நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

"குளம் வற்றும் வரை காத்திருக்கும்"வடக்கு முதலமைச்சரின் யுக்தி

3 months 2 weeks ago
"குளம் வற்றும் வரை காத்திருக்கும்"வடக்கு முதலமைச்சரின் யுக்தி

 

கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார்.

மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார்.

தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அரசியல் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன்சுமை மற்றும் சர்வதேச அழுத்தங்களால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் பலவீனமடைந்து வருகிறது என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமக்கு ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள இடர்களை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் சுயாட்சி உரிமையை அவர்களாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்து 1970களில் தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மேடைகளில் பேசிய பேச்சுகளை ஒத்ததாகவே தெரிகிறது.

சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் பலவீனம் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமையை பெற்றுத் தரும் என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நம்பிக்கை எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதில் நிறையவே கேள்விகள் உள்ளன.

தற்போது சிங்கள அரசியல் தலைமைத்துவத்துக்குள் குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் அது பலவீனமான நிலையில் இருக்கிறது என்று கூற முடியாது.

எதிரியை சரியாக மதிப்பீடு செய்ய முடியாமல் குறைத்து மதிப்பிடுவதுதான் பலரது தோல்விக்கு காரணமாக அமைகிறது.

அந்தவகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களத் தலைமைத்துவத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகிறது.

ஆட்சியில் உள்ள சிங்களத் தலைமைத்துவம் என்பது வேறு. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் ஆட்சியை ஆட்டிப் படைக்கக் கூடிய தலைமைத்துவம் என்பது வேறு.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வேண்டுமானால் பலவீனமானதாக இருக்கலாம். அதற்குள் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. கடன் பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் சர்வதேச அழுத்தங்களையும் அது எதிர்கொள்கிறது.

ஆனால் ஆட்சியில் உள்ள இந்த தலைமைத்துவம் மாத்திரமே சிங்களத் தலைமைத்துவம் அல்ல. இதற்கு வெளியே இன்னமும் சிங்களத் தலைமைத்துவம் மூர்க்கத்தனமான சிந்தனைகளுடனும் கடும்போக்கு நிலைப்பாடுகளுடனும் இருக்கிறது. இயங்குகிறது.

மகிந்த ராஜபக்சவை தலைமையாகக் கொண்டு செயற்படும் அணியை யாராலும் ஒருபோதும் குறை மதிப்புக்கு உட்படுத்த முடியாது. உள்ளராட்சித் தேர்தலில் அந்த அணி பெற்றுக் கொண்ட வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள பலத்தையும் செல்வாக்கையும் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது.

அதைவிட முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்புகிறபடி சுயாட்சி உரிமைகளை அவர்களாகவே வழங்கக் கூடிய நிலை ஒன்று ஏற்பட்டால் கூட அதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் ஒருபோதும் இடமளிக்காது.

அத்தகைய தருணமொன்றில் இப்போதுள்ளவை விடவும் அந்தத் தலைமைத்துவம் அசுர பலத்தை வெளிப்படுத்தும். ஏனென்றால் அதற்குப் பின்னால் சிங்களப் பௌத்த பெரும் தேசியவாதம் இருக்கிறது.

அது தமிழ் மக்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்காது. இது காலங்காலமாக தமிழ் மக்கள் கற்று வந்துள்ள பாடம்.

தமிழர் தரப்பின் கை எப்போதெல்லாம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. தனது பலத்தைப் பெருக்கிக் கொள்கிறது. அதற்கு சிங்கள் பௌத்த பேரினவாத சிந்தனைகள் துணையாக அமைந்து விடுகின்றன.

சிங்கள அரசியல் தலைமைத்துவம் பலவீனமடைகின்ற சூழலில் தமது தேவைகளின் நிமித்தம் தமிழர்களுக்குச் சுயாட்சி உரிமைகளை அவர்களோ கையில் தூக்கிக் கொடுப்பார்கள் என நம்ப வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்க்கிறார்.

அவரது அந்த நம்பிக்கைப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால் கடந்த கால வரலாறு அத்தகைய படிப்பினையை கற்றுத் தரவில்லையே?

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று தமிழர்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டம் நடத்திய போதும் சிங்கள தலைமைத்துவம் அத்தகையதொரு முடிவுக்கு ஒருபோதும் வர முற்பட்டதில்லை.

முன்னைய ஆட்சிக் காலங்களில் எல்லாம் சிங்களத் தலைமைத்துவம் பலமாக இருந்தது என்று கூற முடியாது. எல்லாத் தலைவர்களும் அரசியல் நெருக்கடிகளையே எதிர்கொண்டார்கள். கடன் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தார்கள். சர்வதேச அழுத்தங்களை சமாளித்துக் கொண்டார்கள்.

ஆனாலும் சிங்களத் தலைமைத்துவம் தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதில் தான் கவனம் செலுத்தியதே தவிர அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது பற்றிச் சிந்திக்கவேயில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டதை விட மிகப்பெரிய அழுத்தாங்களை இப்போது தமிழர் தரப்பினால் சிங்கள அரசியல் தலைமைக்கு கொடுக்கவா முடியும்?

விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட படியிறங்கி வராமல் பேரினவாதத்தை தூண்டிவிட்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சிங்களத் தலைமைத்துவம் அது தான் வரலாறு.

இப்படியான நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகப் போகிறது. அதனை எப்படிச் சாத்தியமாக்கப் போகிறார் என்பது முதலமைச்சருக்கே வெளிச்சம்.

தமிழர்களை ஒன்றுபடுத்தி அதனைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் முதலமைச்சர். ஆனால் நடைமுறையில் தமிழரின் தலைமைத்துவம் உடைந்து போய்க் கிடக்கிறது.

சிங்களத் தலைமைத்துவத்தின் பலவீனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள முதலமைச்சருக்கு தமிழரின் தலைமைத்துவத்தில் உள்ள பலவீனம் தெரியாமல் போயிருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியான அரசியல் கட்சியை அமைப்பது பற்றிய முடிவை அறிவிக்க பேரவையிடம் மூன்று வார அவகாசம் கோரியிருக்கிறார்.

தமிழர் தரப்பை ஒன்றுபடுத்துவதற்கான வாய்ப்புகள், தெரிவுகளுக்குப் பதிலாக அதனைப் பலவீனப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பு பிரிந்து நின்று மோதி தமிழ் தேசியத்துக்கு முரணான கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளும் பலமடைவதற்கு வழிகோலின.

மீண்டும் மாகாண சபைத் தேர்தலிலும் அதே கூத்தை அரங்கேற்றும் முனைப்புகள் காண்பிக்கப்படுகின்றன.

இப்படியான நிலையில் சிங்களத் தலைமை பலவீனமடைகிறது என்றும், சுயாட்சியைக் கையில் கொடுக்கப் போகிறது என்றும் வெற்று நம்பிக்கைக்குள் தமிழர்களைத் தள்ளுவதற்கு முதலமைச்சர் முற்படுகிறார்.

அடுத்து வரும் தேர்தல்கள் சிக்கலானவை அதில் இனவாதம் கொப்பளிக்கும் சாத்தியங்கள் அதிகம். போர் முடிந்த காலகட்டத்தில் இனவாதம் எந்தளவுக்கு கூர்மை பெற்றிருந்ததோ அதே நிலை உருவாகுவதற்கான சூழல்களே தென்படுகின்றன. வடக்கிலும் கூட அத்தகையதொரு நிலையை எதிர்பார்க்கலாம்.

அவ்வாறானதொரு இனவாத எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத் தலைமைத்துவம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளும். ஆனால் தமிழர் தரப்பு அத்தகையதொரு ஒருமைப்பாட்டுக்குள் வரத் தயாராக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் தமிழர் தரப்பு எப்போதுமே தமக்குள் சண்டையிட்டு முரண்பட்டுக் கொண்டு பலவீனப்பட்டுப் போன வரலாற்றைக் கொண்டது.

அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு எப்போதும் தமிழர் தரப்பை ஒன்றுபட விடாமல் பிரித்தாளுகின்ற உத்தியைக் கையாளுவது சிங்கள அரசியல் தலைமை மாத்திரமன்றி இலங்கை விவகாரத்துடன் தொடர்புடைய நாடுகளின் உத்தியாகவும் இருந்து வந்திருக்கிறது.

இப்படியான நிலையில் சிங்களத் தலைமைத்துவம் பலவீனமடைகிறது என்று காத்துக் கொண்டிருப்பது குளம் வற்றும் வரை காத்திருக்கும் கொக்கின் நிலைக்கு ஒப்பானது. குளம் வற்றும் போது குடல் வற்றிச் சாகும் கொக்குப் போல தமிழர் நிலை ஆகிவிடக் கூடாது.

சிங்களத் தலைமைத்துவத்தின் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதை விட தமிழரின் பலத்தை உறுதிப்படுத்துவதில் தான் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தமிழர் தரப்பை ஒன்றுபடுத்தி பலப்படுத்துவதே முதன்மையானது. முக்கியமானது. தமிழரின் பலத்தை ஒன்றுபடுத்துவதற்கு தவறினால் சிங்களத் தலைமைத்துவம் ஒருபோதும் தனது நிலையில் இருந்து இறங்கி வராது.

அதேவேளை எந்த நெருக்கடி வந்தாலும் தமிழருக்கான உரிமைகளை சிங்களத் தலைமைத்துவம் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடாது. ஆனாலும் அத்தகைய நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஊட்டுவதற்கு முதலமைச்சர் முற்படுகிறார்.

அதனை தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அவரது பங்காளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரசாங்கம் ஒருபோதும் தீர்வைத் தராது என்று நம்புகிறவர்கள்.

முதலமைச்சர் குறிப்பிட்டது போன்று மொஹமட் அலியின் யுக்தி எந்தளவுக்கு தமிழரின் அரசியலுக்கு ஒத்துப் போகும் என்று தெரியவில்லை.

எதிரியைக் களைப்படைய வைப்பதில் முன்னர் தமிழர் தரப்பு வெற்றி பெற்றிருந்தாலும் இப்போது அப்படியில்லை. அதுபோலவே தமிழர் தரப்பு தனது முகத்தில் அடிவிழாமல் தற்காத்துக் கொள்ளும் திறனுடனும் இப்போது இல்லை.

அவ்வப்போது முகத்தில் குத்துகளை வாங்கிக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பு மொஹமட் அலியைப்போல எப்படி எதிரியைக் களைப்படைய செய்ய முடியும்? எப்படி வெற்றியைப் பெற முடியும்?

 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-03#page-4

புகை( ப் )படம்

3 months 2 weeks ago
செய்திகள் சேகரிக்கும் நிருபரோ அல்லது புகைப்படக் கலைஞனோ கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களுக்கு ஒரு சாட்சியாகவே இருக்கின்றார்கள் என்பதை இந்தக் கதை சொல்ல முயற்சிக்கின்றது.....!

சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார்

3 months 2 weeks ago
சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் தெரிவித்துள்ளார். நான் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் அன்னை சந்திக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்தவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியா ஜனாதிபதியின் மிகத்திறமையான தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்கின்றது என சிரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் இறுதி வெற்றிபெறுவார் இரு கொரியாக்களின் இணைப்பை சாத்தியமாக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவிற்கும் சிரியாவிற்கும் இடையில் நல்லுறவுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தியில் வடகொரியாவிற்கு தொடர்புள்ளதாக ஐநா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் வடகொரியா இதனை நிராகரித்து வந்துள்ளது. இரு நாடுகளும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன. http://www.virakesari.lk/article/34386

சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார்

3 months 2 weeks ago
சிரியா ஜனாதிபதி வடகொரியா செல்கின்றார்

 

வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

நான் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு  அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் அன்னை சந்திக்கப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்தவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஜனாதிபதியின் மிகத்திறமையான தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்கின்றது என சிரியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

siria_president.jpg

அவர் இறுதி வெற்றிபெறுவார் இரு கொரியாக்களின் இணைப்பை சாத்தியமாக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவிற்கும் சிரியாவிற்கும் இடையில் நல்லுறவுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தியில் வடகொரியாவிற்கு தொடர்புள்ளதாக ஐநா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் வடகொரியா இதனை நிராகரித்து வந்துள்ளது.

இரு நாடுகளும் சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

http://www.virakesari.lk/article/34386

`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்

3 months 2 weeks ago
`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச் கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார். நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார். பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார். இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். இதற்கிடையே, ``காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை நினைத்து கர்நாடக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் பேசியிருப்பது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியானது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், சித்தராமையாவை போலக் குமாரசாமியும் பேசியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. சந்திப்புக்காகப் பெங்களூரு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மக்கள் பிரநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. தி.மு.கத் தலைவர் கருணாநிதிக்கு பலமுறை பிறந்தநாள் முடிந்தும் வாழ்த்து கூறியுள்ளேன். இம்முறையும் அப்படியே கூறுவேன். காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. அதை நோக்கித்தான் எனது பயணம் இருக்கும். காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது குறித்து இரு மாநில திரைப்பட சங்கங்கள் பார்த்துக்கொள்ளும். என்னைப் பொறுத்தவரை தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது. அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை எல்லையைக் கடந்து, தனது பேராசையினால் பல தவறுகள் செய்துள்ளது" என்றார். https://www.vikatan.com/news/tamilnadu/126695-kamalhassan-will-meet-kumarasamy-on-tomorrow.html

`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்

3 months 2 weeks ago
`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்
 

கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார்.

கமல்ஹாசன்

 

நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார். பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார். இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். 

இதற்கிடையே, ``காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை நினைத்து கர்நாடக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் பேசியிருப்பது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியானது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், சித்தராமையாவை போலக் குமாரசாமியும் பேசியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்காகப் பெங்களூரு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மக்கள் பிரநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. தி.மு.கத் தலைவர் கருணாநிதிக்கு பலமுறை பிறந்தநாள் முடிந்தும் வாழ்த்து கூறியுள்ளேன். இம்முறையும் அப்படியே கூறுவேன்.

 

காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. அதை நோக்கித்தான் எனது பயணம் இருக்கும். காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது குறித்து இரு மாநில திரைப்பட சங்கங்கள் பார்த்துக்கொள்ளும். என்னைப் பொறுத்தவரை தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது. அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை எல்லையைக் கடந்து, தனது பேராசையினால் பல தவறுகள் செய்துள்ளது" என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/126695-kamalhassan-will-meet-kumarasamy-on-tomorrow.html

`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்

3 months 2 weeks ago
`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``மனிதனுக்கும் ஆறுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் காவிரி விவகாரம் குறித்து பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேசும்போதெல்லாம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. அந்த விவகாரம் குறித்த நடைமுறையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி நமது விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தசூழலில் காலா திரைப்படத்தை வெளியாகமால் தடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?. ரஜினி கூறிய கருத்து நம்மைக் கடுமையாகப் பாதித்துள்ளது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு காலா படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சிலை அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவது. இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாது. எப்போதும் நமக்குத் தெரிந்ததில்லை. ஒருவேளை அந்தப் படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று. மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்?. நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத, தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது?. படத்தில் தங்களது திறமை மற்றும் உழைப்பைக் கொட்டியுள்ள நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், துணை நடிகர்கள் மற்றும் உழைப்பாளர்கள் பற்றி நினைத்ததுண்டா?. அதேபோல், சினிமா போஸ்டர்களை ஒட்டிக்கொண்டும், தியேட்டர்களில் சைக்கிள் ஸ்டாண்டுகளை வைத்துக் கொண்டும் இருப்பவர்கள் முதல் தியேட்டர்களில் கேண்டீன் நடத்துபவர்கள் வரையில் இருப்பவர்களின் நிலை?. விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என திரைப்படம் சார்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக் கொண்டவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் வாழ்வுதரும் சினிமா பிரியர்களின் நிலை?. இந்த அசாதாரண சூழலுக்கு சாமானியன் கொடுக்கும் விலை... வாகனங்கள் எரிப்பு, பொருட்களை அடித்து உடைப்பது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் என இந்த பட்டியல் முடிவற்றதாக நீளும். இதுபோன்ற சம்பவங்களால் கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் இடையிலான நல்லிணக்க சூழல் குலைந்துபோகும் நிலை பற்றி சிந்தித்ததுண்டா?. நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட பின்னர், இந்த சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்?. இதுபோன்ற ஒரு வாய்ப்பு வருவதற்காக காத்திருக்கும் அவர்கள், மீண்டும் அசாதார சூழலை ஏற்படுத்துவார்கள். இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழ வேண்டி இருக்கும்’’ என்று பிரகாஷ் ராஜ், தனது பதிவில் தெரிவித்துள்ளார் https://www.vikatan.com/news/tamilnadu/126696-prakash-raaj-raises-voice-against-ban-on-releasing-kaala-in-karnataka.html

`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்

3 months 2 weeks ago
`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்
 

கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். 

பிரகாஷ் ராஜ்

 

ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``மனிதனுக்கும் ஆறுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் காவிரி விவகாரம் குறித்து பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேசும்போதெல்லாம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. அந்த விவகாரம் குறித்த நடைமுறையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி நமது விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தசூழலில் காலா திரைப்படத்தை வெளியாகமால் தடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?. ரஜினி கூறிய கருத்து நம்மைக் கடுமையாகப் பாதித்துள்ளது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு காலா படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சிலை அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவது. இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாது. எப்போதும் நமக்குத் தெரிந்ததில்லை. ஒருவேளை அந்தப் படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று. 

பிரகாஷ் ராஜ்

 

மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்?. நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத, தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது?. படத்தில் தங்களது திறமை மற்றும் உழைப்பைக் கொட்டியுள்ள நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், துணை நடிகர்கள் மற்றும் உழைப்பாளர்கள் பற்றி நினைத்ததுண்டா?. அதேபோல், சினிமா போஸ்டர்களை ஒட்டிக்கொண்டும், தியேட்டர்களில் சைக்கிள் ஸ்டாண்டுகளை வைத்துக் கொண்டும் இருப்பவர்கள் முதல் தியேட்டர்களில் கேண்டீன் நடத்துபவர்கள் வரையில் இருப்பவர்களின் நிலை?. விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என திரைப்படம் சார்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக் கொண்டவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் வாழ்வுதரும் சினிமா பிரியர்களின் நிலை?. இந்த அசாதாரண சூழலுக்கு சாமானியன் கொடுக்கும் விலை... வாகனங்கள் எரிப்பு, பொருட்களை அடித்து உடைப்பது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் என இந்த பட்டியல் முடிவற்றதாக நீளும். இதுபோன்ற சம்பவங்களால் கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் இடையிலான நல்லிணக்க சூழல் குலைந்துபோகும் நிலை பற்றி சிந்தித்ததுண்டா?. நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட பின்னர், இந்த சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்?. இதுபோன்ற ஒரு வாய்ப்பு வருவதற்காக காத்திருக்கும் அவர்கள், மீண்டும் அசாதார சூழலை ஏற்படுத்துவார்கள். இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழ வேண்டி இருக்கும்’’ என்று பிரகாஷ் ராஜ், தனது பதிவில் தெரிவித்துள்ளார்

https://www.vikatan.com/news/tamilnadu/126696-prakash-raaj-raises-voice-against-ban-on-releasing-kaala-in-karnataka.html

பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது?

3 months 2 weeks ago
பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது? ஜனா­தி­பதி டோனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்கா தலை­வ­ராக பத­வி­யேற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­வ­தற்கு முன்னர் பல வெளிநாட்டுக் கொள்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் பாதை வேறு எனது பாதை வேறு என உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டினார். வெளிநாட்டு கொள்கை மாற்­றங்­களில் மிகவும் பிர­சித்­த­மா­னது என வர்­ணிக்­கப்­ப­டக்­கூ­டி­யது, இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­சலேம் நகரை மாற்­றப்­போ­வ­தாக விடுத்த அறி­விப்பு என துணிந்து கூறலாம். சென்ற ஆண்டு 2017ஆம் ஆண்டில் இச்­செய்­தியை வெளியிட்டார். பலஸ்­தீ­னிய விவ­கா­ரத்தில் தொடர்­பேச்சு வார்த்­தை­களில் ஈடு­பட்ட பலஸ்­தீன அதி­கா­ர­சபை தாம் எதிர் காலத்தில் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கு­பற்றப் போவ­தில்­லை­யென அறி­வித்­தது. அமெரிக்கா பதில் நட­வ­டிக்கை மேற்கொண்­டது. ஐ.நா சபையால் 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க உரு­வாக்­கப்­பட்ட UNRWA எனப்­படும் ஐ.நா சபைப் புனர்­வாழ்வு மற்றும் பணி­க­ளுக்­கான அமைப்­புக்கு அமெ­ரிக்கா உட்­பட பல நாடுகள் நிதிப்­பங்­க­ளிப்பு செய்­கின்­றன. அமெ­ரிக்­காவின் மாதாந்த பங்­குத்­தொகை 125 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். அமெ­ரிக்கா பதில் நட­வ­டிக்­கை­யாக தனது பங்­க­ளிப்பில் அரை­வா­சியை வெட்­டி­விட்­டது. UNRWA என்ற முக­வ­ராண்மை 1948 இல் இஸ்ரேல் எனும் பூகோள வரை­ப­டத்­தில்­ இல்லாத புதிய நாட்டை அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உரு­வாக்­கி­ய­போது, அப்­பி­ர­தே­சத்தில் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பலஸ்­தீ­னி­யர்கள் விரட்டி அடிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அவ்­வா­றான 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உணவு, சுகா­தார வச­திகள், கல்வி ஆகி­ய­வற்றை செயற்­ப­டுத்­தவே UNRWA தாபிக்­கப்­பட்­டது. ட்ரம்ப் அமெ­ரிக்கா பங்­க­ளிப்பை அரை­வா­சி­யாக வெட்­டி­யமை அமெ­ரிக்கா உரத்­துப்­பேசும் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை, மனித உரிமை போன்ற விட­யங்­களில் அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டங்­களை இறு­மாப்­புடன் மீறு­வதை எடுத்துக் காட்­டு­கின்­றது. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை ஐரோப்­பிய யுனியன் வர­வேற்­க­வில்லை. ஐரோப்­பிய நாடுகள் தத்தம் பங்­க­ளிப்­பினை அதி­க­ரித்து அமெ­ரிக்­காவின் வெட்­டுத்­தொ­கையை சரி­செய்து பலஸ்­தீன அக­தி­களின் உணவு, சுகா­தாரம், கல்வி ஆகி­ய­வற்றை தொடர்ந்து பரா­ம­ரிக்க வேண்டும் என கூறி­யுள்­ளமை சற்று ஆறுதல் தரக்­கூ­டிய விட­ய­மாகும். காசா பிர­தே­சத்தில் 17 லட்சம் பலஸ்­தீன அக­திகள் UNRWA நிதி உத­வியில் தங்கி வாழ்­கின்­றார்கள். ட்ரம்பின் தீர்­மானம் காசா பலஸ்­தீன மக்­களை பல­மாக அடித்­துள்­ளது. பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு வயிற்றில் அடித்து பலஸ்­தீன அதி­கா­ர­சபை பிர­தி­நி­தி­களை பேச்­சு­வார்த்­தைக்கு அடி­ப­ணிந்து வரப்­பண்ணும் ட்ரம்பின் நட­வ­டிக்கை பல­தி­சை­க­ளி­லி­ருந்து கண்­டனக் கணை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. வாசிங்டன் போஸ்ற் பத்­தி­ரிகை ட்ரம்பின் கொள்­கையை கண்­டித்­தது மட்­டு­மல்ல ட்ரம்ப் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதித்­துள்ளார் எனவும் கண்­டித்­தது. அத்­துடன் நிற்­காமல் அர­சியல் பிரச்­சினை விட­யங்­களில் மனி­தா­பி­மான உத­வி­களை பேரம் பேசும் விட­ய­மாகக் கொள்­ளக்­கூ­டாது எனவும் கண்­டித்­துள்­ளது. 2018ஆம் ஆண்டு இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில் 70ஆவது அக­வையைக் கொண்­டாடும் வரு­ட­மாகும். அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் சாம்­ராஜ்­யங்­களின் நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான திட்­டத்தின் பிர­காரம் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் பூர்­வீக குடி­க­ளான பலஸ்­தீ­னி­யர்­களை விரட்­டி­ அ­டித்து இஸ்ரேல் என்னும் நாடு உரு­வாக்­கப்­பட்­டது. தமது பாரம்­ப­ரியப் பிர­தே­சத்தை மீட்­க­வேண்­டு­மென புறப்­பட்ட இயக்­கங்கள் பலவும் இணைந்து பலஸ்­தீன விடு­தலை இயக்கம் எனும் அமைப்பை யசீர் அர­பாத்தின் தலை­மையில் நிறு­வின. 1968ம் ஆண்டு பலஸ்­தீன விடு­தலை இயக்கம் இஸ்­ரேலை அழித்­தொ­ழித்து பலஸ்­தீன நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற நோக்­கத்தை உலகம் பூரா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தினர். ஆனால் அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் பாது­காப்­புடன் இஸ்ரேல் நின்று நிலைத்­தது. அரா­பிய மன்னர் ஆட்­சிகள் பலஸ்­தீன தாய­கத்­துக்கு பெரி­தாக ஆத­ரவும் அளிக்­க­வில்லை. அந்­நா­டுகள் அமெ­ரிக்­காவை ஆத­ரிப்­ப­னவாக இருந்­தனர். பலஸ்­தீன விடு­தலை இயக்கம் பல வெவ்­வேறு இயக்­கங்­களை உள்­ள­டக்­கி­யது. அவை­த­மக்குள் மோதிப் பல­வீ­ன­மா­யின. அத்­துடன் ஜோர்டான், லெபனான் ஆகிய நாட்­டுப்­ப­டை­க­ளு­டனும் பலஸ்­தீன விடு­தலை இயக்­கம்­மு­ரண்­பட்டு யுத்தம் வரையில் வியா­பித்து பல­வீனம் அடைந்­தன. இன்று பலஸ்­தீன விடு­தலை இயக்கம் Dr. அப்­பாஸின் தலை­மையில் பலஸ்­தீன அதி­கார சபையை நிர்­வ­கிக்­கின்­றது. ஹமாஸ் இயக்கம் பலஸ்­தீன அர­சுடன் கருத்து வேற்­று­மையின் கார­ண­மாக மோதல்­களும் இடம்­பெற்­றன. ஹமாஸ் இயக்­கத்­தினர் இன்றும் பலஸ்­தீன சுயாட்சி இலட்­சி­யத்­துடன் இயங்­கு­கின்­றது. பலஸ்­தீன அதி­கார சபைக்கு சவுதி அரே­பியா ஆத­ரவு பிர­தா­ன­மா­னது. ஹமா­சுக்கு கட்டார், ஈரான், சிரிய அர­சுகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. இந்தப் பின் புலம் தான் சென்ற வருடம் சவூ­தியும் இதர நாடு­களும் கட்­டா­ருடன் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்து தரை, கடல், வான் முற்­று­கையை ஏற்­ப­டுத்­தி­யது. ஜனா­தி­பதி ட்ரம்ப் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை நக­ராக்கும் திட்டம் சட்­ட­வி­ரோ­த­மா­னது. எந்த ஒரு அரசோ,அரச தலை­வர்­களோ ஐ.நா பாது­காப்­புச்­ச­பையின் தீர்­மா­னத்­துக்கு மாறாக செயற்­ப­ட­மு­டி­யாது. ஜ.நா பாது­காப்புச் சபை 23.12.2016 ஆம் திகதி 2334 இலக்கம் கொண்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது.அதன் உள்­ள­டக்கம் யாதெனில் 4.6.1967ஆம் திகதி காணப்­பட்ட எல்லைக் கோடு­களை மாற்­றவோ அல்­லது ஜெரு­சலேம் உட்­பட எந்த நக­ரத்தின் அந்­தஸ்­திலும் மாற்றம் மேற்­கொள்­ளவோ முடி­யாது என்­ப­தாகும். ஆனால் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் பேச்சு வார்த்தை மேசையில் தீர்­மா­னத்தால் மாற்றம் செய்ய முடியும் எனவும் கூறி­யது.இத்­த­ரு­ணத்தில் 4.6.1967ஆம் திகதி நில­விய எல்­லைகள் என்­பது பற்றி பார்­வையை செலுத்­துதல் அவ­சி­ய­மா­ன­தாகும். யூன் 1967ம் ஆண்டு இஸ்ரேல் திடீ­ரென எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடு­களை தாக்கி பல இடங்­களைக் கைப்­பற்­றி­யது. அமெரிக்கா பின் துல்­லி­ய­மான புல­னாய்வு தக­வல்­க­ளுடன் மூன்று நாடு­களில் பலஸ்­தீன மக்கள் வாழ்ந்த பிர­தே­சங்­க­ளான மேற்­குக்­கரை,ஜெரு­சலேம், கோலான் குன்­றுகள், சினாய் பிர­தேசம் ஆகி­ய­வற்றைக் கைப்­பற்றி தனது நாட்டின் எல்­லைப்­ப­ரப்பை இஸ்ரேல் மேலும் விஸ்­த­ரித்­தது. 1967 இல் ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­ன­மொன்றை அங்­கீ­க­ரித்­தது. யுத்­தத்­தில்­இஸ்ரேல் பிர­தே­சங்­களை கைப்­பற்­றி­யமை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். இஸ்ரேல் அவ்­வா­றாக கைப்­பற்­றி­யமை தவ­றாகும். இஸ்ரேல் உட­ன­டி­யாக கைப்­பற்­றிய பிர­தே­சங்­களை விட்டு விலக வேண்டும் என்­பதே அத்­தீர்­மானம் ஆகும். 242இலக்கம் கொண்ட பாது­காப்­புச்­சபை தீர்­மா­னத்தை இஸ்ரேல் எள்­ள­ளவும் கவ­னத்­திற்கு எடுக்­க­வில்லை. சர்­வ­தே­ச­சட்­டங்­களை இஸ்ரேல் மட்­டு­மல்ல அமெரிக்­காவும் மீறி­யுள்­ளமை தெளிவா­கின்­றது. 23.12.2016ஆம் திகதி 2334ஆம் இலக்க பாது­காப்புச் சபை தீர்­மானம் பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த போது இடம் பெற்ற விடய­மாகும். அமெரிக்கா இத்­தீர்­மா­னத்தை விட்டோ செய்­தி­ருக்க முடியும். ஆனால் அமெரிக்கா அவ்­வாறு செய்­ய­வில்லை. வாக்­கெ­டுப்பு நேரத்தில் அமெரிக்க பிர­தி­நிதி சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. ஆகையால் தீர்­மானம் நிறை­வே­றி­யது. இக்­கா­ர­ணங்­களால் பராக் ஒபாமா மத்­திய கிழக்கில் சமா­தானம் ஏற்­ப­டுத்த உழைத்தார் என அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர். பராக் ஒபா­மாவின் அரபு - இஸ்ரேல் பலஸ்­தீன நெருக்­கடி தொடர்­பான கொள்கை முன்­னேற்­ற­க­ர­மா­னது.அவ­ரது தலை­மைத்­துவம் ஈரானின் அணு ஆயுத தயா­ரிப்பு, கியூபா நாட்­டுடன் எழு­பது வரு­டங்­க­ளுக்கு பின்னர் இரா­ஜ­தந்­திர தொடர்பை ஏற்­ப­டுத்­தியமை, பூகோள வெப்­ப­ம­டைதல் தொடர்­பான பணியில் நடை­பெற்ற கோப் 21 மகா­நாட்டின் தீர்­மா­ன­ங்க­ளுக்கு ஆத­ரவு அளித்­தமை போன்­ற­வற்றில் சாத­க­மாக செயற்­பட்­டமை சர்­வ­தேச அமைதி, பாது­காப்­புக்கு பங்­க­ளிப்­பு­செய்­யக்­கூ­டி­யவை. இஸ்ரேல் என்ற புதிய நாடு 14 வைகாசி 1948 இல் உத­ய­மா­னது அமெரிக்க ஜனா­தி­பதி ட்ரூமன் காலத்தில் அமெரிக்கா, பிரிட்­டனின் பல­மான ஆத­ர­வுடன் இஸ்ரேல் நாடு உத­ய­மாகி 70 வரு­டங்கள் இந்த ஆண்­டுடன் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வேறு வார்த்­தையில் கூறினால் பூர்­விக குடி­க­ளான, பூமி புத்­தி­ரர்­க­ளாக இருந்த பலஸ்­தீ­னி­யர்கள் பல­வந்­த­மாக தமது இருப்­பி­டத்தை விட்டு துரத்­தப்­பட்டு இவ்­வ­ரு­டத்­துடன் 70 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வைகாசி 2018, 14ஆம் திகதி அமெரிக்கா அதிபர் மார்­கழி 2017ஆம் ஆண்­டை பிர­க­ட­னப்­ப­டுத்தி இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேத்தை அங்­கீ­க­ரித்­தது. அமெரிக்க தூது­வ­ரா­ல­யத்தை ஜெரு­ச­லேத்தில் அமைத்­தது. முன்னாள் அதிபர் ட்ரூமனும் இந்நாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் 14 வைகாசி எனும் திக­தியில் இஸ்ரேல் தொடர்­பான கொள்­கை­களை தெரிந்­தெ­டுத்­தமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. 14 வைகாசி 2018 இல் அமெரிக்க தூது­வ­ரா­லயம் டெல் அவிவ் நக­ரத்­தி­லி­ருந்து ஜெரு­ச­லேத்­துக்கு மாற்­றப்­பட்­டதை ஆட்­சே­பித்து பலஸ்­தீ­னி­யர்கள் பெரும்­ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கினர். இஸ்ரேல் படைகள் கண்­மு­டித்­த­ன­மாக நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்­களை சுட்டுக் கொன்­றது இன்னும் பலஸ்­தீ­னி­யர்­களின் ஆக்­ரோ­ச­மான எதிர்ப்பு தளர்ந்து விட­வில்லை. பலஸ்­தீ­னர்கள் வெறும் கைக­ளுடன் போராட்ட உணர்வை வெளிக்­காட்­டு­கின்­றார்கள். அமெரிக்க தூத­ரக திறப்பு விழா 14 வைகாசி இடம் பெற்ற போது ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் திறப்பு விழாவில் பங்­கு­பற்­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­னங்­க­ளுக்கு விரோ­த­மாக இந்­நா­டுகள் செயற்­பட விரும்­ப­வில்லை.பலஸ்­தீ­னி­யர்கள் தாய் நாட்­டுக்கு திரும்­பு­வ­தற்­கான நீண்ட பய­ணம்­என்­கின்ற போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். நீண்ட பயணம் எனும்­போது சீனத்­த­லைவர் மறைந்­த­மாவோ சீன புரட்­சியின் போது நீண்ட பயணம் ஒன்றை நிகழ்த்­தி­யி­ருந்தார். உலகம் பூரா­கவும் நீண்ட பயண தத்­துவம் பெரும் செல்­வாக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பலஸ்­தீ­னர்­களின் மீது இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்டுக் கோரிக்­கைகள் ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையில் அமெரிக்­காவின் வீட்டோ அதி­காரம் எனும் துருப்­புச்­சீட்டு இருக்கும் வரை செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்­றது. இதனை தற்­போது பலஸ்­தி­னிய அதி­கா­ர­சபை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு முறைப்­பா­டு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிக்கை செய்­துள்­ளது. அமெ­ரிக்கா, ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­வராக்­கி­ய­தற்கு இஸ்­லா­மிய கூட்­டு­றவு அமைப்பு (Organization of Islamic Corporation - OIC) கடு­மை­யான கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ளது. 57 முஸ்லிம் நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் OIC அமைப்பு பலஸ்­தீ­னிய விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச அரங்­கு­களில் கூடு­த­லான அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வது கண்­கூடு. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை சட்­ட­வி­ரோ­த­மா­னது எனவும் வர­லாற்று ரீதி­யா­­னதும் சட்­ட­பூர்­வ­மா­னதும் இயற்­கை­யா­ன­து­மான பாலஸ்­தீ­னர்­களின் தேசிய உரி­மைகள் மீதான தாக்­குதல் எனவும் கண்­டித்­துள்­ளது. தலை­ந­க­ராக்­கிய நட­வ­டிக்கை சர்­வ­தேச சமா­தானம், பாது­காப்­பிற்கு குந்­தகம் விளை­விக்கும் எனவும் கூறி­யுள்­ளது. இஸ்­லா­மி­யர்­களின் புனி­தத்­த­ல­மான அல் அக்சா பள்­ளி­வாசல் ஜெரு­ச­லேத்தில் அமைந்­துள்­ள­மையும் அதன் கார­ண­மாக பாலஸ்­தீ­னி­யர்­களின் சட்­ட­பூர்வ உரி­மை­களை அமெ­ரிக்கா அவ­ம­திக்­கின்­றது எனவும் OIC கண்­டனம் தொடுத்­துள்­ளது. துருக்கி, இஸ்­ரேலின் குற்­றச்­செ­யல்கள் மேன்­மேலும் அதி­க­ரிக்­கின்­றது எனவும் அண்­மையில் காசா பகு­தியில் இஸ்ரேல் நடாத்­திய கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டமை இஸ்­ரேலின் மிரு­கத்­த­ன­மான செயல் எனவும் கண்­டித்­துள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தின் மௌனம் கலைக்­கப்­பட வேண்டும் எனவும் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் துருக்கி குரல் எழுப்­பி­யுள்­ளது. 2018 வைகா­சியில் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக்­கிய போது ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கெதிராக பெரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. ஈரான் வெறும் வார்த்தைகளோடு விளையாடவில்லை. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சிரிய அரச படைகளுக்கு ஆதரவாக தாக்குதலை உக்கிரமாக்கி அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவுப் படைகள் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிரிய ஆதரவு ஈரான் தளங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் - ஈரான் யுத்தம் சமாந்தரமாக நடைபெறுவதாகத் தோன்றியது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கையெழுத்திட்டு ஈரானுடன் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தமையும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. இச்சூழ்நிலையில் இஸ்ரேலின் இருப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய ஒரேயொரு பலம் பொருந்திய நாடு என்றால் அது ஈரானைத் தான் குறிப்பிட முடியும். எழுபது ஆண்டுகள் தொடர்ந்து துன்பத்தின் மேல் துன்பம் அனுபவித்துவரும் பலஸ்தீனிய மக்களுக்கு கௌரவமான தீர்வினை எட்டுவதற்கு சமகால அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இல்லையென்பது தெளிவாகின்றது. எனினும் சர்வதேச சமாதானம், பாதுகாப்பு என்கின்ற கோட்பாடுகளுடன் இயங்குகின்ற ஐ.நா சபையும் வேறு சர்வதேச சட்டங்களும் சுதந்திரமான பலஸ்தீனிய அரசை உருவாக்கி பலஸ்தீனிய மக்களின் அவலங்களை போக்க வேண்டும் என்பது பெரும்பாலான சமாதானம் விரும்பும் மக்களின் வேட்கையாகும். ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-6

பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது?

3 months 2 weeks ago
பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது?

 

ஜனா­தி­பதி டோனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்கா தலை­வ­ராக பத­வி­யேற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­வ­தற்கு முன்னர் பல வெளிநாட்டுக் கொள்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் பாதை வேறு எனது பாதை வேறு என உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டினார். வெளிநாட்டு கொள்கை மாற்­றங்­களில் மிகவும் பிர­சித்­த­மா­னது என வர்­ணிக்­கப்­ப­டக்­கூ­டி­யது, இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­சலேம் நகரை மாற்­றப்­போ­வ­தாக விடுத்த அறி­விப்பு என துணிந்து கூறலாம். சென்ற ஆண்டு 2017ஆம் ஆண்டில் இச்­செய்­தியை வெளியிட்டார். பலஸ்­தீ­னிய விவ­கா­ரத்தில் தொடர்­பேச்சு வார்த்­தை­களில் ஈடு­பட்ட பலஸ்­தீன அதி­கா­ர­சபை தாம் எதிர் காலத்தில் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கு­பற்றப் போவ­தில்­லை­யென அறி­வித்­தது. அமெரிக்கா பதில் நட­வ­டிக்கை மேற்கொண்­டது. ஐ.நா சபையால் 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க உரு­வாக்­கப்­பட்ட UNRWA எனப்­படும் ஐ.நா சபைப் புனர்­வாழ்வு மற்றும் பணி­க­ளுக்­கான அமைப்­புக்கு அமெ­ரிக்கா உட்­பட பல நாடுகள் நிதிப்­பங்­க­ளிப்பு செய்­கின்­றன. அமெ­ரிக்­காவின் மாதாந்த பங்­குத்­தொகை 125 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். அமெ­ரிக்கா பதில் நட­வ­டிக்­கை­யாக தனது பங்­க­ளிப்பில் அரை­வா­சியை வெட்­டி­விட்­டது. UNRWA என்ற முக­வ­ராண்மை 1948 இல் இஸ்ரேல் எனும் பூகோள வரை­ப­டத்­தில்­ இல்லாத புதிய நாட்டை அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உரு­வாக்­கி­ய­போது, அப்­பி­ர­தே­சத்தில் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பலஸ்­தீ­னி­யர்கள் விரட்டி அடிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அவ்­வா­றான 5 மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உணவு, சுகா­தார வச­திகள், கல்வி ஆகி­ய­வற்றை செயற்­ப­டுத்­தவே UNRWA தாபிக்­கப்­பட்­டது. ட்ரம்ப் அமெ­ரிக்கா பங்­க­ளிப்பை அரை­வா­சி­யாக வெட்­டி­யமை அமெ­ரிக்கா உரத்­துப்­பேசும் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை, மனித உரிமை போன்ற விட­யங்­களில் அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டங்­களை இறு­மாப்­புடன் மீறு­வதை எடுத்துக் காட்­டு­கின்­றது. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை ஐரோப்­பிய யுனியன் வர­வேற்­க­வில்லை. ஐரோப்­பிய நாடுகள் தத்தம் பங்­க­ளிப்­பினை அதி­க­ரித்து அமெ­ரிக்­காவின் வெட்­டுத்­தொ­கையை சரி­செய்து பலஸ்­தீன அக­தி­களின் உணவு, சுகா­தாரம், கல்வி ஆகி­ய­வற்றை தொடர்ந்து பரா­ம­ரிக்க வேண்டும் என கூறி­யுள்­ளமை சற்று ஆறுதல் தரக்­கூ­டிய விட­ய­மாகும். காசா பிர­தே­சத்தில் 17 லட்சம் பலஸ்­தீன அக­திகள் UNRWA நிதி உத­வியில் தங்கி வாழ்­கின்­றார்கள். ட்ரம்பின் தீர்­மானம் காசா பலஸ்­தீன மக்­களை பல­மாக அடித்­துள்­ளது. பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு வயிற்றில் அடித்து பலஸ்­தீன அதி­கா­ர­சபை பிர­தி­நி­தி­களை பேச்­சு­வார்த்­தைக்கு அடி­ப­ணிந்து வரப்­பண்ணும் ட்ரம்பின் நட­வ­டிக்கை பல­தி­சை­க­ளி­லி­ருந்து கண்­டனக் கணை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. வாசிங்டன் போஸ்ற் பத்­தி­ரிகை ட்ரம்பின் கொள்­கையை கண்­டித்­தது மட்­டு­மல்ல ட்ரம்ப் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதித்­துள்ளார் எனவும் கண்­டித்­தது. அத்­துடன் நிற்­காமல் அர­சியல் பிரச்­சினை விட­யங்­களில் மனி­தா­பி­மான உத­வி­களை பேரம் பேசும் விட­ய­மாகக் கொள்­ளக்­கூ­டாது எனவும் கண்­டித்­துள்­ளது.

2018ஆம் ஆண்டு இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில் 70ஆவது அக­வையைக் கொண்­டாடும் வரு­ட­மாகும். அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் சாம்­ராஜ்­யங்­களின் நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான திட்­டத்தின் பிர­காரம் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் பூர்­வீக குடி­க­ளான பலஸ்­தீ­னி­யர்­களை விரட்­டி­ அ­டித்து இஸ்ரேல் என்னும் நாடு உரு­வாக்­கப்­பட்­டது. தமது பாரம்­ப­ரியப் பிர­தே­சத்தை மீட்­க­வேண்­டு­மென புறப்­பட்ட இயக்­கங்கள் பலவும் இணைந்து பலஸ்­தீன விடு­தலை இயக்கம் எனும் அமைப்பை யசீர் அர­பாத்தின் தலை­மையில் நிறு­வின. 1968ம் ஆண்டு பலஸ்­தீன விடு­தலை இயக்கம் இஸ்­ரேலை அழித்­தொ­ழித்து பலஸ்­தீன நாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற நோக்­கத்தை உலகம் பூரா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தினர். ஆனால் அமெ­ரிக்கா, பிரிட்டிஷ் பாது­காப்­புடன் இஸ்ரேல் நின்று நிலைத்­தது. அரா­பிய மன்னர் ஆட்­சிகள் பலஸ்­தீன தாய­கத்­துக்கு பெரி­தாக ஆத­ரவும் அளிக்­க­வில்லை. அந்­நா­டுகள் அமெ­ரிக்­காவை ஆத­ரிப்­ப­னவாக இருந்­தனர். பலஸ்­தீன விடு­தலை இயக்கம் பல வெவ்­வேறு இயக்­கங்­களை உள்­ள­டக்­கி­யது. அவை­த­மக்குள் மோதிப் பல­வீ­ன­மா­யின. அத்­துடன் ஜோர்டான், லெபனான் ஆகிய நாட்­டுப்­ப­டை­க­ளு­டனும் பலஸ்­தீன விடு­தலை இயக்­கம்­மு­ரண்­பட்டு யுத்தம் வரையில் வியா­பித்து பல­வீனம் அடைந்­தன. இன்று பலஸ்­தீன விடு­தலை இயக்கம் Dr. அப்­பாஸின் தலை­மையில் பலஸ்­தீன அதி­கார சபையை நிர்­வ­கிக்­கின்­றது. ஹமாஸ் இயக்கம் பலஸ்­தீன அர­சுடன் கருத்து வேற்­று­மையின் கார­ண­மாக மோதல்­களும் இடம்­பெற்­றன. ஹமாஸ் இயக்­கத்­தினர் இன்றும் பலஸ்­தீன சுயாட்சி இலட்­சி­யத்­துடன் இயங்­கு­கின்­றது. பலஸ்­தீன அதி­கார சபைக்கு சவுதி அரே­பியா ஆத­ரவு பிர­தா­ன­மா­னது. ஹமா­சுக்கு கட்டார், ஈரான், சிரிய அர­சுகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. இந்தப் பின் புலம் தான் சென்ற வருடம் சவூ­தியும் இதர நாடு­களும் கட்­டா­ருடன் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்து தரை, கடல், வான் முற்­று­கையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஜனா­தி­பதி ட்ரம்ப் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை நக­ராக்கும் திட்டம் சட்­ட­வி­ரோ­த­மா­னது. எந்த ஒரு அரசோ,அரச தலை­வர்­களோ ஐ.நா பாது­காப்­புச்­ச­பையின் தீர்­மா­னத்­துக்கு மாறாக செயற்­ப­ட­மு­டி­யாது. ஜ.நா பாது­காப்புச் சபை 23.12.2016 ஆம் திகதி 2334 இலக்கம் கொண்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது.அதன் உள்­ள­டக்கம் யாதெனில் 4.6.1967ஆம் திகதி காணப்­பட்ட எல்லைக் கோடு­களை மாற்­றவோ அல்­லது ஜெரு­சலேம் உட்­பட எந்த நக­ரத்தின் அந்­தஸ்­திலும் மாற்றம் மேற்­கொள்­ளவோ முடி­யாது என்­ப­தாகும். ஆனால் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் பேச்சு வார்த்தை மேசையில் தீர்­மா­னத்தால் மாற்றம் செய்ய முடியும் எனவும் கூறி­யது.இத்­த­ரு­ணத்தில் 4.6.1967ஆம் திகதி நில­விய எல்­லைகள் என்­பது பற்றி பார்­வையை செலுத்­துதல் அவ­சி­ய­மா­ன­தாகும். யூன் 1967ம் ஆண்டு இஸ்ரேல் திடீ­ரென எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடு­களை தாக்கி பல இடங்­களைக் கைப்­பற்­றி­யது. அமெரிக்கா பின் துல்­லி­ய­மான புல­னாய்வு தக­வல்­க­ளுடன் மூன்று நாடு­களில் பலஸ்­தீன மக்கள் வாழ்ந்த பிர­தே­சங்­க­ளான மேற்­குக்­கரை,ஜெரு­சலேம், கோலான் குன்­றுகள், சினாய் பிர­தேசம் ஆகி­ய­வற்றைக் கைப்­பற்றி தனது நாட்டின் எல்­லைப்­ப­ரப்பை இஸ்ரேல் மேலும் விஸ்­த­ரித்­தது. 1967 இல் ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­ன­மொன்றை அங்­கீ­க­ரித்­தது. யுத்­தத்­தில்­இஸ்ரேல் பிர­தே­சங்­களை கைப்­பற்­றி­யமை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். இஸ்ரேல் அவ்­வா­றாக கைப்­பற்­றி­யமை தவ­றாகும். இஸ்ரேல் உட­ன­டி­யாக கைப்­பற்­றிய பிர­தே­சங்­களை விட்டு விலக வேண்டும் என்­பதே அத்­தீர்­மானம் ஆகும். 242இலக்கம் கொண்ட பாது­காப்­புச்­சபை தீர்­மா­னத்தை இஸ்ரேல் எள்­ள­ளவும் கவ­னத்­திற்கு எடுக்­க­வில்லை. சர்­வ­தே­ச­சட்­டங்­களை இஸ்ரேல் மட்­டு­மல்ல அமெரிக்­காவும் மீறி­யுள்­ளமை தெளிவா­கின்­றது. 23.12.2016ஆம் திகதி 2334ஆம் இலக்க பாது­காப்புச் சபை தீர்­மானம் பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த போது இடம் பெற்ற விடய­மாகும். அமெரிக்கா இத்­தீர்­மா­னத்தை விட்டோ செய்­தி­ருக்க முடியும். ஆனால் அமெரிக்கா அவ்­வாறு செய்­ய­வில்லை. வாக்­கெ­டுப்பு நேரத்தில் அமெரிக்க பிர­தி­நிதி சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. ஆகையால் தீர்­மானம் நிறை­வே­றி­யது. இக்­கா­ர­ணங்­களால் பராக் ஒபாமா மத்­திய கிழக்கில் சமா­தானம் ஏற்­ப­டுத்த உழைத்தார் என அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர். பராக் ஒபா­மாவின் அரபு - இஸ்ரேல் பலஸ்­தீன நெருக்­கடி தொடர்­பான கொள்கை முன்­னேற்­ற­க­ர­மா­னது.அவ­ரது தலை­மைத்­துவம் ஈரானின் அணு ஆயுத தயா­ரிப்பு, கியூபா நாட்­டுடன் எழு­பது வரு­டங்­க­ளுக்கு பின்னர் இரா­ஜ­தந்­திர தொடர்பை ஏற்­ப­டுத்­தியமை, பூகோள வெப்­ப­ம­டைதல் தொடர்­பான பணியில் நடை­பெற்ற கோப் 21 மகா­நாட்டின் தீர்­மா­ன­ங்க­ளுக்கு ஆத­ரவு அளித்­தமை போன்­ற­வற்றில் சாத­க­மாக செயற்­பட்­டமை சர்­வ­தேச அமைதி, பாது­காப்­புக்கு பங்­க­ளிப்­பு­செய்­யக்­கூ­டி­யவை.

இஸ்ரேல் என்ற புதிய நாடு 14 வைகாசி 1948 இல் உத­ய­மா­னது அமெரிக்க ஜனா­தி­பதி ட்ரூமன் காலத்தில் அமெரிக்கா, பிரிட்­டனின் பல­மான ஆத­ர­வுடன் இஸ்ரேல் நாடு உத­ய­மாகி 70 வரு­டங்கள் இந்த ஆண்­டுடன் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வேறு வார்த்­தையில் கூறினால் பூர்­விக குடி­க­ளான, பூமி புத்­தி­ரர்­க­ளாக இருந்த பலஸ்­தீ­னி­யர்கள் பல­வந்­த­மாக தமது இருப்­பி­டத்தை விட்டு துரத்­தப்­பட்டு இவ்­வ­ரு­டத்­துடன் 70 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டை­கின்­றன. வைகாசி 2018, 14ஆம் திகதி அமெரிக்கா அதிபர் மார்­கழி 2017ஆம் ஆண்­டை பிர­க­ட­னப்­ப­டுத்தி இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேத்தை அங்­கீ­க­ரித்­தது. அமெரிக்க தூது­வ­ரா­ல­யத்தை ஜெரு­ச­லேத்தில் அமைத்­தது. முன்னாள் அதிபர் ட்ரூமனும் இந்நாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் 14 வைகாசி எனும் திக­தியில் இஸ்ரேல் தொடர்­பான கொள்­கை­களை தெரிந்­தெ­டுத்­தமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. 14 வைகாசி 2018 இல் அமெரிக்க தூது­வ­ரா­லயம் டெல் அவிவ் நக­ரத்­தி­லி­ருந்து ஜெரு­ச­லேத்­துக்கு மாற்­றப்­பட்­டதை ஆட்­சே­பித்து பலஸ்­தீ­னி­யர்கள் பெரும்­ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கினர். இஸ்ரேல் படைகள் கண்­மு­டித்­த­ன­மாக நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்­களை சுட்டுக் கொன்­றது இன்னும் பலஸ்­தீ­னி­யர்­களின் ஆக்­ரோ­ச­மான எதிர்ப்பு தளர்ந்து விட­வில்லை. பலஸ்­தீ­னர்கள் வெறும் கைக­ளுடன் போராட்ட உணர்வை வெளிக்­காட்­டு­கின்­றார்கள். அமெரிக்க தூத­ரக திறப்பு விழா 14 வைகாசி இடம் பெற்ற போது ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் திறப்பு விழாவில் பங்­கு­பற்­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.ஐ.நா பாது­காப்­புச்­சபை தீர்­மா­னங்­க­ளுக்கு விரோ­த­மாக இந்­நா­டுகள் செயற்­பட விரும்­ப­வில்லை.பலஸ்­தீ­னி­யர்கள் தாய் நாட்­டுக்கு திரும்­பு­வ­தற்­கான நீண்ட பய­ணம்­என்­கின்ற போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். நீண்ட பயணம் எனும்­போது சீனத்­த­லைவர் மறைந்­த­மாவோ சீன புரட்­சியின் போது நீண்ட பயணம் ஒன்றை நிகழ்த்­தி­யி­ருந்தார். உலகம் பூரா­கவும் நீண்ட பயண தத்­துவம் பெரும் செல்­வாக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பலஸ்­தீ­னர்­களின் மீது இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்டுக் கோரிக்­கைகள் ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையில் அமெரிக்­காவின் வீட்டோ அதி­காரம் எனும் துருப்­புச்­சீட்டு இருக்கும் வரை செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்­றது. இதனை தற்­போது பலஸ்­தி­னிய அதி­கா­ர­சபை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு முறைப்­பா­டு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிக்கை செய்­துள்­ளது.

அமெ­ரிக்கா, ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­வராக்­கி­ய­தற்கு இஸ்­லா­மிய கூட்­டு­றவு அமைப்பு (Organization of Islamic Corporation - OIC) கடு­மை­யான கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ளது. 57 முஸ்லிம் நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் OIC அமைப்பு பலஸ்­தீ­னிய விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச அரங்­கு­களில் கூடு­த­லான அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வது கண்­கூடு. ட்ரம்பின் நட­வ­டிக்­கையை சட்­ட­வி­ரோ­த­மா­னது எனவும் வர­லாற்று ரீதி­யா­­னதும் சட்­ட­பூர்­வ­மா­னதும் இயற்­கை­யா­ன­து­மான பாலஸ்­தீ­னர்­களின் தேசிய உரி­மைகள் மீதான தாக்­குதல் எனவும் கண்­டித்­துள்­ளது. தலை­ந­க­ராக்­கிய நட­வ­டிக்கை சர்­வ­தேச சமா­தானம், பாது­காப்­பிற்கு குந்­தகம் விளை­விக்கும் எனவும் கூறி­யுள்­ளது. இஸ்­லா­மி­யர்­களின் புனி­தத்­த­ல­மான அல் அக்சா பள்­ளி­வாசல் ஜெரு­ச­லேத்தில் அமைந்­துள்­ள­மையும் அதன் கார­ண­மாக பாலஸ்­தீ­னி­யர்­களின் சட்­ட­பூர்வ உரி­மை­களை அமெ­ரிக்கா அவ­ம­திக்­கின்­றது எனவும் OIC கண்­டனம் தொடுத்­துள்­ளது. துருக்கி, இஸ்­ரேலின் குற்­றச்­செ­யல்கள் மேன்­மேலும் அதி­க­ரிக்­கின்­றது எனவும் அண்­மையில் காசா பகு­தியில் இஸ்ரேல் நடாத்­திய கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டமை இஸ்­ரேலின் மிரு­கத்­த­ன­மான செயல் எனவும் கண்­டித்­துள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தின் மௌனம் கலைக்­கப்­பட வேண்டும் எனவும் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் துருக்கி குரல் எழுப்­பி­யுள்­ளது.

2018 வைகா­சியில் ஜெரு­ச­லேத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக்­கிய போது ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கெதிராக பெரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. ஈரான் வெறும் வார்த்தைகளோடு விளையாடவில்லை. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சிரிய அரச படைகளுக்கு ஆதரவாக தாக்குதலை உக்கிரமாக்கி அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவுப் படைகள் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிரிய ஆதரவு ஈரான் தளங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் - ஈரான் யுத்தம் சமாந்தரமாக நடைபெறுவதாகத் தோன்றியது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கையெழுத்திட்டு ஈரானுடன் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தமையும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. இச்சூழ்நிலையில் இஸ்ரேலின் இருப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய ஒரேயொரு பலம் பொருந்திய நாடு என்றால் அது ஈரானைத் தான் குறிப்பிட முடியும்.

எழுபது ஆண்டுகள் தொடர்ந்து துன்பத்தின் மேல் துன்பம் அனுபவித்துவரும் பலஸ்தீனிய மக்களுக்கு கௌரவமான தீர்வினை எட்டுவதற்கு சமகால அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இல்லையென்பது தெளிவாகின்றது. எனினும் சர்வதேச சமாதானம், பாதுகாப்பு என்கின்ற கோட்பாடுகளுடன் இயங்குகின்ற ஐ.நா சபையும் வேறு சர்வதேச சட்டங்களும் சுதந்திரமான பலஸ்தீனிய அரசை உருவாக்கி பலஸ்தீனிய மக்களின் அவலங்களை போக்க வேண்டும் என்பது பெரும்பாலான சமாதானம் விரும்பும் மக்களின் வேட்கையாகும்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-6

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

3 months 2 weeks ago
முதலமைச்சர் புதிய கட்சி துவங்கி வாக்குகள் பிளவுபட்டு சிங்களக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்காமல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு கொள்கைப் பிடிப்புடன் இயங்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வாய்ப்பானது .சுரேஸ் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆனந்த சங்கரியுடன் கூட்டு வைத்து சொதப்பின மாதிரி இருக்கக்கூடாது.

இளமை புதுமை பல்சுவை

3 months 2 weeks ago
நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா? இளைஞர்கள் மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டை உண்மையாக்கியிருக்கிறது அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு. இந்திய இளைஞர்கள் தினமும் சராசரியாக 150 முறைக்கும் மேலாக தங்கள் மொபைல் போனைப் பார்ப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICSSR) இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘ஸ்மார்ட்போனை சார்ந்திருத்தல், வாங்கும் மனநிலை: டிஜிட்டல் இந்தியா முயற்சிகளின் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உள்ள 20 மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். மனக் கலக்கம், தகவலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் காரணமாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொபலை தினமும் சராசரியாக 150 முறையாவது எடுத்துப் பார்க்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் இந்த நடத்தை அவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் பெரிய அளவில் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆய்வில் பங்கேற்ற 26 சதவீத மாணவர்கள் மட்டுமே மொபைல் போனை பேசுவதற்காக மட்டும் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள் சமூக ஊடகங்கள், கூகுள் தேடல்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக (திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது) மொபைல் போனைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 14 சதவீத மாணவர்கள் தினமும் ஸ்மார்ட் போனை மூன்று மணி நேரம் பயன்படுத்துவதும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. ஆனால், இவர்களைவிட 63 சதவீத மாணவர்கள் தினமும் நான்கு முதல் ஏழு மணி நேரம் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் என்கிறது ஆய்வு. ஒட்டுமொத்தமாக கணினிக்கு மாற்றாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல 2017-ம் ஆண்டில் தென் கொரியாவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் மன அழுத்தம், மனக் கலக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இளைஞர்களுக்கு ஏற்படுவது தெரியவந்தது. கொரிய பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், இணைய பயன்பாட்டுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் அடிமையாகியிருக்கும் இளைஞர்களின் மூளைகள் வேதிப்பொருட்களின் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. http://tamil.thehindu.com/

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

3 months 2 weeks ago
காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது காங்கேசன்துறை கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும்இரண்டு பெண்கள் குழந்தை உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளோம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/34382

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

3 months 2 weeks ago
காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

 

காங்கேசன்துறை  கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.

navy_capture.jpg

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும்இரண்டு பெண்கள் குழந்தை  உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளோம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/article/34382

படையினரிடம் சரணடைந்தோரின், பெயர் விபரங்களை வெளியிடத் தயார்…

3 months 2 weeks ago
காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்ன? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விபரங்களை இன்னும் ஓரிருமாதத்தில் வெளியிடுவோம் இது தொடர்பான உறுதிமொழியை எழுத்து மூலம் வழங்க தயார் என காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இன்று அவர் அதற்கு மாறாக கருத்து வெளியிட்டுள்ளார். சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் நான் சரணடைந்தவேளை காணாமல்போனவர்களின் பட்டியலை அதிகாரிகளிடமிருந்து கோருவேன் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எனது அலுவலகத்தினால் போலியான வாக்குறுதிகளையோ அல்லது உடனடி தீர்வுகள் குறித்த வாக்குதிகளையும் வழங்க முடியாது என தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/34384

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

3 months 2 weeks ago
ஆனால் நான் ஓடுன நான் செட்டில் ஆக வில்லை ஓடி வந்துட்டேன் நான் மைக்கில நாட்டுக்கும் எனது ஊர் மக்களுக்கும் சேவை செய்வேன் என அரசியல் வாதிகள் போலும் அதிகம் படிச்ச வைத்தியர் போலவும் பேட்டி கொடுக்கவும் இல்லை சாமி கிழக்கில் 2004 ம் ஆண்டு கிழக்கில் யாரை யார் பிடித்துப்போகிறார் என்று தெரியாது அந்த நிலையில் (க்டத்தல்) தான் நாங்கள் மத்திய கிழக்கு ஓடினோம் என்னால் முடிஞ்சது அந்த நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அடிக்கவில்லை அசைலம் போன பின்பு சுனாமி அடித்து உடைமகளை இழந்து உயிர்களை இழந்த போது அங்கேயே இருக்க வேண்டிய சூழல் சூழ் நிலை 2010 மீண்டும் வந்து விட்டேன் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இலங்கையிலிருந்து ஓடுனவன் முன்பு சண்டை என்றான் பிறகு அரசியல் நிலை சரி இல்லை என்கிறான் இலங்கையில் அரசியல் நிலை சரிவரும் என்று நான் நினைக்கல நீங்கள் பத்திரமாக அங்கு இருக்கலாம் நம்ம ஆழுகள் வெளிநாட்டுக்கு தாவிக்கொண்டிருக்கினும் ஆனால் இதை சொல்ல கூடாது பாருங்க இப்ப முல்லைத்தீவில் புதுப்புது வாடிகள் வந்து விட்டது யாரு யாருட்ட போய் சொல்வது இப்படி இருக்கு நிலமை கடற்றொழிலினை பறித்துக்கொள்கிறார்கள் சிங்களவர்களுக்கு வரி இல்லை அதனால் அதை அதிகம் இறக்குமதி செய்து விற்கிறார்கள் என்று சொல்லுவம்