Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாவுக்கு நேர்ந்த களேபரம்
#1
<span style='font-size:30pt;line-height:100%'>கலாவுக்கு நேர்ந்த களேபரம்</span>

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kala1-350.jpg' border='0' alt='user posted image'>

ஹீரோக்களால், தயாரிப்பாளர்களால், இயக்குனர்களால் ஹீரோயின்கள் சில நேரம் செக்ஸ் சில்மிஷத்தில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது உண்டு. ஆனால் டான்ஸ் மாஸ்டர் கலா, வித்தியாசமான பிரச்சினையை சந்தித்துள்ளார்.

ஷýட்டிங் ஸ்பாட்டின்போது ஹீரோக்கள் தேவையில்லாமல் கட்டிப் பிடிப்பது, கட்டி உருளும்போது (பாடல் காட்சிகளின்போதுதான்) கண்ட கண்ட இடங்களில் கையை வைப்பது, முத்தமிடும் காட்சிகளில் அழுத்தமாக உம்மா பதிப்பது, சில நேரங்களில் கடித்து வைப்பது என ஹீரோயின்களுக்கு சில நேரம் சிக்கல் ஏற்படுவதுண்டு.

இதுமாதிரியான நேரங்களில் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளை சில ஹீரோயின்கள் உடனுக்குடன் தண்டித்து விடுவதுண்டு. உதாரணம், கலாபக் காதலன் படப்பிடிப்பின்போது இறுக்கிக் கட்டிப் பிடித்த ஆர்யாவை, ஹீரோயின் ரேணுகா மேனன் அறைந்தது, ஏய் நீ அழகா இருக்கே படப்பிடிப்பின்போது உதட்டைக் கடித்த ஷாமுக்கு ஹீரோயின் ஸ்னேகா கொடுத்த பளார் என நிறையச் சொல்லலாம்.

இப்போது இதேமாதிரியான ஒரு சிக்கல் டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கும் ஏற்பட்டுள்ளது. சுரேஷ்கோபி, மம்தா ஜோடி நடிக்கும் லங்கா என்ற மலையாளப் படப்பிடிப்பின்போது கலாவுக்கு இந்த களேபரம் நடந்துள்ளது.

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kala2-350.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையை மையமாகக் கொண்டு உருவாகும் படம் லங்கா. இதன் வெளிப்புறப் படப்பிடிப்பு சமீபத்தில் மங்களூரி நடந்தது. பாடல் காட்சி ஒன்றை அங்கு படமாக்கினார்கள். சுரேஷ் கோபி, மம்தா இருவரும் பாடல்காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். கேமராமேன் ஷாஜி காட்சியை சுட ரெடியாக இருந்தார்.

டான்ஸ் மாஸ்டர் கலா, நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்து விட்டு லைட்டிங் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அனைத்து விளக்குகளையும் ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்ய திட்டமிட்டனர்.

ஏற்கனவே அந்த இடம் மிக இருட்டாக இருந்துள்ளது. இந் நிலையில் அனைத்து விளக்குகளும் ஆஃப் செய்யப்பட்டன. மீண்டும் ஆன் செய்ய சற்றே தாமதமாகியுள்ளது. இந் நிலையில், கலா திடீரென கூக்குரலிட்டுள்ளார். உடனடியாக விளக்குகள் எரிய விடப்பட்டன.

அப்போது கலா முகம் இருண்டு போய், மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். என்ன ஆச்சு என்று கேமராமேன், இயக்குநர் உள்ளிட்டோர் கேட்டபோது, லைட் பாய்களில் சிலர் தனது உடம்பில் கை வைத்து விட்டதாக கொந்தளித்துக் கூறினார்.

இதைக் கேட்டதும் ஷýட்டிங் ஸ்பாட் அதிர்ச்சியில் மூழ்கியது. இதை நான் இப்படியே விடப் போவதில்லை. என்ன நினைத்துக் கொண்டு விட்டார்கள் என கோபத்தில் குமுறிய கலாவை உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தி, சமாதானப்படுத்தினார்கள். அதன் பின்னர் அங்கிருந்த லைட் பாய்களை (எல்லோருமே கேரள வாசிகள்) விசாரித்துள்ளார்கள்.

ஆனால் யாருமே தாங்கள் அவ்வாறு செய்ததாக ஒத்துக் கொள்ளவில்லையாம். அதற்கு மேல் தீவிரமாக விசாரித்தால் வேறு மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமே என்று நினைத்து அந்த லைட்டிங் யூனிட்டை மொத்தமாக அப்படியே மாற்றி விட்டு வேறு யூனிட்டை வைத்து காட்சியை சுட்டு ¬முத்தார்களாம்.

ஹீரோயின்களுக்கு ஏற்படுவதைப் போல கலாவுக்கு ஏற்பட்டு விட்ட இந்த களேபரம் மலையாளப் படவுலகிலும், தமிழ்த் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தசம்பவம் குறித்து இதுவரை கலா யாரிடமும் புகார் செய்யவில்லையாம்.

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/sneha12ea-500.jpg' border='0' alt='user posted image'>
நடிகை ஸ்னேகாவின் சகோதரரை திருமணம் செய்து துபாயில் சிறிது காலம் செட்டிலாகியிருந்த கலா பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு தீவீரமாக கலைச் சேவையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)