ஊர்ப்புதினம்

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது!
adminJanuary 29, 2024
sitharthan.jpg?fit=650%2C433&ssl=1

இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்   தெரிவித்துள்ளார்.

நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை  பொறுத்த வரையில் தாம்  இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
 

https://globaltamilnews.net/2024/200207/

15 ஆம் திகதி தொடங்குகிறது இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை !

3 months 2 weeks ago
Cheriyapani.jpg?resize=700,375&ssl=1 15 ஆம் திகதி தொடங்குகிறது இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை !

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த திகதியில் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததன் மூலம் 40 வருடங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் எடுக்கும் இந்த சேவைக்காக ஒருவழி பயணத்திற்கு 26,750 ரூபாயும் இருவழி பயணத்திற்கு 53,500 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1367406

இலங்கையின் புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாகயில்லை -சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN  29 JAN, 2024 | 11:11 AM

image

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆயுதமோதல்கள் முடிவிற்கு வந்த 15 வருடங்களின் பின்னரும் இலங்கை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை  மௌனமாக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டு இடம்பெற்ற குறைந்தளவு கலந்தாலோசனைகளின் பின்னர் உண்மை ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் 2024 ஜனவரி 1ம் திகதி வெளியானது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றங்களை விசாரணை செய்வதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

1988-89ம் ஆண்டுகால பகுதியில் இடதுசாரி ஜேவிபியின் கிளர்ச்சியின் போது இடம்பெற்ற பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை அரசாங்கம் தவிர்த்திருந்தது எனவும் தெரிவித்துள்ள  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உண்மை நீதி பரிகாரம் போன்றவற்றை வழங்குவதற்கு பதில் உத்தேச சட்டமூலம் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை மற்றும் அநீதிகுற்றங்கள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராய்வதை  முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் இலங்கை இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது எனவும் சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175038

லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3  29 JAN, 2024 | 10:47 AM

image

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175034

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் தானும் போட்டியிடப் போவதாக நடித்து நேற்று நடந்த கூட்டத்தை சுமந்திரன் குழப்பினார். இது அவருடைய ராஜதந்திரம் என்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

“பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தான் வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்பினார்.

இதன் காரணமாக தான் போட்டியிடப் போவதாக அறிவித்து கள நிலவரத்தை குழப்பி, சிறிநேசனை வெளியேற்றி தான் நினைத்த குகதாசனை அந்த பதவிக்கு சுமந்திரன் கொண்டு வந்தார். இதுதான் உண்மையில் நடந்த விடயம்.

சுமந்திரனின் பொய் பேச்சுக்களையும், பொய் கருத்துக்களையும் நம்பும் அளவுக்கு எல்லோரும் இருக்கின்றனர்” என்றும் இளம்பிறையன் சுட்டிக்காட்டினார்.

https://tamilwin.com/article/tamil-arasu-katchi-current-issue-1706440704

இளைஞரைக் காணவில்லை; தேடும் உறவினர்கள்

3 months 2 weeks ago

Published By: VISHNU   28 JAN, 2024 | 05:55 PM

image

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது  இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  077-2690673 அல்லது 077-6523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/175012

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை: 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

3 months 2 weeks ago

Published By: VISHNU   28 JAN, 2024 | 03:22 PM

image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)  இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

இந்த நிலையில் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள்  உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

PHOTO-2024-01-28-12-30-05.jpg

PHOTO-2024-01-28-12-30-04.jpg

PHOTO-2024-01-28-12-30-03_1.jpg

PHOTO-2024-01-28-12-30-03.jpg

PHOTO-2024-01-28-12-30-02.jpg

PHOTO-2024-01-28-10-10-02__2_.jpg

https://www.virakesari.lk/article/174989

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்; மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்
28 JAN, 2024 | 09:58 PM
image

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. 

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.

காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை. 

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.

இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175018

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!

3 months 2 weeks ago

Published By: VISHNU  28 JAN, 2024 | 01:50 PM

image

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான  நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு குடும்பங்கள் சனிக்கிழமை (27) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அயல்வீட்டுக்காரருக்கும் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்தது. 

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக சனிக்கிழமை (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவேளை, வீட்டில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தனிமையில் இருந்தபோது, பிரச்சினைக்குரிய அயல்வீட்டு குடும்பஸ்தர், குறித்த வீட்டினுள் சென்று போதைப்பொருளை வைத்துவிட்டு, பொலிஸாரை அழைத்து வந்ததை தொடர்ந்து, இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல்வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தே இந்த இரண்டு குடும்பங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

IMG_20240128_11344292.jpg

IMG-20240127-WA0093.jpg

https://www.virakesari.lk/article/174973

கேப்பாப்பிலவில் இரு குடும்பங்கள் போராட்டம்!

3 months 2 weeks ago

Published By: VISHNU  28 JAN, 2024 | 01:50 PM

image

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான  நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு குடும்பங்கள் சனிக்கிழமை (27) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அயல்வீட்டுக்காரருக்கும் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்தது. 

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக சனிக்கிழமை (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவேளை, வீட்டில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தனிமையில் இருந்தபோது, பிரச்சினைக்குரிய அயல்வீட்டு குடும்பஸ்தர், குறித்த வீட்டினுள் சென்று போதைப்பொருளை வைத்துவிட்டு, பொலிஸாரை அழைத்து வந்ததை தொடர்ந்து, இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல்வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தே இந்த இரண்டு குடும்பங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

IMG_20240128_11344292.jpg

IMG-20240127-WA0093.jpg

https://www.virakesari.lk/article/174973

ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய

3 months 2 weeks ago
இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய
28 JAN, 2024 | 12:17 PM
image

எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மஹிந்த தேசப்பிரிய இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேலும், எதிர்கால இளைஞர்களின் அரசியலில் அவர்களது பங்களிப்பு மற்றும் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

1706421006075.jpg

1706421006079.jpg

1706421006011.jpg

1706421005982.jpg

https://www.virakesari.lk/article/174974

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டவாக்கத்தின் போது உயர்நீதிமன்றின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதாவென சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயும்: சபாநாயகர் மஹிந்த

3 months 2 weeks ago
27 JAN, 2024 | 04:47 PM
image

(ஆர்.ராம்)

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வுகளை நடத்துமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும், உயர்நீதிமன்றம் சுட்டிக்காண்பித்த விடயங்கள் குழுநிலையில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றை சட்டங்களாக அங்கீகரித்து சான்றுரைப்படுத்தி கையெழுத்திடப்படுவதற்கு முன்பு மேலும் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அச்சட்டங்கள் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தால் ‘ஒவ்வொரு சட்டமூலங்களும்’ திருத்தங்களின் பின்னர் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டமா அதிபரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வை மேற்கொள்ளும்.

இச்செய்பாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்துவது வழக்கமானது. அந்த வழக்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றார்.

முன்னதாக, நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174920

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா பணம் மோசடி: சந்தேக நபர் கைது!

3 months 2 weeks ago
27 JAN, 2024 | 06:04 PM
image

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர். இன்று சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவர், மூன்று வருடங்களாக  தலைமறைவாகியிருந்த நிலையில் பிலிமத்தலாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபர் ஒரு பட்டதாரி என்பதுடன் ஆசிரியராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174944

புதிய அரசியல் கூட்டணி - பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் முதல் பொதுக்கூட்டம்

3 months 2 weeks ago
பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்
27 JAN, 2024 | 05:55 PM
image

(எம்.மனோசித்ரா)

'வலுவான பொருளாதாரம் - வெற்றிகரமான பயணம்' எனும் தொனிப்பொருளில் புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் இன்று சனிக்கிழமை (27)  மாலை ஜாஎல நகரில் இடம்பெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான புதிய கூட்டணியின் அறிமுக பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய அரசியல் கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்சன யாப்பா, நிறுவுனர் நிமல் லான்சா, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் நளின் பெர்னாண்டோ, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, நீர்கொழும்பு முன்னாள் மேயர் தயான் லான்சா, உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174943

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

3 months 2 weeks ago
27 JAN, 2024 | 05:29 PM
image

(எம்.மனோசித்ரா)

போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியினால் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (26) அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியின் தலைவராக செயற்படும் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 1927 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படை தளபதி மேலும் தெரிவிக்கையில்,

விஷத்தன்மையுடைய மற்றும் அபாயகரமான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் அவை விற்பனை செய்யப்படுதல் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காகவும், அதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பத்து சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கு இந்த செயலணி நிறுவப்பட்டது.

11 அமைச்சுக்கள் மற்றும் 14 திணைக்களங்கள் இந்த செயலணியில் அங்கத்தவர்களாக உள்ளன. அதற்கமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்துக்கு தகவல்களை வழங்க முடியும். இவ்வாறு தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/174931

பாவனைக்கு உதவாத மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கம் !

3 months 2 weeks ago

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிம உரங்களை தயாரிப்பதாகவே இந்த கொள்கலன்கள் தரையிறக்கப்படுவதாக முன்னதாக அனுமதி கோரப்பட்டிருந்ததாக கோபா எனப்படும் அரசாங்க கணக்கு குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களும் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மீன் கழிவுகளுக்காகவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் டி.டி உபுல்மலி பிரேமதிலக்க மஹத்மோயா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/289610

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல் - நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

3 months 2 weeks ago

 

 

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல் - நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

 

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம்

3 months 2 weeks ago
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம் - 14 சிவில் அமைப்புகள் இணைந்து கௌரவப் பட்டம்
Rizwan Segu MohideenJanuary 27, 2024
Man-of-th-East-Senthil-Thondaman.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன்தினம் (25) திருகோணமலையில் இடம்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பேரவை, மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,பசுமை இல்லம், புதிய உதயம், பெண்கள் உதவி அறக்கட்டளை RI Association, திருக்கோணமலை மாவட்ட வணிக சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் இணைந்து ‘Man of East’ என்ற பட்டத்தை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலைதிட்டங்களை 5 மாத கால கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக் காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

https://www.thinakaran.lk/2024/01/27/breaking-news/38656/கிழக்கு-ஆளுநர்-செந்தில்-4/

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கில் யாழ்ப்பாண சட்ட மாநாடு!

3 months 2 weeks ago
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கில் யாழ்ப்பாண சட்ட மாநாடு!
adminJanuary 27, 2024
IMG-20240127-WA0085.jpg?fit=1170%2C658&s

“நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை (27.01.24) மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.01.24) ஆகிய இரு நாட்களும்  இந்த மாநாட்டை நடாத்துகின்றது.

இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், ஐக்கிய நாடுகளின் முன்னாள்  நேருதவிச் செயலாளரும்  சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகேஸ்வரன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர்  சொர்ணராஜா, கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

IMG-20240127-WA0066.jpg?resize=800%2C450IMG-20240127-WA0081.jpg?resize=800%2C450
 
Checked
Wed, 05/15/2024 - 20:50
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr