Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏமாற்றிகள்
#1
இது ஒரு உண்மைச் சம்பவம். இன்று மாலை எனது நண்பருக்கு நடந்தது. எனது நண்பர் இலண்டனில் உள்ள ஒரு பொதுச்சந்தை ஒன்றிற்கு சென்றிருக்கின்றார். அங்கு அவரை இரண்டு இளைஞர்கள்(வெள்ளை) அணுகி ஒரு கைப்பையினுள் இருந்த வீடியோ கமராவையும் ஒரு LAPTOP இனையும் காட்டி 1000 பவுண் தரும்படி கேட்டிருக்கின்றார்கள். அவர் வேண்டாம் என மறுக்க அவர்கள் விலையை குறைத்து சொல்லியிருக்கின்றார்கள். இவரும் அந்தப்பொருட்களின் மீது கொண்ட ஆவலினால் இன்னும் விலையை குறைத்துக் கேட்டிருக்கின்றார். இப்படி மாறிமாறி பேரம்பேசி 550 பவுணுக்கு இருவரும் உடன்பட்டிருக்கின்றனர். நண்பர் CASH MACHINE ஒன்றுக்கு அவர்களையும் அழைத்துச் சென்று 550 பவுணை அவர்களுக்கு கொடுத்து அந்தப்பொருட்கள் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வீடு வந்து அந்தப் பையினைத் திறந்தபோது அதனுள் இரண்டு தண்ணீர் போத்தலும் சில கடதாசிகளும் இருந்தன.

நண்பருக்கு அப்போதுதான் விடயம் வெளித்தது. அதாவது அவர் CASH MACHINE பணம் எடுக்கும்போது அவர்கள் அவருக்குக் காட்டிய கைப்பையை மாற்றியுள்ளார்கள். இவரும் பணத்தைக் கொடுத்து அதனை வாங்கிய பின் அந்தப்பையினுள் பார்க்கவில்லை.

இதேமாதிரியான சம்பவம் எனது மேலும் இரு நண்பர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னர் இரண்டு வௌ;வேறு இடத்தில் நடந்தது. இப்படியாக தாங்கள் ஏமாந்ததை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அவர்கள் இதனை வெளியே சொல்ல வேண்டாம் என என்னைக் கேட்டு கொண்டனர். இப்போது இந்தக் கதையை பலரிடம் சொல்ல அவர்களும் தாங்கள் ஏமாந்த அல்லது அது பற்றிக் கேள்விப்பட்ட கதையை சொன்னார்கள். எல்லோரும் வெட்கத்தில் வெளியே சொல்லாது இரகசியமாக வைத்துள்ளதால் எம்மவர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் சம்பவம் தொடர்கின்றது.
இது பற்றி யாழ் கள நண்பர்களை எச்சரிக்குமுகமாக இதனை இங்கு பிரசுரிக்கின்றேன். இது பற்றி நீங்களும் ஏதாவது அறிந்திருப்பின் அது பற்றி மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் தொடர்ந்து நம்மவர் ஏமாற்றுப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
Reply
#2
நன்றி மணி.... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
அர்ரா அர்ரா இது பழயசெய்தி ... ஜயா நீங்கள் எங்க இருக்கிறீர்கள் இது ஜரோப்பா எங்கும் வேலை இல்லா திண்டாட்டம் ஏமாற்று..... சுத்துமாத்து இதுக்குதான் இப்போ எல்லோருக்கும் பிரடியிலும் கண் வேண்டும் Idea :| :mrgreen:
Reply
#3
இது பற்றி ஏற்கனவே சில மாதங்குளுக்கு முன்னர் பரீசில் நடந்தது போல ரிரிஎன் தொலைக்காட்சி தொடரில் முழு விபரமாக படலை படலை தொடரில்
காட்டியிருந்தார்கள்.
Reply
#4
இது ஐரோப்பாவில் அல்ல சிறிலாங்காவில் இந்தியா எங்கும் சகஜம்....அப்படி இருந்தும் ஏமாறுகிறார்கள் என்றால் எல்லாம் வெள்ளைக்காரன் என்ற அபரிமித கற்பனை,நம்பிக்கை....உண்மையில் அவர்களும் மனிதர்கள் அதுவும் சராசரி மனிதர்கள் தோல் மட்டும் வெள்ளை...அதுவும் புவியல் காரணிகளால் வந்தது.....!

முன்னொரு காலத்தில் மேசையில் காசு வைத்தால் பத்திரிகை, பால் அது இது என்று பொருட்கள் கொண்டு வருவோர் தமக்குத் தேவையான பணத்தை எடுத்துவிட்டு போவார்களாம்.... ஒரு போதும் பணம் காணாமலோ அல்லது குறைந்தோ இருப்பதில்லையாம் ஆனால் இன்று நிலமை எவ்வளவோ மாறிவிட்டுதாம் யாரையும் நம்ப முடியவில்லையாம்...இப்படிச் சொன்னார் பழமை பேணும் வெள்ளையின வயோதிப மாது....! பாவம் அவர்களின் (வெள்ளையின வயோதிபர்கள்) கதையைக் கேட்க யார் தான் உள்ளனர்...அவர்களோ ரோட்டில் போறவன் வாறவனை 'லவ் லவ்' என்று கொண்டு அலைவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது....!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....இளைஞர்களே யுவதிகளே 'லவ்' என்று வெறும் பெட்டை பெடிக்குப் பின்னால் மட்டும் சுத்தாம இவர்கள் மீது அன்பு பாசம் காட்டப் பாருங்கள்...அவர்களும் வாழ்வின் இறுதிக் காலத்தில் உண்மை அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் உள்ளங்களாக.....சிறிது நேரம் அவர்களுடன் அன்பாகப் பேசுங்கள் அதுவே அவர்களுக்கு பெரும் திருப்தி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ஏமாற்றுவதில் எங்களை மிஞ்சிவிட்டர்கள் போலுள்ளது?
Reply
#6
இச்சம்பவம் இங்கும் அடிக்கடி நடக்கின்றது விலைஉயர்ந்த காரில் வருவார்கள் பொருளைக்காட்டுவார்கள் நன்றா இருக்கும் வீட்டிற்கு வந்து
உடைத்துபார்க்கும் பொழுது பழையகமராவை புதிய பெட்டியில்
வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது
Reply
#7
<b>ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும்
ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்</b>
Reply
#8
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும்  
ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மெய்தான் நூற்றுக்கு 99% எங்கும் எல்லா இடத்திலும் எல்லா நாட்டிலும் ......
Reply
#9
Warning About KL Parking (someone forwarded it to me; thought it would be usefull)

This actually happened to a man, not a woman recently in KL
Imagine: You walk across the parking lot, unlock your car and get inside. Then you lock all your doors, start the engine and shift
into REVERSE, and you look into the rear-view mirror to back out of your parking space
and you notice a piece of paper stuck to the middle of the rear window. So, you shift into PARK, unlock your doors and jump out off your car to remove that paper (or whatever it is) that is obstructing your view. When you reach the back of your car, that is when the car-jackers appear out of nowhere, jump into your car and take off !!

Your engine was running, you would have your purse in the car and they practically mow you down as they speed off in your car.

BE AWARE OF THIS NEW SCHEME THAT IS NOW BEING USED.
Just drive away and remove the paper that is stuck to your window LATER, and be thankful that you read this email. I hope you will forward this to friends and family especially to women! A purse contains all identification, and you certainly do NOT want someone getting your home address. They already HAVE your keys!!!!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)