Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலரும் ஏன் புளொட்டிலிருந்து ஒதுங்கி
#1
தமிழினத்தின் அடிமை விங்கை உடைப்பதற்காக பல தலைவர்களின் கீழ்போராட்ட இயங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஏன்றளைக்கப்பட்ட (புளெட்) இயக்கத்தில் நானும் இனைந்து கொண்டவன் இராணுவப் பயிற்சியும் அரசியல் அறிவும் எமக்கு ஊட்டப்பட்ட அந்த பயிற்ச்சி முகாமில் சந்ததியார் சொல்லிய ஓர் அருமையான அரசியல் ஜெதார்த்தத்தை இடித்துரைத்த வாசகத்தை தமிழீழ மக்களுக்கு சொல்லிக்கொள்வது காலத்தின் தேவையாகும் அந்த வார்த்தை இதுதான் இப்போது நாம் பல போராட்ட இயக்கங்களாக எமது விடுதலைக்காக செயற்படுகிறோம் ஒரு கட்டத்தில் ஒரு தலைவனின் கீழ் அனைத்து போராட்ட இயக்கப்போராழிகளும் ஒன்று பட்டு பொதுவானா எதிரிக்கு எதிராக போராடுவோம்


அப்போதுதான் எதிரியை நாம் வெற்றிகொள்ளமுடியும் தவறினால் இயக்கங்களுக் கிடையில் எதிரிகள் கருத்து மோதல்களை உருவாக்கி மோதலை ஏற்படுத்தி எமது தேசிய விடுதலைப்போரை அர்த்தமற்றதாக்கி எமது இனத்தை அடிமைப் படுத்துவார்கள்.

அவரின் அன்றய வார்த்தைகளை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இன்று கழத்தில் நிற்கும் போராழிகளை நேசித்து ஒரு சாதாரண பொது மகனாக வாழ்து வருகிறேன்.

உண்மையான போராளிகள்
உண்மையான போராழியொருவன் தன் கொள்கையில் உறுதியாக இருப்பான் மற்றவர்களெல்லாம் தங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுகிறவர்களே என்பதுதாண் உண்மையாகும் முகம் தெரியாத உமாமகேஸ்வரனின் தலமையை ஏற்று போராடியவர்கள் அந்த விடுதலையியக்கம் செயலிழந்தபோது என்ன செய்திருக்கவேண்டும்.

கழத்தில் நிற்கும் போராழிகளுடன் இனைந்திருக்க வேண்டும் அல்லது ஒதுங்கி ஓரமாக இருந்து தம்மாலான பங்களிப்பை வளங்கியிருக்கவேண்டும் அவ்வாறு கழத்தில் நிற்கும் புலிகளோடு இணைந்த போராழிகள் போற்றுதற்குரியவர்கள் ஒதுங்கியவர்கள் வாழ்த்தப்படவேண்டியவர்கள் மற்றவர்களெல்லாம் தமிழர்களால் துரோகிகள் என்பதை புரிந்து கொண்டு ஒதுக்கப்படவேண்டியவர்கள் கால ஓட்டத்தில் காணமற் போவார்கள் என்று பொறுமையாக இருந்தோம் ஆனால் எதிரிகள் தகுதியன விலை கொடுத்து இவர்களை இன்றும் புதுப்பிக்கிறார்கள் இவர்கள்முன் சில ஞாயங்களை எடுத்துரை க்கச்சென்றபோது எம்மை வெளியால் விட்டு கதவடைத்து இனத்தின் துரோகிகளுக்கு மட்டும் அனுமதியழித்தார்கள் இதுவே முன்னாள் புளொட் போராழிகளின் ஒன்று கூடல்.

நானும் என்போன்ற பலரும் ஏன் புளொட்டிலிருந்து ஒதுங்கினோம்.
1. இயக்கம் இரண்டாக பிழந்தது சந்ததியாரும் உமாமகேஸ்வரனும் இரண்டு பக்கமாகி இடையில் நின்ற பல அப்பாவிப்போராழிகள் கொலை செய்யப்பட்னர் நாமும் நின்றால் நமக்கும் அர்த்தமற்ற சாவுதான் மிஞ்சும் என்பதை உணர்ந்தபோதே
2. எமது இயக்கத்தின் ஆயுதக்கப்பலை இந்தியா பறித்தபோது ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் தங்கள் உயிர்வாழ்வையும் பதவியையும் பற்றி தலைமை சிந்தித்துக்கொண்டிருந்தது.
3. தமிழீழத்தில் இயக்கத்தின் நிதித்தேவைக்கு புலிகள் விவசாயம் செய்ய ஆரம்பிதிருந்தபோது எமது போராழிகளை வீடு வீடாக மக்களிடம் பாசலுக்கு அனுப்பி மக்களின் விமர்சனத்துக்கு ஆழானது
4. உண்மையான செயற்திட்டங்களெதுவுமின்றி பெருந்தொகை போராழிகளின் வாழ்வை நாசமாக்கிக்கொண்டிருந்தது
5. பெண்போராளிகளை கட்டுப்பாடின்றி வளி நடத்தி கருக்கலைப்பு வரை சென்றது பலரை பச்சை போட்டிலேற்றி பாக்கு நீரிணைக்கு பரிசளித்தது.
6. போதைவஸ்த்து கடத்த போராழிகளை நிர்ப்பந்தித்தது இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்
எமது தலைவர்களுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் உள்ள வேறுபாடு
தனது இயக்கத்தின் தொலைத்தொடர்பு சாதனங்களை இந்தியா பறித்த போது சாகும் வரை உண்ணாவிரதமிருந்து சிறிய தொகை சாதனங்களுக்காக சாவையும் சந்திக்க தாயரானது.

இன்றைக்கு பித்தலாட்டம் ஆடிக்கொண்டிருப்போரே உங்களுக்கு

இந்தப்பாடலின் கருத்தை புரிந்துகொள்ளும் ஆற்றலிருக்கிறதா?
இது நமது புளொட் இயக்கம் வெளியிட்ட பாடல்
புதிய பாதை அழைக்கிறதே தோழா
நாம் புரட்சி வெல்ல உளைத்திடனும் தோழா
பகுத்தறிவை வளர்த்திடனும் தோழா
முடப் பழமைகளை களைந்திடனும் தோழா

வாதிடிச் சாகின்றார் முடர்
இதில் வந்ததென்ன இன்றுவரை தோழா
போராடி வாழ்வதுவே மேலாம்- நாம்
பெறவிருக்கும் விடுதலைக்காய் தோழ

விடுதலைதான் மூச்சென்ற கூட்டம்
இன்று வெளிநாட்டில்
வளமனைகள் வாங்குவதில் நாட்டம்
உனக்கு விழங்கிடுமே அவர்களது நோக்கம்.

உண்மைக்கு மதிப்பழிக்காது தனது மனச்சாட்சிக்கு யார் துரோகமிழைக்கிறானோ அவன் தனது இனத்திற்கும் தனக்கும் துரோகமிழைக்கிறான்.

சேரா உனக்கேன் சேறு

சேரா மேலேயுள்ள கவிதையை படித்து இனியாவது சரியான கவிதைதைகளையும் காலத்தின் தேவைகளையும் புரிந்து செயலாற்றுங்கள்
நல்ல சம்பளம் படிப்பிக்கும் வாத்தியார் வேலை கவிஞ்ஞர் என்ற பட்டம் இது போதாத தமிழினம் இனி அத்தனையையும் மறந்து சேரன் துரோகியென்ற பட்டத்தை தரப்Nபுhகிறார்கள் மாணவர்கள் உங்கள்முன் வரமறுத்தால் வாத்திவேலையும் தொலையும் படித்தமுட்டள் அவன் என்று சிலரை பலர் சுட்டிக்காட்டுவதை அறிந்திருக்கிறேன் உங்களை நேரில் கானுகிறேன் .அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஒரு மதிப்புண்டு உங்களை பாத்து என்ன சொல்வது.

வேண்டுகோள்
அன்பான முன்னைய நாள் போராளிகளே பூலோகசிங்கம் கனடாவில் பெருந்தொகை பணத்துடன் தமிழனத்துக்கெதிரான ஆட்பிடிப்பில் ஈடு பட்டு வருகிறார் கவிஞ்ஞரம் பரப்புரைப் பொறுப்பை எடுத்துள்ளார். சுpறப்பாக பேசி உங்களை நாசமாக்கும் சக்க்தி இவரிடமுண்டு இவர்களின் நாசகார வலையில் வீழ்ந்து வினாகி வீடாதீர்கள். நானும் பல்கலைக்கழகத்திலிருந்துதான் புளொட்டுக்கு புறப்பட்டு காலத்தை வீனாக்கியவன் புலிகளியக்பத்துக்கு போனவர்களை மக்கள் மதிக்கிறார்கள் ஏன் எங்களை பழிக்கிறார்கள். கோப்பை களுவியாவது உயிர் வாழுவோம் உதவாக்கரைகளின் பின்னால்போய் ஏன் இனத்திற்கு துரோகிகளாகுவான்.

மறந்து விடுங்கள்.
மறந்து விடுங்கள் புலிகள் எங்கள் அமைப்பை போராட்டக் கழத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டார்களென்பது மட்டுமே உண்மை. எங்கள் தலைவர்கள் விலையான உண்மையை நாமறியோம் புலிகள் எங்கள் போராடும் உரிமையை மறுக்கவில்லை நாம்தான் ஒதுங்கினோம் ஓடினோம் நம்மில் சிலர் துரோகிகளாகினோம் எதிரிகளின் கைக்கூலிகளாகினோம். எமக்கு தவறான கருத்துக்களை ஊட்டி எம்மை புலிகளுக்கெதிராகவும் இனத்துக்கெதிராகவும் செயற்படுத்திவருகின்றார்கள்
நாம் இன்றைய பேதத்தை மாற்றாவிட்டால் எவருக்கும் வாழ்வில்லை தனிப்பட்டவகையில் பாதிப்புக்களை நீங்கள் சந்தித்திருந்தால் மறந்து விடுங்கள்
தமது சுயநலனுக்கனாக எம்மை சிலர் பாவிப்பதை தடுத்து நிறுத்துவோம் எமது இன நலனுக்காக உண்மையில் செயலாற்ற முன்வருவோம.;

தமிழீழ மக்களுக்கோர் பணிவான வேண்டுகோள் முன்னாள் புளொட் போரழிகளாக இருந்து போராட்டத்திலிருந்து ஒதுங்கிய எம்மை கழங்கப்படுத்தும் அற்ப்பர்கள் புளொட் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் சுயநல வாதிகளும் விலைபோன கூலிகளும் இவர்களென்பதை அறியத்தருகிறோம் புலிகளுக்கோ தமிழர்களுக்கோ உண்மையான புளொட் போராழிகள் எதிரிகளல்ல நாம் சாதாரண மனிதர்களாக வாழ்கிறோம். ஊங்கள் மத்தியில் வாழும் எம்மை தரக்குறைவானவர்களாக பார்க்காதீர்கள் நாம் உங்கள் உறவுகள்.

ஏங்களின் இந்த அறிக்கையை பிரசுரித்து மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்

கனடாவிலிருந்து முன்னாள் புளொட் இயக்கப் போராளிகள்
இன்றய சாதரண தமிழீழ மக்கள
http://www.nitharsanam.com/?art=7721
vasan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)