Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒப்பந்தம்
#1
ஒப்பந்தம்

அருகில் இருந்த
என் அமுதசுரபி
கண்களால் கதைபேசிக்கோண்டே
காதல் மழை பொழிய
நானும்....
என்னை மறந்து நின்றேன்...!

திடீரென்று...
என் கைக்கடிகாரத்தைத் திருப்பி
அய்யோ......
ஆறு மணி ஆச்சென்று
என்னிரு கைகளையும்
அன்போடு அழுத்திக்கொண்டு...
புரிந்துணர்வு...
ஒப்பந்தம் ஒன்று செய்தாள்
''மீண்டும் நாம்
நாளை சந்திப்போம்''...!!!

நானும் மறுநாள்
அன்பானவளைக்காண
ஆசையோடு தயாரானேன்...!
மூன்று முறை
முகம் கழுவினேன்
நான்குமுறை
உடை மாற்றிக்கொண்டும்
மனதுக்குத் திருப்பதியில்லாததால்
ஜந்தாவது உடை
அணிந்துகொண்டேன்
கண்ணாடி முன்நின்று
பலதடவை முகம்பார்த்தேன்
பதினாறு தடவை
தலைமுடியை சரிசெய்தேன்
இருபது ஈரோவை
சட்டைப்பைக்குள்
வைத்துக்கொண்டேன்
அடிக்கடி...
கடிகாரம் பார்த்து
அவசரமாக தயாராகி
நண்பனிடம் ஓடிப்போய்
'கார்' இரவல் வாங்கி
காதலுடன்...
நாலுமணிக்கே சென்று
அவளுக்காகக் காத்திருந்தேன்

மணி ஓடுகிறது
ஒப்பந்தம் செய்தவள்
ஓடிவரவில்லை...!?
நான்கரை மணி....
ஜந்து மணி....
ஜந்தரை மணி....
ஆறுமணி....
நேற்று ஆறுமணிக்கு...
நாளை சந்திப்போம் என
ஒப்பந்தம் செய்தவள்
இன்று ஆறுமணியாகியும்
வரவே இல்லை...
கண்மணியாள் வந்து
கண்களுக்கு விருந்து
தரவே இல்லை...!

கால்கள் சோர்வுடன்
திரும்பி நடந்தது...
கனவுகள் சுமந்து
காத்திருந்த இதயம்
என்னைக் கேட்டது....
காதல் பிரச்சனை
என்றாலும்....
மோதல் பிரச்சனை
என்றாலும்......
ஒப்பந்தம் என்றால்...
இப்படித்தானோ..???


த.சரீஷ்
03.09.2003 பாரீஸ்
sharish
Reply
#2
வணக்கம் சரீஷ்...

நீண்ட நாட்களின் பின் களத்தில் உங்கள் கவிதை ஒளிர்கிறது.
மகிழ்ச்சி...
வரும்போதே புதிய சிந்தனையோடு வந்தீருக்கிறீர்கள்.
காதலையும் மோதலையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.
இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமான கவிதை.

கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.
கைதட்டல்கள்.


Reply
#3
வாழ்த்துகள் சரீஷ்..
ஒப்பந்தம் இனித்தது...அது
தப்பியதும் உறைத்தது...
கவிதையோ சுவைத்தது.

-
Reply
#4
காக்கவைத்து பின் இனிக்கவைப்பதுதானே காதல்..
வாழ்த்துக்கள் நண்பா

ஒப்பந்தங்கள் எல்லாமே இப்படித்தானோ !!!
[b] ?
Reply
#5
வாழ்த்துக்கள்.
காத்திருப்பதிலும் சுகம் இருக்கின்றதுதானே ?

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)