Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது
#1
சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
துõத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

செய்யாத குற்றத்திற்காக 19 மாதம் சிறையிலிருந்தேன். அப்போது, என்னை வெளியே கொண்டு வாருங்கள் என்று யாருடைய தயவையும் நாடவில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருமங்கலம் கூட்டத்தில் பேசியது உண்மை தான். ம.தி.மு.க., தமிழக தமிழர் நலனில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது.


இலங்கையில் தற்பொழுதுள்ள சந்திரிகா அரசு தமிழர் பிரச்னையில் நல்ல தீர்வைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ரணில் விக்ரமசிங்கே தீர்வுக்கு முயற்சித்தார். ஆனால், சந்திரிகா மிகத் தந்திரமாக பார்லி.,யைக் கலைத்து அமைச்சர் பதவிகளைப் பறித்தார். பெருமளவு ஆயுதங்களை பாக்., சீனா போன்ற நாடுகளிலிருந்து வாங்கி குவித்துள்ளார். எந்த நேரத்திலும் மீண்டும் அவர் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும். ஈழத்தில் அமைதி பிறக்கட்டும். அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழட்டும். இது தமிழக மக்களின் விருப்பம். சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதில் தவறேதுமில்லை. இலங்கையில் மீண்டும் போர் மூண்டு அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுவிடக்கூடாது என்பது தான் என் கவலை.

துண்டு பிரசுரம்: திருமங்கலத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசியது என்ன என்பதை என் மீதான பொடா வழக்கு முடிந்ததும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகிப்பேன்.

முதல்வர் ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நியாயமாக நடக்காது என வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது சுப்ரீம் கோர்ட். தமிழகத்தில் எங்கே நீதியிருக்கிறது? எனவே, ஜெ., தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.
Reply
#2
தகவலுக்கு நன்றி<b>aathipan</b>,
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)