Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர் விளையாட்டு
#1
<b>நண்பர்களே! இங்கே நான் சில புதிர்களை தொடர்ந்து கொடுக்க இருக்கிறேன். நான் கொடுக்கும் புதிர்கள் இங்கே ஏற்கனவே வந்திருந்தால் தெரியப்படுத்தவும், நான் அப்புறப்படுத்துகிறேன், இல்லை புதியவர்கள் பதில் சொல்லட்டும் என்று விட்டாலும் நல்லதே.</b>

<b>புதிர் எண்: 1</b>

ஒரு ஆப்பிள் தோட்டக்காரர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து பழுத்த ஆப்பிள்களை பறித்தார். மொத்தம் 1000 ஆப்பிள்கள் கிடைத்தது, ஆனால் அவர்களிடம் 10 கூடைகள் மட்டுமே இருந்தன. விரைவில் ஆப்பிள்கள் வாங்க ஆட்கள் வருவார்கள். 1 முதல் 1000 வரை ஆப்பிள்கள் கேட்டு வாங்குவார்கள், அப்படி கேட்கும் போது அவைகளை எண்ணிக் கொண்டு கொடுக்க நேரம் கிடையாது. உடனே எடுத்துக் கொடுக்க அங்கே இருந்த 10 கூடைகளை மட்டுமே உபயோகித்து எந்த இலகத்தில் (1 முதல் 1000 வரை) ஆப்பிள்கள் கேட்டாலும் உடனே கொடுக்க வேண்டும். தன்னுடைய புத்திசாலி மகனை அழைத்து 10 கூடைகள் மட்டுமே உபயோகித்து கேட்ட எண்களில் ஆப்பிள்களை உடனே கொடுக்க சொன்னார். அவரது மகனும் அங்கே இருந்த கூடைகளில் ஆயிரத்தையும் பிரித்து போட்டு, எந்த எண்ணில் கேட்டாலும் தன்னால் உடனே கொடுக்க முடியும் என்றார்.

நண்பர்களே! நம்ம தோழன் எந்த எண்ணிக்கையில் 10 கூடையில் ஆப்பிள்களை போட்டு வைத்தார்.
<b>
</b>
Reply
#2
முதல் வருபவருக்கு கொடுக்கலாம்
இரண்டாவதாக வருபவருக்கு எப்படி கொடுப்பது?
Reply
#3
1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 489
Reply
#4
வாங்குபவர்கள் 1000 க்குள் தான் கேட்க வேண்டும் என நினைக்கிறேன். விற்றபின் மீண்டும் கூடைகளை நிரப்ப அப்பிள்கள் தோட்டத்தில் இருந்தால்தான் மற்றையோருக்கும் விற்கலாம்.

விடை மிகவும் சுலபமானது. கணணி எப்படி வேலை செய்கிறது என்று அறிந்தவர்கள் உடனே சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#5
Ilango Wrote:1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 489

நண்பர் இளங்கோ மிகச் சரியான விடையை கொடுத்து விட்டார்கள். பாராட்டுக்கள்.
<b>
</b>
Reply
#6
<b>உங்கள் அடுத்த புதிர் எப்போது அண்ணா?</b>
----------
Reply
#7
[quote=vennila]<b>உங்கள் அடுத்த புதிர் எப்போது அண்ணா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
Reply
#8
[quote=kavithan][quote=vennila]<b>உங்கள் அடுத்த புதிர் எப்போது அண்ணா?</b>

<b>ஏன் மாமா சிரிக்கிறீர்கள்?</b> :roll: Confusedhock:
----------
Reply
#9
பிந்திவிட்டீர்களோ என்று.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
<b>புதிர் எண் = 2</b>


<b>ஒரு அரசர் தனது அரண்மனை ஓவியர்களை அழைத்தார்.
அரசரை தத்ரூபமாக வரையும் ஓவியனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.அந்த அரசருக்கு ஒரு கண் குருடு.
ஒரு ஓவியர் மிகவும் தத்ரூபமாக அரசரின் முகத்தை வரைந்தார். அரசரின் ஒரு கண் குருடாக இருப்பதையும் காட்டியிருந்தார்.
பார்ப்பவர்கள் அனைவருக்கும் அரசரையே நேரில் பார்ப்பதுபோல் அமைந்திருந்தது அந்த ஓவியம்.அடடா...இப்படி அழகான அரசருக்கு ஒரு கண் குருடாக இருக்கிறதே என்று பச்சாதாப் பட்டார்கள்.

ஓவியம் முடிந்ததும் அரசர் அங்கே வந்தார்.சற்றுநேரம் ஓவியத்தை உற்றுப் பார்த்தார்.பிறகு கோபமுடன் ஓவியனைப் பார்த்து, "எனக்கு ஒரு கண் குருடு என்பதை மக்களுக்கு பறை சாற்றுகிறாயா?உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ இப்படி என்னை வரைந்திருப்பாய் " என்று சினந்தார்.அந்த ஓவியனுக்கு சிறைத் தண்டனையும் அளித்தார்.

இதையெல்லாம் கண்ட அடுத்த ஓவியர், அரசருக்கு இரண்டு கண்களும் தெரிவதுபோல் மாற்றி வரைந்தால், தனக்கு கட்டாயம் பரிசு கொடுப்பார் என்று நினைத்து, அரசருக்கு இரு கண்களும் ஒளிவீசுவதுபோல் ஓவியத்தை அமைத்தான்.

அரசர் வந்து அந்த ஓவியத்தையும் பார்த்தார். " ஓவியரே.....ஓவியத்தை தத்ரூபமாக வரையவேண்டும் என்பதுதான் நான் இட்டிருந்த கட்டளை. நீ என்மேல் பச்சாதாபப் பட்டு, இப்படி வரைந்து என்னை அவமானப் படுத்திவிட்டாய்" என்று கூறி அவனுக்கு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தார்.
"எப்படி வரைந்தாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து விடுகிறாரே அரசர்" என்று குழம்பிப் போனார்கள் மற்ற ஓவியர்கள்.

ஒரு ஓவியன் புத்திசாலி....சிந்தனை செய்து, அரசரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டு வந்தான். அதைக் கண்ட அரசர் மிகவும் மகிழ்ந்துவிட்டார். அந்த ஓவியருக்கு, தான் அறிவித்திருந்த பரிசுத் தொகையைவிட இரண்டு பங்கு அதிகமான பொற்காசுகளையும், மேலும் உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்.

நண்பர்களே நம்ம புத்திசாலி ஓவியருக்கு உதவுங்களேன், தண்டனை பெறாமல் பரிசு பெற்றது எப்படி என்று சொல்லுங்களேன்.</b>
<b>
</b>
Reply
#11
நான் நினைக்கிறேன் அவன் அரசருக்கு கூலிங் கிளாஸ் போட்டு வரைந்திருப்பான் என்று..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
எனக்கு தெரியும்... குருடான கண்ணை மூடி அரசர்.. அம்பு வில்லை வைத்து குறி வைப்பது போல் அந்த ஒவியன் வரைந்தார்.. அப்பொழுது குருட்டு கண் தெரியாது தானே..?
என்ன பரசோதி அண்ணா சரியா...?

எங்கையோ கேட்ட ஞாபகம்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
Quote:நான் நினைக்கிறேன் அவன் அரசருக்கு கூலிங் கிளாஸ் போட்டு வரைந்திருப்பான் என்று.....
_________________
=========

நீங்கள் என்டால் போட்டிருப'பீங்கள் தம்பி....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
tamilini Wrote:எனக்கு தெரியும்... குருடான கண்ணை மூடி அரசர்.. அம்பு வில்லை வைத்து குறி வைப்பது போல் அந்த ஒவியன் வரைந்தார்.. அப்பொழுது குருட்டு கண் தெரியாது தானே..?
என்ன பரசோதி அண்ணா சரியா...?

எங்கையோ கேட்ட ஞாபகம்....!

அருமை அருமை சகோதரி.

சொல்லி முடித்து திரும்பி பார்க்கும் முன்பு சரியான விடை வந்து விட்டது, உங்கள் விடைக்கு முன்பு என் குதிரையின் வேகம் மட்டு தான்.

உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சலாம்.

ஒருவேளை பழைய புதிரையே போட்டால் சொல்லுங்கள்.
<b>
</b>
Reply
#15
kavithan Wrote:நான் நினைக்கிறேன் அவன் அரசருக்கு கூலிங் கிளாஸ் போட்டு வரைந்திருப்பான் என்று..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் குறும்பை ரசித்தேன் நண்பரே!

நல்ல வேளை அரசர் கண்ணைக் கட்டி அரசியை ஓடி பிடிக்கும் விளையாட்டை ஓவியன் வரைந்தான் என்று சொல்லவில்லை, அப்படி சொல்லியிருந்தால் உங்கள் பதிலுக்கு நான் சரியான விடை என்றே சொல்லியிருக்க வேண்டியிருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தொடர்ந்து உங்கள் குறும்பை கொடுங்க. ரசிக்க காத்திருக்கிறேன். :wink:
<b>
</b>
Reply
#16
நண்பர்களே அப்படியே மூளைக்கு வேலை பகுதிக்கு செல்லுங்களேன்.
<b>
</b>
Reply
#17
Quote:சொல்லி முடித்து திரும்பி பார்க்கும் முன்பு சரியான விடை வந்து விட்டது, உங்கள் விடைக்கு முன்பு என் குதிரையின் வேகம் மட்டு தான்.

இன்று தான் யாரும் பார்க்க முதல் நான் பார்த்தேன் பதிலும் தெரிந்திருந்தது.... பழையவையோ புதியவையோ போடுங்கள் முடிந்தால் சொல்லுறம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
நீங்களும் நல்ல குறும்பாகவே கதைக்கிறீர்கள் அண்ணா.... தமிழினி அக்கா வாழ்த்துக்கள்... உங்கள் குறும்புக்கும் நன்றிகள்
[b][size=18]
Reply
#19
அண்ணா மூளையே இல்லை பேந்து எப்படி அங்கு விடை சொல்வது ... சரி முயற்சி செய்கிறேன்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
Quote:அண்ணா மூளையே இல்லை பேந்து எப்படி அங்கு விடை சொல்வது ... சரி முயற்சி செய்கிறேன்......
நான் சொல்ல நினைத்தேன்...! தம்பி முந்திவிட்டீங்கள்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)