Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி.
ஞாயிற்றுக்கிழமை 26 டிசெம்பர் 2004 நடேசன்
இயற்கையின் அனர்த்த்தினால் தமிழீழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுமார் 1200 சிறுவர்கள் கொடுமையான முறையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5000 சிறுவர்கள் வரை பாதிக்கப்பட்டு அல்லது படுகாயங்களுக்கு உட்பட்டிருக்கலாமென்று தெரியவருகிறது. இன்று விடுமுறை தினமாகையால் சிறுவர்கள் வீடுகளில் இருந்ததாலும் அதிகாலை நேரம் என்பதனாலேயே இவ்வளவு இழப்புகள் எற்பட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் அனைத்துச் செய்திகளும் இலங்கை அரச தரப்பால் இருட்டடிப்புப் செய்யப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையில் இழப்புகளைக் குறைத்து வெளியிட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.
சிறுவர்கள் தொடர்பாக கரிசனையுடன் நடந்துகொள்வதாக சிறுவர் உரிமைகளில் கவனமுள்ளவர்களாகவும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் யுனிசெவ் மற்றும் யுஎன்;ஏச்சிஆர் போன்ற அமைப்புகள் தமிழீழப் பிரதேசங்களில் எந்தவித உதவிகளையும் இதுவரை வழங்கவும் இல்லை வழங்க முன்வரவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: நிதர்சனம்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மற்ற தளங்கள் பார்ப்பவர்களுக்கு அரசியல் இலாபம் தேடுவது யாரென்பது புரியுமென்பது எனது நம்பிக்கை..
பாதிக்கப்பட்டேருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
26.12.2004
பிந்திய விபரங்கள்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300 சடலங்கள்ää
வாழைச்சேனை வைத்தியசாலையில் 80 சடலங்கள்
திருமலையில் 150 சடலங்கள்ää
மூதூரில் 200 இற்கு மேற்பட்ட சடலங்களää;
அம்பாறையில் 600 சடலங்கள்ää
அம்பாந்தோட்டையில் 600 சடலங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நிந்தவூரில் அரபுக்கல்லூரி மாணவர்கள் 45 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் பஸ் வண்டியில் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். சந்தையில் கூடியிருந்தவர்கள் 2000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பொத்துவிலுடனான தொடர்பு அருகம்பை பாலம் உடைந்ததால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் காடுகளினூடாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உல்லாச பயணிகள் பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
முல்லைத்தீவிலும் பலத்த சேதங்களும் உயிரழிவும் ஏற்பட்டிருக்கிறது. விபரங்கள் தெரியவில்லை. யாழில் செம்பியன்பற்றுää தாளையடி ஆகிய பகுதிகளில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்களின் உடைமைகள் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எங்கும் சோகமும்ää அவலமும் காணப்படுகிறது. ஜனாதிபதி தனது விஜயத்தை ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்புகிறார். தேசிய அனர்த்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெருமளவு பெண்களும்ää குழந்தைகளும்ää வயோதிபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.
முப்படையினரும்ää பொலிசாரும் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கீரிமலை பகுதியில் இறந்தவர்களுக்கு கிரியை செய்ய சென்றவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
26.12.2004
கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளது
கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
மட்டக்களப்பு நாவலடி
மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் சுமார் 300 மீனவர் குடும்பங்கள் வாழ்ந்தன. அதில் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தொடர்ந்து சடலங்கள் வந்தவண்ணமுள்ளன.
மாத்தறை
மாத்தறையில் 200 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
26.12.2004
தொடரும் அனர்த்தங்கள்
சடலங்கள் ஆங்காங்கே வீதிகளில் சிதறிக்கிடப்பதாகவும்ää பல பிரதேசங்களில் இன்னும் மீட்புப்பணி ஆரம்பிக்க முடியாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சில இடங்களில் சடலங்களை தமது தோள்களில் காவிச்செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில்
பருத்தித்துறையில் 42 சடலங்கள்ää வலவெட்டித்துறையில் 06 சடலங்கள்ää சாவக்கச்சேரியில் 26 சடலங்களää; யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கிண்ணியா
கிண்ணியா வைத்தியசாலையில் முற்றாக சேதமடைந்துள்ளது. ஊழியர்களும்ää நோயாளிகளும் இறந்துள்ளனர். 300 சடலங்கள் கிண்ணியா பாடசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்
இலங்கைக்கு அவசர உதவிகளை செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது
26.12.2004
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சடலங்கள்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300க்கு மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சடலங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. காயமடைந்தவர்கள் தொகை கணக்கற்றது. மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில். நூற்றுக்கு மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காத்தான்குடியில் 45க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடக்கம் செய்வதற்காக மக்கள் பள்ளிவாசல்களில் கூடி நிற்கின்றனர்.
வவுனியா வைத்தியசாலையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமலையில் 150க்கு மேற்பட்டவர்களின் சடலங்களும்ää மூதூரில் 150 சடலங்களும்ääகாலி ஆஸ்பத்திரியில் 100 சடலங்களும் இதுவரை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பாறை மாவட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. கணக்கெடுப்பு நடத்த முடியாத நிலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென மக்கள் எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியே இந்தியாவிலும்ää இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதென கூறப்படுகிறது. 8.5 ரிஜ்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக புவி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரிசாää கேரளம் தமிழகத்திலும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
இலங்கை அரசு அனர்த்தங்கள் தொடர்பான பணிக்கென விஷேட குழு ஒன்றை அமர்ததியுள்ளது. முப்படையினரும்ää பொலிசாரும் அவசர பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பிரதமருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரமாண்டமான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மக்கள் சமைத்த உணவை பெறுவதும் கடினமாகியுள்ளது.
கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் 150 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் மின்சாரம்ää தொலை தொடர்புகள் முற்றாக சீர்குலைந்துள்ளன.
26.12.2004
தாங்கமுடியாத துயரம்
பெரும் கடல் பெருக்கினால் குறிப்பாக கிழக்கிலும் நாடுபூராவும் பதட்டம் நிலவுகிறது. பலர் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூரில் ஆறு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
மட்டு அம்பாறை கரையோரக் கிராமங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ;பாதிக்கப்பட்டுள்ளன
பொத்துவிலிருந்து திருமலை வரை இப்பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
பலநூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
மூதுர் வாகரை நாவலடி கல்லடி மருதமுனை அக்கரைபற்று கழுதாவளை கிண்ணியா பொத்துவில் புதூர் என பலபிரதேசங்கள் பேரனர்த்தத்தை சந்தித்துள்ளன. கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியதால் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிää ஒரிசாவிலும் பலநூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்h. கிழக்காசியாவில் இந்தோனேசியா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகியவற்றில் இந்த கடல் பெருக்கு ஏறப்பட்டுள்ளது மாலை தீவு மூன்றில் இரண்டுபகுதி கடலில் மூழ்கி உள்ளது
யாழ்நாகர்கோயில் பகுதிகளிலும் பலர் இடம்பெயாந்;துள்ளனர். வல்வெட்டித்துறை நாகர்கோவில் பகுதிகளிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் பலர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய இலங்கை மீனவர்கள் பலநூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நில நடுக்கமும் உணரப்பட்டது. பல உயிர்களும் உடைமைகளும் கடலினால் காவு கொள்ளப்பட்டுவிட்டன
பிரதமர் தலைமையில் அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெறுகிறது. அவசர நிலைதோற்றுவிக்கப்படலாம்
தங்காலை காலி அம்பாந்தோட்டை மாத்தறை போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை எங்கும் மரண ஓலம். எமது நகரங்களும் கிராமங்களும் பேய்க் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.
முல்லைதீவு யாழ்வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழந்துள்ளன. சடலங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. தாளையடிப்பகுதியில் இன்னும் பல உடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது
உயிரிழப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது
மட்டக்களப்புää திருமலைääகிண்ணியாää காலிää மாத்தறைää அம்பாந்தோட்டைää தங்காலை வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
இலங்கையில் அனர்த்தங்கள் பற்றி தெரிவிப்பதற்கு தொலை பேசி இலக்கங்கள்
0112 437017ää 0112 542871ää 0112 347615ää
பெக்ஸ் - 0112 321404.
26.12.2004
தொடர்ந்து கடல் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை?
தொடர்ந்து கடல் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இது நடந்து முடிந்த விடயம் என்றும் இலங்கை புவி அதிர்ச்சி தாக்குவதற்கான நிலைகளில் இருந்து பாதுகாப்பாகவே இருக்கிறது. எனினும் வேறு நாடுகளில் ஏற்படும் பூகம்பங்களால் இலங்கையில் பெருமளவு கடல் பெருக்கங்கள் ஏற்படலாம் என்றும் புவியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
26.12.2004
கொழும்பு முகத்துவாரத்தில் 5000 பேர் இடம்பெயர்வு
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் ஜேசு சீவிக்கிறார் ஆலயத்தில் சுமார் 5000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
காலிää மாத்தறை போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் சடலங்களாலும்ää காயப்பட்டவர்களாலும் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. குழந்தைகளும் சிறுவர்களுமே பெருமளவுக்கு பாதிக்ப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்கரையில் இருந்த மீனவர்கள் பலரை காணவில்லைää
கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோயாளிகள் நீரில் மூழ்கியுள்ளனர். ஈச்சிலம்பற்றையிலும் இதுபோன்ற ஒரு அவலம் நிகழந்ததாக கூறப்படுகிறது.
கொழும்பு காலிமுகத்திடலிலும் நீர் மட்டம் உயந்து வருகிறது. வெள்ளவத்தை இராமகிருஷணன் மிசன் வரை தண்ணீர் உயர்வதும் வடிவதுமாக இருக்கிறது. வாவிகள் ஆறுகள் பெருக்கெடுக்கின்றன
26.12.2004
20ää000 மக்கள் பொது இடங்களில்
மட்டக்களப்பில் 20ää000 பொது மக்கள் பாடசாலைகள்ää தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தம்பிலுவில்ää திருக்கோயில் பகுதிகளில் சடலங்களை தேடும் பணியில் அதிரடிப்படையினரும் தொண்டரடிப்படையில் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். திருக்கோயில் வைத்தியசாலையில் 80 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு நோக்கி மேட்டுநிலம் நோக்கி செல்கிறார்கள்.
கல்முனையில் 1500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனää கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.
மந்திகை ஆஸ்பத்திரியில் 62 சடலம் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு களப்பாடு ஆகிய பிரதேசங்களில் 300 பேர் இறந்திருக்கலாம் எனவும் 60 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை 10ம் நம்பர்ää படுக்கைää நிலாவெளிää அலஸ்தோட்டம்ää மூதூர்ää சம்பூர் போன்ற பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை செஞ்சிலுவை சங்கம்ää அரசää தனியார் துறையினரின் வாகனங்களில் சடலங்களும்ää காயமடைந்தவர்களையும் மட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவண்ணம் இருக்கின்றன.
26.12.2004
இந்தியா உதவி
இந்தியா இலங்கையின் அனர்த்தங்களில் இருந்து மீட்பதற்கு ஆறு ஹெலிகொப்டர்களையும்ää இரண்டு கப்பல்களையும் உதவியிருக்கிறது. இரண்டு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
26.12.2004
வேண்டுகோள்;;
சர்வதேசம் வாழ் இலங்கையர்கள் இன்னலுற்ற மக்களுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இப்போதிருந்தே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் நியூஸ் வெப்தளம் வேண்டுகோள் விடுக்கின்றது. அதனை உரிய வழிமுறைகள் மூலம் அந்த பேரவலத்தில் உழலும் மக்களுக்கு சென்றடையகூடிய விதத்தில் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.
26.12.2004
கிழக்காசிய பூமி அதிர்ச்சியின் தொடர்ச்சியே
பூமி அதிர்ச்சி காரணமாகவே இந்த பேரவலம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தோனேசியாää வங்காளதேசப் பகுதிகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறைää பருத்தித்துறைää முல்லைத்தீவு பகுதிகளிலும் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.
பேரழிவு
மரணங்கள்ää காயங்கள் எண்ணுக்கணக்கற்ற அளவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
மூதூர்
மூதூரில் கடல் நீர் பெருக்கெடுப்பால் நூற்றுக்கணக்கானோர் கொல்லபட்டுள்ளதாகவும்ää பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை பொத்துவில் கடற்கரை பிரதேசத்திலுள்ள மக்கள் என்னவானார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அங்கிருந்து மக்கள் எந்த இடங்களுக்கு சென்றார்கள் என்பதும் தெரியவில்லை.
தந்தையின் முன்னிலையில் பிள்ளைகள் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபமும் நிகழ்ந்தது
26.12.2004
நாட்டில் பரவலாக கடல் நீர் அனர்த்தம்;
நாட்டின் அனைத்து கடற்கரை பிரதேசங்களில் நீர் பெருக்கெடுப்பு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். கடற்கரை பிரதேசங்களில் உள்ள மக்கள் உயர்வான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டள்ளார்கள். தென் மாகாணம் காலிää தங்காலை ஆகிய பிரதேசங்களிலும் கடல் நீர் பெருக்கெடுப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு வநதளைää ஹேகித்த பகுதிகளில் கடல் நீர் திடீர் அதிகரித்துள்ளது. முப்படையினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
26.12.2004
கிழக்கில் மக்கள் அவலம்ää பேரழிவு
மட்டக்களப்பு அம்பாறை கடற்கரை பகுதிகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும் சில கிராமங்கள்ää நகரங்கள் பேரழிவுக்கு உட்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக கல்முனைää துறைநீலாவணைää மருதமுனைää கல்லாறுää காரைதீவு ஆகிய கரை பிரதேசங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. சில ஆட்கள் நீரில் அடித்துச் செல்லபட்டதாகவும் கூறப்படுகிறது. மக்கள் வீடுகளின் கூரை மீதும் மரங்களின் மீதும் ஏறி நிற்பதாகவும் கூறப்படுகிறது. தொலை பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மக்கள் நீரால் இழுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
26.12.2004
மட்டக்களப்புää திருகோணமலை கடற் பிரதேசங்கள் கடல் பெருக்கெடுப்பு
இன்று காலை 7.00 மணியளவில் திடீரென மட்டக்களப்பு திருகோணமலை கடற்கரை அண்டிய பிரதேசங்கள் சிலவற்றில் கடல் மட்டம் உயர்ந்து கடல் நீர் தரைப்பகுதிக்கு பரவரத் தொடங்கியுள்ளது. மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு கல்லடி பகுதியிலும்ää திருமலை 10ம் நம்பர்ää படுக்கை மற்றும் நகரப் பகுதிகளிலும் கடல்நீர் பரவியுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர்.
tamilnewsweb.com
Truth 'll prevail