04-16-2003, 06:22 PM
இங்கு குறிப்பிட்டுள்ள பிரிவுகள் தவிர வேறு பிரிவுகள் இணைக்கலாம் என்று நீங்கள் கருதினால் அதுபற்றி தெரிவியுங்கள். பொருத்தாமாக இருப்பின் அவைகளையும் இங்கு இணைக்கலாம்.
|
புதிய பிரிவுகள்
|
|
04-16-2003, 06:22 PM
இங்கு குறிப்பிட்டுள்ள பிரிவுகள் தவிர வேறு பிரிவுகள் இணைக்கலாம் என்று நீங்கள் கருதினால் அதுபற்றி தெரிவியுங்கள். பொருத்தாமாக இருப்பின் அவைகளையும் இங்கு இணைக்கலாம்.
06-20-2003, 12:41 AM
நூல்கள் என்றொரு பகுதி இணைக்கலாம்.. உப தலைப்புகளாக கதை கட்டுரை விஞ்ஞானமென பலதை இணைக்கலாம்.. அவற்றைப்பற்றி அறியவும்.. கருத்தாடவும்.. பதிவாக்கவும் வசதியாக இருக்கும்.
.
10-26-2005, 03:10 PM
அனைத்து களஉறுப்பினர்களுக்கும் வணக்கம்,
யாழ் களத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சில பிரிவுகள் இணைக்கப்பட்டு, ஆக்கங்கள் உரிய இடங்களுக்கு மாற்றப்பட்டு, மட்டுறுத்துனர்களை நியமித்து சில ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டிருக்கிறோம். ஆக்கங்களை ஒழுங்கமைக்கும் பணி இன்னும் முழுமையாகவில்லை. ஆயினும், எந்தவிதத் தடங்கலும் இன்றி இனி உங்கள் கருத்துக்களை எழுதலாம். புதிய ஒழுங்குகளின் அடிப்படையில் களப்பிரிவுகள் பற்றிய விளக்கங்களை எழுதலாம் என நினைக்கிறேன். <b>+ கள வாயில்</b> <b>- அறிமுகம்:</b> புதிதாக இணையும் உறுப்பினர்கள் இந்தப் பிரிவில் புதிய தலைப்பொன்றைத் தொடங்கி, தம்மைப் பற்றிய சிறு அறிமுகத்தை எழுதவேண்டும். அறிமுகப் பகுதியில் எழுதும் புதிய களஉறுப்பினர்களை, பழைய களஉறுப்பினர்கள் அன்போடு வரவேற்று, ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கவேண்டும் என நட்போடு கேட்டுக்கொள்கிறோம். <b>- களம்பற்றி:</b> களம் பற்றிய நிர்வாகத்தினரின் அறிவத்தல்கள் இங்கு இணைக்கப்படும். களவிதிமுறைகள், புதியவைகள், களத்தில் செய்யப்படும் மாற்றங்கள் போன்றன உள்ளடங்கும். இங்கு நிர்வாகத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்கமுடியும். <b>- உங்கள் கருத்து:</b> களம்பற்றிய உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் இங்கே இணையுங்கள். அதேபோல் உங்கள் சந்தேகங்களுக்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் இங்கே பெற்றுக் கொள்ளலாம். புதிதாய் இணையும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பழைய களஉறுப்பினர்கள் தமது ஆலோசனைகளை வழங்குவது சிறப்பாய் அமையும். <b>+ தகவற் களம்</b> <b>- செய்திகள்: தமிழீழம்:</b> தமிழீழம் பற்றிய, தமிழீழம் தொடர்பான நாளாந்த, முக்கிற, பிற ஊடக செய்திகளை இந்தப் பிரிவில் இணையுங்கள். <b>- செய்திகள்: உலகம்:</b> தமிழீழம் தவிர்ந்த ஏனைய நாடுகளின் நாளாந்த, முக்கிய, பிற ஊடக செய்திகளை (உலக செய்திகளை) இங்கே இணையுங்கள். <b>- நிகழ்வுகள்:</b> கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் போன்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இப்பிரிவில் இணையுங்கள். உதாரணமாக: நூல் வெளியீடு, குறும்பட நிகழ்வு, மாவீரர் நாள் நிகழ்வு, ஏனையவை. <b>- தளமுகவரிகள்:</b> பிற, புதிய, பயனுள்ள இணையத்தளங்களை இங்கே அறிமுகப்படுத்தி வையுங்கள். அவற்றின் இணைப்புக்களை இங்கே இணையுங்கள். <b>- வாழ்த்து/பாராட்டு:</b> விசேட தினங்களுக்கான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை இங்கே தெரிவியுங்கள். உதாரணம்: புத்தாண்டு, பிறந்தநாள், அன்னையர் தினம் போன்றன. <b>- துயர்பகிர்வு/நினைவுகூறல்:</b> துக்கதினங்கள் பற்றிய தகவல்கள், துயர் பகிர்தல், அஞ்சலிகள் போன்றவற்றை இங்கே தெரிவித்துக்கொள்ளலாம். உதாரணம்: மாவீரர் நாள், மரண அறிவித்தல் போன்றன. <b>+ தமிழ்க் களம்</b> <b>- தமிழீழம்:</b> வரலாற்றுக் குறிப்புகள், போராட்டப் பதிவுகள், போராளிகள், மாவீரர்கள், தலைவர்கள், இயற்கை வளங்கள், பொருளாதார நிலவரங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள் போன்ற தமிழீழம் பற்றிய/தொடர்பான கருத்துக்கள்/ஆக்கங்கள் போன்றவற்றை இங்கே இடலாம். <b>- புலம்:</b> புலம்பெயர் வாழ்வும், அது தந்த அனுபவங்களும் அவலங்களும் பற்றிய கருத்துப் பகிர்வினை இங்கே இணையுங்கள். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் நிலவரங்கள், அகதிநிலை போன்றவை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். <b>- தமிழ்/தமிழர்:</b> தமிழர் வரலாறு, தமிழ் இனம், தமிழ் தேசியம், உலகத் தமிழர், தமிழர் கலை, பண்பாடு பற்றிய தகவல்கள், கருத்துக்கள் போன்றனவற்றை இப்பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள். <b>- தமிழும் நயமும்:</b> தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், புதிய தமிழ் கலைச்சொற்கள்/அறிவியற் சொற்கள் சார்ந்த ஆக்கங்களைக், கருத்துக்களை இங்கே இணையுங்கள். <b>- நூற்றோட்டம்:</b> நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், ஆய்வுகள் போன்றதான தகவல்களையும், ஆக்கங்களையும் இங்கே இணையுங்கள். <b>+ படைப்புக் களம்</b> - கவிதை/பாடல்: உங்களது சொந்தக் கவிதைகளையோ, அல்லது உங்கள் நண்பர்களின் கவிதைகளையோ, அல்லது நீங்கள் படித்து இரசித்த கவிதைகளையோ இங்கே இணைத்துக்கொள்ளலாம். அதேபோல கவித்துவமான பாடல்வரிகளையும் குறிப்பாக ஈழத்துப் பாடல்களின் கவிதைவரிகளையும் இங்கே இணைத்துக்கொள்ளலாம். <b>- கதைகள்/நாடகங்கள்:</b> உங்களது சொந்த/பிறரது சிறுகதைகளையோ அல்லது நாடகங்களையோ இங்கோ எழுதலாம். அதேபோல தொடர்கதைகளை இங்கே எழுதத் தொடங்கலாம். உங்களின் எழுத்து முயற்சிக்கான களமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். <b>- கலைகள்/கலைஞர்கள்:</b> கலைகள் பற்றிய தகவல்களையும், கலைகள் சார்ந்த ஆக்கங்களையும் அதேபோல் கலைஞர்கள் பற்றிய தகவல்களையும் இப்பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள். <b>- குறும்படங்கள்:</b> குறும்படங்கள் பற்றிய தகவல்களையும், குறும்படங்கள் மீதான விமர்சனங்களையும், அவற்றின் உருவாக்கம், தொழில்நுட்பம் பற்றிய கருத்துக்களையும் இப்பகுதியில் இடலாம். <b>+ இளைப்பாறுங்களம்</b> <b>- சினிமா:</b> திரைப்படங்கள் பற்றிய/சார்ந்த தகவல்களையும் விமர்சனங்களையும் இங்கெ முன்வையுங்கள். தனியே தென்னிந்திய சினிமாவுக்குள் நில்லாமல் உலக சினிமா பற்றிய தகவல்களையும் தமிழில் எழுதுங்கள். <b>- பொழுதுபோக்கு:</b> பொழுதுபோக்கு சம்பந்தமான விடயங்களை இங்கோ இணைக்கலாம். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உங்களை மகிழ்விக்கக் கூடிய விடயங்கள் பற்றி எழுதுங்கள். <b>- நகைச்சுவை:</b> நீங்கள் கேட்ட, பார்த்த, இரசித்த அல்லது உங்கள் சொந்த நகைச்சுவைகளை இங்கே களஉறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சிரித்து மகிழ்வதற்கான பகுதி மட்டுமே இது. பிறரைப் புண்படுத்துவதாக அமையும் நகைச்சுவைகளை தயவுசெய்து இங்கிடாதீர்கள். <b>- விளையாட்டு:</b> விளையாட்டுகள் பற்றிய தகவல்களையும் கட்டுரைகளையும் கருத்துக்களையும் இங்கே இணையுங்கள். <b>- சமையல்:</b> உணவுத் தயாரிப்பு, உணவுப் பாதுகாப்பு பற்றியதான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம். <b>+ அறிவியற் களம்</b> <b>- கணினி:</b> கணினிப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இங்கே இடம்பெறும். கணினி மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் பற்றிய தகவல்களையும் இங்கே இடுங்கள். கணினி சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், மின்கிருமிகள் பற்றிய குறிப்புகள் பாதுகாப்பு ஆலோசனைகள் போன்றவற்றையும் பகிர்ந்துகொள்ளலாம். <b>- இணையம்:</b> இணையத் தொழில்நுட்பம் பற்றிய விடயங்கள், வலைப்பக்கத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகள், பாதுகாப்பு ஆலோசனைகள் போன்றவற்றை இங்கே இடலாம். <b>- வீடியோ தொழில்நுட்பம்:</b> விடியோ/ஓடியோ மென்பொருள்/வன்பொருள் பற்றிய தகவல்களை இணையுங்கள். அதேபோல் அவைசார்ந்த நவீனதொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள், பயனுள்ள ஆலோசனைகள் போன்றவற்றை இங்கே இணையுங்கள். <b>- விஞ்ஞானம் - தொழில்நுட்பம்:</b> விஞ்ஞானச் செய்திகள், தகவல்கள், ஆய்வுகள் போன்றவற்றை இங்கே இணைக்கலாம். அதேபோல் புதிய தொழில்நுட்பங்கள் (கணினி, இணையம், வீடியோ தவிர்ந்த) பற்றிய தகவல்களையும் இப்பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். <b>- மருத்துவம்:</b> நோய்கள், மருத்துவ அலோசனைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை, தகவல்களை இங்கே இணைக்கலாம். <b>+ சிந்தனைக்களம்</b> <b>- அரசியல்/பொருளாதாரம்:</b> அரசியல் நிலவரங்கள், அரசியல் ஆய்வுகள் போன்றவற்றையும் பொருளாதாரம் பற்றிய கருத்துப்பகிர்வையும் இங்கே இணைக்கலாம். உதாரணம்: தேர்தல், பொருளாதார முன்னேற்றம், அரசியல் கட்சிகள். அன்றாடம் நடக்கும் செய்திகளை இப்பகுதியில் இணைக்காதீர்கள். குறிப்பாக அரசியல் கட்டுரைகளையும், அதுசார்ந்த விவாதங்களையும் இங்கே முன்வைக்கலாம். <b>- தத்துவம் (மெய்யியல்):</b> தத்துவங்கள், புதிய பழைய சிந்தனைகள், பொன்மொழிகள், நீதிக்கதைகள், வெவ்வேறு இசங்கள் பற்றிய தகவல்களையும், விவாவதங்களையும் இங்கே இணைக்கலாம். <b>- சமுதாயம் (வாழ்வியல்):</b> சமூகச் சீர்திருந்தங்கள், சீர்கேடுகள், குடும்பம், உறவுகள், காதல், நட்பு, இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள், முதியோர், மதம், சாதி போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களை இங்கே மேற்கொள்ளலாம். <b>- தீவிர இலக்கியம்:</b> படைப்புகள் பற்றிய விவாதங்கள், கருத்துப்பகிர்வுகளை இப்பகுதியில் நடாத்தலாம். குறிப்பாக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும், அல்லது விவாதத்திற்குரியதாகக் கருதப்படும் படைப்புக்களை (கவிதை, கதை, கட்டுரை) இங்கே இணைத்து அதன்மீதான/அதனடிப்படையிலான விவாதங்களை மேற்கொள்ளலாம். <b>- பேசாப்பொருள் /சிறப்பு விவாதங்கள்:</b> பேசாப்பொருளாக நமது சமூகத்தில் இருக்கும் சில விடயங்கள் பற்றிய கருத்துப்பகிர்வினை இங்கே மேற்கொள்ளலாம். <b>+ சிறப்புக் களம்</b> <b>- களஉறுப்பினர்க்கு மட்டும்:</b> இப்பகுதியை களஉறுப்பினர்கள் மட்டுமே வாசிக்க முடியும். களஉறுப்பினர்கள் அல்லாதவர்கள் வாசிக்கமுடியாது. களஉறுப்பினர்களின் அரட்டைகள், மேலதிக சிறப்பு விபரங்கள் போன்றவற்றை இங்கே இணைக்கலாம். <b>- தரவிறக்கங்கள்:</b> இப்பகுதியையும் களஉறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும். மென்பொருட்கள், ஒலி/ஒளி தரவிறக்கங்கள் போன்றவற்றின் இணைப்புக்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம். <b>- போட்டிகள்:</b> களஉறுப்பினர்களுக்கிடையிலான போட்டிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நிகழ்த்துவதற்கான பகுதி இது. <b>- பிறமொழி ஆக்கங்கள்:</b> பிறமொழிகளில் உள்ள நமக்குப் பயன்படக்கூடிய தகவல்களை அல்லது ஆக்கங்களை இங்கே இணைக்கலாம். <b>சிந்தனைக்களம்:</b> இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும். இப்பிரிவில் விவாதத்திற்கும், ஆரோக்கியமான கருத்துப் பகிர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே அரட்டைகள், தனிநபர் வசைபாடல்கள்/தாக்குதல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்பதை முன்னரே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்துக் கருத்துக்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மற்றும் இப்பிரிவில் "Kick out" என்கிற ஒரு செயற்பாட்டை நிர்வாகத்தினர் (குறிப்பாக இப்பிரிவின் மட்டுறுத்துனர்கள்) கையாள்வர்கள். ஒரு தலைப்பில் விவாதம்/கருத்துப்பகிர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது யாராவது தனிநபர் வசைபாடல்களையோ/தாக்குதல்களையோ அல்லது பண்பற்ற முறையிலான கருத்தாடலையோ மேற்கொண்டால் அவர் அத்தலைப்பில் தொடர்ந்து எழுதமுடியாதவாறு வெளியேற்றப்படுவார். எனவே ஆரோக்கியமான உங்கள் கருத்துப்பகிர்வை இப்பிரிவுகளில் மேற்கொள்ளுங்கள். ஒருவர் தன் தரம்தாழ்த்தி கருத்தெழுகிறார் எனின் பதிலுக்கு நீங்களும் உங்களைத் தரம்தாழ்த்திக் கருத்தெழுதாதீர்கள் (நிர்வாகத்திற்கு தனிமடலில் அறியத் தாருங்கள்). மாறாக அக்கருத்தைக் கணக்கெடுக்காது உங்கள் கருத்தைத் தொடருங்கள். இல்லை, நானும் அப்படித் தான் எழுதுவேன் என்று நீங்களும் எழுதினால், நீங்களும் சேர்ந்து அத்தலைப்பில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|