Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோவும் திருமந்திரமும்
#1
வைகோவும் திருமந்திரமும்

வைகோ எங்களுக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதால் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால், அதற்காக அவர் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சீரானவை என்று சொல்வதற்கு இல்லை.

எமக்காகக் குரல் கொடுத்து சிறையும் சென்றவர் வைகோ. அவர் சகலதையும் சீராகக் செய்தால் எம்மை விட பெருமைப்படக் கூýடிýயவர்கள் தாய்த் தமிழகத்தில் கூýட இருக்கமாட்டார்கள்.

இந்திய பொதுத் தேர்தலில் தமிழகத்தில் போட்டிýயிடும் காங்கிரஸ்காரர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயரை ஆதரித்து மயிலாடுதுறை என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசாரக் கூýட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ தெரிவித்த ஒரு கருத்து 'ஐயோ வைகோவுமா இப்படிý" என்று கேட்க வைக்கிறது.

'கடவுளின் சீற்றத்துக்கு ஆளான ஜெயலலிதா பதவியிழப்பார். இன்றைக்கு ஜெயலலிதா தமிழக மக்களுக்கு மாத்திரம் எதிரியில்லை. கடவுகளின் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கிறார். காளியம்மனில் இருந்து பழனி முருகன் வரை ஜெயலலிதாவை சீற்றத்துடன் பார்த்துக் கொண்டிýருக்கிறார்கள். கடவுளின் சீற்றத்துக்கு ஆளானவர்கள் பதவியிழப்பார்கள். அத்துடன் பெரும் நோய்க்கும் ஆளாவர் என்று திருமூýலர் திருமந்திரத்தில் கூýறியிருக்கிறார். தமிழக மக்களைப் போலவே நாலாபுறமும் கடவுளர்களும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டத் தயாராயிருக்கிறார்கள்" என்று அந்தப் பிரசாரக் கூýட்டத்தில் வைகோ பேசியதாக பத்திரிகைகளில் படிýத்தேன்.

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் இருந்து முளைத்து அறிஞர் அண்ணாவினால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் இன்று படுமோசமாகக் சீரழிந்து கிடக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதுமல்ல. நான் சொல்லித்தான் அதை யாரும் அறிய வேண்டுமென்றும் இல்லை.

கலைஞரைத்தான் விடுவோம். வைகோவை போன்ற ஒரு சிலரிடமாவது பகுத்தறிவுப் பாசறையின் வாசம் கொஞ்சமேனும் எஞ்சியிருக்காதா என்று எதிர்பார்ப்பதில் தவறு இருக்கிறதா சொல்லுங்கள்?பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவினால் சிறையில் அடைக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னர் வெளியில் வந்த வைகோ, வேலூர் சிறை வாசலிலேயே சொன்னார் மத வாதத்தில் இருந்து தமிழகத்தைத் காப்பாற்றப் போகிறேன் என்று. அது வரைக்கும் அதே மதவாத முகாமின் ஒரு பங்காளியாகத்தான் இருந்தார் வைகோ. மக்கள் கொஞ்சமேனும் அரசியல் தெரியாதவர்கள் என்ற நினைப்பில் இவர் அரசியல் செய்வதால் தான் தமிழகத்துக்கு இந்த நிலை. எனது நண்பர்களின் திராவிட முன்னேற்றக் கழகத்தினருடன் கூýட்டுச் சேர்ந்திருப்பதால் டாக்டர் ராமதாஸை மன்னித்தருளுகிறேன் என்று ரஜினிகாந்த் கூýறுவதைக் கேட்டுத் தமிழக மக்கள் கைதட்டுகிறார்கள் என்றால் ஜெயலலிதாவைக் பழி வாங்கத் துடிýக்கும் கடவுளர்கள் என்று வைகோ கூýறும் ஒருவரினால் கூýட அந்த மக்களைக் காப்பாற்ற முடிýயுமென்று நான் நினைக்கவில்லை.

திருமந்திரத்தையெல்லாம் மேற்கோள் காட்டிý ஜெயலலிதா பதவியழக்கப் போகிறார் என்றும் பெரும் கொள்ளை நோய் அவரைச் சூýழப் போகிறதென்றும் கூýறுமளவுக்கு வைகோ பகுத்தறிவில் தரம் தாழ்ந்து போனது பெரும் கவலையே. ஜெயலலிதாவுக்கு எது வந்து விட்டுப் போனாலும் போகட்டும் எமக்குக் கவலையில்லை.

காளியம்மன் தொடக்கம் பழனி முருகன் வரை சகல கடவுளர்களும் ஜெயலலிதாவைக் சுட்டெரிக்கப் பார்த்துக் கொண்டிýருக்கிறார்கள் என்றும் வைகோ கூýறுகிறார்.

பரீட்சை எழுதும் பையன்கள் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு போவது போல் அரசியல்வாதிகளும் இப்போது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கும் போது, கோவில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறாரோ இல்லையோ எமது கண் முன்னால் ஐயர் ஆசீர்வதிப்பதைத் தான் நாம் பார்க்கக் கூýடிýயதாக இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரின் பக்கம் தான் கடவுள் இருக்கிறார் என்று யார் சொன்னது?

தேர்தலில் கடவுளைக் கூýட பக்கச் சார்பாக நிற்குமாறு அவருக்குக் கூýட ஒரு வாக்காளர் அட்டையை ஐயருக்குக் கையளிக்கும் அர்ச்சனைத் தட்டிýன் வடிýவிலும் காணிக்கையின் பெயரிலும் கொடுத்து விடுகிறார்கள் நமது அரசியல்வாதிகள். தேர்தலில் வென்று விட்டால் அமர்க்களமாக அன்னதானமும் கொடுப்பார்கள். தோற்றால் 'அன்னந் தண்ணி"யும் இல்லை. இவர்களைக் கடவுள் சுட்டெரிக்கமாட்டாரா?

அரசியல்வாதிகளே உங்களின் பக்கச் சார்புக்கு ஒரு எல்லையே இல்லையா? கடவுளைக் கூýட விட்டுக் வைக்கிறீர்கள் இல்லையே.

வைகோ திருமந்திரத்தையாவது இனிமேல் இறுகப் பற்றி உறுதிப்பாட்டுடன் செயற்பட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்பதன்றி வேறு ஒன்றும் அறியேன் பராபரனே!

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)