ஊர்ப்புதினம்

புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

2 weeks 5 days ago

புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
977309797.jpg

இனியபாரதி.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதனடிப்படையில்  இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

https://newuthayan.com/article/புங்குடுதீவில்_ஆரம்பமான_மனித_எலும்புக்கூடு_அகழ்வு_பணி!

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு!

2 weeks 5 days ago

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.

மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“விஜயதாச ராஜபக்சவுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம்.

அவர் இப்போது எம்மவர். அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/சுதந்திரக்-கட்சியின்-ஜனா/

மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்

2 weeks 5 days ago

Published By: VISHNU   01 MAY, 2024 | 09:37 PM

image

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/182440

13 ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் : எதிர்க்கட்சி தலைவர்

2 weeks 5 days ago
01 MAY, 2024 | 08:17 PM
image
 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார்.

மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி,  சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் மேலும் குறிப்பிட்டார்.

 

தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

 

மேலும், 76 வருட வரலாற்றைப் பற்றி பேசும் இந்நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும், 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

“ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

நாட்டை அழித்தவர்களுடன் தமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளயோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ தனக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும் எனவும், தானும் தனது குழுவும் எப்பொழுதும் மக்களுக்காவே கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

 

அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்றும், நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கலாச்சாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என்றும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளதாகவும் கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 

 

அத்துடன் நாட்டின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு விசேட நிதியம் ஸ்தாபிக்கப்படும் என்றும், 76 வருட காலம் குறித்து பேசும் போது நாம் பெருமடைகிறோம்.எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பணியை ஐக்கிய மக்கள் ஆற்றயுள்ளது.

( படங்கள் - எஸ். எம். சுரேந்திரன் )

WhatsApp_Image_2024-05-01_at_4.44.20_PM_

WhatsApp_Image_2024-05-01_at_4.44.18_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.15_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.32_PM_

WhatsApp_Image_2024-05-01_at_4.44.48_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.16_PM_

https://www.virakesari.lk/article/182432

புத்தளத்தில் 3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு

2 weeks 5 days ago
01 MAY, 2024 | 05:37 PM
image
 

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யானைக் குட்டியை குழிதோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

 

IMG_20240501_130002_copy_1280x720.jpg

IMG_20240501_130115_copy_1280x720.jpg

https://www.virakesari.lk/article/182431

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது

2 weeks 5 days ago

Published By: DIGITAL DESK 3

01 MAY, 2024 | 03:57 PM
image
 

இந்தியாவில் தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு  தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும்  தப்பி வர உதவிய ஆறு பேர் என 8 பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று (30)  இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான சாந்தி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும்  கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல 

முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கணேசன் லிங்கம் ஆகியோரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக  தனுஷ்கோடி கடல்  வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து ராஜேஸ்வரனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசலிங்கம் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேதாளை  பகுதியை சேர்ந்த நவீத் இம்ரானை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து  ராஜேஸ்வரன், சாந்தி, கணேசலிங்கம், வினோத் குமார் ஆகிய நால்வரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில்  தங்கி இருந்துள்ளனர்.

இன்று (1) புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல  திட்டமிட்டது விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல  உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம்  காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம்  மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக  தங்கச்சிமடம்   காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது | Virakesari.lk

மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்!

2 weeks 5 days ago
01 MAY, 2024 | 07:00 PM
image
 

தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று  காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த மக்கள் யாவரும் ஒன்றுதிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர். 

நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னர் மாவட்டத்தில் பல்வேறு மீன கிராமங்களில் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

P2560738.JPG

P2560741.JPG

P2560747.JPG

P2560752.JPG

P2560753.JPG

மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்!  | Virakesari.lk

பிக்கு அபகரித்த 88 ஏக்கர் காணியை மீட்க கோரிக்கை

2 weeks 5 days ago
1000216711.jpg
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர்

பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
 
ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி: அடுக்கப்படும் ஆதாரங்கள்

2 weeks 5 days ago

ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி  கிரியை செய்து கொண்டிருக்கின்றார் என்று பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்(kandiah baskaran) தெரிவித்தார்.

அவர்கள் யார் என்பது பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

சிதறிய கூட்டமைப்பு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது.  

 

மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது.  பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது.  இதனை நான் வெளிப்படையாகவே கூறுவேன்.

காசை கொடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக வேண்டிய தேவை எனக்குக் கிடையாது அதே சமயம் காசை வாங்கிக் கொண்டுதான் என்னை கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது.  

நான் நீண்ட நெடிய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத ஈடுபாட்டை கொண்டவன்.  அதற்கு காரணம், ஈழத் தமிழருடைய போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. 

ஏனென்று சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளால் எல்லா கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு தமிழருக்கு இருந்த ஒரு சொத்தாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்க்கின்றேன். ஆனால் அது ஒரு குறுகிய காலத்திலே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கப்பட்டுள்ளது என  குறிப்பிட்டார்.

https://tamilwin.com/article/tamil-arasu-katchi-issue-kandaiah-baskaran-message-1714491488

இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம்

2 weeks 5 days ago
canada-710x375.jpg இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம்.

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்று கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்{க்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மின்னஞ்சல் ஊடாக தமக்கு உறுதிப்படுத்தியதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், கனடாவின் சமஷ்டிக் கட்டமைப்பின்கீழ் மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும் எனவும், அவற்றுக்கென தனித்த நிர்வாக அதிகாரங்கள் உண்டு எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அதன் மின்னஞ்சல் பதிலில் தெரிவித்திருப்பதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380498

 

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

2 weeks 5 days ago
del481528-750x375.jpg தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது.

மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1380521

பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!

2 weeks 5 days ago

பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!

இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.

ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் நடக்கவுள்ளது.

ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தை பகுதியில் நடக்கவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியின் மேதினக் கூட்டத்தை கம்பஹாவில் நடக்கவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கொட்டகலையிலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலாவாக்கலை நகரிலும், தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளன.

 

http://www.samakalam.com/பலத்தைக்-காட்ட-ஏட்டிக்கு/

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!

2 weeks 6 days ago

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது!

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் நான்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பிலும் தலவாக்கலையிலும் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்துகிறது .

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கம்பஹாவில் நடத்துகிறது.

https://thinakkural.lk/article/300621

பேலியகொடையில் விபசாரத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் நோயினால் பாதிப்பு!

2 weeks 6 days ago
01 MAY, 2024 | 10:15 AM
image

பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . 

போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.  

இவ்வாறு, கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு  உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . 

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது . 

சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை  அழித்து  மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த பெண்களுடன்  தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182382

இன்று முதல் எரிபொருள் விலை குறைப்பு!

2 weeks 6 days ago
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

Published By: VISHNU   30 APR, 2024 | 09:44 PM

image
 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182364

யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்

2 weeks 6 days ago

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள் | 3 Sealed Restaurants In Jaffna

வழக்கு தாக்கல்

இதனையடுத்து 3 உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன. 

https://tamilwin.com/article/3-sealed-restaurants-in-jaffna-1714466164

போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

2 weeks 6 days ago
30 APR, 2024 | 05:29 PM
image

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில்,

மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

https://www.virakesari.lk/article/182355

இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்

2 weeks 6 days ago
1000215521.jpg

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 
 
 
அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம்

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய II கூட்டத்தை இலங்கை நடத்தியது, இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச வாகன உச்சி மாநாடு

2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த பொதுக் கூட்டம் ருவாண்டாவில் இடம்பெற்றது.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

 

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்கள் கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத அனுபவங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானித்ததாக அவர் கூறினார்.

ஏலத்தில் வெற்றி பெற்றால், இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டிற்கு கணிசமான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும்.

 

 

எவ்வாறாயினும், கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்

மேலும், நகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

எனவே, 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வாகனத் தொழிற்துறை கூட்டத்தை இலங்கை நடத்த விரும்பினால், கொழும்பில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர்.

ஏப்ரல் 2023 இல், திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் சிக்கலைச் சமாளிக்க ஒரு மூலோபாயக் குழு நிறுவப்பட்டது.

 

 

இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/intl-summit-avoids-sri-lanka-due-to-beggar-1714443745

இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்

2 weeks 6 days ago

Published By: RAJEEBAN   30 APR, 2024 | 01:02 PM

image

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்..

நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது, எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன - பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மின்துண்டிப்பும், எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது. பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன, ஆனால் இலங்கை  தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார்.

நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில் விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182317

யாழில் ஆரம்பமான புதிய கட்சி!

2 weeks 6 days ago

யாழில் ஆரம்பமான புதிய கட்சி!
1629990814.jpg

இனியபாரதி.

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை(29) ஊடக  சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல்  நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .

கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பல தரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த  இருக்கின்றோம். 

தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். .இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.

தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை  அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். (ச)
 

 

https://newuthayan.com/article/யாழில்_ஆரம்பமான_புதிய_கட்சி!

Checked
Tue, 05/21/2024 - 04:08
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr