Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோதிட பைத்தியங்களே...
#1
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் ஜோதிட நிகழ்ச்சிகளை தயாரித்து அளிப்பவர். நானும் அன்று அவருடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன். பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டேன்.

அன்று 25 நாட்களுக்கு தேவையான ராசிபலன்களை எந்த விதக் குறிப்புமின்றி மளமளவென்று பிரபல ஜோதிடர் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, அது கேமிராவில் பதிவு செய்ய பட்டது.

அந்த நிகழ்ச்சி பற்றி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் நண்பர், தன் குறிப்புகளைப் பார்த்து ஜோதிடரிடம், "சார், நீங்கள் சிம்மராசிக்கும், மேஷராசிக்கும் ஒரே நிறத்தை தொடர்ந்து மூன்று நாள் கூறி விட்டீர்கள். சரியா?' என்றார்.

அலட்டிக் கொள்ளாமல், "அப்படியா? மறந்து போய் சொல்லிவிட்டேன், வேறு ராசி எண்கள், நிறத்தைக் கூறுகிறேன். திரும்ப படம் பிடித்துக் கொள்ளுங்கள்' என்றார் ஜோதிடர். அதைக் கேட்டு சிலையாகி விட்டேன்.

அரைகுறையாக ஜோதிடர்கள் சொல்லும் ராசி பலன் நிகழ்ச்சியை நம்பி தினமும் அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஜோதிட பைத்தியங்கள் இது தெரிந்து திருந்த வேண்டும்.

—எஸ்.சுப்ரமணியன்,
குரோம்பேட்டை.


நன்றி: தினமலர்
Reply
#2
என்ன சாமி இது.. கொழும்பில் பம்பலப்பிட்டி சந்திக்கு கொஞ்சம் சற்று தள்ளி கொள்ளுப்பிட்டிப் பக்கமாக.. காண்டம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள்.. காண்டங்களை வாழ்வின் காலங்களுக்கேற்ப பகுத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டியது அந்தந்த காண்டத்துக்குரிய கட்டணமும்.. கைரேகை அடையாளமும்தான்.. நண்பன் ஆகா ஓகோ என்று புகழ்ந்தான்.. ம்.. அரைமனதுடன் பிறந்த காலத்துக் காண்டத்தை கேட்டேன் சாமி.. கைரேகையை பார்த்து பிறந்த திகதி மாதம் ஆண்டு சொன்னார்களே.. எழுதியும் தந்தார்களே.. எதிர்காலத்தைபற்றி கேட்க சொன்னான்.. பயத்திலை ஓடி வந்திட்டேன்.. கம்பியூட்டரிலை கொடுத்து மனிதர்களை அடையாளங்காண இங்கே கைவில் அடையாளம் என்றால்.. அங்கே அதே அடையாளம் காண்டம்மூலம் வாழ்க்கையே சொல்கிறது.. Idea
.
Reply
#3
எனக்கு எல்லாம் இந்த ஜோதிடத்தில் நம்மிக்கை இல்லை.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#4
உருண்டையான உலகத்துக்குள்ளே புதுமையாக எதையும் இதுவரை ஜோதிடம் சொல்லவில்லை.திரும்பத் திரும்ப அதே கதை..அதே காண்டம் தான்.

இருந்தாலும் மெய்சொல்லியோ,பொய் சொல்லியோ ஜோதிடர்களுக்குள் நல்ல உடன்பாடுகள் உண்டு.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#5
ஒரு சிலர் இந்த சோதிடத்தை நம்பியே பிழைப்பும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#6
படியுங்கள் சிந்தியுங்கள்
http://www.tamilworldnews.com/Astrology200903.htm
Reply
#7
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முதலே வானசாஸ்திரத்தில் எம்மவர்கள் எவ்வளவோ முன்னேற்றங்களை அடைந்ததுக்கு பல படைப்புகளும் சுவடிகளும் சான்று.. அது எளிமைப்படுத்தப்படாததால் வெள்ளையனின் கண்டுபிடிப்புகளே போற்றப்படுகின்றன.
சோதிடங்கள் பொய்யென கூறமுடியாது.. அவற்றை கையாளும் அரைகுறைகளில்தான் தவறு இருக்க முடியும்.. ஜெயவேல் தற்கொலை செய்ததற்கும் சோதிடத்துக்கும் என்ன தொடர்பு.. கான்சர் என்று சொன்னால் தற்கொலைதான் பரிகாரமா?
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)