ஊர்ப்புதினம்

அதிகாரம் மக்களின் கரங்களிலேயே நீடித்திருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் - ஜூலி சங்

1 week 4 days ago
03 MAY, 2024 | 10:28 AM
image
 

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள  மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம்.

ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர்.

அவர்கள் பொது நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் விமர்சனத்துடனான ஆய்வுகளை முன்வைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் அதிகாரம் மக்கள் நீடித்திருப்பதை உறுதி செய்கின்றனர்.

https://www.virakesari.lk/article/182540

சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!

1 week 4 days ago
psm-charles-700x375.jpg சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380877

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7

02 MAY, 2024 | 05:14 PM
image
 

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

IMG_20240502_14465251.jpg

சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG_20240502_14473394.jpg

வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,

இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.

IMG_20240502_14481297.jpg

இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.

இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது.

IMG_20240502_14472319.jpg

https://www.virakesari.lk/article/182505

மாணவர்களின் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என்கிறார் வேலணை பிரதேச செயலர் சிவகரன்

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7  02 MAY, 2024 | 05:18 PM

image
 

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது  அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன் ரோய் தலைமையில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் -

வேலணைப் பிரதேசத்தின் மாணவர் மத்தியிலான போசாக்கின்மைக்கு வறுமை ஒருபோதும் காரணமாக இருக்காது. அவர்கள் உண்ணும் உணவின் தரங்கள் அல்லது பழக்கங்கள் தான் அதற்கு முழுமையான காரணமாகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைக்கு பெற்றோரே முக்கிய பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேசத்தின் மாணவர் இடையே போசாக்கு மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான தகவல் எம்மை ஆச்சரியமடைய செய்துள்ளது.

குறிப்பாக அந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்ட 90 வீதத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் பெற்றோர் வறுமைக்கோடின் கீழ் அல்லாத நிரந்தர வருமானம் கொண்டவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவுமே இருந்துள்ளனர். குறித்த ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகியுள்ளதை அறிய முடிந்தது.

இதனடிப்படையில் பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பரமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் பயனில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க பெற்றோர் தமது அவசர உணவு பழக்க வளக்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் அவசியமாக உள்ளது.

அந்தவகையில் பிள்ளைகளின் கல்வித் தரநிலையையும் விளையாட்டு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பையும் நிர்ணயிப்பது ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்க வழக்கமாகவே உள்ளது.

அதனடிப்படையில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் பெற்றோர் முழுமையான பங்கெடுப்பது அவசியம்.

இதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதும் அவசியம் . அதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடாதிருப்பதும் அவசியமானது அந்தவகையில் இந்த விளையாட்டு திறமைகாண் நிகழ்வானது வெற்றி பெறுவதற்காக மடுமல்ல கூட்டிணைந்த உறவுகளுடன் கூடிய சிறந்த மனப்பாங்கையும் உருவாக்கிக் கொள்ளும் களமாக  அமைந்துள்ளது என்றும்   தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182492

உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்க்கான தரச் சான்றிதழை வழங்கும் நிறுவனம் யாழில் திறந்து வைப்பு

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 7   02 MAY, 2024 | 05:20 PM

image

( எம்.நியூட்டன்)

உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும்   நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொன்றோள் யூனியன் (CONTROL UNION) என்ற நிறுவனம்  யாழ்ப்பாணம் செட்டித்தெரு இல.40 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ. ஜெயசேகரம்  கருத்து தெரிவிக்கையில்

வடமாகாணத்திலுள்ள  உற்பத்தியாளர்கள் விவசாயம் உணவு உற்பத்தி போன்ற பல வகையான உற்பத்திகளுக்கான உற்பத்தி தரச் சான்றிதழை வழங்குவதற்கு இந்த நிறுவனம் தயாராகவுள்ளது.

உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கான தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையும் , தரச் சான்றிதழ்களுக்கான ஆய்வுகள் செய்து வழங்குவார்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பவர்களும் இந்த நிறுவனத்தின் தரச் சான்றிதழைப் பயன்படுத்தி தரத்தை உயர்த்தி பொருட்களை எற்றுமதி செய்யமுடியும்.

20240502_114747.jpg

ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களைப் பெற்று அனுப்புகின்றபோது குறித்த உற்பத்திப் பொருட்களை தங்கு தடையின்றி தொடர்ந்தும் அனுப்பக்கூடியதாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏற்கனவே பல நிறுவுனங்கள் இந்தச் தரச் சான்றிதழ்களை கொழும்பு சென்றே பெற்று பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை  இந்த நிறுவனம் இங்கு ஆரம்பித்துள்ளமையினால் ஏனைய உற்பத்தியாளர்களும் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி தரச் சான்றிதடைகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளமுடியும் எனவே  உள்ளுர்  உற்பத்தியாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த  நிகழ்வில்  இந் நிறுவனத்தின் முகாமத்துவ பணிப்பாளர் றொசான் றணவக்க ,வர்த்தக முகாமையாளர் சுனர விக்கிரமாராச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள்,யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ,ஜெயசேகரன்,மாகாண கைத்தொழில்  அபிவிருத்தி பணிப்பாளர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/182506

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை

1 week 5 days ago

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.  

 

வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை | Katunayake Airport Problem India Explanation

இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

 

இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என கூறுவது முற்றிலும் பொய்யானது.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும்.

இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது .

 

Gallery

https://tamilwin.com/article/katunayake-airport-problem-india-explanation-1714655948

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் கணினிகளை சரியாக செயற்படுத்த முடியாமையினால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை | Tense Situation In Katunayake Today Visa Issue

நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து பயணிகள் கடும் கோபமாக அதிகாரிகளுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். 

https://tamilwin.com/article/tense-situation-in-katunayake-today-visa-issue-1714634812?itm_source=article

மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்புபட்ட 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்து முடக்கம்

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 3  02 MAY, 2024 | 04:41 PM

image

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று வியாழக்கிழமை (2) முடக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே  30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள்  மேற்படி  நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக   விசாரணைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிஸாரினால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடர்ந்து உயர் நீதி மன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈட்பட்டுள்ளனர்.

வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்ட விரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182504

இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

1 week 5 days ago
02 MAY, 2024 | 01:30 PM
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

fhfgh.gif

ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

fdhgfdg.gif

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஜீயா சாபீர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்டீன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், மீனவ சங்கங்களின் தலைவர்கள், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் நிந்தவூர் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/182471

இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

1 week 5 days ago
new-700x375.jpg இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார்.

இதன்போது எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடிக்கையெடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம்,மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380770

ஜனாதிபதி தேர்தலை ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்க வேண்டும் - தமிழ்த் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனம்

1 week 5 days ago

Published By: VISHNU   01 MAY, 2024 | 11:57 PM

image

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FB_IMG_1714587785994.jpg

வவனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெற்றபோது வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பிரகடனத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்மக்கள் காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது.

FB_IMG_1714587782768.jpg

அந்நோக்கில் தமிழர்களது நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் நிலையை உருவாக்குவதற்கு ஏதுவாக ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் முகமாக, நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

FB_IMG_1714587776589.jpg

தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும். இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு  தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அத்துடன் குறித்த செயற்திட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

FB_IMG_1714587779111.jpg

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையை வலியுறுத்துவதோடு, அச்சுறுத்தி, தமது உரிமைகளுக்காக போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி உரிமைகளை நசுக்க ரணில் அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம்.

FB_IMG_1714587768186.jpg

ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கப்படல் வேண்டும். சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்படல் வேண்டும்.

FB_IMG_1714587773840.jpg

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும்.

FB_IMG_1714587771124.jpg

தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களது உரிமைகள் வழங்கப்படல் வேண்டும். கடற்தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும்.

FB_IMG_1714587795669.jpg

தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

வெளிநாட்டு மீனவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படக்கூடாது. எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்களது நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பதுடன், அந்த அலுவலகத்திற்கு கணக்காளர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182443

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி பண மோசடி செய்யும் கும்பல்!

1 week 5 days ago
02 MAY, 2024 | 10:55 AM
image
 

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி வியாபாரிகளிடமிருந்து பணம் பெறும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பண மோசடிகள் தொடர்பில் பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். 

இந்த மோசடி கும்பலானது தொலைபேசி அழைப்புகள் மூலம் வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி பண மோசடி செய்வதாகவும் அவ்வாறான நபர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/182457

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சி; அளவீட்டு முயற்சி தடுத்து நிறுத்தம்

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 3   02 MAY, 2024 | 11:51 AM

image

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று வியாழக்கிழமை  (02) தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோரின் தலையீட்டால் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அத்தோடு, குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர். குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம் மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில் கடந்தவருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர். இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_20240502_10114057.jpg

IMG_20240502_10130321.jpg

IMG_20240502_10121743.jpg

IMG_20240502_10142504.jpg

https://www.virakesari.lk/article/182469

இலங்கையின் வடபகுதி நிலவரம் குறித்த எரிக்சொல்ஹெய்மின் கருத்திற்கு அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி - தெரிவித்திருப்பது என்ன?

1 week 5 days ago

Published By: RAJEEBAN

02 MAY, 2024 | 10:35 AM
image
 

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்  முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இராணுவத்தினர் அங்கு தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர் ஊடகங்கள் சிவில் சமூகத்தினர் போன்றவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் இது அமைதிக்கு மாறான நிலையை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை மாற்றுக்கருத்துடையவர்களை  ஊடகங்களை கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் அச்சுறுத்துகின்றனர்.

பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது, இந்து  வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும்  தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது.

இது பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றது அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குகின்றது.

வேறு விதத்தில் சொல்வதானால் - வெள்ளையடித்தல் இலங்கை அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல்.

https://www.virakesari.lk/article/182460

பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

1 week 5 days ago

 

பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்
May 2, 2024

 

nilanthan பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் - நிலாந்தன்ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல்.

கேள்வி – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இம்முறை அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு என்ன காரணம்?

பதில் – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இரு நிலைகளில் தமிழா் தரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒன்று – கடந்த காலங்களில் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் தமிழ் வேட்பாளா்களாக ஜனாதிபதித் தோ்தல்களில் போட்டியிட்டிருந்தாா்கள். அவா்கள் பொது வேட்பாளா்கள் அல்ல. தமிழ் வேட்பாளா்கள். பொது வேட்பாளா் என்பவா் தமிழ்ப் பொதுக் கருத்தைப் பிரதிபலிப்பவராகவும், தமிழ் மக்களின் கூட்டு உளவியலைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும்தான் கருதப்படுகின்றாா். அந்த வகையில் பாா்க்கும் போது “தமிழ்ப் பொதுவேட்பாளா்” என்பவா் தமிழ்த் தேசிய ஐக்கியத்தை குறியீடாகக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அவா் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒன்றிணைப்பாா். தமிழ் பொது வேட்பாளா் என்ற கருத்துருவம் தமிழ் ஐக்கியம்தான்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தலின் போது மு.திருநாக்கரசு இந்தக் கருத்தை முன்வைத்தவா். அப்போது அவா் அதில் ஒரு பேரம்பேசலுக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தாா். 2015 ஆம் ஆண்டுத் தோ்தலிலும் அவா் அதனை எழுதியிருந்தாா். 2019 இல் தமிழ் மக்கள் பேரவை சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்தது. ஆனால், அந்த முயற்சியில் எல்லாத் தலைவா்களையும் நாம் சந்தித்தோம். பொதுவேட்பாளருக்கான சில பெயா்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், பிரதான ஒரு கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி அதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மறைமுகமாக அதற்கு எதிராகக் காணப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்போதும் பகிஷ்கரிப்பு என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தது. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் ஒரு துலக்கமான முடிவு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் ஆதரித்தாா்.

இந்தப் பின்னணியில் ஒரு கட்டத்துக்கு அதனை செயலுருப்படுத்தக்கூடிய ஒரு சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதனால், அந்த விடயம் அப்படியே விடுபட்டுவிட்டது.

பின்னா் இந்த முறை இது தொடா்பில் பேசத் தொடங்கியவா் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். அவருக்குப் பின்னா் இப்போது வெவ்வேறு தரப்புக்கள் முன்னெடுக்கின்றன. மக்கள் மனு என்ற சிவில் அமைப்பு இதனை முன்னெடுக்கின்றது. இது குறித்து இரண்டு கருந்தரங்குகளை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியிருக்கின்றது.

இப்போது சிவில் அமைப்புக்கள் இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை தோ்தல் களத்தில் இறக்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆராய்ந்துவருகின்றன.

கேள்வி – தமிழ்க் கட்சிகள் பலவும் பொது வேட்பாளா் என்ற விடயத்தில் இணங்கிச் செயற்பட்டுவருகின்றாா்கள். ஆனால், இந்தக் கட்சிகள் அனைத்தும் இந்த இலக்கில் பற்றுறுதியுடன் இறுதிவரையில் செயற்படுவாா்கள் என நினைக்கின்றீா்களா?

பதில் – ஒரு அரசியல் இலக்கை நோக்கி எல்லோரும் ஒரேவிதமான பற்றுறுதியுடனும், விசுவாசத்துடனும் இயங்குவாா்கள் என எதிா்பாா்க்கத் தேவையில்லை. சிலா் முழு விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அரை விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அதனை ஒரு டீலாகக்கூட முன்னெடுக்க முடியும். அரசியலில் இவ்வாறு பல்வகையான போக்குகள் இருக்கும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் இதனை ஒரு பேர வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்தது. மக்கள் மனு அவ்வாறான பேர வாய்ப்பு குறித்து உரையாடவில்லை. அதனை அவா்கள் தமிழா் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் கோட்பாட்டு ரீதியாகத்தான் உரையாடிவருகின்றாா்கள்.

சிவில் சமூகங்கள் இதனை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றன. அவா்கள் இதில் தெளிவாக இருக்கின்றாா்கள். தமிழ்ப் பொது வேட்பாளா் எனப்படுபவா் முதலாவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக இருப்பாா். தமிழ் மக்களை பல்வேறு வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றிணைப்பாா். தமிழ்க் கூட்டு உளவியலை அவா் பிரதிபலிப்பாா்.

இதுவரை காலமும் தமிழ் மக்களுடைய வாக்குகள் வெற்றுக் காசோலைகள் போல யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் போயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 3 ஜனாதிபதித் தோ்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் ஒன்றாக நின்றிருக்கின்றாா்கள். அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற விடயத்தில் அவா்கள் ஒன்றாக நின்றுள்ளாா்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொண்டு தமிழ் வாக்குகள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வெற்றுக்காசோலைகளாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வெற்றுக்காசோலையை அா்த்தமுள்ளதாக மாற்றலாம். எவ்வாறென்றால் – தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிக்கும் வாக்காக நாம் அதனை மாற்றலாம். அதாவது, தமிழ் மக்களின் கோரிக்கை என்ன என்பதற்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக இதனை மாற்றலாம். பேர வாய்ப்பு என்பது அடுத்த கட்டம்.

தற்போது ஜனாதிபதித் தோ்தலில் மூவா் போட்டியிடுவாா்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு இடையிலான போட்டியில் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் சிங்கள வாக்குகள் சிதறலாம். அந்த இடத்தில் தமிழ் வாக்குகள் ஒரு நிா்யகரமான பாத்திரத்தை வகிக்க முடியும். இதனை ஒரு பேரவாய்ப்பாகப் பயன்படுத்த முற்படுபவா்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். ஆனால், தமிழ் மக்கள் இதனை தமக்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.

அந்த வகையில் தமிழ்ப் பொது வேட்பாளா் தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவா் ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியாது. அதாவது, கட்சியைக் கடந்து, தனிநபா் என்பதைக் கடந்து ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பவராக அவா் இருக்க வேண்டும்.

சில கட்சிகள் இப்போதும் கேட்கின்றன, ஏன் அவசரப்படவேண்டும் என்று. அவ்வாறு கேட்பவா்கள் யாா் என்றால், பொது வேட்பாளா் குறித்து சந்தேகம் உள்ளவா்கள்தான். பொது வேட்பாளா் குறித்து முடிவெடுப்பதாக இருந்தால் இப்போதே முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு அருமையான சந்தா்ப்பம். இதனை பிறகு பாா்க்கலாம் எனச் சொல்பவா்கள் யாா் என்று பாா்த்தால், அவா்கள் டீலுக்குப் போவதற்கான வாய்ப்பை எதிா்பாா்த்துள்ளவா்கள்.

எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளரும் தமிழ் வேட்பாளா்களுடன் டீலுக்கு வரத் தயங்குவாா்கள். அவ்வாறு வந்தால்கூட, அது ஒரு பகிரங்கமான டீலாக இருக்காது. அது அவருக்கான சிங்கள வாக்குகளைப் பாதிக்கும். அதனால், அவா்கள் தனிப்பட்ட முறையிலான பேரங்களுக்கு முன்வரலாம்.
 

https://www.ilakku.org/பொறுத்திருக்கக்-கேட்பவா/

தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் – சிறீதரன் உணா்வுச்சிக உரை

1 week 5 days ago

தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் – சிறீதரன் உணா்வுச்சிக உரை
May 2, 2024
 

c4 தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் - சிறீதரன் உணா்வுச்சிக உரை

“இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப் போடும், ஆயிரக்கணக்கான பொது மக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

12 தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் - சிறீதரன் உணா்வுச்சிக உரைகட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் கடந்தும் கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டுசெல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அது சார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்றார்.

 

https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியையும்-அத/

புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

1 week 5 days ago

புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
977309797.jpg

இனியபாரதி.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதனடிப்படையில்  இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

https://newuthayan.com/article/புங்குடுதீவில்_ஆரம்பமான_மனித_எலும்புக்கூடு_அகழ்வு_பணி!

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு!

1 week 5 days ago

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.

மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“விஜயதாச ராஜபக்சவுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம்.

அவர் இப்போது எம்மவர். அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/சுதந்திரக்-கட்சியின்-ஜனா/

மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்

1 week 6 days ago

Published By: VISHNU   01 MAY, 2024 | 09:37 PM

image

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/182440

13 ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் : எதிர்க்கட்சி தலைவர்

1 week 6 days ago
01 MAY, 2024 | 08:17 PM
image
 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார்.

மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி,  சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் மேலும் குறிப்பிட்டார்.

 

தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

 

மேலும், 76 வருட வரலாற்றைப் பற்றி பேசும் இந்நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும், 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

“ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

நாட்டை அழித்தவர்களுடன் தமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளயோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ தனக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும் எனவும், தானும் தனது குழுவும் எப்பொழுதும் மக்களுக்காவே கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

 

அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்றும், நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கலாச்சாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என்றும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளதாகவும் கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 

 

அத்துடன் நாட்டின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு விசேட நிதியம் ஸ்தாபிக்கப்படும் என்றும், 76 வருட காலம் குறித்து பேசும் போது நாம் பெருமடைகிறோம்.எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பணியை ஐக்கிய மக்கள் ஆற்றயுள்ளது.

( படங்கள் - எஸ். எம். சுரேந்திரன் )

WhatsApp_Image_2024-05-01_at_4.44.20_PM_

WhatsApp_Image_2024-05-01_at_4.44.18_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.15_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.32_PM_

WhatsApp_Image_2024-05-01_at_4.44.48_PM.

WhatsApp_Image_2024-05-01_at_4.44.16_PM_

https://www.virakesari.lk/article/182432

புத்தளத்தில் 3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு

1 week 6 days ago
01 MAY, 2024 | 05:37 PM
image
 

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யானைக் குட்டியை குழிதோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

 

IMG_20240501_130002_copy_1280x720.jpg

IMG_20240501_130115_copy_1280x720.jpg

https://www.virakesari.lk/article/182431

Checked
Tue, 05/14/2024 - 23:33
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr