Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மெல்ல வாய் திறக்கும் தமிழகம்
#1
அண்மையில் தமிழக அரசியல் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் வன்னி சென்று மாவீரர் தின நிகழ்வுகளிலும் பின்னர் கொழும்பில் நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழர் கூட்டமைப்பினரையும் சிறீலங்காப் பிரதமரையும் சந்தித்துப் பேசியும் தனது உள்ளக் கிடக்கைகளைக் கொட்டி இருந்தார்....

இதோ இப்போ பல கிராமியக் கதைகளை திரைக்குக் கொண்டு வந்த தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் குரல் இப்படி வருகிறது....


[b]புலிகளின் உயிர் தியாகம்: பாரதிராஜா பாராட்டு

தமிழ் ஈழம் அமைவதற்காக விடுதலைப் புலிகள் செய்த உயிர்த் தியாகம் போற்றத்தக்கது என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

இலங்கை ராணுவத்தினருடனான சண்டையில் இறந்த 17,800 புலிகளின் நினைவைப் போற்றும் விதமாக யாழ்ப்பாணத்தில் மாவீரர் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு பாரதிராஜா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியை புலிகள் ஆதரவு இணைய தளம் வெளியிட்டுள்ளது.

பேட்டியில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:

நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனது பிறந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வில் இருந்தேன். போரினால் ஏற்பட்ட இழப்புகளை நேரில் பார்க்கும்போது மனதில் மிகுந்த பாரம் உண்டானது.

இத்தகைய இழப்புகள்தான் இந்த மண்ணில் வீரத்தை விதைத்துள்ளது எனக் கருதுகிறேன். மாவீரர்கள் தினத்தில் கலந்து கொண்டது குறித்த பெருமைப்படுகிறேன்.

புலிகளின் உயிர்த் தியாகம் போற்றத்தக்தக்கது. கடந்த 30 ஆண்டுகளாக தங்களது கொள்கைளை அடைய எவ்வளவு தீரத்துடன் புலிகள் போராடினார்களோ, அதேபோல் தொடர்ந்து போராடினால் தமிழ் ஈழத்தை அடைவது உறுதி.

தமிழக மக்கள் அரும் சாதனைகளையும், மகத்தான வளர்ச்சிகளையும் கண்டுள்ளனர். ஆனால் அவற்றை ஈழத் தமிழர்களின் சாதனைகளுடன் சிறியதாகி விடும். உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று, சாதனை படைத்த தமிழர்களை சந்தித்தால் அவர்கள் இலங்கை தமிழர்களாக இருப்பதைக் காண முடியும்.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் நான் உறவாடியபோது, ஒவ்வொருவர் மனதிலும் சொல்வதற்கு ஏராளமான சோகக் கதைகள் இருந்தன.

மாவீரர் தினத்தில் நான் கலந்து கொண்டது என் மனதை உருக்கி விட்டது. போரில் உயிரிழந்த மாவீரர்களின் கல்லறைகளைக் காணும்போது, எனது முதுகுத் தண்டு சிலிர்த்துவிட்டது என்று கூறினார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரியவந்தால்தான் அங்கிருக்கும் தமிழ் உறவுகளுக்கும் எமது நிலை விளங்கும்.
Reply
#3
நன்றி குருவிகளே
Reply
#4
நல்ல செய்திதான். ஆனால் வாய்திறக்க பலர் பயப்பிடுகின்றனர். இதற்கு காரணம். ஜெயலலிதா அரசு. இரண்டாவது விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைச்சட்டம்.

திரைப்படத்துறைக்கு எதிராக ஜெயலலிதா அவர்கள் செயற்பட்டார். அதற்குக்காரணம் அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு போன்ற ஒரு நிலை இருந்ததால். அதன்பின் அவர்கள் நேராக சென்று குறைகளைக்கூறியபின் அவர்களுக்கு பல சலுகைகள் செய்து கொடுத்துள்ளாார் அம்மா. இதற்காக அவரைப்புகழ்ந்து திரைத்துறையினர் ஒரு பராட்டுவிழாக்கூட நடத்தினர்.

நாமும் ஒருவருக்கு ஆதரவு ஒருவருக்கு ஆதரவு இல்லை என்ற நிலையை மாற்றவேண்டும். இலங்கையில் இருந்து ஒரு குழு இங்கு வந்து அம்மையாரைச்சந்தித்து எம்ஜிஆருக்கும் எமக்கும் உள்ள உறவைக்கூறி மீண்டும் உறவைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இதனால் பல நன்மைகள் கிட்டும். துணிச்சல் வாய்ந்த ஒரு அரசியல் வாதியின் ஆதரவு உதவியாக இருக்கும். கருணாநிதியால் என்ன கண்டோம். வைக்கோதான் அடிக்கடி டெல்லி சென்று இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கெதிராக குரல் கொடுக்கிறார். அவரது ஆதரவு மட்டும் போதுமா எல்லோரிடமும் ஆதரவுகோரலாம். இராஜதந்திரத்தின் மூலம்தான் இந்தியாவை வெல்லமுடியும். எமக்கு ஆதரவாக ஒரு மாநில மக்கள் இருக்கிறார்கள் என்று இந்தியா பயப்பிட வேண்டும். ஏற்கனவே மக்கள் எமது பக்கம் தான் அதில் சந்தேகம் இல்லை. அரசியல் வாதிகளை எமது பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Reply
#5
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->நல்ல செய்திதான். ஆனால் வாய்திறக்க பலர் பயப்பிடுகின்றனர். இதற்கு காரணம். ஜெயலலிதா அரசு. இரண்டாவது விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைச்சட்டம்.  

திரைப்படத்துறைக்கு எதிராக ஜெயலலிதா அவர்கள் செயற்பட்டார். அதற்குக்காரணம் அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு போன்ற ஒரு நிலை இருந்ததால். அதன்பின் அவர்கள் நேராக சென்று குறைகளைக்கூறியபின் அவர்களுக்கு பல சலுகைகள் செய்து கொடுத்துள்ளாார் அம்மா. இதற்காக அவரைப்புகழ்ந்து திரைத்துறையினர் ஒரு பராட்டுவிழாக்கூட நடத்தினர்.  

நாமும் ஒருவருக்கு ஆதரவு ஒருவருக்கு ஆதரவு இல்லை என்ற நிலையை மாற்றவேண்டும். இலங்கையில் இருந்து ஒரு குழு இங்கு வந்து அம்மையாரைச்சந்தித்து எம்ஜிஆருக்கும் எமக்கும் உள்ள உறவைக்கூறி மீண்டும் உறவைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இதனால் பல நன்மைகள் கிட்டும். துணிச்சல் வாய்ந்த ஒரு அரசியல் வாதியின் ஆதரவு உதவியாக இருக்கும். கருணாநிதியால் என்ன கண்டோம். வைக்கோதான் அடிக்கடி டெல்லி சென்று இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கெதிராக குரல் கொடுக்கிறார். அவரது ஆதரவு மட்டும் போதுமா எல்லோரிடமும் ஆதரவுகோரலாம். இராஜதந்திரத்தின் மூலம்தான் இந்தியாவை வெல்லமுடியும். எமக்கு ஆதரவாக ஒரு மாநில மக்கள் இருக்கிறார்கள் என்று இந்தியா பயப்பிட வேண்டும். ஏற்கனவே மக்கள் எமது பக்கம் தான் அதில் சந்தேகம் இல்லை. அரசியல் வாதிகளை எமது பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுதான் சரியான சந்தர்ப்பம்... உடனடி நடவடிக்கைக்கு வழி சொல்லும் கருத்து... சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து செயற்படுவார்களா....!! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நான் ஒரு முட்டாள்ங்க? இது சினிமா
எடுக்கிறவங்க சென்னதுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#7
ராஜன் அவர்களே!
பாரதிராஜா அவர்கள் ஒரு சினிமாக்காரராக யாழ் செல்லவில்லை, அவர் ஒரு தமிழனாகத்தான் சென்றுள்ளார், அவரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது என நினைக்கின்றேன்
Reply
#8
ஐயோ சினிமா காரங்களுக்கும் அறிவு வந்திட்டா இனி இந்திய உருப்படும் என:று நினைக்கிறன். பாரதிராயா நல்ல எழுத்தாளர் இயக்குனர் பேச்சாளர் அது மட்டுமா? நல்ல நடிகரும் சந்தோசப்படாதீங்க இதெல்லாம் அடுத்த படம் வரைக்கும் தான்.. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை ஓரளவு நம்பலாம் அவையல் தொடர்ந்து ஈழத்தமருக்காய் கதைக்கினம் பலநெருக்டிகளுக:கு மத்தியில் ஈழத்திற்க்கு வருகினம்
பத்தி வந்தா சந்தொசம் தான் ஆனா திரையில நடிக்கிற இங்க காட்ட வெளிக்கிட்டா???
மக்கள் எம்பக்கம் அதில் எனக்கு இரண்டு நிலையில்லை ஆனால் அரசியல் வாதிகளும் சிரைப்படத்துறையினரம் யார் பக்கம்???
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
திரைத்துறையினர் எமது பக்கம் என்றுதான் சொல்லவேண்டும். எமது விடுதலைப்போரை கொச்சைப்படுத்தி அவர்கள் சினிமா எடுப்பதில்லை.இங்கு மற்ற மாநில மக்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் வரும் ஆனால் இலங்கையர்களை கிண்டல் செய்வதாக காட்சியைப்பார்க்க இயலாது.

பெரும்பாலான இயக்குனர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். ஆகவே அவர்களும் எமக்கு ஆதரவானவர்களே. மணிரத்தினம் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் கொஞ்சம்எமது பிரச்சனையைபடம்பிடித்துக்காட்டியது. கமல் நடித்த தெனாலியில் ஒரு இரண்டு நிமிடங்கள் எமது பிரச்சனை முடிந்தவரை சொல்லப்பட்டுள்ளது என சொல்லலாம். அவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதித்தார்கள் என்பது வேறுவிடயம். அவர்கள் மக்களுக்கிருந்த அநுதாப அலையை மீண்டும் ஏற்படுத்தினார்கள் அது ஒரு உதவிதான். ஏனெனில் இந்து போன்ற பத்திாிகைகள் மீண்டும் மீண்டும் ராஜுவ் கொலையை நினைவுபடுத்தி வெறுப்பை வேருன்றி வந்தனர். (ராஜீவ் கொலையில் உள்ள நியாய அநியாயத்தைப்பற்றி சிற்றிவு படைத்த இவர்களுக்கு அதிகம் தொியாது.) அரசியல்வாதிகள் சொல்வதையும் பத்திாிகைகள் சொல்வதையும் நம்புபவார்கள். ஆனால் அதற்கெல்லாம் மேலாக ஒரு திரைப்படத்தில் 2 நிமிடம் எம் நிலைசொன்னால் உடனே உண்மையை உணர்ந்துகொள்வார்கள். அதனால்தான் திரைப்படத்துறையை எமது கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.
Reply
#10
திருமாவளவனை அழைத்ததுபோல ஒவ்வொரு தலைவராக .(சாமியார்கள் தவிர)அழைத்து கெளரவப்படுத்தி அவர்களின் ஆதரவை பெறுவது பலனளிக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வோரு துறையைச்சார்ந்தவர்களையும் அழைத்து கெளரவப்படுத்தலாம். ஏழுத்தாளர்களை அழைப்பது மிகவும் நல்ல பயன் கொடுக்கும்.

இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.
Reply
#11
ஆதிபன் ! உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழீழத்தின் பாலும் , தமிழீழத்திற்கான குரலும் தமிழகத்து சினிமாவுலகையும் , அங்குள்ள கலைஞர்களையும் எங்கள் பக்கம் ஈர்த்திருப்பது ஏதோ உண்மைதான். இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் எங்களது போராட்டத்தை , போராடும் நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக யாரும் தமிழீழம் என்ற தேசத்தையோ , தமிழீழத்தமிழர்களில் கரிசயையுடனோ இல்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு அடைக்கலம் தந்த இந்தியா என்பதற்காக ஆலோலம் பாடுவது பொருத்தமல்ல)

மணிரத்தினம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழத்தவருக்காகவா இரக்கத்தை வாங்கித் தந்தவர் ? இல்லையே தனது வியாபார வளத்தையும் பெருக்கி ,போராளிகள் என்பவர்களைப் பயங்கரமானவர்களாகவே சித்தரித்திருந்தார். ஆனால் கலைஞர்களைப் பாருங்கள் என்று கூச்சலிடுவோர்க்கு அந்தப்படம் கலையே தவிர தமிழனின் கண்ணீரின் கனம் விளங்கவில்லை. நீங்கள்கூட சினிமாவே தமிழரின் வாழ்வென்று நினைக்கிறீர்கள் போல.

தெனாலியில் கமல் செய்த நாசமும் அப்துல்கமீத் என்ற மனிதரால் நமது வட்டார வழக்கு மட்டும் கொச்சைப்படுத்தப்படவில்லை , ஈழத்தவன் என்றாலே இழக்காரமாகத்தான் அந்தப்படம் சித்தரித்தது ஈழத்தவரை.

இதுவரை தமிழர் தேசம் வெற்றி கொண்டதெல்லாம் இந்த சினிமாக்கொட்டகைகளால் வென்றவையல்ல. ஈழத்தவனை வைத்து எப்படி வியாபாரம் நடாத்தலாமென்றே கனவுடன் ஈழத்தவரை எட்டிப்பார்க்கும் சினிமாக்கூட்டம். குறிப்பிட்ட சில சினிமாக்காரர்களும், இயக்குனர்களும் எங்களை நேசிக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தென்னிந்திய சினிமாவுலகிலுள்ளவர்கள் எங்களது போராட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது தமிழீழத்தையே பெற்றுத்தருவார்கள் என்ற உங்கள் அறியாமைத்தனம்மிக்க சிந்தனையை என்ன செய்வது ?

குப்புசாமியென்ற கிராமியப்பாடகரும், அனிதா குப்புசாமியென்ற பாடகியும் ஈழத்தவர்களால் ஈழத்துக்குள்ளும், உலகத்திற்கும் வெளிச்சத்துக்கு வந்தார்கள். ஆனால் அம்மாவின் ஆசியில் கிராமிய இசைத்துறையையே வென்றோம் என்றும் சொன்னார்கள். தற்போது குப்புசாமியைக் கேட்டுப்பாருங்கள் ஈழத்தமிழர்களை ஞாபகமிருக்கிறதா என்று ?
:::: . ( - )::::
Reply
#12
[quote=Nitharsan]ஐயோ சினிமா காரங்களுக்கும் அறிவு வந்திட்டா இனி இந்திய உருப்படும் என:று நினைக்கிறன். பாரதிராயா நல்ல எழுத்தாளர் இயக்குனர் பேச்சாளர் அது மட்டுமா? நல்ல நடிகரும் சந்தோசப்படாதீங்க இதெல்லாம் அடுத்த படம் வரைக்கும் தான்.. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை ஓரளவு நம்பலாம் அவையல் தொடர்ந்து ஈழத்தமருக்காய் கதைக்கினம் பலநெருக்டிகளுக:கு மத்தியில் ஈழத்திற்க்கு வருகினம்
பத்தி வந்தா சந்தொசம் தான் ஆனா திரையில நடிக்கிற இங்க காட்ட வெளிக்கிட்டா???
மக்கள் எம்பக்கம் அதில் எனக்கு இரண்டு நிலையில்லை ஆனால் அரசியல் வாதிகளும் சிரைப்படத்துறையினரம் யார் பக்கம்???
-நேசமுடன் நிதர்சன்-

athipan Idea Idea Idea Idea Idea Idea Idea
:::: . ( - )::::
Reply
#13
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->திருமாவளவனை அழைத்ததுபோல ஒவ்வொரு தலைவராக .(சாமியார்கள் தவிர)அழைத்து கெளரவப்படுத்தி அவர்களின் ஆதரவை பெறுவது பலனளிக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வோரு துறையைச்சார்ந்தவர்களையும் அழைத்து கெளரவப்படுத்தலாம். ஏழுத்தாளர்களை அழைப்பது மிகவும் நல்ல பயன் கொடுக்கும்.  

இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் போராடும் மண்ணுக்குள் பிறப்பெடுத்திருக்கும் போராளி எழுத்தாளர்கள் , மற்றும் அந்த மண்ணுக்குள் நின்று அந்தமண்ணுடன் வாழ்ந்து புலம்பெயர்ந்த நிலங்களிலும் தாய்மண்ணினை இதயத்துக்குள் சுமந்து அதற்காகவே தங்கள் எழுத்துக்களையும் அர்ப்பணித்திருக்கும் எழுத்தாளர்களால் சாதிக்காததையா நீங்கள் வெளியில் பார்க்கிறீர்கள்.

தமிழகத்து ஒட்டுமொத்த சினிமாவுலகினரையோ, எழுத்தாளர்களையோ , கலைஞர்களையோ நம்பாத்தன்மையில் எழும் கேள்வியல்ல ஆதிபன்.

எனது பிள்ளையிடம் உள்ளதை முதலில் பயன்படுத்துவோம். பக்கத்து வீட்டுப்பிள்ளையையும் வளர்ப்போம். Idea
:::: . ( - )::::
Reply
#14
வாய் மூடியில்லாமல் தமிழகம் வாய் திறக்குதே அது எந்த வகையில் இருந்தாலும் சரி..அதில் தமிழர்களுக்கு நன்மை உண்டு... இன்று அமெரிக்கா கூட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சுவதை விட தமிழகத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே உள்ள பூர்வீகப் பிணைப்பைக் கண்டே அஞ்சுகிறது...சில நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிறது...அதுவே எமக்கு சாதகமாகவும் அமைகிறது....!

தமிழகம் தமிழர்களின் தாய்வீடு....அதை யாரும் மறந்துவிடாதீர்கள்....தமிழகம் சுயநல ஆட்சியாளர்களின் கையில் சிக்கி இன்று சின்னாபின்னமாகிக் கிடக்கலாம்... ஆனால் ஒரு நாள் அதுவே ஈழத்தமிழர்களுக்கான புகழிடமாய் உதவிடமாய் இருந்தது என்பதை மறவாதீர்கள்.... அங்குள்ள மக்கள் நிதர்சனத்தை தரிசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே உள்ளனர்...விளம்பரம் தேடுபவர்களும் அரசியல்வாதிகளும் வேடம் போடலாம்...பொய்களை சம்பவங்கள அபரிமிதமாகக் காட்டி மக்களைக் குழப்பி இலாபம் பெற முனையலாம்.. அதற்கு நாம் தொடர்ந்து அனுமதித்தால் கருணா போன்ற குள்ளநரிகளின் பாதுகாப்பிடமாய் தமிழகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....!

ஆனால் தமிழகத்திலும் சாதாரண மக்கள் உண்மைக்கு என்றும் மதிப்பளிக்கிறார்கள்...எனவே உண்மையை சரியாக அவர்களுக்கு படம் பிடித்துக் காட்ட வேண்டியது அவர்களின் சகோதரங்களாக எமது கடமை....! Idea

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களை கண்டித்தவர்கள் சாதாரண தமிழக மக்கள்.... இன்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குள் நியாயங்களைத் தேடுவதில் பல தமிழக இளைஞர்கள் சிரத்தை எடுத்துச் செயற்படுவதை நாமே கண்டிருக்கின்றோம்...! டக்ளஸ் கருணா ஆனந்தசங்கரி வரதராஜப் பெருமாள் என்றும் இன்னும் தாயகத்தில் புலத்தில் என்று ஒளிந்திருக்கும் பிற குள்ளநரிகளையும் விட... தமிழக அரசியல்வாதிகள் மோசமில்லை என்றே கொள்ளலாம்....! இருப்பினும் வெறும் அரசியல்வாதிகளின் திரைப்படங்களின் கதைகளை பொலீசின் பேச்சுக்களை வைத்து தமிழகத்தை முற்றாக எடை போட முடியாது... இரு பக்கமும் மக்கள் மத்தியில் உள்ள நிதர்சனங்களை தரிசித்து எமது பக்க நியாயங்களை விளக்கும் போதே அவர்களுக்கு தெளிவும் நம்பிக்கையும் மேலும் அதிகரிக்கும்...அது எமக்கு என்றும் மேலதிக பலம் சேர்க்கும்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வரவேற்கக்கூடிய விடயம்தான்....ஆனால் இவர் வாய்திறந்திருப்பது எங்கே?

நம்மூரில் வந்து வாய்திறந்து என்ன பயன்
தமிழ்நாட்டில் வாய்திறக்க முடியுமா? அல்லது
முயற்சிதான் செய்வார்களா?
Reply
#16
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->இங்கு மற்ற மாநில மக்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் வரும் ஆனால் இலங்கையர்களை கிண்டல் செய்வதாக காட்சியைப்பார்க்க இயலாது.  

ஆதிபன்
தமிழனையே தமிழன் கிண்டல் செய்தால் அவன் தமிழனாக இருக்க முடியுமா..என்ன..  


பெரும்பாலான இயக்குனர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். ஆகவே அவர்களும் எமக்கு ஆதரவானவர்களே. மணிரத்தினம் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் கொஞ்சம்எமது பிரச்சனையைபடம்பிடித்துக்காட்டியது. கமல் நடித்த தெனாலியில் ஒரு இரண்டு நிமிடங்கள் எமது பிரச்சனை முடிந்தவரை சொல்லப்பட்டுள்ளது என சொல்லலாம். அவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதித்தார்கள் என்பது வேறுவிடயம். அவர்கள் மக்களுக்கிருந்த அநுதாப அலையை மீண்டும் ஏற்படுத்தினார்கள் அது ஒரு உதவிதான். ஏனெனில் இந்து போன்ற பத்திாிகைகள் மீண்டும் மீண்டும் ராஜுவ் கொலையை நினைவுபடுத்தி வெறுப்பை வேருன்றி வந்தனர். (ராஜீவ் கொலையில் உள்ள நியாய அநியாயத்தைப்பற்றி சிற்றிவு படைத்த இவர்களுக்கு அதிகம் தொியாது.) அரசியல்வாதிகள் சொல்வதையும் பத்திாிகைகள் சொல்வதையும் நம்புபவார்கள். ஆனால் அதற்கெல்லாம் மேலாக ஒரு திரைப்படத்தில் 2 நிமிடம் எம் நிலைசொன்னால் உடனே உண்மையை உணர்ந்துகொள்வார்கள். அதனால்தான் திரைப்படத்துறையை எமது கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் சொல்வது உண்மைதான். சினிமாவிற்குள்ளால் போகும் செய்திப் பரப்புரை மற்றவைகளை விட விரைவில் மக்களை சென்றடையும்.
Reply
#17
அஸ்வினி2005 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. நான் சொல்வது எமது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டை திசைதிருப்ப வேண்டும் என்றுதான். ஏற்கனவே ஆதரவாகத்தான் சாதாரண பாமரன் உள்ளான். ஆனால் அவர்கள் மெளனமாகத்தான் எப்போதும் இருப்பார்கள். குரல்கொடுக்க யாரும் வேண்டும். வைக்கோவைப்போல டெல்லி சென்று பேச ஆள்வேண்டும். நான் இங்குள்ளவர் கலைஞர்களை எழுதுத்தாளர்களை அழைத்து கெளரவிக்கவேண்டும் என்றது எதற்காக என்று நீங்கள் புாிந்துகொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் இந்தியாவந்ததும் பத்திாிகைகளில் செவ்வி வெளியிடுவார்கள் அல்லது தமக்குத்தொிந்தவர்களுடன் எல்லாம் எமக்கு ஆதரவாக பேசி ஆதரவை மறைமுகமாக ஏற்படுத்துவார்கள்.
இதுதான் நமக்கு வேண்டும். எம்மால் வேறு என்ன செய்யமுடியும் பத்திாிகையை இங்கு நடத்த முடியுமா அல்லது டிவி தான் தொடங்க முடியுமா?.

ஐந்துபேர் வந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம் அதில் இரண்டுபேர் எமக்கு ஆதரவான அலையை ஏற்றபடுத்தினாலே போதுமே. தினமும் அவர்கள் எத்தனை பொிய மனிதர்களை சந்திப்பார்கள் அவர்கள் எல்லாம் இலங்கைப்பயணம் பற்றி நிச்சயம் கேட்பார்கள். மெதுமெதுவாக ஆதரவு பரவும்.

வெளிநாட்டுக்கு அழைத்து அவர்களை கெளரவிப்பதைவிட இலங்கைக்கு அழைத்து எமது போராட்டத்தை விளக்கவேண்டும்.
Reply
#18
புத்தாின் பெயரால் என்று ஒரு படம் வந்தது அனைவரும் அறிந்ததே அதுஉலகிற்கு உண்மையை காட்டியது என நினைக்கிறேன். இந்தவகை கலைஞர்களை கெளரவப்படுத்தினோமா? தாமரை எமது பிரச்சனை பற்றி கவிதை எழுதிஉள்ளார் தொியுமா? அவரது ஓரு கவிதைப்புத்தகத்தில் வந்திருக்கிறது. இத்தனைக்கும் அப்போது இங்கு கெடுபிடி அதிகம். ஆனாலும் ஒரு பெண் பயந்துவிடாது தனது உணர்வை வெளிப்படுத்தினாரே? பாராட்டப்படவேண்டியவிடையம் தானே இது.?
Reply
#19
சமீபத்தில் இலங்கை வந்த இந்தியமீன்பிடித்தொழிலாளர்களின் பிரதிநிதி ஆனந்தவிகடனில் செவ்விகொடுத்திருந்தார். அதில் இலங்கை மீனவர்கள் படும் கஸ்டத்தை விவாித்திருந்தார். அதற்கு முன் இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கினார்கள் என்றுதான் செய்தி இங்கே பத்திாிகைகளில் வரும். அவரது செவ்வியில் அவர் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிச்சென்று மீன்பிடிப்பதை கூறியிருந்தார். அது மட்டுமன்றி இலங்கை மீனவர்கள் எப்படி இலங்கை கடற்படையினரால் நடத்தப்படுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது பொதுமக்கள் இடையே தினசாிப்பத்திாிகைள் ஏற்படுதுத்தி இருந்த தவறான ஒரு கருத்தை மாற்றிவிட்டது.
Reply
#20
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->வரவேற்கக்கூடிய விடயம்தான்....ஆனால் இவர் வாய்திறந்திருப்பது எங்கே?  

நம்மூரில் வந்து வாய்திறந்து என்ன பயன்  
தமிழ்நாட்டில் வாய்திறக்க முடியுமா? அல்லது
முயற்சிதான் செய்வார்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்கள் பார்வையில் மாற்றம் வேண்டும் கணணி... இப்போ அவர்கள் இங்கே வராது ஈழத்தின் உண்மையை தரிசிக்காது விட்டிருந்தால் தமிழக மக்கள் மத்தியில் இவர்களின் குரல் ஆதீபன் சொல்வது போல பழைய பல்லவியாகத்தான் இருக்கும் இல்ல மெளனமாகவே இருந்திருக்கும்....! அது யாருக்கு உதவி இருக்கும்...???! சிங்கள அரசுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் கருணா டக்ளஸ் சங்கரிக்கும்... பிற இன்னோரென்ன உங்கள் மண்ணின் "பெருமைக்குரிய" கொலைஞர்களும் துரோகிகளும் இந்திய மண்ணில் சனநாயகவாதிகளாக அடைக்கலம் தேடவும்... அவர்களின் வாதங்களை நியாயமாகக் காட்டவும்...!

அது சாதாரண மக்களான எமக்கும் பிரயோசனம் இல்லை தமிழக மக்களுக்கும் பிரயோசனம் இல்லை....!

உண்மையில் ஈழத்தமிழர் ஆதரவாளர் என்று காட்டப்பட்டு விட்ட திருமாவளவனின் குரலை விட பாரதிராஜாவின் தொனியின் மாற்றம் கூர்ந்து கவனிக்கப்படும்.... உண்மையில் தமிழக பாமர மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டின் ஈழத்தில் யதார்த்தத்தை தரிசித்து யதார்த்தமாக அதை வெளிவிடவேண்டும்....இப்போ ஜெயலலிதாவின் பார்வையில் கடற்புலிகள் இந்திய எதிர்ப்புத் தீவிரவாதிகள் என்று தெரிவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல....ஆனால் அதையே மீனவ மக்களுக்கும் சொல்லி மக்கள் மத்தியில் குழப்பக் கருத்தை விதைத்து இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையே மோதலை உருவாக்கி இரு பகுதி மக்களினதும் ஒற்றுமையைக் குலைக்க விளைந்தார்... அதை முறியடிக்கும் வகையில் சமீபத்தில் கடற்புலிகளை சம்பந்தப்படுத்தி சிறீலங்கா கடற்படை நடத்திய நாடகத்துக்கு எதிராக பிபிசிக்கு பேட்டி அளித்த தமிழக மீனவ சங்கத் தலைவர் சிங்கள அரசினதும் அரச படைகளினதும் செய்திக்கும் அதற்கு தாளம் போடும் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கும் எதிரானதாக தனது கருத்தை துணிந்து சொன்னார்.... காரணம் என்ன.... இங்கு வந்து அவர் நிலைமைகளை அவதானித்துச் சென்றதன் விளைவே.....!

இது மட்டுமல்ல அன்றும் இந்திய இராணுவத்தின் காலத்தில் வைகோ நெடுமாறன் போன்றவர்களின் ரகசிய ஈழ விஜயங்களே பெரும் பரபரப்பையும் உண்மைகளையும் தமிழகத்துக்குக் கொண்டு சென்றது என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தைரியத்தையும் கொடுத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது....!

திருமாவளவன் வன்னியின் பேசியதை விட தெற்கில் பாராளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமரருடன் பேசி தமிழர்கள் பக்க கோரிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை நேரடியாகச் சொல்லி இருப்பது ஈழத்தின் நிறம் கூட அறியாது சிங்கள அரசுக்கு துணை போகும் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான துணிந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட வாய்ப்பளித்துள்ளது....! இவரைத் தொடர்ந்தே பாரதிராஜாவின் குரல் துணிந்து முன்வைக்கப்பட்டுள்ளது...!

இப்போ பொடா பாவனையில் இல்லை.... ஆனால் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் விரோதக் கொள்கையும் அதை நடைமுறைப்படுத்தும் அவரின் பொலீஸ் படையும் இவர்களின் குரல்கள் சுதந்திரமாக தமிழகத்தில் ஒலிக்க இடமளிக்குமா என்பது கேள்விக் குறியே எனவே இவர்கள் ஈழத்தில் சொல்லும் கருத்து அங்கு எதிரொலிக்கும்.... அதுபோதும் ஜெயலலிதா கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத சுயநல அரசியல் சாக்கடை முதலைகளின்... பார்பர்னிய ஆதிக்க பத்திரிகைகளின் பொய்ப் பிரச்சார தொனியை சிறுகச்சிறுக கலங்கடிக்க.....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)