Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நட்சத்திரங்கள் என் சொந்தம்
#1
எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறகு யாழ்ப்பக்கம்வாறன்.எல்லாரும் நலமா?என்னை மறக்கேல்ல தானே:-)

[b]<span style='color:darkblue'>நட்சத்திரங்கள் என் சொந்தம்

<img src='http://img508.imageshack.us/img508/7311/star6ut.jpg' border='0' alt='user posted image'>


[size=15]நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

\"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே..\"

\"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்.\"

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.
விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது.கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமா நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன்.பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரயி கதையெல்லாம் கதைப்பினம்.அம்மா பழங்களரிந்து தருவா கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து "அப்பிடியென்டாலென்ன ..ஏன் அப்பிடிச் சொன்னவை" இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன்.என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா.அங்க பாரு அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்..விடிஞ்சாப்பிறகும் இந்த நட்சத்திரம் இருக்கும்...அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு.இங்க பார் விருச்சிகம்..இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும்.தாங்கள் நினச்சததான் செய்வினம் சொல்லுவினம்.ஒரு இரண்டு வயசுப்பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக்கொடுத்திட்டு அடுத்த நாள் அச்சாக்குட்டியெல்லா ஒன்று இரண்டு சொல்லிக்காட்டுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ."ஆ.. ஆ.. ஆ.. "என்று காது கேக்காத மாதரி இருப்பினம்...வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்..ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.."ஒன்ரு ரன்று மூன்ரு..".

அதப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம்.பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா.நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.

எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில் கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும்.அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில்.முன்னால ஒரு பலாமரம்.அங்கதான் ஊராக்ள் இரவு இருந்து விடுப்புக் கதைக்கிறது.நான் அக்கா சுபாசினி சுஜி சிந்து கவி யனா நிமல் டொம்மா இப்பிடி நிறைய பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும்.அப்ப பரா அன்ரி எனக்கு காட்டி விட்ட நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன்.பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம் சின்ன குறூப் ஒருபக்ம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள்.சண்டை நேரத்தில அந்த பங்கர் தான் எங்களுக்குப் பள்ளிங்கூடம்.விளையாட்டுத்திடல எல்லாம்.திருவலகை திரிபோசா மா சீனி..ஹி ஹி அதான் சாப்பாடு.அங்க யாரும் செல் விழுந்து சாகேல...தப்பித்தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்கு கீழ தான் பங்கர்.பங்கருக்குப்போற வழி வீட்டிலதான் தொடங்கும்.வெளில நின்று பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது.அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை.புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போகுது.செல் கூவிக்கொண்டு போகுது.

அடுத்த நாள் ஒரே அமைதி.பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு.வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம்.ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது.நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை..இந்தியன் ஆமி வந்தநேரம் கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை.நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி.ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி.போறேல்ல என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம்.சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு.இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல்.இப்பிடி எல்;லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம்.எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்ப கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போறம்.ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

"அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல."

"ய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா"

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.

அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்.து எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள்; பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></span>
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
எழுத்துப்பிழைகள் நிறுத்தக்குறிகளைத் திருத்திந்தந்த சோழியன் அண்ணாக்கு நன்றி.இதைக்கதையா என்று கேட்பவர்கள் சோழியன் அண்ணாவிடம் கேட்கவும்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவர்தான் கதைப்பகுதியில் பதியச்சொன்னவர்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மண்வாசனை கதை - கவிதை நடையில் ஒரு விபரணம்-!

எல்லாராலயும்-இலகுவில்- முடியாத-
உங்க எழுத்து வீச்சு மேலும்-தொடரட்டும் -சினேகிதி-! 8)
-!
!
Reply
#4
நன்றி வர்ணன்!இதுதான் இலகுவான வேலை வர்ணன்....கதைக்கிற மாதிரியே சொல்லுறது...சுத்தத்தமிழ்ல எழுதப்போனால் கடினமா இருக்கு.நமக்கெல்லாம் யாராவது பக்கத்தில இருந்து தலையில குட்டுப்போட்டு வசனத்தில கருத்துப்பிழையிருக்கு என்று சொல்லி திருத்த வேணும்..அப்பிடி திருத்தினாத்தான் கட்டுரை எழுத வரும் இல்லையோ இப்பிடி கதைக்கிறமாதிரிதான் எழுத வரும்.:-) எழுத்தென்றியள் வீச்சென்றியள்...புல்லரிக்குது.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
மண்வாசனைக் கதையினைத் தந்த சினேகிதிக்கும், கதையினை மேலும் பொலிவுறச் செய்த சோழியனுக்கும் வாழ்த்துக்கள்.
Reply
#6
நன்றி சண்முகியக்கா....சோழியன் அண்ணா...சண்முகியக்கா ஏதோ சொல்றா கேட்டதா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
வணக்கம் சினேகிதி

நல்ல பதிவு, நட்சத்திரங்களோட கூடிய சீக்கிரம் நீங்கள் கதைக்க என்ர வாழ்த்துக்கள்:-)
Reply
#8
வித்தியாசமாய், நன்றாய் இருக்கு, நட்சத்திரங்களுடன் மட்டும் நீங்கள் நின்று விட்டது தான் கவலை. அந்த நட்சத்திரங்களுடன் கூடவே நிலாவில் ஒளவை பாட்டியுட் குழுந்தையும் இருப்பதாய் கூட சின்னனாய் இருக்குமு; போது யாரோ சொன்ன ஞாபகம். வாழ்ககையின் பருவத்தே நடைந்த சம்பவங்கள் மீண்டுவருகையில் மகிழ்வும் ஒரு பக்கம் அந்த நாள் மீளாதா என்ற ஏக்கமும் மறுபக்கம் சோகமும் ஒன்றித்து போகும். அந்த உணர்வுகளை நீங்கள் உணர்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எல்லோர் நினைவுகளையும் மீட்டு வந்த உங்கள் எழுத்துக்கள் நிதர்சனத்தை சொல்லி நிற்க்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தொடர்ந்த இதை போன்ற ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம் ...

எழுத்து பிழை திருத்தப்பட்டது (நி+ன்)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நன்றி கானாபிரபா.....கூடிய சீக்கிரம் போய்க்தைக்கவேணும்..:-) உங்க சார்பா நட்சத்திரங்களிடம் ஏதாவது சொல்லணுமா.
உங்கட இரண்டாம் வகுப்பு சுக்குப்புக்கு ரெயின் வாசிக்கும்போது யோசித்தேன் எனக்கு அப்பிடி ஒன்றும் ஞாபகம் இல்லையே என்று....ஆனால் நாங்கள் வில்லங்கமா ஞாபகப்படுத்த முயற்சி செய்யும்போது வராத ஞாபகங்கள் பிறிதொரு சந்தர்ப்த்தில் ஞாபகம் வருவதுண்டில்லையா:-)
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
யாரு நிதர்சன் வித்தியா? ம் ஒளவை பாட்டியா?? நான் ஒரு பாட்டி என்றுதான் கேள்விப்பட்டனான்....அம்மா எனக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டி விடேல்லயாம்..அதான் நானும் பாட்டியை மறந்திட்டன்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பாட்டிக்கு ஒன்று நீர் எழுதும் நிதர்சன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ஸ்ணேகிதி உங்களுடைய ஆக்கம் அருமை. சிறுவயது நினைவுகளை மனதுக்குள்ளே, மீட்டிப்பார்ப்பதும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் கூட ஓர் இனிமையான அனுபவம்தான். அதிலும் தாய் மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட நாம் கடல் கடந்து வாழ்ந்தலும், நம் கனவுகளினதும் நினைவுகளினதும் வேர்கள், தயகதின் ஈர நினைவுகளை நோக்கிப்பாய்வதனால்த்தான் நம், உயிர்மையில் பசுமை இன்னும் மீதம் இருக்கின்றது.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply
#12
வணக்கம் ஈழநேசன்...மனதுக்குள்ளே மீட்டிப்பார்த்தும் சந்தர்ப்பம் அமையாது எழுதப்படாமல் போன நினைவுகள் பல..
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
Quote:ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ?
நல்லாக இருக்கு கதை. ம்ம்ம் சீக்கிரம் போய் நட்சத்திரங்களோடு கதைப்பீங்க. கவலை வேணாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#14
ஓம் வெண்ணிலா அப்பிடியே உங்க வீட்டுக்கும் வரலாமென்று இருக்கிறன்....என்ன மாதிரி வசதி?? பருத்தித்துறை கடற்கரைக்குப்போவமா நட்சத்திரங்களோட கதைக்க?
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
Snegethy Wrote:ஓம் வெண்ணிலா அப்பிடியே உங்க வீட்டுக்கும் வரலாமென்று இருக்கிறன்....என்ன மாதிரி வசதி?? பருத்தித்துறை கடற்கரைக்குப்போவமா நட்சத்திரங்களோட கதைக்க?


அதுக்கென்ன. வாங்கோ வாங்கோ தாராளமாக போகலாம். நட்சத்திரங்களோடு கதைக்கும் முதல் நிலாவோடு கதைக்க ஆசைப்படுறியள். ம்ம் கதைச்சிட்டா போச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#16
நட்சத்திரங்கள் என் சொந்தம்.
நல்ல தலைப்பு
சுப்பர்.

யாரையோ ஒரு பெடியன பிடிச்சு டேய் பசுவை பற்றி ஒரு கட்டுரை எழுதடா எண்டு சொன்னாங்களாம்.
பெடி பனை மரத்தைப் பற்றித்தான் கேப்பாங்கள் எண்டு பனை மரத்தை பற்றி கரைச்சு குடிச்சிட்டு போனாராம்.
பெடிக்கு பசுவை பற்றி எழுத சொன்ன உடன வாழ்க்கை வெறுத்துப் போச்சு.
எண்டாலும் ஒரு கை பார்க்கிறன் எண்டு போட்டு பனையை பற்றி எழுதி தள்ளிட்டு கடைசி வரியா பசுவைக் கொண்டு போய் பனையிலை கட்டுவினம் எண்டு எழுதிப் போட்டு வந்தாராம்.

இப்ப நான் என்ன சொல்ல வாறன் எண்டா . . .

சாச் . . சா . . .
நான் ஒண்டும் சொல்லல.

கதை சுப்பரா இருக்கு.

யாரை பார்த்தாலும் நிலா, நட்சத்திரம் எண்டு போறாங்கள்.
யாராவது உந்த வால் நட்சத்திரத்தை பற்றியும் கொஞ்சம் எழுதுங்கப்பா.
.. . .
Reply
#17
சி நேகிதி ,
நல்ல கற்பனை ,எங்கு சென்றாலும் மாறாது தொடர்பவை நட்சத்திரங்கள்.பழய நினைவுகளை அதனாலேயே அவை தூண்டுகின்றன.உங்களைச் சூழ உள்ள மனிதர்,சூழல் மாறலாம், ஆனால் மாறது இருப்பவை உங்கள் நினைவுகளும்
வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களும்,சூரியனும், நிலாவுமே.அதனால் தான் என்னவோ பலரது நினைவுகளை மீட்கும் தூண்டுகோல்களாக இவை கதை,கவிதைகளில் வந்து போகின்றன.
Reply
#18
எங்க கடைசி வரியை காணேல்ல.
பசுவை கொண்டு போய் பனை மரத்தில கட்டுவினம்.
முற்றும்.

நட்சத்திரங்கள் என் சொந்தம்.
தலைப்பு நல்லா இருக்கு.
அப்ப கதை?
அதுவும் நல்லாத்தான் இருக்கு.
அப்ப எல்லாம் நல்லா இருக்கா?
ஓம்.

ஐயோ . . .
முடிவா என்னதான் சொல்லுறீங்கள்?

பலா மரத்தில ஏறி பலாப்பழம்தான் புடுங்குவினம்.
பப்பாளிப் பழமா புடுங்குவினம்?

டேய் . . .
என்ன சொல்லுறதெண்டாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கடா.

இன்னும் என்னத்தை சொல்லக் கிடக்கு?

யாராச்சும் வால் நட்சத்திரம் பார்த்திருக்கிறீங்களா?

பார்த்திருக்க மாட்டீங்கள்.

வாலுகள் எல்லாம் யாழ் களத்தில இருக்கும்போது வானத்தில என்னதான் இருக்கும்.
.. . .
Reply
#19
அட்டென்சன் டு உவர் மோகன் மற்றும் யாழ் களத்தில் பொல்லு தடிகளோட திரியிற காங் மெம்பேர்ஸ்சுக்கு.

ஒரு மனுசன் கஸ்டப்பட்டு டொக்கு டொக்கு எண்டு உந்த கொம்பியூட்டர்ல டைப் பண்ணிட்டு சப்மிட் எண்டு அமத்தினா . .
அது வந்து சொல்லுது உது எல்லாம் சப்மிட் பண்ண முடியாது வேற ஏதும் உருப்படியான வேலை இருந்தா அத போய் செய் எண்டு.

நாசமாப் போன எண்ட கொம்பீட்டர்ல தான் ஏதோ பிழை எண்டு திரும்பி வந்து டொக்கு டொக்க அது போகுது.

எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியல.
.. . .
Reply
#20
ம்ம்..நண்பி..அழகான கதை..மறுபடியும் உங்கள் பாணியில்..நட்சத்திரங்களை பற்றி..நாரதர் சொன்னது போல..எப்போதுமே மாறாதவைகளில் ஒன்று நட்சத்திரம்! சில வேளைகளில் நேரம் போவதே தெரியாது..பார்த்துக்கொண்டிருக்க.
ஊரில் 98ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நட்சத்திரங்களை காட்டவும் அதைப்பற்றி விடயங்கள் சொல்லவும் சிலர் பள்ளி பள்ளியாக போய் கொண்டு இருந்தார்கள்...அப்போது எங்கட பள்ளிக்கும் வந்தார்கள்..அன்றைக்கு தான் முதன் முதலாக..இரவில் பள்ளிக்கு போனோம். படிக்கும் கிளாஸ் ரூம்களில் படுத்தோம். வித்யாசமாக இருந்தது. உணவு, படுக்க ஏதும், எடுத்து வர வேண்டும்..மற்றையதெல்லாம் ஒழுங்கு செய்திருந்தார்கள்..இரவு ஒலி பெருக்கி மூலம்..ஒவ்வொரு பிரிவுகளாக கூப்பிட்டு காட்டினார்கள்..அது அந்த நட்சத்திரங்கள் நேரம் செல்ல செல்ல இடம் மாறுமாமே..அப்போ ஒவ்வொன்றாக பாடசாலை மைதானத்துக்கு மேல..தெரிய கூடியதாக வர வர அழைத்து காட்டினார்கள். அதை மறக்கவே ஏலாது. பள்ளி நண்பர்களோடு இரவு நித்திரையே இல்லை..பேய் அது இது என்று ஆளை ஆள் பயப்பிடுத்தி..விடுவோமா..நம்ம குணத்தை காட்ட வேணுமில்லையா..சோ, அதையும் நாங்கள் செய்தோம். காலையில் வருமே..விடி வேள்ளி அதுவும் ஆறு மணிக்கு பார்த்து விட்டு விடிய பள்ளி முடிந்து வீட்ட போனோம். என்றைக்குமே நான் மறக்காத நாள் அது. இன்றைக்கும் நட்சத்திரங்களை பார்த்தால்..அந்த ஞாபகம் வரும். இப்போ உங்கள் கதையை வாசித்ததும் வந்திச்சு சொன்னேன்..தவறாக எண்ணாதீர்கள்.. :roll:
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)