட விடயத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர்  நேற்று முன்தினம் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து  இலாபம் மற்றும் நட்டத்தில் மத்திய வங்கியின் முன்னேற்றத்தை மதிப்பிட முடியாது.ஆகவே சம்பள அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பயனற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் குறிப்பிட்ட கருத்துக்குப் பதிலளிக்காமல்,மிக மோசமான முறையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும்.அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.  அவரும் தெரிந்து கொள்வார் என்றார்.

https://www.virakesari.lk/article/182984

வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் யாழ் வைத்தியசாலையின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்

1 week 5 days ago

யாழ் வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் இருபத்தைந்து பேர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையின் பொருட்களுக்கு பலத்த சேதத்தை செய்துவிட்டு நேற்று (7) தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் தவறினால் தமது நண்பர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தரது நண்பர்கள் ஆவேசமாக அலறியடித்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்களின் தாக்குதலால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூன்று இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு வைத்தியசாலை ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

https://www.ceylonmirror.net/139121.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1vayQjeQJdkEqbb6RnY9tyMus2r1Sa0Y1rnkkbKKhLzQP_mWUv_4GumCQ_aem_AYZ3aB0oksFiPYuO7AnERKF4Y4lVydEfdZ9oF50mTOFkYW1xDi_MyWeipBv9i_VuIRiZxAUYI_NZJjgMmjW0oaIE

வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !

1 week 5 days ago
1000229243.jpg

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 
 
 
அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல்,
 
2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல்,
 
 
2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல்,
 
 
2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 
 
2018-2019 இல்  4413 கோடி ரூபாய்க்கு மேல், 
 
2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 
 
 
2021 2022ல் 16358 கோடி ரூபாய்,
 
 
 2022 - 2023 இல் 7130 கோடி
ரூபாய் மற்றும் 
 
2023 - 2024 இல் 1247 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
அத்தோடு 2021-2022ல் விமான நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 
 
 
அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட இழப்பு 16358 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார்

பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!

1 week 5 days ago

(புதியவன்)

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த குறித்த சிறைக் கைதிகளின் உடல்கூற்றுப் பரிசோதனை தொடர்பில் இறப்பு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.
 
இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் ஐஸ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றை  உறவினர்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சோற்றுப் பொதியை சுமார் 15 கைதிகள் சாப்பிட்டுள்ளதுடன் 3 கைதிகள் ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு கைதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரினதும்  இறப்பு விசாரணைகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டு அங்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைப் பணிமனை மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என சிறைச்சாலைப் பணிமனை தெரிவித்துள்ளது.(ஏ)

பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு! (newuthayan.com)

Checked
Tue, 05/21/2024 - 01:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr