Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரும்புலிகள் தினம் - சாவே எம் வாழ்வு....!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/tiger_wallpaper.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழத் தேசத் தாயின்
கருவறை காத்து நிற்கும்
கரும்புலிகள் நினைவாக ஓர் கவி.......
(கரும்புலிகள் தினம் ஆடித்திங்கள் 5ம் நாள் (யூலை 5))

விடுதலைத் தீ
விடுவதாக இல்லை
விடுதலை வாங்கும் வரை....!
விடைகொடோம்
விதையாய் விழினும்
விடாயாய் தொடரும் எம்
வீறு கொண்ட இலட்சியம்....!
விசும்பு வரை சென்றும்
வீழ்வோம் வெற்றி முழக்கத்துடன்
வீரக் கரும்புலிகளாய்
வீர தேசம்
விடுதலை பெறும் வரை...!
அதுவரை
சாவே எம் வாழ்வு....!

நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
என்னை கவர்ந்த வரிகள்.....
Quote:விடுதலைத் தீ
விடுவதாக இல்லை
விடுதலை வாங்கும் வரை....!
விடைகொடோம்

அருமையாக உள்ளது கவி
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<b>உயிராயிதம்</b>

<img src='http://www.yarl.com/forum/files/blacktiger.gif' border='0' alt='user posted image'>

உயிராயிதம்
உன்னதமான ஆயுதம்
எதிரிகளின் கோட்டைக்குள்
எரிமலையாய் வெடிக்கும்
அவர்களின் கப்பலுக்குள்
தீப்பிளம்பைக் கக்கும்

ஆனால்
இவையெல்லாம்
தீவிர வாதம் என்று சொல்லி
தீ வைக்கப் பாக்கிறார்கள்
தீயவர்கள்.
அதற்கு துணை போகிறார்கள்
இன்னும் சில புல்லுருவிகள்
[b][size=18]
Reply
#4
<b>பாடல் வரிகள் சில</b>

<img src='http://www.yarl.com/forum/files/blacktiger2.gif' border='0' alt='user posted image'>


"குண்டு பொழிந்தவர்
கொன்று குவித்தவர்
கோட்டையிலே புகுவார்கள்
பகை அஞ்சிக் கரும்புலி
என்று கதறிட குண்டுடனே சிரிப்பார்கள்"

இவர்கள் கரும்புலிகள்.


பேரினவாதத்தின் அடக்கு முறையும், கொலை, கொள்ளை , கற்பழிப்புக்களும் எவ்வளவு தூரம் இவர்கள் மனதை பாதித்திருக்கும் என்பதை இப்பாடல் வரிகள் சித்தரிக்கின்றன. இவ் தமிழீழ மண்மீட்பு போரிலே 80000 க்கு மேற்பட்ட மக்களும் 20000 க்கு மேற்பட்ட போராளிகளும் தமது இன்உயிரை நீத்திருக்கிறார்கள். இவர்களும் எமது உறவுகள் தான். இவ்வாறிருக்கும் போது அண்மையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை கருணா. இவரை பெரிது படுத்திபிரச்சாரம் செய்து வருகிறார்கள் சிலர், இவர்களில் எம் இனத்தவரும் உண்டு, இதை நினைக்கும் போது பெரிய அவமானமாக இருக்கின்றது. ஒரு துரோகிக்காய் நீங்கள் கொடுக்கும் குரலை தமிழினத்துக்காகவோ, தமிழ் மணணுக்காகவோ, இப் போரினால் இறந்த 80000க்கு மேற்பட்ட மக்களுக்காகவோ, மண்மீட்புபோரில்வீரச்சாவை தழுவிக் கொண்ட 20000 க்கு மேற்பட்ட மாவீரர்களுக்காகவோ, 250 க்கு மேற்பட்ட கரும்புலிகளுக்காகவோ கொடுத்தீர்களானால் உங்கள் பங்கும் உருவாகப் போகும் தமிழீழத்தில் சிறிதளவேனும் இருக்குமல்லவா.
இல்லாவிட்டாலும் உங்கள் பெயர் இருக்கும் .....எங்கு என்பது உங்களுக்கே தெரியும் Idea

நன்றி
[b][size=18]
Reply
#5
விடிவெள்ளிகள்.....

கறுப்பு மனிதர் இவர் கரும்புலிகள்.....
தூய்மையான தியாக உள்ளம் கொண்டவர்கள்....
உருவம் இல்லை இவர்க்கு
இவர் தான் கரும்புலிகள் என்டு...
எவரும் அறிந்ததில்லை......
கரும்புலிகள்... சொன்று வெடித்தபின்
இவர் உருவம் யாரும் பர்க்க முடிவதில்லை....
நேரம் குறித்து நாள் அறிந்து சாவிக்காய் காத்திருப்பார்...
காலத்தை வென்ற காலனை வெல்ல ..... இவர் காத்திருப்பார்...

எங்கோ இவர் மடிய இங்கிருக்கும் எனது கண் கலங்கும்
என்ன தொடர்பு இது நான் அறியேன்...
இவர்களைப்போல் நானில்லை என்டு தலை குனிவேன்.....
இவர் தியாகத்தில் குளிர்காயும் அற்ப பிறவி நான்....
இவர்க்கு சமனாய் எவர் உலார் இவ்உலகில்.....
ஆகாது ஆகாது யாராலும் முடியாது....
இவர்கள் மனிதர்கனே அல்லர்......
எம்முன் நடமாடும் காவலர்கள்........
தமிழ் புலியாய் வாழ்ந்து கரும்புலியாய் வெடிக்கும் விடிவெள்ளிகள்........


இறப்பென்பது ஏது இவர்க்கு......
தம்மின விடிவுக்காய் தமிழர்க்காய்...
விடி வெள்ளி ஆகினர் ....
சுதந்திரம் எனும் காலை மலர விடிவெள்ளி ஆகினர்
ஓரு குடும்பமில்லை..... உறவில்லை இவர்க்கு..
பல்லாயிரம் குடும்பங்கள்...... உறவுகள் இவர்க்கு...
இவர்களை எண்ணி ஓரு பிடி மலர் போடும் போது.... எண்ண தோன்றும்....
அண்ணனாய்.... அக்காவாய்..... தம்பியாய்..... தங்கையாய... பிள்ளையாய்...
இந்த எண்ணமே..... எங்கோ இவர் வெடிக்க என் கண்களில் கண்ணீர் பாய வைக்கும்..........
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:விடிவெள்ளிகள்.....

இறப்பென்பது ஏது இவர்க்கு......
தம்மின விடிவுக்காய் தமிழர்க்காய்...
விடி வெள்ளி ஆகினர் ....
சுதந்திரம் எனும் காலை மலர
விடிவெள்ளி ஆகினர்...

நிஜமான வரிகள்....
நிலை நிறுத்துக்கொள்ளுங்கள்..
ஒவ்வோர் தமிழ் நெஞ்சங்களும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் அவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

என்ற பாடலில் வரும் கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் கண்களில் நீர் வடிவதுமுண்டு என்ற வரிகளும்

பொங்குமகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
போனபின்பே நாமழுவோம் யாரறிவீர்கள்
என்ற வரிகளும் எவ்வளவு காலம் செல்லினும் மறக்காதவை

கவிதன் கரும்புலிகள் என நினைவுகூரப்படுபவர்கள்(உத்தியோகப்பற்றாக)261
\" \"
Reply
#8
கரும்புலிகள் மறக்கப்படக் கூடியவர்களா.?இல்லை.
அப்படித்தான் அவர்களுக்கா இயற்றப்பட்ட பாடல் வரிகளும் மனதை விட்டு அகலாதவை.
நன்றி ஈழவன் அண்ணா உங்கள் தகவலுக்கு.
[b][size=18]
Reply
#9
தகவலுக்கு.....மிக நன்றி
.... நண்பர்களே !!
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#10
<b>கரும்புலிகளின் படங்களைப் பார்க்க</b>

http://www.tamilnatham.com/bts2004/index.php?f=f1
----------
Reply
#11
<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>

தம்முயிர் தந்து
எம்முயிர் காத்த
தியாகிகள் கரும்புலிகள்
அவர் தம் இலட்சியம் சுமப்பதும்
காப்பதுமே தமிழர் எம் இலட்சியம்...!

நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
கரும்புலிகள் தினத்தில்தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலத்தும் புகைப்படங்களின் தொகுப்பு..

http://www.tamilnatham.com/photos/black20040706/
[b][size=18]
Reply
#13
உங்கள் தகவலுக்கு நன்றி கவிதன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
இன்றைய நாளில் நம் நாட்டிற்காக தம்முயிரை அர்ப்பணித்த கரும்புலிகள் அனைவரையும் நினைவுகூர்வோமாக. Cry
----------
Reply
#15
<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>

சொல்லோடு திட்டங்கள்
செல்லரித்துப்போகும் காலமதில்
சொல்லாமல் கதைமுடித்து
காவியமாய் போவர்.
மற்றவர் அறிகையிலே..
மெளனமாய் மரணத்தோடு.
சவாலிட்டு சாதனை படைத்திடும்.
காவிய வீரரிவர் கரும்புலிகள்.

தாய் மடியாக மண்ணது கொண்டு
தாய் மடி மீட்கும் போராட்டம்.
தயங்காது உயிரங்கு
தன் கடமை செய்ய.
மரணத்திடம் ஒப்பந்தமிட்டு
சபதம் நிறைவேற்றி..
சாவிலும் வரலாறு எழுதிடுவர்.

உயிராலே ஈழஓவியம் தீட்டியோர்.
உயிர் வாழும் நாளின்று மீண்டும்.
தாய் மடிமீது நினைவோடு.
பாச நினைவுகள் நெஞ்சில் சுமந்து
வெடிகள் உடலில் சுமந்து.
களத்தோடு சங்கமம் ஆகி
காவியம் வென்ற நாயகர்
நினைவு நாளின்று.
கரும்புலிகள் நினைவுநாள்.
கதையாக அல்ல.
நிதர்சனமாய் காட்சிதரும்.
தியாக காவியத்திற்கு
உருவம் கொடுத்தவர்
நினைவுநாள்
கரும்புலிகள்தினம்.
அவர் தம் தியாகம்
நெஞ்சினில் நிறுத்தி
நினைவுகூருவோம்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
Quote:<b>உயிராலே ஈழஓவியம் தீட்டியோர்
உயிர் வாழும் நாளின்று மீண்டும்
தாய் மடிமீது நினைவோடு
பாச நினைவுகள் நெஞ்சில் சுமந்து
வெடிகள் உடலில் சுமந்து
களத்தோடு சங்கமம் ஆகி
காவியம் வென்ற நாயகர்
நினைவு நாளின்று.</b>

அருமையான கவி படைத்து கரும்புலி தினமாமம் இன்று கரும்புலிகளை நினைவுகளால் பூஜிக்க வைத்த தமிழினிக்கு நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
கவிதை நன்றாக இருக்கின்றது. நினைவூட்டியமைக்கும் கவிதைக்கும் நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
கவிதை எழுதிய மற்றும் தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்

சுட்டி கரும் புலிகளது பட இணைப்பு தந்ததற்கு நன்றி
. .
.
Reply
#19
கரும்புலிகளுக்காக கவிதை வடித்த அக்காக்கு நன்றி
----------
Reply
#20
நன்றி அக்கா
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)