Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#1
விக்ரம் சூர்யா இணைந்து நடித்து பாலா இயக்கியுள்ள 'பிதாமகன்' படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. சில நகாசு வேலைகள் தான் நடந்து கொண்டுள்ளன.

<img src='http://www.thatstamil.com/images14/cinema/pita1-450.jpg' border='0' alt='user posted image'>

இந் நிலையில் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டா, போட்டி ஏற்பட்டதால், மிக நல்ல விலைக்கு படத்தை விற்றுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.வி.துரை.

சுமார் ரூ. 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 9 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாம். இதனால், தயாரிப்பாளருக்கு சுளையாக ரூ. 3 கோடி தேறிவிட்டதாம்.

அதே நேரத்தில் வினியோகஸ்தர்களுக்கும் வாங்கிய விலையைப் போல பல மடங்கு
லாபம் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக வந்துள்ளதாம்.

விரைவில் தயாரிப்பாளர் ஏ.வி. துரையின் நண்பரான ரஜினிக்கு இந்தப் படம் போட்டுக் காட்டப்படவுள்ளது. பாடல்களிலும் பேக்கிரவுண்ட் இசையிலும் இளையாராஜா அசத்தி எடுத்துள்ளாராம்.

ஆளுக்கு ஒரு வெற்றிகரமான போலீஸ் படத்தை (சாமி, காக்க.. காக்க..) தந்துவிட்டு வந்த கையோடு இதில் மிக வித்தியாசமான வேடங்களில் நடித்துக் கலக்கியுள்ளனர் விக்ரமும் சூர்யாவும்.

இந்தப் படத்துக்குப் பின் அடுத்து எப்படிப்பட்ட படம் செய்வது என்று தெரியாமல் இருவரும் கொஞ்ச காலம் குழம்பப் போவது நிச்சயம் என்கிறார் பாலா சிரித்துக் கொண்டே.

அந்த அளவுக்கு கேரக்டர்களாகவே மாறிவிட்டார்கள் என்கிறார்.

<img src='http://www.thatstamil.com/gallery/pithamagan/n1.jpg' border='0' alt='user posted image'>

சிம்ரன், லைலா, ரசிகா ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. 'சேது' மற்றும் 'நந்தா'வுக்குப் பின் பாலாவிடம் இருந்து வரும் இந்தப் படத்தை கோலிவுட் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

நன்றி அதுதமிழ்.வணி
Reply
#2
இபபொழுது ஓடும் குதிரை விக்ரம். ரஜனி ரேசில் கலந்துகொள்வதில்லை..
Reply
#3
இதில் விக்ரம் சூர்யாவை விட லைலாதான் பேசப்படப்போகின்றாராம். சிம்ரன் சிம்ரனாகவே ஆடியிருக்கின்றாhராம். அதிசயம் ஓன்று மறைப்புகள் பல இட்டபடி ஆடியிருக்கின்றாராம்.
[b] ?
Reply
#4
<img src='http://www.intamm.com/pithamahan/images/main.jpg' border='0' alt='user posted image'>
பிதாமகன் பிரிவியு காட்சிகளைப் பார்த்தோர் படம் துாள் கிளப்பும் என்கின்றனர். பிதாமகன் குழு இப்போதே புல்லரித்துப் போய் நிற்கிறதாம்.
Reply
#5
<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.5.jpg' border='0' alt='user posted image'>

இன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டார் விக்ரம். "அடுத்த சூப்பர் ஸ்டார்..." என கோடம்பாக்கம் தயக்கமில்லாமல் சுட்டிக்காட்டும் விக்ரமை "பிதாமகன்" ஷ¨ட்டிங்கில் சந்தித்தோம். மனம்விட்டு அவர் பேசியதிலிருந்து...

"சேது"வுக்குப் பிறகு "பிதாமகன்"ல மறுபடியும் பாலாவோட இணைந்திருக்கீங்க. அந்த அனுபவம் எப்படியிருக்கு?

"சந்தோஷமா இருக்கு. பாலாவோட சேர்ந்து படம் பண்ணுறது நல்ல அனுபவம். "சேது"ல நடிச்சப்ப நான் வெறும் களிமண்ணு மாதிரி குழைஞ்சு இருந்தேன். அவர் சொல்லித் தந்த மாதிரி நடிச்சேன். படமா பார்த்தப்ப ஆடிப்போயிட்டேன். எனக்குள்ள இப்படி ஒரு நடிகன் இருக்கான்னு எனக்கே தெரியாம இருந்துச்சு. அந்த விக்ரமை எனக்கும் வெளியுலகத்துக்கும் அடையாளம் காட்டினது பாலாதான்.

"சேது"வுக்குப் பிறகு நான் நடிச்சதெல்லாம் கமர்ஷியல் படங்கள்தான். இதோ இப்ப மறுபடியும் "பிதாமகன்"ல ஒண்ணு சேர்ந்திருக்கோம். எனக்கும் பாலாவுக்கும் இடையில ஒரு கெமிஸ்ட்ரி இருக்கு... அன்னியோன்யம் இருக்கு... இதை வெறும் நட்புன்னு சொல்லிட முடியாது. அதுக்கும் மேல.

நாங்க ரெண்டு பேருமே எங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கறோம். "பிதாமகன்"ல எந்தக் காட்சியிலும் நாங்க தவறிட்டோம்னு யாரும் சொல்ல முடியாது. காட்சிகள் அவ்வளவு யதார்த்தமா இருக்கும். படம் கமர்ஷியலாவும் வந்திருக்கு... யதார்த்தமாவும் வந்திருக்கு."

இப்ப இண்டஸ்ட்ரியில எங்க பார்த்தாலும் உங்க பேச்சாத்தான் இருக்கு. உங்களோட நட்சத்திர கனவு நிறைவேறின திருப்தி இப்ப இருக்கா...?

"நிஜத்தைச் சொல்லணும்னாஇ நான் கண்ட கனவைவிட இப்ப அதிகமாவே நிஜமாகியிருக்கு. இவ்வளவு பெயர்இ புகழ் கிடைக்கும்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை. மனசு நிறைய பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு. இந்தப் பாராட்டுக்கு முன்னாடிஇ விருதெல்லாம் ஒண்ணுமேயில்லை. இப்ப கனவுகளும் அதிகமாகிட்டே போகுது. ஆனாஇ ஒவ்வொரு முறையும் ஷ¨ட்டிங் போகும்போதுஇ "இந்தப் படம் நல்லா ஓடலைன்னா நான் காலி"ன்னு நினைச்சுப்பேன். ஏன்னாஇ சினிமாவை நான் அந்தளவு காதலிக்கிறேன்..."

"சேது"வுக்கு முன்னாடி உங்க வாழ்க்கை எப்படி இருந்துச்சு? அதிக போராட்டம் இருந்ததா செய்திகள் வருது. எல்லாமே உண்மைதானா?

"ஓரளவுக்குத்தான் உண்மை. நிறைய பேர் நிறைய மாதிரி எழுதியிருக்காங்க. அந்தளவுக்கு நான் சிரமப்படலை. பொருளாதார ரீதியா எனக்கு கஷ்டமில்லை. ஆனாஇ மனசுக்குள்ள தீராத வேதனை இருந்துச்சு. படமே இல்லாத நேரத்துல நிறைய ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன். அப்ப ஸ்க்ரீன்ல காட்சிகள் நகர்றப்ப "நாம இந்த கேரக்டரை செய்தா எப்படி நடிச்சிருப்போம்? இதைவிட பெட்டரா செய்திருப்போமா...?" அப்படீன்னு நினைப்பேன். அந்த நினைப்பு ஒரு விரக்தியில கொண்டுபோய் விட்டுடும். "சே... நம்மால நடிக்க முடியலையே... சான்ஸ் கிடைக்கலையே"ன்னு மனசுக்குள்ள ஒரு வெடிப்பு ஏற்படும் பாருங்க... அப்பப்பா மரணத்தைவிட ரொம்பக் கொடுமையான அவஸ்தை அது. அப்பக்கூட நான் யார்கிட்டயும் சான்ஸ் கேட்டுப் போனதில்லை.

ஆனாஇ "சேது" ரிலீஸானதும் ஒரேயரு முறை ஷங்கரை சந்திச்சு சான்ஸ் கேட்டேன். "நீங்க ஒரு நல்ல ஆர்டிஸ்ட். இதுக்கெல்லாம் நீங்க கேட்கணுமா? நாம கண்டிப்பா சேர்ந்து படம் செய்யலாம்."னு சொன்னார். எனக்கு மணிரத்னம்இ ஷங்கர்இ ரெண்டு பேரையும் பிடிக்கும். ஆனாலும்இ நான் மணிரத்னம்கிட்ட வாய்ப்பு கேட்டதில்லை.

இன்னொன்னு சொல்லவா? படமே இல்லாத நாட்கள்ல நான் சிறீமன் "வள்ளி" படத்துல நடிச்ச ஹரி நடிகை நந்தினியோட கணவர் பாபு... நாங்க நாலு பேரும் தினமும் ரெண்டு மணி நேரமாவது நடிச்சுப் பழகுவோம். எதுக்காக இப்படி பிராக்டீஸ் செய்யறோம்னே தெரியாது. பின்னாடி பயன்படுமா... யாராவது வாய்ப்பு தருவாங்களா... எதுவுமே தெரியாது. ஆனாலும் ரிகர்சல் செய்வோம்."
நடுவில் ஒரு விபத்துகூட உங்களுக்கு ஏற்பட்டதல்லவா?



"ஆமா... அது சோதனைகளோட உச்சம். மூணு வருஷம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன். "இனிமே நீங்க நடிக்கவே முடியாது"ன்னு டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. அதுவரைக்கும் நம்பிக்கையோட இருந்த நான் சுத்தமா நொறுங்கிட்டேன். வீட்லகூட நடிப்பு ஆசையை விட்டுடுன்னு சொன்னாங்க. என்னால முடியலை. தூள் தூளா போன நம்பிக்கைகளை சேகரிச்சு ஒண்ணுசேர்த்தேன். நிச்சயம் ஜெயிக்க முடியும்னு நம்பினேன்.

ஆஸ்பிடல்ல இருந்தப்ப இந்தக் கனவெல்லாம் ஜீரணிக்க முடியாத விஷயம்... நான் நல்ல நடிகனா வரணும்னு மட்டும் ஆசைப்படலை; பெரிய நடிகனா வரணும்னு ஆசைப்பட்டேன். அப்பல்லாம் சின்னச் சின்ன விஷயத்துலயெல்லாம் _ பேப்பர்ல என் பேர் வர்றப்ப எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா?"

கமலுக்கு அடுத்து விக்ரம் என்றார்கள். இப்போது ரஜினிக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


"கமலுக்குப் பிறகு விக்ரம்னு முன்னாடியே பேசினாங்க. இப்ப தொடர்ந்து வெற்றிகள் தந்ததால ரஜினிக்குப் பிறகுன்னு பேசறாங்க. இவங்க ரெண்டு பேரோட பேசற அளவுக்கு நான் வளரலை. பெரிய ஆளும் கிடையாது. என்னோட ஆசை என்னன்னா சின்னக் குழந்தைலேர்ந்து பெரியவங்க வரை எல்லோரையும் கவருகிற மாஸ் ஹீரோவா நான் இருக்கணும். இந்த முயற்சியிலதான் இப்ப நான் இறங்கியிருக்கேன்...

அப்படியென்றால் ரஜினி பாதி கமல் பாதி கலந்த கலவைதான் விக்ரம் என்று சொல்லலாமா?

சாமி... என்னை விட்டுடுங்க... (சிரிக்கிறார்)

................
Reply
#6
நன்றி அருண்.........
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)