11-20-2003, 05:24 AM
இன்னமும் திருந்தவில்லையா ?
வணக்கம் !
வேதனையான ஓர் உண்மை.
சாதி இனம் மதம் வேண்டாம் என்று புதியதோர் யுகம்நோக்கி தாய்நிலம் நடைபோட நெற்கதிர் இடையே விசச்செடிகளாய் அண்மையில் யாழ் மாநகர எல்லைக்குள் நடந்த சாதிப்பிரிவினை மனதை நெருடுகின்றது.
இந்த அரேபிய மண்ணில் பிறந்து வளர்ந்து 5 ஆண்டுகள் இங்கே இருந்து பெற்றோருடன் தாய்நிலம் சென்று அங்கு தன் கல்வியை ஆவலுடன் தொடங்க முற்பட்ட வேளை சொந்த ஊரிலேயே அமைந்துள்ள பாடசாலையில் சாதி குறைந்தவர்கள் என ஓதுக்கப்பட்ட ஓரு வேதனையான சம்பவம் நேற்று கேள்வியுற்றேன். மனதை மிக மிக நெருடிச்சென்றது அந்த சோககதை. எத்தனையோ பாடசாலைகளில் விண்ணப்பித்தபோது காலம் சென்றுவிட்டது தற்போது பாடசாலையில் இடம் இல்லை. அடுத்த ஆண்டு நீங்கள் சேரலாம் என்று சொல்லி நிராகரித்தபோது இந்த பாடசாலையில் போதிய இடமிருந்தும் சாதிகுறைந்தவர் என்று அந்த பிஞ்சின் கல்வியில் வெட்டு வீழ்ந்திருக்கின்றது. ஆங்கிலக்கல்வி கற்ற அந்த பிஞ்சு தாய் மண்ணில் தாய்மொழிதான் கற்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆவலினால் அங்கு சென்று இன்று எதுவுமற்ற நிலையில் இருக்கின்றது. இதற்கு என்ன செய்யமுடியும் சொல்லுங்கள். அந்த பாடசாலை அதிபரின் பெயர் பாடசாலை விபரங்கள் தேவையானவர்களிற்கு தனிப்பட்ட முறையில் நான் தருகின்றேன். உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய ஆசை அந்த பிள்ளைக்கு அதேபாடசாலையில் இந்த ஆண்டே (2004 ) நுழைவு கிடைக்கவேண்டும்.அதற்கேற்ற ஓழுங்கை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
சாதியை ஓழிப்போம் என்ற தலைவரின் கூற்று வெற்றாகி காற்றோடு கலந்திடாவண்ணம் நிலைநாட்டி வைப்போம்
நம்பிக்கையுடன்
ந.பரணீதரன்

[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: