Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் எம்.பி.க்களின் உசார்
#1
தமிழ் எம்.பி.க்களின் உசார்


தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சபைக்குள் எதையுமே உருப்படியாகப் பேசாமல் வெறுமனே சென்று வருகின்றார்கள் என்று ஆரம்பத்தில் தமிழ் மக்கள் பரவலாகக் குறைபட்டுக் கொண்டார்கள். ஆரம்ப நாட்களில் தங்கள் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லையே என்ற விரக்தியிலும் ஆத்திரத்திலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களே பெரும் அடாவடி த்தனங்களில் இறங்கி அமளிதுமளிகளை ஏற்படுத்தினார்கள். சபாநாயகரைத் தெரிவு செய்வதற்காகக் கூடி ய முதல் நாளே இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத வகையிலான வெட்கக் கேடான, காட்சிகளை சபை கண்டது. அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவரே சொங்கோலைச் சபைக்கு வெளியே தூக்கிக்கொண்டு சென்று சில மணித்தியாலங்கள், ஒளித்துவைத்திருந்த நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபை கண்டது.

ஆனால், இப்போது அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களோ அல்லது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களோ பெரும் ரகளைகளில் ஈடுபடுவதை அநேகமாகக் காண முடி யவில்லை. மாறாக, அண்மைக்காலமாக தமிழ் உறுப்பினர்கள் - அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் - தங்களின் நிலைப்பாடுகளை தன்னுறுதியுடன் வெளிக்காட்டுவதில் முனைப்பைக் காட்டுவதைக் காணக்கூ டியதாக இருக்கிறது; சில சந்தர் ப்பங்களில் சபையின் நடுவே குழுமி சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு அமர்க்க ளமும் செய்கிறார்கள். ஆரம்ப நாட்களில் அரசாங்கத் தரப்பினர் நடந்து கொண்டதைப் போன்று அநாகரிகமான செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பு உறுப்பினர்கள் ஈடுபடவி ல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை அனுர்;டிப்பதற்கு கடந்த மாத இறுதியில் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த வைபவங்களில் குழப்ப நிலை ஏற்படுவதற்கு காரணமாயமைந்த இரானுவத்தினரின் தலையீட்டை ஆட்சேபித்து சபைக்குள் சபாநாயகரின் ஆசனம் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூடிய போது செங்கோலுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூ டும் என்ற அச்சத்தில் படைக்கலச் சேவிதர் அவர்களை நோக்கி விரைந்த வேளை, செங்கோலுக்கு எதையும் செய்து அநாகரிகமாக நடந்துகொள்ளப் போவதில்லை என்று அவர்கள் உறுதியளித்து தங்கள் பக்குவத்தை வெளிக்காட்டிய சந்தர்ப்பத்தை இங்கு நினைவுபடுத்துவது அவசியமானதாகும்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதால் தங்களுக்கு ஏற்படுகின்ற விரக்தியையும் வேதனையையும் அடிக்கடி சபைக்குள் வெளிப்ப டுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டும்போது அரசியலமைப்பை அவர்கள் மீறுவதாக ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) உறுப்பினர்களும் ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆவேசம் அடை கின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கும் வாதங்களுக்கு, பதிலளிக்கும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்குவர் என்றும் எச்சரிக்கைகளை விடுக்கிறார்கள்.

இதனிடையே, இன்னொரு தமிழ் எம்.பி.யான தியாகராஜா மகேஸ்வரன் தான் சார்ந்த ஐ.தே.க.வின் கட்டுப்பாட்டை, வரவு-செலவுத் திட்ட குழுநிலை வாக்கெடுப்பின்போது செயற்பட்டி ருக்கிறார். வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத் தரப்புடன் சேர்ந்து ஐ.தே.க.வாக்களித்த போதிலும், மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சேர்ந்து எதிராகவே வாக்களித்தார். அதேபோன்றே நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான வாக்கெடுப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்த போதிலும், மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்புடன் சேர்ந்து எதிராகவே வாக்களித்தார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க குறித்தும் பண்டாரநாயக்கா குடும்பம் குறித்தும் சபைக்குள் சில தினங்களுக்கு முன்னர் மகேஸ்வரன் தெரிவித்த கருத்துகளைக் காரணம், காட்டி அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மகேஸ்வரனின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடந்த வாரம் மறுத்தி ருந்தார்.

பாராளுமன்றம் கூ டும் ஒவ்வொரு நாளிலும் ஒழுங்குப் பத்திரத்தில் அமைச்சர்களிடமிருந்து வாய் மூல விடைகளைப் பெறுவதற்காக, மகேஸ்வரனின் இரு கேள்விகள் இடம்பெற் றிருக்கும். கடந்த வாரம் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்த மறுப்புக்கு பதிலடி யாக நேற்று முன்தினம் அரசாங்கத்திடம் இனிமேல், கேள்விகளைக் கேட்கப் போவதில்லை என்று அறிவித்தார் மகேஸ்வரன். இதனால் பெரும் சங்கடமான, நிலைக்குள்ளான சபாநாயகர் லொக்குபண்டார மகேஸ்வரனிடம் 'நீங்கள் கேள்விகளை, வாபஸ் பெறுகிறீர்களா" என்று கேட்டார். 'எனக்கு விளங்கும் சிங்களத்தில் தான் சொல்கிறேன். நான் எந்தக் கேள்வியை யும் கேட்கப் போவதில்லை" என்று பதிலளித்தார்.

இவ்வாறாக, பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் இப்போது துணிச்சலுடன் தன்முனைப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள். பண்டாரநாயக்கா குடும்பம் குறித்து கடந்த மாத இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் என்.ரவிராஜ் ஆற்றிய கடுமையான உரைக்கு சில தினங்களுக்கு முன்னர் அநுரா பண்டாரநாயக்கா தனிப்பட்ட விளக்கமொன்றை அளித்து அவரை விமர்சித்திருந்தார். அநுரச பண்டாரநாயக்காவுக்கு பதிலளிக்கு முகமாக மீண்டும் நேற்று முன்தினம் விளக்கமொன்றை அளித்த ரவிராஜ், பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்தியம்பினார். எதிர்க்கட்சியில் இருந்த போது சகோதரி திருமதி குமாரது ங்கவை கர்ணகடூ ரமாகத் தாக்கிப் பேசிய அநுரா பண்டாரநாயக்க இப்போது அவருக் காக முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் ரவிராஜ் சாடினார்.

பாராளுமன்ற அரசியல் தங்களுக்கு, விடிவைத் தருமென்ற நம்பிக்கை, இல்லையென்றாலும், தமிழ் எம்.பி.க்களின் தற்போதைய உசார் எமது கவனத்தை வெகுவாக ஈர்க்கவே செய்கின்றன.

லங்காசிறியிலிருந்து சுடப்பட்டது
நன்றி லங்காசிறி இணையநிர்வாகி திரு
சிறீகுகன் அவர்கட்கு
Reply
#2
அவ÷கள் சே÷ந்த இடம் அப்படியான வீரத்தை கொடுத்திருக்கும். இதே போக்கில் அவ÷கள் போனால் இவைக்கும் வரலாற்றில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் .
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)