10-20-2003, 08:33 PM
மண்டை காயற வெயிலடிச்சாலும் சரி... மப்பும் மந்தாரமாக மழை பேஞ்சாலும் சரி... இந்த முறை தீபாவளி வேட்டுச் சத்தம் செக ரகளையாக இருக்கப் போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை!
இதற்கு முந்தைய தீபாவளி அனுபவங்கள் எப்படி இருந்ததோ தெரியாது. இந்த முறை கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்... ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி முந்தைய தலைமுறை நடிகர்கள் படம் ஒன்றுகூட தீபாவளிக்கு வரவில்லை. வரப்போகிற அத்தனையும் இளவட்டப் பார்ட்டிகளோட படங்கள்.
பிதாமகன்
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இந்தப் படத்தை ஆர்வம் பொங்கக் கவனித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஐந்து ஹிட் கொடுத்த விக்ரம், காக்க காக்க மூலம் ரசிகர்களின் ராயல் சல்யூட்டை மொத்தமாக அள்ளிக் கொண்ட சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிற படம். விக்ரம், சூர்யா இருவரையும் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியதைவிட இதுதான் நீ என்று அவர்களுக்கே அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா.
தவிர . . . லைலா, கருணாஸ், சங்கீதா,
மனோபாலா என எக்கச்சக்க அட்ராக்ஷன் பார்ட்டிகள். இது பத்தாதென்று கூடுதல் ரகளைக்காக சிம்ரன், நடிகை சிம்ரனாகவே வந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் இந்தக் கூட்டணி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம். உணர்வுகளை உள்ளபடியே யதார்த்தமாகச் சொல்கிற கதை. இதற்கு முன்பு இருக்கற இமேஜ் அத்தனையும் மறந்துவிட்டு . . . புதுக் கெட்-அப்பில் ஆளாளுக்கு பின்னியெடுத்திருக்கிறார்கள்.
நட்புக்கும், காதலுக்கும் நடுவே இருக்கிற பொசஸிவ்நெஸ்தான் கதைக்கான இழை. ரத்தமும், சதையுமாக வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அப்படியே கண்முன் கொண்டு வர கடுமையாக உழைத்திருக்கிறார் பாலா. பின்னணியில் உயிர் கொடுத்திருக்கிற இன்னொரு ஹீரோ இளையராஜா.
எவர்க்ரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே பண்ணின ரெண்டு படங்கள் லாப நஷ்டக் கணக்கில்தான் இருந்தது. பிதாமகன் மூலம் மிகப் பெரிய தயாரிப்பாளராக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார். மொத்தப் படமும் தேனி, பெரியகுளம், கம்பம் வட்டாரங்களிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன. வியாபார ரீதியாக எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ . . . அதே அளவுக்கு விருதும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் படத்தின் ரீ-மேக் ரைட்ஸ் வாங்க இந்தியில் போனிகபூர் தொடங்கி ஏகப்பட்ட கபூர்களும்இ தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என ஒரு பட்டாளமும் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்றால் படம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
ஆஞ்சநேயா
வல்லரசு படத்தின் மூலம் காக்கிச் சட்டைக்கு தனி கம்பீரம் கிடைக்கச் செய்த மகாராஜன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம். இதுவும் காக்கிச் சட்டைக் கதைதான்! சாமி, காக்க காக்க என இரண்டும் போலீஸ் அதிகாரியின் வெவ்வேறு முகங்களைக் காட்டிவிட்டுப் போனபிறகு . . . புதிதாகக் காட்ட என்ன இருக்க எனக் கேட்பவர்களுக்கு ஐ.ஜி. பரமகுருவாக வந்து ரகளையாகப் பதில் சொல்லப் போகிறார் அஜீத்.
அஜீத்தின் கேரியரில் மிகப்பெரிய சவாலான கேரக்டர் இது. வில்லன் படத்தில் ராபரி பார்ட்டியாக வந்தவர்இ காக்கிச் சட்டைப் போடப் பிறந்த மாதிரி பின்னியெடுத்திருப்பதாக உச்சி முகர்ந்து சொல்கிறது ஒட்டுமொத்த ஆஞ்சநேயா யூனிட்டும்!
அஜீத்தை துரத்தித் துரத்தி லவ் பண்ணுகிற குச்சி ஐஸ் மீரா ஜாஸ்மீன், ஜொள்ளு பார்ட்டிகளுக்கு செம தீனி போட்டிருக்கிறார். வில்லனில் செட்டானதால் ரமேஷ் கண்ணா இதிலும் அஜீத்தோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
படு கமெர்ஷியலான ஆக்ஷன் படம். ஸ்பீட் பிரேக்கரே இல்லாமல் மொத்தப் படமும் ஜெட் வேக அதிரடி! பீட்டர் ஹெய்ன் உதவியால் ஏகப்பட்ட ஆட்களின் விலா எலும்புகளை ஒடித்து எடுத்திருக்கிறார் அஜீத்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் படத்தின் தயாரிப்பாளர். ஒருபக்கம் கார் ரேஸில் பிஸியாக இருந்தாலும் . . . தீபாவளி ரேஸுக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக டபுள் கால்ஷீட் போட்டு ஒர்க் பண்ணிக் கொடுத்திருக்கிறார் அஜீத். இசை மணி ஷர்மா. கார் ரேஸில் ஆறாவது இடத்தைத் தொட்ட அஜீத், தீபாவளி ரேஸில் முதல் ரவுண்டுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் படத்தில் நிறையத் தெரிகிறது.
ஜே.ஜே.
பார்க்காத காதல்... பரிதாபப்பட்டுக் காதல் என்று பார்த்துப் பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜெ.ஜெ. ஒரு புது அனுபவமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் சரண். பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ள அடுத்து என்ன ஆகப் போகிறது என்று அங்கேயே கிளைமாக்ஸ்க்கான ரூட்டில் வேகம் எடுக்கிற படம்.
படத்தின் தலைப்பை பார்த்து சரண் அ.தி.மு.க. ஆதரவாளர் என்று நினைத்துவிட வேண்டாம். மாதவன் பெயர் ஜெகன். ஹீரோயின் பெயர் ஜமுனா. இந்த இரண்டு பேரின் முதல் ஆங்கில எழுத்துதான் டைட்டிலுக்கான காரணம். மாதவனுக்கு ஜோடியா இரண்டு இளமை ராக்கெட். ஒன்று அமோகா, இன்னொன்று பூஜா. மாதவன் கல்லூரியில் படிக்கும் இளைஞன்இ அமோகா பல்கலைக்கழக மாணவிஇ பூஜா ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற பெண். இந்தக் காதல் கலாட்டாக்களுக்கு நடுவே காமெடி பண்ண கலாபவன் மணி என கலர்ஃபுல்லான படம்.
ஜெமினியில் ஓ போடவைத்த பரத்வாஜ்தான் இதற்கும் இசை. இது 25வது படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கான பலன் ஆடியோ விற்பனையில் தெரிந்து போனதில் தெம்பாக இருக்கிறது ஜெ.ஜெ. பட யூனிட்.
பாடல் காட்சிகளுக்காக இதுவரை கோடம்பாக்கத்து காமெராக்கள் கால் பதிக்காத இடங்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறார்கள்.
ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பேனரில் ரவிச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து ஹிட் படங்களாகக் கொடுத்துக கொண்டிருக்கிற இயக்குனர் சரண்இ "ரன்"னில் ஆக்ஷனுக்கு மாறிய மாதவனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். புதுக்கூட்டணி... கொள்ளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது கோடம்பாக்கம்!
ஒற்றன்
அர்ஜுனின் ஃபாவரைட்டான தேசபக்தி கதைதான் இதுவும். ஆனால் வழக்கமான அர்ஜுனாக இல்லாமல் இதில் பலவித கெட்-அப்களில் மிரட்டலாகப் பண்ணியிருக்கிறார். தலைப்புக்கேற்றபடி உளவு பார்த்து . . . தேச ஒற்றுமைக்கு உளை வைக்கிற ஆட்களை அடையாளம் காட்ற கதை. கதையோட்டத்தோடு கெட்-அப் மாற்றம் நடந்திருப்பதால் பேசப்படுகிற ஒற்றனாக இருப்பார் என்கிறார் படத்தின் இயக்குனர் இளங்கண்ணன்.
ஷங்கரிடம் அசோஸியேட்டாக இருந்தவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படம் என்பதால் தன்னையும் ஒற்றன் யூனிட்டையும் நிலை நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார். தேசபக்திக் கதை என்பதால் சீரியஸாக பார்டரில் நின்று மல்லுக்கு நிற்கிறமாதிரி கிடையாது. காதல்இ காமெடிஇ சென்டிமெண்ட் என்று சகல விஷயங்களையும் தேர்ந்த காக்டெய்ல் மிக்ஸ் பார்ட்டி மாதிரி கரெக்ட் பண்ணியிருக்கிறாராம் இளங்கண்ணன்.
சிம்ரன் கதாநாயகியாக நடித்து வருகிற ஒரே ஒரு தீபாவளிப் படம் இது. ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற பெண். தற்செயலாகக் காதல் தீ பற்றி பட்டையைக் கிளப்பற ஆட்டம் போடுகிற கேரக்டர் சிம்ரனுக்கு. சிம்ரன் போதாதென்று தேஜாசிறீ என்ற கவர்ச்சி பாமையும் களம் இறக்கிவிட்டிருக்கிறார். பொதுவாக அர்ஜுன் படம் என்றால் காமெடிக்கு கவுண்டமணி இருப்பார். இதில் வடிவேலு. கூட்டணி புதுசா சேர்ந்தமாதிரி காமெடியிலும் புதுச் சரக்கைக் கொட்டியிருக்கிறார் வடிவேலு. இசை பிரவீண் மணி.
திருமலை
கவிதாலயா தயாரிப்பில்... ஆர்.கே. செல்வமணியின் உதவியாளர் ரமணா இயக்கியிருக்கிற படம். அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய்க்கு ஜெயிச்சே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இந்தப் படத்தில்!
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக் கதைதான். ஏழைப் பையன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதால் ஏற்படுகிற பிரச்சனை. ஹஓல்ட் வைன் இன் நியூ பாட்டில்' என்ற ஃபார்முலாவில் இந்த ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு கலக்கலான திரைக்கதையில் ஊதிப் பெரிசு படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
விஜய், புதுப்பேட்டையில் இருக்கிற சாதாரண மெக்கானிக். ஃபாஷன் டெக்னாலஜி படிக்கிற ஜோதிகா மீது காதல் வர அதுக்கப்புறம் என்னவாகிறது என்பதை இரண்டரை மணி நேரத்துக்கு சுவாரஸ்யமாகக் கொண்டு போக என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் உண்டு என்று சொல்கிறார் இயக்குனர் ரமணா.
குஷிக்கு அப்புறம் விஜய், ஜோதிகா இதில் கூட்டணி போட்டிருக்கிறார்கள். குணச்சித்திரத்திற்கு ரகுவரன், அசத்தல் அண்ணியாக கௌசல்வா, அடாவடி ஆளாக கேரளப் பார்ட்டி மனோஜ் கே.ஜெயன், கலக்கல் காமெடிக்கு கருணாஸ், டி.பி. கஜேந்திரன், விவேக் என்று சகல கமர்ஷியல் ஐட்டங்களும் உண்டு. இது போதாதென்று ஒரு டான்ஸ்க்கு லாரண்ஸ். இன்னொரு ரகளைக்கு கிரண் என்று கூடுதல் ஃப்ளேவர் சேர்த்திருக்கிறார்கள்!
படத்தின் பாதிக்காட்சி புதுப்பேட்டையில் நடப்பதால் அதற்காக 50 லட்சம் செலவில் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்.
பாடல் காட்சிகளுக்காக எகிப்து, நியூ ஸீலாந்து என உலகம் சுற்றுகிற அனுபவத்தையும் கொடுக்கப் போகிறார்கள். திருமலை . . . சென்னை தண்ணியைக் குடிச்சிட்டு வாழற சராசரி இளைஞன். அவனுக்குள் இருக்கிற காதலை, சோகத்தை, சந்தோஷத்தை புதுசா சொல்லியிருக்கிறோம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறது ரமணா யூனிட்!
இயற்கை
உறவுகள் அற்ற ஒரு பூர்வீக தமிழன், யாருமற்ற அனாதை. முதன் முதலாக தமிழக கரைக்கு வரும் கப்பல் மாலுமி. விருப்பு, வெறுப்புகள் எதுவும் இல்லாத மனிதன். இவனுக்கு வெற்றி தோல்விகள் கிடையாது. பந்த பாசமற்றவன். இவனுக்குள் ஒரு காதல்? இதுதான் இயற்கை பட ஷாம்.
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில் படம் பிடித்ததை விசேஷமாகச் சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர் வி.ஆர். குமார்.
"அவ்வளவு லேசில் இங்கு படம் எடுக்க முடியாது. கலாட்டா செய்வார்கள்" என்கிற அறிமுகத்தோடுதான் மணப்பாடு போயிருக்கிறார்கள்.
ஆனால் அங்குள்ளவர்களோ பிரதிபலன் எதுவும் பாராமல் அத்தனை ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்! கயஸ் என்பவர் தலைமையில் ஊர்க்காரர்கள் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
"படம் ரிலீசாகும்போது சொல்லுங்க. 50 கார் வேன்ல திரண்டு வந்து பார்க்கிறோம்" என்றிருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில்தான் பெரும்பாலான படப் பிடிப்பும். அங்குள்ள நூலகர் நல்ல பொண்ணு என்பவரும், தயாரிப்பு மேற்பார்வையாளர்களில் ஒருவருமான கமலக் கண்ணன் என்பவரும் தான் அத்தனை வேலைகளையும் தலையில் அள்ளிப்போட்டுக் கொண்டு செய்தார்களாம். நன்றி தெரிவித்தார் வி.ஆர். குமார்.
டைரக்டர் ஜனநாதனின் புது வித ட்ரீட்மெண்டுடன் அந்தமானின் அழகைக் கண்டு இயற்கையில் ரசிகர்கள் மகிழ்வார்களாம்! கதைதான் படத்தின் முக்கிய பலமாம்!
சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே துறைமுகத்திலும் அந்தமானிலும் மரியாதை நிமித்தமாக பல உதவிளைச் செய்தார்களாம். வி.ஆர். குமார் பெருமையுடன் சொன்னார்.
ஷாமுடன், அருண் கப்பல் கேப்டனாக நடிக்கிறார். குட்டி ராதிகா, கருணாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
வி.ஆர். குமார், குணசேகரன், ஜி. நடராஜன் ஆகியோர் இணைந்து பிரீசம் பிலிம்ஸ் சார்பில் இயற்கை படத்தை தயாரித்து இருக்கிறார்கள்!
தவிர...படத்தில் சீமா பிஸ்வாஸ் ஒரு பிரதான கேரக்டர் பண்ணியிருக்கிறார். மொத்தப் படமுமே எந்தப் பாசாங்குமில்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பது படத்தின் ஹைலைட்!
நன்றி : வெப் உலகம்