10-15-2003, 05:34 PM
<span style='font-size:25pt;line-height:100%'>கத்தி வேண்டாம்.. குழாய் போதும்!</span>
<img src='http://www.vikatan.com/av/2003/oct/12102003/p109.jpg' border='0' alt='user posted image'>
ஜீரண மண்டல உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் முறையில் சிகிச்சையளிப்பது
குறித்து, மேலும் விளக்கமாக விவரிக்கிறார்,
'கேஸ்ட்ரோ என்ட்ராலஜி' நிபுணர் டாக்டர் சி. பழனிவேலு.
''பொதுவாக அல்சர் முதல் கான்சர் வரையிலான நோய்களுக்கு வயிற்றுப் பகுதியைக் கிழித்துத்தான் ஆபரேஷன் செய்வார்கள். லேப்ராஸ்கோபியில் இது தேவையில்லை.
உடலின் எந்த இடத்தில் பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடத்தில் அதிகபட்சம் ஐந்து மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்ட ஒரு குழாயை (rod) செருகி, அதன் மூலமாக ஒளியைப் பாய்ச்சி, உள்ளிருக்கும் பிரச்னைக்குரிய பகுதியை அதே அளவுள்ள இன்னொரு குழாய் வழியாக அகற்றுவதுதான் லேப்ராஸ்கோபிக் முறை.
முதன்முதலில் 1983-ல், பிரான்ஸ் நாட்டில் இந்த முறையில் அப்பன்டிக்ஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. 1987-ல் இந்தக் குழாயின் நுனியில் ஒரு காமிரா பொருத்தப்பட்டு, இன்னும் துல்லியமாகப் பிரச்னையை ஆராய்ந்து அறுவைசிகிச்சை நடந்தது. 'விடியோ கைடட் சர்ஜரி' என்றும் இதைச் சொன்னார்கள். இந்த வகை சிகிச்சை முறை தென்னிந்தியாவில் அறிமுகமானது 1991-ல்!
இன்று பெரும்பாலான அரசு மருத்துவமனைகளும்கூட லேப்ராஸ்கோபிக் ஆபரேஷன் பிரபலமாகிவிட்டது. 'உயர்தர சிகிச்சை... ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவில்' என்றும் இதைச் சொல்லலாம்'' என்கிறார் பழனிவேலு.
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை, ஊசித்துளை அளவிலான கருவியைக் கொண்டு செய்வதால் தையல் இல்லை, வலி இல்லை, சீழ் கட்டும் வாய்ப்பில்லை. ஒருசில மணி நேரங்களிலேயே எப்போதும்போல் சாப்பிடலாம். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதோடு, அன்றாட வேலைகளைச் செய்யலாம்!
லேப்ராஸ்கோபியில் என்னென்ன வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக் கலாம்?
ஹெர்னியா (குடல் இறக்கம்):
நமது உடலில் பலவீனமான சதைப் பகுதி உள்ள இடங்களில் குடல் பிதுங்கிக்கொண்டு கட்டி மாதிரி தோற்றமளிக்கும். அதைத்தான் 'ஹெர்னியா' என்று சொல்கிறோம்.
இந்தக் குறைபாடு ஏற்பட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
கடினமாக உழைப்பவர்களுக்கு வயிற்றில் அழுத்தம் ஏற்படும்போது ஹெர்னியா வர வாய்ப்பு உண்டு. குடல் பிதுங்கிய இடத்தில் கைவைத்து அழுத்தினால் உள்ளே போய்விடும். ஆனால், அது நிரந்தரத் தீர்வல்ல... ஒரு கட்டத்தில் குடல் முறுக்கிக்கொள்ள வும் வாய்ப்பு உண்டு.
அப்படி நடந்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு, அந்தக் குடல் பகுதி அழுகி, அதை முழுமையாக எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அப்படியே இல்லா விட்டாலும்கூட, தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் மலம் கழிக்கும் போது, தும்மும்போது குடல் மீண்டும் வெளியே துருத்திக்கொண்டு நிற்கும்.
அதேபோல, வேறு ஏதோ காரணத் துக்காக அறுவைசிகிச்சை செய்தவர் களுக்குத் தொப்புளுக்குக் கீழே தையல் போட்ட இடத்தில் ஹெர்னியா வர வாய்ப்பு உள்ளது. இதை 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional Hernia) என்போம்.
ஹெர்னியாவுக்கு ஆபரேஷன் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை. அதற்காக 'ஓப்பன் சர்ஜரி' மாதிரி வயிற்றைக் கிழிக்கவேண்டிய அவசியமும் இல்லை. லேப்ராஸ் கோபிக் முறையில் ஹெர்னியா ஆபரேஷன் செய்யும்போது, பல அடுக்குகளாக உள்ள சதைப் பகுதியில் எந்த லேயரில் பலவீனமாக உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் ஒரு 'செயற்கை வலைத் துணி' (Mesh) வைத்து தைத்துவிடுவோம். அதன்பிறகு குடல் அந்த இடம் மூலமாக வெளிவராது. மீண்டும் ஹெர்னியா உண்டாகும் வாய்ப்பு முழுமையாக தவிர்க்கப்படுகிறது.
ஹெர்னியாவுக்கு வயிற்றைக் கிழித்து ஆபரேஷன் செய்யும்போது, சதையின் எல்லா லேயர்களும் கிழிபடும். பின்பு தையல் போட்ட இடத்திலும் பிரச்னைகள் எழலாம்.
நெஞ்சு எரிச்சல் (Heart Burn):
உணவுமுறையில் ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி டென்ஷன் ஏற்படுவது போன்ற வற்றால் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாகும். இதற்குக் காரணம் - உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே உள்ள ஒரு வால்வு லூஸாகிவிடுவதுதான்!
புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர் கள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்கள் போன்றவர் களுக்கும்கூட இந்த வால்வு லூஸாகி, ஹைட்ரோ குளோரிக் அமிலச் சுரப்பு அதிகமாகிக் குடல்புண் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். சிலருக்கு இதை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
ஆனால், வால்வை மீண்டும் டைட் பண்ணாவிட்டால் கான்சருக்கு முந்தைய நிலையை (Pre-malignancy Condition) அடையவேண்டிவரும். எனவே, லேப்ராஸ்கோபிக் முறையில் வயிற்றை உணவுக்குழாய்க்குமேல் சுற்றி வைத்துத் தைத்து, வால்வை மீண்டும் டைட்டாக்கிவிடுவோம்.
இதை 'ஃபண்டோப்ளைகேஷன்' (Fundoplication) என்று சொல்வார்கள். இதைச் செய்வதன் மூலம் கான்சரைத் தவிர்க்க முடியும்.
அல்சர் (குடல்புண்):
உணவில் அதிக காரம் சேர்ப்பது, நார்ச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது போன்றவற்றால் வயிற்றில் அமிலம் அதிகம் சுரந்து, குடல்பகுதியில் செல் அரிப்பு ஏற்படும். இதனால்தான் குடல்புண் உண்டாகிறது. குறித்த நேரத் தில் சாப்பிடாவிட்டாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.
இதில் குடல்புண் மட்டும் ஏற்பட்டுப் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வகை. இதன் அடுத்தகட்டமாகக் குடல் அடைப்பு ஏற்படுவது அடுத்த வகை. குடல்புண் உள்ளவர்களுக்கு ஆசிட் அளவைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் தந்தே பெரும்பாலும் குணப்படுத்திவிட முடியும். ஆனால், குடல் அடைப்புக்கு ஆபரேஷன் அவசியம்.
இந்த ஆபரேஷனை லேப்ராஸ் கோபிக் முறையில் எளிதாகச் செய்யலாம். இந்த முறையில், ஆசிட் சுரக்க மூலகாரணமாக உள்ள நரம்பை (Vagus Nerve) துண்டித்துவிடுவோம்.
குடல் அடைப்பைச் சரிசெய்ய, முதலில் குடல்புண்ணை ஆற்றிவிட்டு, வயிற்றையும் சிறுகுடல் பகுதியையும் ஒன்றாக இணைத்து விடுவோம். லேப்ராஸ் கோபிக் முறையில் இதைச் செய்தால், ஒரு நாள்தான் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியிருக்கும். அடுத்த நாள் வீடு திரும்பலாம்.
அதேபோல, 'குடல் ஓட்டை'யையும் (Ulcer Perforation) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த இடத்தை அடையாளம் கண்டு, விரைவாகச் சரிசெய்ய வேண்டும். அதுவும் லேப்ராஸ்கோபியில் சுலபம்.
பித்தப்பை கற்கள் (Gall Bladder Stones):
ஜீரணத்துக்கு அவசியமான பித்தம், கல்லீரலில் உண்டாகிச் சிறுகுடலுக்குப் போகும். இடையில் பித்தத்தைச் சேகரிக்கும் பணியைச் செய்யும் பை தான் பித்தப்பை.
இந்தப் பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மை குறையும்போதும் பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படும் போதும் பித்தத்திலுள்ள கொழுப்பு மற்றும் 'பிலிருபின்' (Bilirubin) என்ற திடப்பொருள் போன்றவை பித்தப் பையிலேயே படிந்து, கற்களாக உருமாறிவிடும்.
பச்சை, நீலம், பிரௌன் போன்ற கலர்களில் தனித்தனியாக உருவாகும் இந்தக் கற்கள், சில நேரம் பார்ப்பதற்கு கிறிஸ்டல் மாதிரியே இருக்கும். சமீபத்தில் ஒருவரின் பித்தப்பையைச் சோதித்ததில், அதில் 1,240 கற்கள் இருந் தன!'' என்றார் டாக்டர் சி. பழனிவேலு.
பித்தப் பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன..?
தொடரும்...............
நன்றி:விகடன்