Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உலகில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதுடன் இவ்வாண்டில் அது இதுவரை காலத்துக்குமான உச்ச நிலையை எட்டியுள்ளது....! உலகில் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 2.5 மில்லியன் பேர் 15 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள்...இவ்வாண்டில் 2003 மட்டும் சுமார் 5 மில்லியன் பேர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர்...மூன்று மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்...!
உலகின் எயிட்ஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக தொடர்ந்து ஆபிரிக்கா விளங்குகிறது...ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் எயிட்ஸ் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன....!
ஆபிரிக்காவில் பொஸ்வானாவிலும் சுவாசிலாந்திலும் சுமார் 40 சதவீதம் வளர்ந்தவர்கள் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர்...அது மட்டுமன்றி அப்பிராந்திய சில நாடுகளில் ஐந்து கர்பிணித்தாய்மாருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எயிட்ஸ் தொற்றிய தாய்மார் வாழ்கின்றனர்.....!
இப்படியே போனால் மனித இனமும் சுவடுகளாக பூமியில் காட்சியளிக்கும் நாள் அதிக தூரமில்லை....!
:evil: :roll: :!: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
Mr.குருவி என்னை வெருட்ட வேண்டாம்.Please................[/b]
Tharma
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
குருவி எனக்கு ஒரு சந்தேகம்
ஏன் சேவல் கலைக்க எலி ஓடுது?
Tharma
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39528000/jpg/_39528218_pakistan.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39530000/jpg/_39530182_shukria_non_lwa_6649.jpg' border='0' alt='user posted image'>
Pakistani Shukria Gul, a 33-year-old, HIV positive mother,
மரணம் உறுதியான நிலையிலும் மனம் தளராது எயிட்ஸுக்கு எதிராக விழிப்பூட்டும் பெண்....!
இவர் பாகிஸ்தானச் சேர்ந்தவர்...இவரது கணவர் நைஜீரியா எனும் ஆபிரிக்க நாட்டில் கார் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெறும் போது HIV தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டு HIV வாங்கிக் கொண்டார்....அதன்பின் நோய் பற்றிய தெளிவின்மையால் மனைவிக்கும் பரப்பி.... பின் நோய் முற்றி...மரணித்தும் போனார்...!
இன்று இப்பெண்ணோ...தகுந்த மருத்துவப் பரீட்சை செய்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட போதும் தொற்றுக்குள்ளாகாத தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் எயிட்ஸ் பற்றிய நோய்த் தெளிவின்மையை போக்குவதற்காகவும் பாடுபடுகிறார்.....!
இவரை உண்மையில் சமூகப்பற்றுள்ள பெண் என்பதில் தவறேயில்லை...! கடவுளின் அருளால் இவர் நீடித்த காலம் வாழ பிரார்த்திப்போம்...!
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3239330.stm
தகவல்..BBC.COM
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.nature.com/nsu/031124/images/aids_180.jpg' border='0' alt='user posted image'>
எயிட்ஸ் நோய் வைரசின் பெருக்க வேகத்தை உடலில் கட்டுப்படுத்தி எயிட்ஸ் நோயாளிகளை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும் திட்டத்தை உலகம் பூராவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது...! இத்திட்டத்திற்கு வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் பாவிக்கப்படவுள்ளன...இவை முன்னரும் பாவிக்கப்பட்ட போதும் விலை மிக அதிகமாகக் காணப்பட்டன...தற்போது பெருகி வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலிவு விலையில் இம்மருந்துகளை தயாரித்து வழங்க பல மருந்து உற்பத்தி செய்யும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன.....!
இது காலத்தின் கட்டாயம் போலும்....!
News from nature.com
:twisted: :!:

:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கண்ணீரே அழுகின்றது
மருத்துவம் எங்கேயோ சென்றுகொண்டிருக்கின்றது இருந்தும் சில ஆண்டுகாலமாய் உயிர்கொல்லும் ஓர் நோய்க்கு விடைகாண முடியவில்லை.
கீழே இருக்கும் படம் கேரளாவில் விடைகாணாமல் வீழ்ந்த ஒரு குடும்பஸ்தனினுடையது. கட்டிய மனைவியின் பிரசவத்தின்போது ஏற்றப்பட்ட ஒரு ஊசியினால் அவளை எயிட்ஸ் என்னும் அரக்கன் பற்றிக்கொள்ள அதன்பின் வந்த இரண்டு பிள்ளைகளிற்கும் அந்த பாரிய அரக்கனின் பிடி இறுக்கியது. அவள் மூலம் தந்தைக்கு பரவி இன்று தாயும் இல்லை தந்தையும் இல்லை அனாதைகளான இப்பிஞ்சுகள் நோயின் பெயர் அறியாது எதுவுமே தெரியாமல் மரணித்த தந்தையின் கரம்பற்றியபடி . . (நன்றி. மலையாள மனோரமா பத்திரிகை - மொழிமாற்றம் செய்து தந்தவர் நண்பர். பத்திரிகை பார்த்தவுடன் அவர் கண்களில் நிறை நீர். வினாவிய போது அவர் காட்டிய காட்சி இது. என்னை உலுக்கிய உணர்வினை உங்களிற்கும் )
என்றுதான் கிடைக்குமோ இந்த வினாவிற்கான விடை
என்றுதான் உடையுமோ இவ்விலங்கு
[b] ?
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
படம்(image) தெரியவில்லை இணைத்து விடுங்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அவர்கள் நோயோடு போராட எத்தனையோ விஞ்ஞானிகள் இதற்கெல்லாம் விடைதேடிப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்....விரைவில் வளமான முடிவுகிட்ட கடவுளையும் வேண்டுவோம்....இந்நோய்த் தொற்றைக் குறைக்க எம்மாலான இந்நோய்க்கெதிரான விழிப்புணர்வூட்டும் பங்களிப்பையும் செய்வோம்....தகுந்த விழிப்புணர்வின்மையே இந்த உயிர்களின் இழப்புக்கு முழுக்காரணம்....!
ஒரு தாதிவிட்ட தவறு......!
--------------------------------
தகவலுக்கு நன்றி பரணி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைதான் குருவிகளே
யாரோ சிலர் விடும் தவறுகளால் அறியாத மலர்கள் கருகுகின்றன !
விரைவில் விடை கிடைக்கவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு புள்ளிராஜாவிற்கு எயிட்ஸ் வருமா ? என்ற விளம்பரத்தை வரவேற்போம்
[b] ?