Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காசி ஆனந்தனும் அப்பையா அண்ணையும்
#1
ஈழத்து தமிழ்மக்கள் நன்கு அறிந்த பெயர் காசி ஆனந்தன். கவிஞர். கவிதைகள் என்றால் எமது மக்கள் புலலரித்து போவார்கள். எமது பண்டைய நுல்கள் என்று பார்த்தால் கூட கவிஞர்களினதும் புலவர்களினதும் நுல்களைத்தான் காண்கின்றோம். புலவர்களின் புலமையும் கவிதைதான்.

அப்பையா அண்ணை விடுதலைப்புலிகளின் மூத்த பொறியியலாளர். கண்ணிவெடி முதல் விமானம் வரை வடிவமைத்த விஞ்ஞானி. இவரைப்போல எத்தனையோ விஞ்ஞானிகள் தமிழர் மத்தியில் பண்டைக்காலத்தில் வாழ்ந்திருப்பர். ஆனால் அவர்களை நாம் போற்றவும் இல்லை, அவர்கள் வரலாற்றையோ நுல்களையோ பேணவும் இல்லை.

அதைப்போலவே இப்பவும் காசி ஆனந்தன். அப்பையா அண்ணைக்கு இடமில்லை.

தெரிந்த விஞ்ஞானிகள் என்று கேட்டால் ஐசக் நியுூட்டனையும் ஐயன்ஸ்ரைனையும் தான் சொல்கிறோம். இப்படி விஞ்ஞானத்தையும் எங்கள் விஞ்ஞானிகளையும் ஒதுக்கி வைத்ததால் தான் அந்நியன் வந்து தமிழர் தேசங்களை வெற்றி கொண்டான்.

தமிழீழம் பிறந்து நிலைக்க காசி ஆனந்தனிலும் பார்க்க அப்பையா அண்ணைகள் தான் எங்களுக்கு தேவை.
Reply
#2
Quote:தமிழீழம் பிறந்து நிலைக்க காசி ஆனந்தனிலும் பார்க்க அப்பையா அண்ணைகள் தான் எங்களுக்கு தேவை.
ஜூட் எங்களிற்கு இராணுவ ரீதியான தேவைகளை புூர்த்தி செய்ய அப்பையா அண்ணை போன்ற அறிவில் தேர்ச்சி அறிஞர்களும் வேண்டும் அதேபோல எமது கொள்கைகளை மக்களிடத்தில் சொல்லுவதற்கும். எமது போராளிகளின் வீரசாதனைகளை அவர்கள் செய்யும் தியாகங்களை மக்களிற்கும் உலகிற்கும் ஏன் எமது எதிர்கால சந்ததியினருக்கும் கலை இலக்கியத்தினு}டாகச் சொல்லுவதற்கும் காசி ஆனந்தன் போன்ற கவிஞர்கள் கட்டாயமாக எமக்கு வேண்டும்.

அப்பையா அண்ணையின் வீரவரலாற்றின் சில பகுதிகள்
http://www.eelatamil.com/dial/index.php?op...w&id=17&Itemid=
<b>
?
- . - .</b>
Reply
#3
Quote:தமிழீழம் பிறந்து நிலைக்க காசி ஆனந்தனிலும் பார்க்க அப்பையா அண்ணைகள் தான் எங்களுக்கு தேவை
ஒருவருடன் ஒப்பிட்டு மற்றவர் தேவையில்லை என்று கு}றுவதை விட எல்லோரும் தேவை என்று எண்ணுவது நல்லது..... இருவரும் நமக்கு தேவை அது தான் உண்மை...!

Idea :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
Quote:ஒருவருடன் ஒப்பிட்டு மற்றவர் தேவையில்லை என்று கு}றுவதை விட எல்லோரும் தேவை என்று எண்ணுவது நல்லது..... இருவரும் நமக்கு தேவை அது தான் உண்மை

என்னுடைய கேள்வி, ஏன் நாங்கள் காசி ஆனந்தனைப்பற்றி தமிழ் ஊடகங்களில் அறியும் அளவுக்கு அப்பையா அண்ணை போன்றவர்களை பற்றி அறிந்ததில்லை? ஏன் எமது விஞ்ஞானிகளுக்கு நாம் கவிஞர்களுக்கு கொடுப்பது போன்ற முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தான். ஒவ்வையாரை அறிந்திருக்கின்றோம், அவர் காலத்தில் இருந்த ஒரு விஞ்ஞானியை நாம் அறிந்திருக்கின்றோமா?

சிறி ரமணன், அப்பையா அண்ணையை பற்றிய இணைப்புக்கு நன்றி. நான் அவரை தொழில்நுட்ப விடயங்கள் சம்பந்தமாக 1988ல் ஒரு முறை சந்திக்க கிடைத்தது. 1997ற்கு பின் (1997ல் அப்பையா அண்ணை மறைந்து விட்டார் என்று அந்த இணைப்பு சொல்கிறது) தாராக்கி அவருடன் ஒரு நேர்காணலை செய்திருந்தார். ஆகவே உண்மையில் அவருடைய வரலாறு பற்றி எனக்கு இப்போது தெளிவில்லாமல் இருக்கின்றது.
''
'' [.423]
Reply
#5
இவர் யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகக் கொண்டவர். மணம் செய்தது சுழிபுரம் நெல்லியான் என்னும் கிராமத்தில்..! இவரது மனைவியார் யாழ்ப்பாண மாவட்டத்தில்தான் வசிக்கிறார். இவரது சொந்த வீட்டிற்கு செனஇறேன்.. அங்கே வேறு உறவினர்கள் வசிக்கிறார்கள். இவரது உறவினர்கள் பலர் ஐரோப்பாவில் உள்ளனர். அதனால் இவரது ஆரம்ப நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பெறமுடியும். ஆனால் இயக்க நடவடிக்கைகளை அது சம்பந்தப்பட்டோர்தானே கூறமுடியும்?!
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)