Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது
#1
<b>ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது</b>
லண்டனிலிருந்து எஸ்.நாதன்

பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இருக்கவில்லை. ஆனால், தற்போது தஞ்சம் கோருபவர்கள் தங்களது கடவுச்சீட்டை கட்டாயம் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாமலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை தெரிவிக்காதவர்களும் புதிய சட்டவிதிகளுக்கு அமைவாக ஆகக்கூடியதாக 12 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பிரிட்டன் மட்டுமே இவ்வாறு இறுக்கமான நடைமுறைகளை தற்போது கையாள்கிறது. 2005 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான ஆணையாளரின் வருடாந்த சர்வதேச அகதிகள் பற்றிய மதிப்பீட்டின்படி இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு மில்லியன் பேர் சுமார் 60 நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் 99 வீதமானோர் தமிழர்களே. ஐரோப்பிய நாடுகளில் முக்கியமாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளான டென்மார்க், சுவிற் சர்லாந்து போன்றவற்றுடன் பிரிட்டனிலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் தஞ்சம் கோரினர். இவற்றில் பிரிட்டன் தவிர்ந்த ஏனைய நாட்டு அதிகாரிகள் தஞ்சம் புகுந்த தமிழர்க ளில் 25முதல் 95வீதம்
http://www.virakesari.lk/
Reply
#2
ஐயோ பாவங்கள். இவ்வளவு பணத்தைக் கட்டி குடுமப கஸ்டங்களுக்காக உழைக்க வந்ததுகளுக்கு இப்படி ஒரு நிலையா? மீண்டும் இலங்கை செல்வதா? அவர்களை விட்டு இங்க வெளிநாடுகளில் என்ன வாழ்க்கை சண்டை முடிஞ்சால் நான் நாடுக்கு போவேன் என்கிறவர்களை உடன் பிடிச்சு ஏத்த வேண்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லாதமாதிரியும் யாரோ அவர்களை வலுக்கட்டாயமாக இங்க வரச்சொன்ன மாதிரியும் கத்துக்குட்டிகள் காதை பொத்திக்கொண்டு கத்துகினம். பாவங்கள் குடும்ப கஸ்டம் காரணமாக உழைக்க வந்ததுகளுக்கு இப்படி ஒரு நிலமை? :oops: :oops: :oops: அவர்கள் பிரித்தானியாவை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதுதான் நல்லது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)