Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
கவிதை எழுதுபவர்கள் சிலசமயம் தொடற்சியாக பல கவிதையை எழுதி விடுகிற தன்மை காணப்படுகிறது . அதோபோல் பல மாதக்கணக்காக கூட கவிதைகளே எழுத வராத ஒரு தன்மையும் உள்ளது. இது எனக்கான அனுபவம்.
சில பெயர் சொல்லிக்கொள்ளும் நிலையில் உள்ள கவிஞர்களோடு கதைத்தேன். இது தொடர்பாக அவர்களும் எனது கருத்தோடு ஒத்துப்போகிற தன்மை தான் நிறைய இருந்தது.
கவிதை எழுத வரவில்லையே கவிதையே மறந்த நிலை போல் கூட தோன்றும் என சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.எனக்கும் அத்தகையதொரு நிலையாக இருப்பது உண்மை தான்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் கவிதையின் வடிவம் கரு சிந்தனை சொல் யுக்திகள் மாறுவதற்கான அவகாசம் அது என கூறினார்கள். என்னோடு இத்தகைய கருத்தை ஒப்பிட்டுப்பார்க்கிறபோது பெரிதும் சரியாக தென்படுகிறது. எங்கே மற்றவர்கள் இதன்மையினதானதுக்கு உங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களன். பலருக்கும் நன்மை பயக்கும்:
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைதான் நளாயினி.
அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.
வைரமுத்து மாதிரியோ அல்லது வேறு பெரிய கவிஞர்கள் போலவோ ஒரு உல்லாச விடுதியில் போயிருந்து கவிதை எழுதுவது என்பது எனக்குச் சரிவராது.
கவிதை மட்டுமென்றில்லை. எதை எழுதுவதாயினும் அதற்கொரு நேரம் வர வேண்டும். நாமாக எம்மை வருத்தி ஏதாவது இப்போது கண்டிப்பாக எழுத வேண்டும் என்று எழுதினால் நாம் ஒரு உல்லாச விடுதியில்-அமைதியான சூழ்நிலையில் இருந்தாலும் கூட அது ஒரு போதும் சரியாக அமையாது.
தானாக எம் சிந்தனையில் உதிக்கும் போது பிரசவிப்பவையே சிறந்த படைப்புக்களாகின்றன.
சில சமயங்களில் நிறைய நேரமிருக்கும். எந்தத் தொந்தரவுகளும் இல்லாமலிருக்கும். ஆனால் எழுதுவதற்கான உந்துதல் எம் மனதில் இருக்காது.
பல சமயங்களில் எழுதுகோலைத் தூக்கவே நேரம் கிடைக்காது. ஆனால் ஏதேதோ எல்லாம் அழகாக மனதில் எழுதப் படும். அது மீண்டும் நேரம் கிடைக்கும் போது நினைவில் வந்தால் கவிதையாகவோ கதையாகவோ உருப் பெறும்.
உங்களைப் போலவோ பரணியைப் போலவோ கவிதை கவிதையாக நான் எழுதிக் கொட்டியது கிடையாது.
எப்போதாவது ஏதாவது மனதில் தோன்றும்.
அதனால் எண்ணிச் சொல்லக் கூடிய ஒரு சில கவிதைகளே என்னவை. அவை கூடக் கவிதைகள்தானா என்பது எனக்குத் தெரியாது.
நானாக வில்லங்கப் பட்டு கவிதை எழுத வேண்டுமென நினைத்து சில சமயங்களில் எழுதியிருக்கிறேன். தற்போது அவைகளை வாசித்துப் பார்த்தால் அவை கவிதைகளே இல்லை என்று என்னாலேயே தீர்மானிக்க முடிகிறது.
Nadpudan
Chandravathanaa
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
உண்மை தான். இது தனிய கவிஞர்க்கு மட்டும் பொருந்தாது சகல எழுத்தாளருக்கும் பொருந்துகிறது.
உங்களுக்கு கவிதை எழுத வராதா? ஐயொ போச்சுடா.
ஈமெயில் பாத்து இதயச்சுவர்கள் வேர்த்து. ம். அதையே முறியடித்து விட்டு போற மாதிரி இப்ப ஒரு கவிதை எழுதி இருக்கிறீங்களே. நான் வாசிச்சிட்டு ஆச்சரியப்பட்டேன். உண்மையில் அந்த கவிதையை குறைந்தது ஏழு எட்டு தடவைகள் வாசித்து விட்டேன். நான் எழுதிய கவிதைகளில் இத்தகைய அழகுடைய நளினமுடைய செல்லமுடைய மென்மையுடைய கவிதையை காணவே இல்லை.
http://www.vaarppu.com/php/bodymaker.php?id=57
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கருக்கொண்ட மேகம் மழையாகித்தான் கரைய வேண்டும். .
வணக்கம்
நளாயினி அக்கா, சந்திரவதனா அக்காவின் கருத்துக்கள் என்னுடன் நன்றாகவே ஒத்துப்போகின்றன. கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. அது எப்போது தோன்றும் எப்போது மறையும் என்று தெரிவதில்லை. பாலைவன மண்ணில் மழை எப்போது வரும் என்று வானிலையாளர்களாலேயே புரிந்துகொள்ள முடியாததுபோலத்தான் எனது கவிதைகளும். அவை எப்போது தோன்றும் எப்போது தவிக்கவைக்கும் என சொல்லமுடியவில்லை. சிலநேரங்களில் பயணம் செய்யும்போதுகூடத் தோன்றும் அந்த வேளைகளில் எழுதிக்கொள்ள சந்தர்ப்பம் அரிது. அவை அப்படியே அனாதைகளாகிவிடும். பின்பு நினைவில் இருத்தி எடுத்;துக்கொள்ள கடினம். உறங்கும்போது நடக்கும்போது வெட்கம்விட்டு சொல்லிக்கொள்கின்றேன் குளியலறையில்கூட கவிதை தோன்றிக்கொள்ளும். பல சந்தர்ப்பங்களில் தோன்றும் கவிதைகளை எழுத சந்தர்ப்பம் கிடைக்காவிடின் கைத்தொலைபேசியில் (அதுதானே எப்போதும் அருகில் இருக்கின்றது.) ஒலிவடிவில் சேமித்து வைத்துக்கொள்வேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை எழுதிக்கொள்வதுண்டு.
நு}று கவிதைகளிற்கு மேலாக எழுதிவைத்துள்ளேன். அவற்றில் ஒருசிலதான் மனதை இன்றுவரை தொடுகின்றன. பல வருந்தி அழைத்தவை. பல அவையாகவே பிரசவமானவை. வருந்தி அழைப்பதற்கும் வலிய வருபவைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை வார்த்தைகளில் உணரமுடியும். கற்பனைகள் அதிகமாயின் அவை வருந்தி அழைத்தவை. சுடும் உணர்வுடன் தெரிபவை அழகுறத்திகழ்பவை வாசிக்கும்போது மனதோடு சேர்பவையெல்லாம் வலிய வந்தவை. அவைகள்தான் வார்த்தைகள் அவற்றை இங்கு நான் பலருடைக கவிதைகளில் கண்ணுற்றேன்.
துளிகளாக வீழ்பவன் எனக்கே கவிதைகள் பிரசவத்தின் வேதனை தெரியும்போது சோவென பெய்யும் நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, நண்பர் த.சாPஸ், குரவிகள் மற்றும் இதர நண்பர்களின் கவிதைகளின் பிரசவவேதனை எப்படி இருக்கும். நினைத்துப்பார்க்க முடியவில்லை.
[b] ?
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது. அதனால் எழுத வேணும் என நினைத்து எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
கவிதைகள் தற்போது நவீன முறையாக வசன அமைப்பில்தானே திகழ்கின்றது. திரு.வாலி திரு.வைரமுத்து அவர்களுடைய கவிதைகள் விகடன் குழுதத்தில் தொடர்களாக வருகின்றன. அவற்றை கவிதை என்ற ஸ்தானத்தைவிட்டு வாசித்தால் வசன அமைப்புத்தான். அதுவும் ஒரு அழகுதான்.
[quote=nalayiny]உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது.
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி பரணி குருவிகளையும் இதற்குள் இணைத்துவிட்டதற்கு.....மனம் அமைதியாக இருந்தால் கவிதைகளும் அமைதியான எண்ணவோட்டத்தில் கருத்தாழம் மிக்கதாகப் பிறக்கிறது....மனம் கொந்தளிக்கும் போது குழம்பிப்பிறக்கிறது கருத்தும் சிதையவே செய்கிறது.....கவிதைகள் கற்பனையின் அளவு, சொல்லியல் வங்கியின் தன்மை, வெளிப்படுத்தும் பாங்கு, வரியமைப்பு என்பவற்றையும் மீறி கவிஞனின் உளநிலையிலும் தங்கி தமது சாயலை வெளிக்கொணரவே செய்கிறன....இது இக்களத்தில் படத்தால் பேசவா மூலம் பெறப்பட்ட ஒரு முடிவு.....ஒரே படத்துக்குள் எத்தனை கவிவரிகள் பொருதி நிற்கின்றன......அது எப்படிச்சாத்தியமானது......பிறக்கும் வரிகள் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாறுவதேன்....இப்படிப் பார்க்கும் போது கவிஞனின் மனநிலையென்பது மிக உறுதியான கவிதையில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்கிறது என்பது தெளிவு...எனவே மனவோட்டத்தைக் குழப்பக்கூடிய அக புறக்காரணிகள் யாவுமே கவிவரிகளில் மறைமுக செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதே கவிகளின் பிரசவ நேரம்,வலி என்பன வேறுபட்டுப்பிறக்கக் காரணமாகின்றன...அதனால்தான் என்னவோ கவிப்பேரரசு தெரிவுசெய்த இடங்களுக்குச் சென்று எழுதுகிறாரோ என்னவோ...அங்கு வியாபாரம் கவிதையாகி நிற்பதால் தேவைக்கேற்ப தன்நிலையை மாற்றி மனதை நிலைப்படுத்தச் செய்கிறார் போலும்....குருவிகள் என்ன கவிஞரா என்ன....எமக்குத் தெரிந்த நான்கு வரிகளை போடுகிறோம்...அவ்வளவும் தான்.....அதற்குள் கவிதை உண்டென்பதைக் கண்டுபிடிக்கும் வாசகனுக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும் அவனின் திறமையை பாராட்டி நிற்பதே எமக்குத் தகும்...! :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]நளாயினி நன்றி
பரணி உங்களுக்கும் நன்றி
Nadpudan
Chandravathanaa
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
இளைஞன்
உங்கள் கவிதையின்
<b>நயம்</b> நல்லாக இருக்கிறது.
Nadpudan
Chandravathanaa
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இளைஞனே நல்ல முயற்சி...பாராட்டுக்கள்...!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
மகிழ்ச்சி நண்பா.
சரி...கவிஞர்களே..
உங்களிடம் சில கேள்விகள்.
கவிதை எழுதுவதற்கான சுற்றாடல், அல்லது சூழ்நிலை உங்களுக்கு எப்படியாக அமையவேண்டும்?
உதாரணம்:- தனிமை, அமைதி, இப்படிப்பல...
எழுதுங்களேன்.
அறிய ஆவலுடன்...
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம் இளைஞா
எனக்கு தனிமை கட்டாயம் அவசியம். அப்பதானே கனவு வரும். சிந்தனைகள் சிதறிக்கொள்ளும். அமைதி அது மனதைப்பொறுத்தது. சில நேரங்களில் அமைதி கட்டாயம். சில பொழுதுகளில் பேரிரைச்சலிலும் கவிதை பிறக்கும். உங்களிற்கு எப்படி ?
[b] ?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பொதுவாக ஆக்கம் ஒன்றை எழுதுவதானால்.. அது கதையாக இருந்தால்.. அதை மனதுள் தீர்மானித்துவிடுவேன்.. பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு இப்படி ஒரு கதை எழுதப்போறேன்.. என்று சொல்ல.. அவர்கள் கூறுவதையும் கவனத்தில் எடுப்பேன். அதாவது அபிப்பிராயங்களை.. பிறகு என்ன.. அது அப்படியே இருக்கும்.. இறுதியா எழுதித்தான் ஆகவேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் அல்லவா.. உதாரணமா ஐஸ்கிறீம் சிலை வாராவாரம் என்ற மாதிரி.. கடைசிநேரத்தில் கிறுக்கல் ஆரம்பமாகும்.. அந்த கிறுக்கலை கணனியில் எழுதும்போது.. வார்த்தைகளில் மாற்றங்கள் ஏற்படும்.. அவ்வளவுதான்.
.
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[quote]இளைஞன்சரி...கவிஞர்களே..
உங்களிடம் சில கேள்விகள்.
கவிதை எழுதுவதற்கான சுற்றாடல், அல்லது சூழ்நிலை உங்களுக்கு எப்படியாக அமையவேண்டும்?
உதாரணம்:- தனிமை, அமைதி, இப்படிப்பல...
எழுதுங்களேன்.
அறிய ஆவலுடன்..[/color]
[b]இளைஞன்
Kaufhaus இல் பொருட்களுக்கு விலை அடித்துக் கொண்டிருக்கும் போது.........
பஸ்ஸில் பயணிக்கும் போது.........
மனதை பிசையும் படியான துன்பம் சூழும் போது...........
என்று கவிதை பிறப்பதற்கு பல சமயங்கள்.
இவற்றுள் Kaufhaus இல் பொருட்களுக்கு விலை அடித்துக் கொண்டிருக்கும் போது
என்னுள் பிறந்த கவிதைகளே கூடுதலாக கவிதை என்ற அங்கீகாரத்தைப் பெற்று கூடுதலான பாராட்டைப் பெற்றன.
அந்த நேரத்திலான கவிதை பிறப்புக்கு கை வேலை செய்து கொண்டிருக்கும் போது
சிந்தனை இறக்கை கட்டிக் கொண்டு பறப்பதுதான் காரணமாயிருக்கும்.
இப்போது Kaufhaus இல் வேலை செய்வதில்லை.
அதனால்தானோ என்னவோ கவிதைகளும் பெரிதாக வருவதில்லை.
nadpudan
alai