Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ்
#1
இன்று புலத்தில் எல்லோ பெற்றோர்களுக்குமே தம் பிள்ளை தமிழ் படிக்க வேணும்.. மேடையில் தமிழில் கவிதை சொல்ல வேணும். நாடகம் நடிக்க வேணும்.. என்ற ஆசை ஓரளவுக்காவது இருக்கிறது. தமது இறுக்கமான வாழ்க்கை முறைக்குள்ளும், அவற்றுக்கும் நேரம் செலவழிக்கிறார்கள்.. ஆனால்.. இப்போதைய குழந்தைகள் அடுத்த தலைமுறையில் இதேமாதிரியான ஆர்வத்துடன் அதாவது தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்களா? அல்லது புலத்தில் தமிழிற்கு சூட்டிய மகுடம் இந்த தலைமுறையுடன் இறக்கி வைக்கப்படுமா? எனது கருத்து.. தமிழ் சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு பிறமொழி ஆர்வம் எப்படி அதிகம் ஏற்படவில்லையோ அது போலவே.. இன்னொரு மொழி சூழலில் பிறந்து வளர்ந்த அக்குழந்தைகளுக்கு.. பிறமொழி (அது தமிழ் மொழி தான்) ஆர்வம் குறைந்திருக்கும் என்பது நியாயமானதும் விஞ்ஞானத்தின் படியும் உண்மையாகும். உங்கள் கருத்துக்களின் பின் வருகிறேன்..
Reply
#2
யோசிக்க வேண்டிய விடையம் தான்.....! தற்பொழுதில் இருந்தே பெற்றோர் தாய் மொழி பற்றிய தேவையையும் அவசியத்தையும் நன்றாக உணர்த்தி வருதல் வேண்டும்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
1991ம் ஆண்டுப் பகுதிகளில் நான் சுவிற்சர்லாந்துக்கு அகதியாக வந்திருந்த சமயம் தமிழ் அது இங்குள்ள பெற்றோர்களுக்கு வேப்பங்காயாகவே இருந்தது. எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிப் பெருமைப்பட்ட காலம்.

என் ஆரம்பக்கல்வியோடு தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த எனக்கு தமிழ்மொழியைத் தொடந்து படிக்க ஆவல் ஏற்பட்டது. அச் சமயத்தில் சுவிஸ் பாசல் நகரில் தமிழ் ஆர்வலர்கள் ஒரு சிலரால் தமிழ்ப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த மாணவர்களே அப் பாடசாலையில் பயிற்சிபெற்றனர்.ஆனால் இன்றோ நிலைமாறி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப் பாடசாலையில் கல்விகற்கின்றார்கள். அதை விட கல்விச்சேவையின் பாடசாலையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் என கிட்டத்தட் 3200 ஈழத் தமிழர் வாழும் பாசல் நகரில் 500ற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் தாய்மொழிக் கல்வியினைப் பயில்கின்றார்கள். எனவே எதிர்வரும் காலங்களில் சுவிஸ் பாடசாலைகளில் தமிழ்மொழியும் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. அதன் மாதிரி முயற்சியாக இங்குள்ள ஒரு சுவிஸ் பாடசாலையில் தமிழ்மொழியும் கற்பிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பாசல் நகரப் பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்படி அந்தந்த நாட்டு அரசுகளே முன் வரும் பட்சத்தில் எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ்மொழி தங்குதடையின்றி எடுத்துக் செல்லப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லையென நினைக்கின்றேன்.


Reply
#4
tamilini Wrote:யோசிக்க வேண்டிய விடையம் தான்.....! தற்பொழுதில் இருந்தே பெற்றோர் தாய் மொழி பற்றிய தேவையையும் அவசியத்தையும் நன்றாக உணர்த்தி வருதல் வேண்டும்......!



<b>ஆனால் சில பெற்றோர்கள் சர்வதேச மொழியாம் ஆங்கில மொழியில் தத்தமது பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்களே. அதுதான் தற்போது அத்தியாவசியமான மொழி என்று சொல்கிறார்களே. பிள்ளைகள் ஆங்கில மொழியில் உரையாடுவதுதான் தமக்கு பெருமை என வீராப்பு பேசும் பெற்றோர்களும் இருக்கின்றார்களே......</b>
----------
Reply
#5
மயுரன் நீங்கள் பேசுவது இந்த தலைமுறை பற்றியது. அதாவது இப்போது தமிழ் படிக்க சொல்லி வற்புறுத்துகின்ற பெற்றோர்கள் தமிழ் மண்ணோடு நேரடித்தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் இறக்கும் வரையும் தமிழும் தமிழ் நிலமும் அவர்களுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.. அந்த ஆர்வமும் இருக்கும். ஆனால் இனி வரும் தலைமுறை தமிழோடு நேரடி தொடர்பு அற்றதாக இருக்கும். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் படி என்ற ஆர்வத்தை ஊட்டுவார்களா? ஒரு வேளை அவர்கள் தமிழ் படிக்க அதிர்ப்தி அடைந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்ளத் தான் வேணுமோ என்று தோன்றுகிறது. இதனை இப்படியும் சொல்லலாம்.. மூன்று வருடங்களுக்கு முன்பு எப்படியோ சுவிஸ் போய் எப்படியோ அசூல் அடித்த ஒருவர் சொன்னார்.. இலங்கையில இருக்கேலாது. அங்கை சரியான வெயில்.. அது சரியான முட்டாள்த்தனம். ஆனால்.. சுவிஸில் பிறந்து வளர்ந்த ஒரு குழந்தை இலங்கை போய்.. அங்கு இருக்க முடியாது.. சரியான வெயில் என்றால்.. அதில் இருக்கின்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேணும்.. வெயிலில் பிறந்து வளர்ந்த என்னை வின்ரர் எப்படி நெருடியதோ... அது போலத் தான்..... உண்மையைச்சொன்னால்.. இன்று புலத்தில் தமிழ் பேசுகின்ற குழந்தைகள் நன்றாக பேசுகின்றார்கள்.. பொங்கும் புலியாய் பாய்ந்திடுவோம் என கவிதை படிக்கிறார்கள்.. ஆனால்.. தங்கள் அறிந்த மொழிகளிலேயே அவற்றை எழுதி வைத்திருக்கிறார்கள்.. ஆக.. இப்போதே கிட்டத்தட்ட எழுத்துத் தமிழ் அழிந்து விட்டது.. ஒரு மொழி வளர்ச்சிக்கு பெருமளவு உந்து சக்தியாக இருப்பது அம் மொழி சார்ந்த சூழல் தான்.. அநத சூழலை இழக்கின்ற போது அந்த மொழி குறித்த தேடலும் ஆர்வமும் அற்றுப் போகும் என்பதே நியதி...
அவுஸ்ரேலியாவில் இப்போது (சில ஆண்டுகளுக்கு முன்பாகவே)பல்கலைகழக புகுமுக தேர்வுக்கு தமிழையும் ஒரு பாடமாக்கியிருக்கிறார்கள்..
இலங்கையில் சாதாரண தரம் அல்லது ஆண்டு 9 க்கு பின் படித்தவர்கள் அந்த தமிழி அறிவோடு இங்கு வந்து புகுந்து விளையாடினார்கள்.. ஆனால்.. இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்... தமிழை விட வேறு ஏதாவது இலகுவான பாடமாக செய்யலாம் என்று கருதுகிறார்கள்...

..
Reply
#6
ºÂó¾ý ¦º¡øÅÐ ¯ñ¨Á ¾¡ý. ±ÉìÌ 11 ž¢Öõ 9 ž¢Öõ À¢û¨Ç¸û þÕ츢ȡ÷¸û. «Å÷¸û À¢Èó¾Ð þí¸¢Ä¡ó¾¢ø. ¬É¡ø ±ý Á¨ÉŢ¡÷ «Å÷¸Ù¼ý À¢Èó¾ ¿¡û Ó¾ø ¾Á¢Æ¢ø ¾¡ý §ÀÍÅ¡÷. Å£ð椀 ¾Á¢ú ¾¡ý §ÀÍÅÐ ±ýÈ ¸ðÎôÀ¡Îõ ¯ñÎ. «Å÷¸û ¿ýÈ¡¸ ¾Á¢ú §ÀÍÅ¡÷¸û. ¬É¡ø ±Ø¾×õ Å¡º¢ì¸×õ ¾¡ý Á¢¸ ¸Š¼ôÀθ¢È¡÷¸û. þíÌûÇ ¾Á¢ú À¡¼º¡¨Ä¸û Á¢¸ àÃõ ±ýÀ¾¡Öõ ±í¸û ¾¡ö¦Á¡Æ¢¨Â ¸üÀ¢ì¸ À¡¼º¡¨Ä §¾¨Å¢ø¨Ä ±ýÈ ±ñ½ò¾¢Öõ «Å÷¸ÙìÌ Å£ðÊø ¾¡ý ¾Á¢ú ¸üÀ¢ì¸¢§È¡õ. ¸ÊÉÁ¡É ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý. ¬É¡ø ¾Á¢ÆÕìÌ §À¡Ã¡ð¼õ ±ýÉ Ò¾¢¾¡?

¬í¸¢Äò¾¢Öõ ¾Á¢Æ¢Öõ ¯ûÇ ´üÚ¨Á §ÅüÚ¨Á¸¨ÇÔõ, ¾Á¢Æ¢ø ¯ûÇ ¸¡Å¢Âí¸û ¸¨¾¸¨ÇÔõ þÇõ À¢û¨Ç¸ÙìÌ ¬÷Åõ ÅÃìÜÊ Ũâø ¦º¡øÄ¢ì¦¸¡Îì¸ ÓÂüº¢ì¸¢§È¡õ. ¾Á¢ú À¡¼º¡¨Ä¸Ç¢ø ¯ûǾ¡¸ ¦º¡øÄôÀÎõ §À¡ðÊ, ¦À¡È¡¨Á Å£ð椀 þø¨Ä. ¬É¡Öõ «Å÷¸Ç¢ý ¬÷Åò¨¾ àñÎÅÐ À¸£Ã¾ À¢ÃÂò¾Éõ ¾¡ý. ±í¸û ¬¨º ±øÄ¡õ, þ§¾ À¢ÃÂò¾Éò¨¾ ¾í¸û À¢û¨Ç¸ÙìÌõ ¾Á¢ú ¸üÀ¢ì¸ þÅ÷¸û À¼§ÅñΦÁýÀÐ ¾¡ý. «¾üÌ ¾Á¢ú ÅÇ÷ì¸ôÀ¼ §ÅñÎõ. «Ð×õ ÒÄõ ¦ÀÂ÷óÐ Å¡Øõ ¾Á¢ú þÇõ ºó¾¾¢Â¢Éáø ÅÇ÷ì¸ôÀ¼§ÅñÎõ. «ô§À¡Ð¾¡ý ´ý¨È º¡¾¢ò¾ ¦ÀÕ¨Á «Å÷¸ÙìÌ þÕìÌõ. «ó¾ º¡¾¨É ¾í¸û À¢û¨Ç¸Ç¡Öõ ¸¡ôÀ¡üÈôÀ¼§ÅñÎõ ±ýÈ ¬¨ºÔõ þÕìÌõ. þо¡ý ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸û ÓýÛûÇ ºÅ¡ø. þÐ ±ý ¾¡ú¨ÁÂ¡É ¸ÕòÐ
Reply
#7
மேலேயுள்ள கருத்துகள் உண்மைகளின் ஒரு பகுதியை வெளிக் கொணர்கின்றன.
இதற்கு மேலாக இன்னும் இருக்கின்றன..............................

அவற்றை ஏனைய கள நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பார்க்கும் தமிழ் குழந்தைகளில் பல குழந்தைகள் தமிழ் ஆர்வலர்களது அல்லது எந்த வடிவிலாவது தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆதங்கமுள்ளவர்களது குழந்தைகளாக இருக்கிறார்கள்.

காரணம், நான் போகும், பழகும் வீடுகள் இப்படியானவர்களது வீடுகளாகவே இருக்கின்றன.

இவர்களது குழந்தைகள் பெற்றோரோடு மாத்திரமே தமிழில் பேசுகிறார்கள்.

தமது சகோதர-சகோதரிகளோடோ அல்லது தமிழ் சிநேகிதர்களோடோ பேசும் போது சுவிசில் உள்ள (ஜெர்மன்-பிரென்ஞ்-இத்தாலி) மொழிகளிலேதான் பேசுகிறார்கள். இது சர்வ சாதாரணமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

பெற்றோரின் எதிர்பார்ப்புகள் கூட இப்போது மாறி விட்டது. முன்னர் பெற்றோர்கள் குழந்தைகள் தமிழ் பேச வேண்டுமென்பதற்காக புலம் பெயர் வானோலிகளை கேட்க பண்ணியதையும் அதில் வரும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற ஊக்கமளித்ததையும் நானறிவேன்.

இன்று வானோலிகளுக்குள் குழந்தைகள வர விடக் கூடாதென்பதில் பல பெற்றேர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். அதற்கான காரணம் தொலைபேசி வழி வரும் ஒரு சிலர் அந்த வானோலிகளுக்குள் வந்து பேசும் வார்த்தைகள் பெரியவர்களாலேயே ஜீரணிக்க முடியாத வார்த்தைகளாகவும் பேச்சுகளாகவுமே இருக்கின்றன.

வானோலி-தொலைக் காட்சி போன்றவற்றால் வாசிப்பு முறை கூட அருகிவிட்டது.

அடுத்து எம்மவரது அடிமன ஆசைகள் ,
"எனது குழந்தை நன்றாக படித்து டொக்டராகவோ இன்ஜினியராகவோ வரவேண்டுமென்பதே........................" இப்போது அது கம்பியுூட்டர் புரோகிரமராக மாறியிருக்கிறது.



குழந்தைகள் இருப்பவர்களுக்கு என்னை விடக் கூடுதலாக தெரியும்.
பேசுவதற்கு இது நல்லதொரு விடயம்.

தொடர்ந்து எழுதுங்கள்.....................
Reply
#8
தமிழனுக்கு தமிழன் என்று சொல்வதற்குரிய அடையாளமாயிருப்பது மொழி மட்டுமே.. அவனுக்கு சீக்கியர் போல தலைப்பாகை இல்லை.. வேட்டியையும் விட்டாயிற்று. மொழியால் மட்டுமே அவன் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுவான். ஆக புலம்பெயர் நாட்டிலும் தமிழன் பேசப்பட வேண்டும் என்ற ஆசை பொய்த்தே போகுமா? தாயகத்தில் தமிழன் நிலைத்தே நிற்பான்..புலம் பெயர் மண்ணில்.. இன்னும் சில தலைமுறைகளின் பின்னர்.......????

..
Reply
#9
ம்.. ம்.. ஒரு சொல்லு சிங்களம் தெரியாமலிருந்த குடாநாட்டு கடைக்காரருக்கு சிங்களம் அத்துப்படி.. பக்கத்திலை வந்திருந்நு ஏதொ சிங்களத்திலை சொல்லி வேண்டி சாப்பிட்டு சிகரட்டும் பத்திக்கொண்டு போறானாம்.. பிரச்சனையே இல்லையாம்.. பிறகு என்ன தமிழ் நிலைக்கும்தானே..
Truth 'll prevail
Reply
#10
[size=14]தமிழன் என்ற நிலை பொய்க்காது.
இலங்கையில் மட்டுமே தமிழ் மொழியாக இல்லை.
இந்தியா, மலேசியா, சிங்கபுூர் மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது.

இது தவிரவும் ஏனைய உலக நாடுகளிலும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழைப் பயன்படுத்துகிறார்கள்.

தற்போது இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக்கப் பட்டிருப்பதால் அம் மொழி பற்றிய தேடல் ஏனைய மொழி வல்லுனர்கள் மற்றும் ஆராச்சியாளர்களுக்கு ஏற்படலாம்.

எமது மொழி வாழ வேண்டுமென்பதற்காக எமது மொழி தவிர்த்து வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடாதென்ற கருத்து எனக்கில்லை.
எமது மொழியின் தன்மை அல்லது சிறப்புகளை வேறொரு மொழியாளனுக்கு விளக்கவும் அந்த மொழியாளரின் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நமது நாட்டில் இருக்கும் இரு மொழிகளில் ஒரு மொழி தெரிந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இரு மனிதர்கள் தமது எண்ணங்களை, பிரச்சனைகளை வெளிப்படுத்தவோ கலந்துரையாடவோ துணை செய்வது மொழிதான்.

இப்போதைய இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கூட நன்றாக சிங்களத்தில் சிஙகள ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்குகிறார்கள்.
இவர்களே முன்னர் வேறு எந்த மொழியையும் படிக்க வேண்டாம் என்று சொன்னவர்கள்தான்.
சிங்கள அரசியல்வாதிகளும் இதையே செய்தார்கள்.
இப்படியான ஒரு கருத்தை முன் வைக்கும் போது சிலருக்கு பிடிக்காது.
இருந்தாலும் உண்மையான பிரச்சனைகளை அலசுவதாக இருந்தால் நாம் சொல்ல வேண்டியவற்றை சொல்லியே ஆக வேண்டும்.

எந்த ஒன்றையும் நாம் பலவந்தமாகத் திணிக்க முயன்றால் அது வெகு காலம் நின்று பிடிக்காது.

சிங்கபுூர் - மலேசிய நாடுகளில் வாழும் தமிழர்களையே இங்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அங்கும் ஆரம்ப காலத்தில் குடியேறிய (இந்திய-இலங்கை) தலை முறைக்குப் பின் உருவான 2வது தலை முறையினர் தமிழை ஆங்கிலத்திலோ அல்லது மலாயிலோதான் எழுதி வாசித்தார்கள்.

இது நம்மவர்கள் MSNனில் எழுதும் போது செய்கிறார்கள்.
ஆங்கிலத்தில் தமிழ் எழுதுகிறார்கள்.

இது ஒரேயடியாக தவறு என்று சொல்ல முடியாது.
இவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாதென்று ஒரு நிலையில்லை.
இப்படியும், ஏதோ ஒரு வகையில் தமிழ் வாழ்கிறது என்றே சொல்ல வேண்டும்.


சிங்கபுூர் - மலேசிய நாடுகளில்
ஆங்கிலத்தில் தமிழ் எழுதுவது என்பது மாறி,
காலப் போக்கில்
<b>தமிழை வாசிப்போம், தமிழை நேசிப்போம் </b>
என்றும்
<b>வீட்டில் தமிழ் பேசுவோம்</b>
என்றும் மாறியது.

சிங்கபுூர் - மலேசிய நாடுகளில் தமிழ் எழுதுவதையும் வாசிப்பதையும் உருவாக்கிய பெருமை சிங்கப்புூர்- மலேசிய தமிழ் காவலர்களையே சாரும். அவை கூடத் திணிக்கப்படவில்லை அவர்களுக்கு அது பற்றி உணர்த்தப்பட்டது.

<b>நாம் களத்தில் கூட அவற்றைச் செய்யலாம்.</b>


Mayuran Wrote:பாசல் நகரப் பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இவர்களைப் போன்ற எண்ணங்கள் எமது கடந்த கால அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் ??????????????????
Reply
#11
ÒÄò¾¢ø ¾Á¢¨Æ À¡Ð¸¡òÐ ÅÇ÷ì¸ §ÅñÎÁ¡É¡ø «¾üÌ ÀÄ ¿¡Î¸Ç¢Öõ ¯ûÇ ¾Á¢ú (ÒÄõ ¦ÀÂ÷óÐ Å¡Øõ) Áì¸û ´ýÚ ÀðÎ ´Õ §Å¨Ä¾¢ð¼ò¨¾ «ÓÄ¡ìÌÅÐ ¿øÄÐ ±ýÚ ¿¢¨É츢§Èý.
þí¸¢Ä¡ó¾¢ø ¯ûÇ ÌƒÃ¡ò¾¢ þÉ þ¨Ç»÷¸û ¾í¸û ¦Á¡Æ¢Â¢ø ¾¡ý ¦¾ÕÅ¢ø §À¡Ìõ§À¡Ð §À͸¢È¡÷¸û. «ó¾ ¬÷Åõ ±í¸û À¢û¨Ç¸ÙìÌ ²ý ÅÕž¢ø¨Ä ±É ¬Ã¡Â§ÅñÎõ. ̃áò Á¡É¢Äõ §À¡ø ±í¸û ¾¡Â¸õ ÒÄõ ¦ÀÂ÷ó¾Å÷¸§Ç¡Î ¦¾¡¼÷Ò þø¨Ä ±ýÀÐ ´Õ ¸¡Ã½õ ±ýÈ¡ø «¨¾ ®Î ¦ºö þý¦É¡Õ ¿¡ðÊø ¯ûÇ (¸É¼¡ «øÄÐ ÍÅ¢Š) ¾Á¢ú Áì¸Ç¡ø ÓÊÔÁ¡? «øÄÐ §ÅÚ ÅÆ¢ ¯ñ¼¡?
þí¸¢Ä¡ó¾¢ø ¯ûÇ ¾Á¢Æ÷¸Ç¢¼õ ´Õ Ì¨È ¯ñÎ. «ñ¨Á측Äí¸Ç¢ø ÒÄõ ¦ÀÂ÷óÐ Åó¾ þ¨Ç»÷¸û þ¹§¸ À¢ÈóÐ ÅÇ÷ó¾ þ¨Ç»÷¸¨Ç Å¢¼ §Á¡ºÁ¡¸ ¾Á¢¨ÆÔõ ¾Á¢ú ¸Ä¡îº¡Ãò¨¾Ôõ ¯¾¡º£Éõ ¦ºö¸¢È¡÷¸û ±ýÀо¡ý.
«§¾§Å¨Ç ÀÄ À¡¼º¡¨Ä¸û ¾¡ö¦Á¡Æ¢¨ÂÔõ ÀÊìÌõÀÊ °ìÌŢ츢ýÈÉ. ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢Æ÷¸û ¾Á¢úì¸øÅ¢ ±ýÈ ´Õ ÌȢ째¡¨Ç ²üÀÎò¾¢ì¦¸¡ñÎ, þÕìÌõ ź¾¢¸¨Ç ÀÂýÀÎò¾¢ «ìÌȢ째¡¨Ç ±ôÀÊ «¨¼ÂÄ¡õ ±É ÓÊ× ¦ºö§ÅñÎõ.
Reply
#12
ம்.. வேறை..?
Truth 'll prevail
Reply
#13
இருக்கும் வரும்....பொறுங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
[b]<span style='font-size:21pt;line-height:100%'>வேலைத்திட்டம் போட்டு சிங்களத்தை Ban பண்ணினமாதிரி வேலைத்திட்டம் ஒண்டு அமைச்சு எல்லா மொழிகளையும் Ban பண்ணினால் முன்னேறீடுவம்.. </span> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
Mathivathanan Wrote:ம்.. ம்.. ஒரு சொல்லு சிங்களம் தெரியாமலிருந்த குடாநாட்டு கடைக்காரருக்கு சிங்களம் அத்துப்படி.. பக்கத்திலை வந்திருந்நு ஏதொ சிங்களத்திலை சொல்லி வேண்டி சாப்பிட்டு சிகரட்டும் பத்திக்கொண்டு போறானாம்.. பிரச்சனையே இல்லையாம்.. பிறகு என்ன தமிழ் நிலைக்கும்தானே..



எங்கடை நகரத்திலேயும் சிங்களவர் இருக்கிறார்கள்.தமிழர்களுக்கும் அவர்களுக்கும உறவு நல்லநிலமையிலேயேதான் உள்ளது.இதில் எனக்கு இன்னமும் புரியாதவிடயம் என்னவென்றால்

அவர்களைக்கண்டால் எமது மக்கள் ,சிங்களம் தெரிந்த புண்ணியவான்கள் அவர்களுடன் சிங்களம் பேசி சல்லாபிப்பார்கள்.

இத்தனைக்கும் அவர்கள்(சிங்களவர்கள்) எமது மக்களுடன் இங்கு அகதி வாழ்வு வாழ்நது நன்றாக தமிழ் பேசுபவர்கள்.

இதே போல் நாம் வேறு அவர்களிடத்திலிருந்தால் அவர்கள் எமக்கு சிங்களம் தெரிந்திருந்தாலும் தமிழில் எங்களுடன் உரையாடுவார்களா?
Reply
#16
நாங்கள் புலத்தில் தமிழை வளர்ப்போம்.. கட்டி காப்போம் என்பதெல்லாம் உண்மை தான்... எங்கள் குழந்தைகள் என்ன செய்ய போகின்றார்கள் என்பது தான் கேள்வி.. இந்த தலைமுறை கிட்ட தட்ட எழுத மறந்திருக்கிறது. இனி அடுத்த தலைமுறை...????? இங்கெ மிக முக்கிய மான ஒரு சிக்கல்.. புலத்தில் குழந்தைகள் எந்த மொழியில் சிந்திக்கின்றார்கள் என்பதே.. (யாராவது ஆர்வம் இருந்தால் உங்கள் குழந்தைகளிடம் கேட்டு பாருங்கள்.. எந்த மொழியில் அவர்கள் யோசிக்கிறார்கள்.. என்று)

ஒருவன் தான் சிந்திக்கும் மொழியிலேயே அதிக ஆளுமையை கைக்கொள்கின்றான். சிந்திக்கின்ற மொழியை, பிறந்தது முதல் அவன் அனுபவிக்கின்ற சூழல் தான் தீர்மானிக்கின்றது. ஒரு வேளை உங்கள் குழந்தைகள் டொச்சிலோ ஆங்கிலத்திலேயோ சிந்தித்து உங்களுடன் தமிழில் உரையாடலாம். அதாவது உங்களுடன் மொழிபெயர்க்கலாம். தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி நெருடலாயிருக்குமோ அப்படியே இன்னொரு மொழியில் சிந்தித்து தமிழில் உரையாடுவதையும் சிரமமாக உணர்ந்து நேரடியாக தாம் சிந்திக்கும் மொழியிலேயே உரையாடுவதை புலத்தின் குழந்தைகள் விரும்பக் கூடும். இதனைக்கொண்டு அவர்கள் தமிழை புறக்கணிக்கிறார்கள்.. மறந்து விட்டார்கள்.. என்ற குற்றச் சாட்டுக்களை குழந்தைகள் மேல் செலுத்த முடியாது. உண்மையில் அவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள்..
பொதுவாக தவறுகள் நிகழும் பொழுது எங்காவது பிழை இருக்கும்.. என்னைக்கேட்டால்.. எங்குமே பிழை நிகழாமமல் இப்படியான ஒரு தவறு நிகழப்போகின்றதோ என எண்ண தோன்றுகிறது. பெற்றொர்களிலும் சரி.. பிள்ளைகளிலும் சரி.. யாரிலுமே பிழை இருக்கப் போவதில்லை.. ஆனால்.. எதிர்காலத்தில்.. அதாவது உங்களின் காலம் புலத்தில் முடிந்த பிறகு (ஒரு வேளை உங்கள் பேரக் குழந்தைக்கும் நீங்கள் தமிழ் சொல்லி கொடுக்க கூடும்..) பிறக்க போகின்ற தமிழ் குழந்தைகள் தமிழ் மறந்தவர்களாகவே இருக்க போகிறார்களோ...?

ஒரு சில நம்பிக்கைகளும் இல்லாமல் இல்லை.. உதாரணத்திற்கு இது என் இன மொழி.. இது என் தாய் மொழி என்ற உண்மைகளுக்கு அப்பால்.. இந்த மொழியின் தேவை என்ன? என்று அவர்கள் சிந்திக்க கூடும்.. தாயகத்தில் நாங்கள் தமிழ் படித்ததை நினைத்த பாருங்கள்.. பாடசாலையில் கல்வி தமிழில் இருந்தது.. பாPட்சைக்கு தமிழில் எழுத வேண்டியிருந்தது.. இப்படியான தேவைகளினூடு நாங்கள் தமிழ் படித்தோம்.. அவ்வாறான தேவைகளை புலத்தில் உண்டாக்கினால்.. தமிழ் படித்தால் பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி இலகு.. இவ்வாறான தேவைகளை உண்டாக்கினால்.. அவர்களும் ஒரு வேளை தமிழ் படிக்க கூடும்..

..
Reply
#17
Mathivathanan Wrote:ம்.. வேறை..?

§Å¨È ±ýÉ À¡Õí§¸¡, ¿¡í¸û ¯ó¾ ¦º¡ð¨¼¨Â ¿¢ôÀ¡ð¼§ÅÏõ. ÁüÈÅÛìÌõ ¦º¡È¢ì¸¨¾ ¸¨¾ì¸ ¦¾Ã¢Ôõ ±ñÎõ ¿¢¨É츧ÅÏõ.
±¾¡ÅÐ ¯ÕôÀÊ¡ö §Â¡º¨É ¦º¡øÄò¦¾Ã¢Â¡ð¼¡ø Å¡¨Âô ¦À¡ò¾¢ì¦¸¡ñÎ ¸ó¾÷Á¼òÐ ¾Åº¢¸û Á¡¾¢Ã¢, À¢ýÀì¸ Áñ¨½ ¾ðÊô§À¡ðÎ ±ØõÀ¢ §À¡¼§ÅÏõ ¸Çò¨¾ Å¢ðÎðÎ.
Reply
#18
அண்மையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது..! அப்பொழுது நான் தமிழில் உரையாடிப்பார்த்தேன்... என்னுடன் ஆங்கிலம் கலந்த தமிழில் பிள்ளைகள் உரையாடினார்கள்... ஆனால் தங்களுக்குள் கதைக்கும் போது பிரன்ச்சில் கதைத்துக்கொண்டார்கள்.....!
கேள்விகள் கேட்ட போது பிரன்சில் கதைத்து ஆலோசித்து தமிழில் எனக்கு கூறுகிறார்கள்....!
இவர்களில் நன்றாக தமிழி பேசியது 10 வயது சிறுமி மட்டுமே... அவர் பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்.. சரளாமாக தமிழிலும் எழுதுகிறார்.. மற்றவர்கள் யாவரும் பெரியவர்கள்.. அவர்களிக்கும் ஒரளவு வாசிக்க தெரியுமாம் எழுதத் தெரியாதாம்... காரணம் கேட்டேன்.. அவர்கள் சின்ன வயதில் இங்கு வந்ததனால்.. தாம் முதலில் பிரன்சை தான் கற்கதூண்டியதாகவும்.. அதனால் அவர்கள் தமிழிலை கற்கும் சந்தர்ப்பம் இல்லை இந்த சிறுமிக்கு எனினும் நல்ல தமிழ் அறிவு வேண்டும் என்டு தமிழை கற்பிக்கிறோம் என்று கூறினார் தாய்..... என்ன செய்வது..
இந்த பிள்ளைக்கென்றாலும் தமிழை நன்றாக கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார்களே என்று மகிழ்ந்தேன்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
ம்.. வேறை..?
Truth 'll prevail
Reply
#20
¯ñ¨Á¾¡ý ºÂó¾ý. þíÌ À¢Èó¾ À¢û¨Ç¸û ÁðÎÁøÄ ¾¡Â¸ò¾¢ø À¢ÈóÐ þíÌ ÅÇÕõ À¢û¨Ç¸û ܼ ¾Á¢Æ¢ø º¢ó¾¢ì¸ Á¡ð¼¡÷¸û. ¸¡Ã½õ «Å÷¸Ç¢ý À¢Ã¾¡É ¸øÅ¢ À¢È¦Á¡Æ¢Â¢ø ±ýÀо¡ý. ÀÄàÃõ §À¡Å¡§Éý. ¬í¸¢Äò¾¢ø ¸½ì¸¢Âø ÀÊò¾Åâ¼õ (ACCA, CIMA) ¾Á¢Æ¢ø ÀíÌîºó¨¾¨ÂôÀüÈ¢ §¸ð¼¡ø 85% ¬í¸¢Ä ¦º¡ü¸û ¾¡ý À¡Å¢ôÀ¡÷.
þÐ ¾Å¢÷ì¸ ÓÊ¡¾Ð. ±ý ¦º¡ó¾ «ÛÀÅò¾¢ø ¸ñ¼Ð þо¡ý. ¾Á¢¨Æ À¢û¨Ç¸ÙìÌ ÀÊôÀ¢ì¸ §ÅñÎÁ¡É¡ø «¾¢ø ¬÷Åõ ÅÃôÀñ½ §ÅñÎõ. «¾¢ø ¬÷Åõ ÅçÅñÎÁ¡É¡ø, À¢û¨Ç¸ÙìÌ ¬÷Åõ ¯ûǨоÁ¢Æ¢ø þÕ츧ÅñÎõ. ¯¾¡Ã½õ: ¾Á¢Æ¢ø ¸¨¾¸û, ţʧ¡ì¸û (º¢É¢Á¡ «øÄ), ¸¡ðÞý¸û.
¿¡í¸û þ¨¾ »¡À¸ò¾¢ø ¨Åò¾¢Õ󾡸 ºÃ¢. ӾĢø ´Õ ¦Á¡Æ¢ Òâ§ÅñÎõ. À¢ÈÌ «¨¾ §ÀºÓÂħÅñÎõ. «¾üÌôÀ¢ÈÌ «¾ý ±ØòÐì¸û ¦¾Ã¢Â§ÅñÎõ. ¾Á¢Æ¢ø þÐ ´Õ Ó츢ÂÁ¡É¦¾¡ýÚ. ¯Â¢¦ÃØòÐõ ¦Áö¦ÂØòÐõ §º÷óо¡ý ÁüÈ ±ØòÐì¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ. þ¨¾ ´Õ Å¢¨Ç¡𼡸§Å¡ «øÄÐ ºÅ¡Ä¡¸§Å¡ À¢û¨Ç¸¨Ç§Â ¸ñÎÀ¢Êì¸ ¦ºöÂÄ¡õ. (þÐ ¸üÀ¢ôÀÅÕìÌ ´Õ ºÅ¡ø.)
«¾ý À¢È̾¡ý ¾Á¢¨Æ Å¡º¢ì¸ ÀÆì¸Ä¡õ. þÐ ±ý «ÛÀÅõ. þо¡ý ºÃ¢ ±ýÚ ¿¡ý ¦º¡øÄÅÃÅ¢ø¨Ä. þó¾ ÓÂüº¢ Íã¸Á¡¸ ¿¼ìÌõ ±ýÚõ ¦º¡øÄÅ¢ø¨Ä. ²¦ÉÉ¢ø þÐ Íã¸Á¡¸ ¿¼ì¸§Å¢ø¨Ä. þíÌ ¿¡ý ¦º¡øÅÐ ±ýɦÅýÈ¡ø ´Õ ¾Á¢§Æ §Àº¡¾ ´Õ ¿¡ðÊø þÕóЦ¸¡ñÎ, Å¡ú쨸ìÌ ¾Á¢§Æ §¾¨Å¢ø¨Ä ±ýÈ ¿¢¨Ä¢ø ¿¡õ ¾Á¢¨Æ «Îò¾Îò¾ ºó¾¾¢ìÌ ÀÃôÀ Өɸ¢§È¡õ. þÐ ¾Á¢Æ¢É¡ø «Îò¾Îò¾ ºó¾¾¢ìÌ Á¢¸ Á¢¸ ÀÂý ¯ñÎ ±ýÈ¡ø ¾¡ý ¾¡É¡¸ ¿¼ìÌõ. þøÄ¡Å¢Êø ¾Á¢ú ÒÌò¾ôÀ¼ §ÅñÎõ. ÒÌò¾ôÀξø º¡ò¾¢ÂôÀ¼¡Ð. ¬¸§Å ¾Á¢Æ¢ý ÀÂý¸û «¾¢¸Ã¢ì¸ôÀ¼§ÅñÎõ. Àø¸¨Äì¸Æ¸ «ÛÁ¾¢ ´Õ ÀÂý ¾¡ý. ¬É¡ø «Ð ÁðÎõ §À¡¾¡Ð. «¾ü¸¡¸ò¾¡ý Àø§ÅÚ ¿¡Î¸Ç¢ø ¯ûÇ ÒÄõ ¦ÀÂ÷ ¾Á¢Æ÷¸û ´ýÚÀðÎ “¾Á¢Æ¢ý ÀÂý¸¨Ç” ¬Ã¡öóÐ «¾¢¸Ã¢ìÌõ ÅÆ¢Å¨¸¸¨Ç ²üÀÎò¾§ÅñÎõ ±ýÀÐ ±ý ¸ÕòÐ.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)