Posts: 13
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
யாகூ தூதுவரில் எம் இளம் சமுதாயம்
யாகூ தூதுவரில் எம் இளம் சமுதாயம் கெட்டு குட்டிச்சுவர் ஆகிறது. யாராவது அதனை கண்டித்து அதைப்பற்றீ எழுதுங்களே. சீர்திருத்துங்களே...
வண்ணம்
தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்
.
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
நாய் வாலை நிமித்தலாம் எண்டு நான் கேள்விப்பட்டதில்லை. தமிழிலில் எத்தனை தூசண வார்த்தைகள் உண்டு என்பதையும் வெவ்வேறு நாட்டு தூசண மொழி வளக்குகளையும் அங்கு கற்கலாம்... நீங்களும் அங்கு ஏன் முயற்சிக்ககூடாது....
அத்துடன் ஆண் பெயரில் போனால் ஒரு நாயும் ஏன் எண்டு கேக்காது.. அதே நேரம் ஒரு பெண் பெயரில் போனால்.. ஒரே நேரத்தில் 100 IMகள் வந்து குவியும். எதற்கு பதில் அழிப்பது என்று புரியாமல் போகும். அதில் 99%மானவை பாலியல் ரீதியான வக்கிரக வார்த்தைகளும் உடல் உறவுக்கு அழைப்பதாகவும் இருக்கும். இதில் வித்தியாசம் என்னவென்றால் இப்படி கேவலமாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதே... :evil: :evil:
Posts: 109
Threads: 5
Joined: Aug 2004
Reputation:
0
என்னைக்கேட்டால் இது யாகூ தூதுவரின் பிழையல்ல மாறாக அதை உபயோகிப்போரின் தவறு. நானும் யாகூ தூதுவரைப் பாவிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது வெகு உபயோகமான கருவி. பழைய நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போகாமல் இருக்க, தொலைபேசிக்கட்டணம் இல்லாமலே தூர இடத்தில் இருப்பவருடன் உரையாட மற்றும் அவசர செய்தி அனுப்பவென இதன் பயன்கள் சொல்லி முடியாது.
உங்கள் பிள்ளை யாகூ தூதுவரால் கெடுகிறது என்றால் அது உங்கள் வளர்ப்பில் பிழையேயொழிய யாகூவின் தவறல்ல.
முன்பு திரைப்படம் கெடுக்கிறது என்றார்கள். பின்னர் தொலைக்காட்சி என்றார்கள், அதன்பின்னர் இன்ரநெட் என்றும் சொன்னார்கள் இப்போ யாகூவில் வந்து நிக்கிறார்கள். அதனால், காலத்துக்கு காலம் ஏதாவதொன்றைச்சாட்டிப் புலம்புவதை விட்டு உங்கள் பிள்ளைகளுக்கு சரி எது தவறு எது என்பதைச் சுட்டிக்காட்டி வளர்க்கப்பாருங்கள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இது யாகூ மெசஞ்சர் அரட்டையை பற்றி கடந்த வருடம் உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்டது, தலைப்புக்களை ஒழுங்கமைப்பும் போது இது கண்ணில் பட்டது.
இந்த யாகூ மற்றும் எம்எஸ்என் மெசஞ்சர் அரட்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டியது.
MSN உம் YAHOOவும் மிகவும் வேறுபாடானவை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அப்படியா.. ரமா நான் கேள்விப்படல :roll:
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
RaMa Wrote:Aruvi Wrote:இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டியது.
MSN உம் YAHOOவும் மிகவும் வேறுபாடானவை.
அருவி... இரண்டும் ஒன்றாக்கப் போகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன்... உண்மையோ தெரியாது.. அறிந்தவர்கள் சொல்லுங்களேன்
நானும் கேள்விப்படல கேள்விப்பட்டால் சொல்லுறன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.