Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
எதிர்வரும் ஞாயிறு ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுகிறது. யாருக்கு வாக்களிப்பது, நமது மக்கள் இதுகுறித்து சிந்திப்பதற்காக எந்த முயற்சிகளிலும் இறங்கியதாக தெரியவில்லை.....
புலம்பெயர் மண்ணின் அரசியல் அமைப்பை தெரிந்திருப்பது அவசியமாகப்படுகிறது.
இதுபற்றிய விபரங்களை சற்று உற்றுநோக்குவோமா..?
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எழுதுங்கள் சண்முகி அக்கா...
அறிந்துகொள்ள ஆவலுடன் உள்ளோம்.
அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என எண்ணுகிறேன்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
உங்களைப் போன்ற இளைஞர்கள் இதைப்பற்றி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா இளைஞன்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
வாக்களிக்க முன்னர் -
உமது பகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் தொடர்பு கொண்டு உங்களது எதிர்பார்ப்பை விளக்குங்கள். முதலில் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லும் நீங்கள் எமக்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்று வினவுங்கள். உங்களுடைய வேலைத்திட்டத்தில் எங்காவது எமது உரிமைகளை வலியுறுத்தியுள்ளீர்களா? என்று கேட்டுப் பாருங்கள். குறைந்தபட்சம் எமக்கு எதிரான குரல்களை தணிப்பதற்காவது குரல் கொடுப்பீர்களா ? என்று வினவுங்கள். எமது வாக்குகளைப் பெற்று எமக்கு எதிராகவே வேலை செய்த கட்சிகளும் இங்குள்ளன. அவை பற்றிச் சுட்டிக் காட்டுங்கள். எதிர்காலத்தில் இப்படி நாம் வாக்களித்து ஏமாற முடியாது என்பதையும் மறவாது கூறுங்கள்.
யார் உரிமையைக் கேட்காமல் மௌனமாக இருக்கிறாரோ அவருடைய தலையில் தொப்பி கவிழ்ப்பது ஐரோப்பிய அரசியல் பொருளாதார இயல்பு என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் விழிப்போடு இருக்கிறோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு புரிய வையுங்கள். நமக்காக பணியாற்ற யாராவது அரசியல்கட்சி முன்வரலாம், அவர்களை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு வாக்களியுங்கள்.
சென்ற தடவை ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமென வாக்களித்துவிட்டு வந்த தமிழ் மக்கள் பலரிடம் ஏன் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமென வாக்களிக்கிறீர்கள் என்று வினவியபோது பலர் சொன்னார்கள், இனி போடர் இருக்காது நாம் வீசா இல்லாமல் பல ஐரோப்பிய நாடுகளுக்கு போய் வரலாம் என்றார்கள். அதற்கப்பால் என்ன நடக்கும் என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை. இன்று நடந்து கொண்டிருப்பது என்ன ? பல நாடுகளுக்கு போக நாடுகளுக்கு இடையிலான போடர் தடை இல்லை, ஆனால் மக்களால்தான் போக முடியவில்லை. காரணம் அவர்களுடைய கையில் வெளிநாடுகள் போவதற்கு போதிய பணம் இல்லை, வேலை இல்லை, வருவாய் இல்லை.
எந்த விடயத்திலும் எதிர்காலம் பற்றிய மதி நுட்பம் இல்லாமல் நமது மக்கள் செயற்படுகிறார்கள் என்பதற்கு நாம் அகதிகளான கதையே நல்ல உதாரணம். இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கால் இன்னொரு தடவை அகதிகளாகக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நமக்கு வேண்டும். இதை உணர்ந்து எல்லோரும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். முகம் பார்த்து வாக்களிக்கக் கூடாது. நமக்காக என்ன செய்தார்கள், செய்யப் போகிறார்கள், என்பதைப் பார்த்து வாக்களியுங்கள். டேனிஸ்காரர், ஐரோப்பியர், வெளிநாட்டவர், உள்நாட்டவர் என்று பாகுபாடு காட்டாத பொதுமை நோக்குள்ள வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்.
இன்றுள்ள உலகில் பொது மக்களுடைய வாழ்விற்கு இரண்டேயிரண்டு வழி முறைகள்தான் உள்ளன. ஒன்று கேள்வி கேட்காத, சுய கருத்தற்ற பாமர ஜடங்களாக வாழ்வது, அல்லது அகதிகளாகி எங்காவது அகதி முகாம்கள் தேடி ஓடுவது. இதுதான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐ.நா சபை பொது மக்களுக்கு வழங்கிய பெரிய பேறு. முழு உலகிலும் உள்ள மக்களது வாழ்வு இப்படியான அவலத்திலேயே சிக்குண்டுவிட்டது. இதற்குக் காரணமானவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தினரும் அடக்கம். இந்த நிலைமாற ஐரோப்பிய ஒன்றியம் பாடுபட வேண்டும். தற்போது ஜனநாயகம் தழைத்த கிரேக்க மண்ணில் தலைமைகாணும் ஐரோப்பிய ஒன்றியம் இனியாவது இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். மனிதனை சந்திரனுக்கு அனுப்புவதைவிட அகதியாக அனுப்பாமல் இருக்க வழிதெரிந்தால் அதுவே போதுமானது. அந்த வழி தெரிந்த அரசியல்வாதி யாராவது இருந்தால் அவரை ஆதரியுங்கள்.
நன்றி : அலைகள்