Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச மகளிர் தினம்
#1
சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" -
சில கருத்துக்கள்!


சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.

~சாதாரணப் பெண்கள்| என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்;ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம்.

இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Women?s Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினு}டாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.

முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம்.

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபுூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது Biological Foundation ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.

இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்;கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நு}ற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நு}ற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நு}ற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.

முதலாளித்துவதற்;கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pure Feminists என்று சொல்லக் கூடிய து}ய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியுூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL)வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY)என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

தமிழ் நு}ல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நு}ற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.

உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன|

(தொல்காப்பியம்-பொருள்-களவு-7)

-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற் குரிய|

- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex) இரக்கம் உடையவளாக (The Gentle sex) மெல்லியவளாக (the softer sex) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக (The weaker sex) உருவகிக்கப்படுகின்றாள்.

சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும்

வல்லிதின் விருந்து புறந்தருதலும்

சுற்றம் ஓம்பலும்

(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)

-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.

அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

இவை மட்டுமல்ல நேயர்களே,

கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நு}ற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.

சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நு}ல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானு}றில் ஒரு பாடலைப் பார்ப்போம். புூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையுூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.

~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது,
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம்,
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து,
அட்டவேளை வெந்தை வல்சியாக,
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்|- (புறநானு}று 246)

இந்தப்பாடலின் கருத்தென்ன?

வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!

என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.

பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் து}ண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம்| என்கின்ற நு}ல் கீழ்வருமாறு கூறுகின்றது.

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்| - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் து}ண்டுகின்றது.

இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.

இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நு}ல்களும் புராண நு}ல்களும் பரப்பின.

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்| என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு,
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.

இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானு}று, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நு}ல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.


இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

http://www.tamilnaatham.com/articles/
kaRuppi
Reply
#2
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

சொ. அமிர்தலிங்கம்

மனிதன் ஆரம்பகாலத்தில் வேட்டையாடித் திரிந்த வேளையில் பெண்களையும் வேட்டைக்கு அழைத்துச் சென்றான். ஆணுக்கு ஆதரவாகப் பெண் இருந்தாள். பெண்ணுக்குப் பாதுகாப்பாக ஆண் இருந்தான். ஆனால், வேட்டையாடியோர் நாட்கணக்காக காடுகளில் இருக்க வேண்டிய நிலையும் வனவிலங்குகளின் தாக்குதல்களும் இடம்பெறத் தொடங்கவே பெண்களை வீட்டினில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வேட்டைக்குச் செல்ல நேர்ந்தது. இது பின்னர் நாடோடிச் சமுதாயத்திலிருந்து இனக்குழுச் சமுதாயமாக மாறியது. இந்த வீட்டினுள் முடங்கிய நிலை தான் ஆரம்பத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தமாகும். வீட்டினுள் சுகபோகப் பொருளாகவும், சமையல் செய்பவராகவும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரியவராகவும், முதியோரின் பராமரிப்பாளராகவும் உடைகள் சுத்தம் செய்பவராகவும், வீடு வளவு சுத்திகரிப்பவராகவும் மருந்து கொடுக்கும் மருத்துவராகவும், மனைவியாகவும், தாயாகவும், சகோதரியாகவும் வீட்டினுள் இருந்தவாறே பல சுமைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்குள்ளானாள். இப்படியாக வீட்டுச்சிறை அவர்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டியது. இதனால் பெண் விடுதலை, புரட்சி எண்ணங்கள், மறுமலர்ச்சி, அங்கலாய்ப்பு என்பன பெண்களிடம் தோன்றின. பெண்கள் ஆண்களுக்கு சரி நிகரானவர்கள், சரிசமமானவர்கள் என்ற எண்ணமும் அவர்களிடையே தோன்றியது. இந்தச் சிறைக்கூடங்களான வீடுகளிலிருந்து வெளி உலகை நாடி விடுபட அவர்கள் முனைந்தனர். "உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிருவாகம்" என கார்ல்மாக்ஸ் கூறியுள்ளார். ஆண்கள் உற்பத்திச் சக்தியைப் பெற்றதனால் வீட்டினுள் பெண்கள் அடைபட்டனர். இதனால் அடிமைத்தனம் உருவாகி அது விடுதலை வேட்கைக்கு வித்திட்டது. ஆண்டான், அடிமை என்ற சமுதாயம் உருவாகியது. ஆண் ஆள்பவனாகவும் பெண் அடிமையாகவும் கணிக்கப்பட்டாள். தமது கணவனின் சொத்துகளை பராமரிக்கத் தேவையான சக்தியைப் பெற்றுத்தரும் கருவியாக பெண் பயன்படுத்தப்பட்டதனால், அவளிடம் விடுதலை எண்ணம் உதயமானது. இரண்டாம் நிலையினராக ஆண்கள் பெண்களை கருதிய நிலையை மாற்றமுனைந்தனர்.

கிரகித்தல் தன்மையில், பதில் சொல்லும் ஆற்றலில் ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் திறமைசாலிகள் என ஆய்வுகள் கூறுகின்றன. கிரகித்தலிலும், சொல்லும் தன்மையிலும் ஆண்களின் மூளை ஒரு சத வீதமாக இயங்கும் போது பெண்களின் மூளை ஆறு சதவீதமாக இயங்குகிறது என்பர் ஆயவாளர்கள். எனவே, கிரகிக்கும் தன்மை, புரிந்துணரும் தன்மை, பொறுமை, உரிய பதில் கூறும் தன்மை, சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயலாற்றும் திறமை, பெண்களிடம் அதிகம் உண்டு. குடும்பமானது வறுமையில் துவளும் போது ஆண்கள் செய்வதறியாது இருக்கும் நிலையில், பெண்கள் இருப்பதைக் கொண்டே குடும்பத்தை நடத்தக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். இன்னல்களுக்குத் துவண்டு விடாது, புத்துணர்வூட்டி குடும்பத்தை பரிதவிக்க விடாது செலுத்துபவள் பெண்ணே. பெண்கள் வீட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் உழைத்துள்ளனர். தமிழகத்தில் மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் வீரவேங்கைகளாக இருந்து, பெண்கள் தமது பிள்ளைகளை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பியதை புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் கூறுகின்றன. சென்று வா மகனே! வென்றுவா! என தட்டிக் கொடுத்து அனுப்பும் பெண்கள் எம்மிடையே இருந்துள்ளனர். 15 ஆம் நூற்றாண்டிலே பிரான்சு பிரித்தானியாவின் அச்சுறுத்தலுக்குள்ளாகிய போது பிரான்சு நாட்டு மன்னன் சாள்ஸ் செய்வதறியாது மறைந்து வாழ முற்பட்டான். அப்போது வீரவேங்கையாக ஜோன் ஒப் ஆர்க் என்னும் பெண்மணி சாள்ஸ் மன்னனுக்கு உறுதுணையாக இருந்து ஆண் உடைதரித்து போராடி உயிர் துறந்தாள். இவர் வீரப்பெண்களின் முன்னோடி. இவள் ஆணுக்குச் சமனாக சமரில் ஈடுபட்டாள் என்பது வரலாறு தந்த உண்மை.

பெண் விடுதலை

18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பெண்கள் விடுதலைக்காகப் போராட்டங்கள் வெடித்தன. 1792 ஆம் ஆண்டு மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதிய "பெண்களது உரிமைகளினை நியாயப்படுத்தல்" (VINDICATION OF THE RIGHTS OF WOMEN) என்ற நூல் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் உரிமைகள் பல எடுத்து இயம்பப் பெற்றன. 1830 இல் அமெரிக்காவில் பெண் விடுதலைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. 1869 இல் இங்கிலாந்து தேசத்தவரான ஜான்ஸருவர்ட்மில் எழுதிய "பெண் அடிமை நிலை" என்னும் நூல் உணர்ச்சி பூர்வமான நூலாக அமைந்தது. 1848 ஆம் ஆண்டு நியுயோர்க் நகரில் பெண்களின் உரிமைக்காக ஒரு மகாநாடு நடைபெற்றது. அதில் அரசியலும், சொத்துரிமையும் தான் விடுதலைக்கு வழிவகுக்கும் என எடுத்து இயம்பப்பட்டது. இந்த மகாநாடுதான் நியுயோர்க்கில் செனிகாபோல்ஸ் நகரில் நடைபெற்ற பெண்ணிலைவாத முதலாவது மகாநாடாகும். இதில் பெண்ணிலைவாதிகள் பலர் கோரிக்கைகள் பல விடுத்தனர். திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, கல்வியில் அதிக வாய்ப்பு, தொழில், வணிகத்துறையில் வாய்ப்பு, சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து என்பன பிரேரிக்கப்பட்டன. இந்த மகாநாட்டின் பிரதிபலனாக அமெரிக்காவில் விவாகரத்து முதன்முதலாக சட்டமாக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பெண்களுக்காக வாதாடியவர் பாஸெட் அம்மையார். அடிமை முறையை ஒழிக்கப் பாடுபட்ட பெண்மணி எலிசபெத்ஸ்டான்டன் என்பவரையும் வரலாறு மறுக்க முடியாது. 1960 இல் அமெரிக்காவில் "தேசிய பெண்கள் அமைப்பு" (NATIONAL ORGANISATION OF WOMEN) ஏற்படுத்தப்பட்டது. இது பெண்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகும். பெண்ணியக் கொள்கைகள் இன்று சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. பெண்மை என்பது பெண்களுக்குத்தான் உரியது என்றும், ஆண்மை என்பது ஆண்களுக்குத் தான் உரியது என்றும் உள்ள சித்தாந்தத்தை எதிர்க்கிறது. பெண்ணியம், கிரேக்க யுத்தத்திலே பெண்மைக்காகப் போராடிய லைஸிஸ்ராட்ட என்பவர் தனது நோக்கில் வெற்றி கண்டார். ஆணாதிக்கத்திற்கு எதிராக மட்டுமன்றி சம கூலி, சம வாய்ப்பு, சம உரிமை, மனித விடுதலை என்பவற்றிற்கும் போராடினார். ரேஸ்ரஸே என்பவர் 1860 தொடக்கம் 1890 வரை பெண் விடுதலைக்காக தன் வாழ்வினையே அர்ப்பணித்தார். "ஆசியாவிலே பெண்களும் கல்வி அபிவிருத்தியும்" என்னும் கிறேஸ் சி.எல்.மார்க் எழுதிய நூல் நியுயோர்க்கில் வெளியிடப்பட்டது. இந்த நூல் பெண்களின் கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், பொருளாதாரப் பங்களிப்பு என்பன பற்றி ஆராய்ந்துள்ளது. இதில் ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, தாய்வான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை என்னும் நாடுகளிலுள்ள பெண்களின் நிலை பற்றி ஆராய்ந்துள்ளது. பெண்களை உழைப்பிற்குப் பயன்படுத்துதலும், குறைந்த செலவில் உழைப்பைப் பெறுவதும் ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ளது என்பதை இந்நூல் விளக்கும். பெண்களுக்குரிய தனியான சில பண்புகள் தான் அவர்களை தாழ்வு மனப்பான்மைக்குட்படுத்தியுள்ளன. அவர்களது இளகிய மனம், அழகு, இரக்ககுணம், விட்டுக் கொடுக்கும் தன்மை, பயந்த சுபாவம், பரிதாபகுணம், மென்மை என்பன அவர்களது விழுக்காடுகளாகக் காணப்படுகின்றன. எனவே, அவர்களது அபிலாஷைகள், தேவைகள், உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பனவற்றை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கட்டாய பொறுப்பாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் பெண்களுக்கு உரியவை. இவற்றிற்றான் பெண்மை பொதிந்துள்ளது. எனினும், அவள் வீரப்பெண் பரம்பரையைச் சேர்ந்தவள் என புராணங்கள் கூறுகின்றன.

பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம்

பெண்ணியம் என்பது பெண்ணிலை வாதமாகும். இது 1869 இல் செயற்படத் தொடங்கிய ஒரு அமைப்பாகும். பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது காலங்காலமாக அடிமைத்தளையில் வாழும் பெண்களுக்கு விடுதலை வேட்கை ஊட்டி, கல்வி அறிவு மூலம் விழிப்புணர்ச்சியடையச் செய்யும் முறையாகும். அத்துடன் ஆண்களுக்குச் சரி நிகரானவர்கள் பெண்கள் என்பதையும் இது வலியுறுத்துகின்றது. இது பெண்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. பெண்ணியமானது பெண்களின் சிக்கல்கள், பிரச்சினைகளைப் புரிந்து விடுபட எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற அரசியல் பிரதிநிதித்துவம் பெற ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். எனவே, பெண்ணியம் என்பது பெண்களின் நிலைமை மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். பெண்ணியம் மூலம் ஒரு சமூகத்தை நடாத்தும் ஆற்றல் பெறலாம். எனவே, விடுதலைக்கு உரிமைக்குரல் கொடுக்கும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதே பெண்ணியமாகும்.

பால் நிலைவாதம்

பால் நிலைவாதம் என்பது இருபாலாரான ஆண், பெண் ஆகியவர்களை இணைத்து நோக்கும் ஒரு பதமாகும். பால் நிலை என்பது உயிரியல் உருவாக்கமல்லாத சமூக உருவாக்கமாகும். பாலியல் என்பது உயிரியல் அடிப்படையாக ஆண், பெண் பால் வேறுபாட்டைக் குறிக்கும். ஆனால், பால் நிலைவாதத்தில் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமானவை என வெவ்வேறு உருவாக்கங்களுண்டு. பெரும்பாலும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளமையே அதிலுள்ள குணவியல்பாகும். ஆண், பெண் என்போரின் தேவைகள், உரிமைகள், பொறுப்புகள், பங்களிப்பு என்பனவற்றை பால் நிலைவாதம் நோக்கமாகக் கொண்டது. எனவே, சமூகமானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைகளில் ஒன்று பால்நிலை வாதமாகும். பால் நிலைவாதத்தில் பெரும்பாலும் பெண்கள் ஆண்களில் தங்கியுள்ளனர். தீர்மானம் எடுத்தலில் ஆணின் முக்கியத்துவம் அதிகரித்துக் காணப்படும். எனவே, பால் நிலைவாதத்திலும் பார்க்க பெண்கள் சரிநிகராக வாழ பெண்ணியம் மூலமே முயற்சி செய்கின்றனர்.

மதக்கோட்பாடுகளும் பெண்களுக்கெதிராக ஆண்களுக்குச் சாதகமான கருத்துகளையே தெரிவிக்கின்றன. சகல மதங்களும் பெண்களை இரண்டாவது நிலையிலேயே கணிக்கிறது. ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர் கூட பெண்ணாயில்லை. முழுச்சீடர்களும் ஆண்களே. புத்தபிரான் இல்லறத்தில் மனைவியைத்துறந்து பௌத்தமத போதனையில் ஈடுபட்டார். இந்து சமயகுரவர்களான நால்வரும் ஆண்களே. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு பள்ளிவாசல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்களை இரண்டாந்தர நிலைக்கு தள்ளிய மதக்கோட்பாடுகளை உடைத்தெறிந்து முன்னேற பெண்ணியவாதிகள் முனைந்துள்ளர். இஸ்லாம் மதத்தில் பெண் மொட்டாக்குடன் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டாள். சுதந்திரமாக அவள் வெளியே செல்ல முடியாதவாறு மதம் கட்டுப்படுத்தியது.

-தொடரும்.

--------------------------------------------------------------------------------
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-1.htm
Reply
#3
அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

பெண்மையின் வரலாற்றை கூறும் கட்டுரைகளை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் இருவிழி மற்றும் ஸ்டாலின்.
அடுத்த கட்டுரையையும் எதிர்பார்க்கின்றோம்.

Reply
#4
கட்டுரை இணத்தமைக்கு நன்றி.


சோதனைகள் தாண்டி சாதனைகள் படைக்க பெண்மையின் சிறப்பை எடுத்துரைக்கும் நாளான மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்.
Reply
#5
மகளிர் தினத்தில் வாழ்த்த இந்த இரண்டு பேரும் தானா இருக்கினம்
kaRuppi
Reply
#6
கறுப்பி மகளிர் தினத்தில் வாழ்த்து வாங்குவதற்கு மகளிர் தினம் என்ன புதுவருடமா அல்லது காதலர் தினமா அல்லது......? புரியவேயில்லையே......????????????????
:::: . ( - )::::
Reply
#7
கறுப்பி"ஸமகளிர் தினத்தில் வாழ்த்த இந்த இரண்டு பேரும் தானா இருக்கினம்



நானும் வாழ்த்துறன் அது சரி யாரை வாழத்திறது மகளிரையா? அல்லது அந்த தினத்தையா? அல்லது உங்களையா?விழக்கமா சொன்னா இன்னும் வடிவா வாழத்தலாம்[/quote]
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#8
மகளிர் தினம்,
வாழ்த்துத் தெரிவித்து கூடிக்குலவி மகிழ்ந்திருக்கும் நாளல்ல. உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என கருதிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அவர்களின் பிரச்சினையை உலகம் அறிந்து கொள்ளவைப்பதற்காக உருவாக்கியது. இந்நாளில் வாழ்த்து தெரிவித்து மகிழ்வதைவிட பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தி ஒரு விழிப்புணர்ச்சியினை கொண்டு வர முயற்சித்தால் சிறப்பாயிருக்கும். Idea
<b>
...</b>
Reply
#9
ஆகா சுடர் உங்களுக்கு விழங்கியிருக்கு ஆனால் இங்கு அய்ரோப்பாவில் எல்லாமே வியாபார விளம்பர விழா ஆகி விட்டதால் விளக்கம் தெரியாமல் எங்கடை சில ஆக்களும் ஏதோ பிறந்தநாள் கலியாண நாள் மாதிரி மகளிர் தினத்திற்கும் வாழ்த்து தெரிவிச்சு கொண்டு திரியினம்; அய்ரோப்பியர் என்ணெண்டா பெண்கள் சேந்து தண்ணியடிச்சிட்டு ஆடிட்டு அடுத்தநாள் வேலைக்கு வரேக்கை தலையிடியிலை வருகினம் என்ணெண்டு கேட்டா மகளிர் தினம் கொண்டாடினவையாம் அய்யோ அய்யோ எஙகடை மகளிரும் ஒரு கூட்டம் இந்த பாணியிலை மகளிர் தினம் கொண்டாடினவையாம் எண்டு கேள்வி சரி கொண்டாடட்டும் நான் ஏதும் சொல்ல போய் அவை உடைனை ஆணாதிக்கம் எண்டு கத்த ஏன் வம்பை காசு குடுக்காமல் வாங்குவான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#10
<b>ஆணாதிக்க சிந்தனையை முறியடிக்கும் செயற்பாட்டை ஆண்களுக்கு எதிரான செயற்பாடாக கருதிவிட கூடாது</b> - <i>தமிழ்விழி</i>

ஆணாதிக்க சிந்தனையை முறியடிக்கும் செயற்பாடேயன்றி ஆண்களுக்கு எதிரான செயற்பாடாக கருதிவிட கூடாது. இன்று எமது தாயகத்தில் இடம் பெறுகின்ற பெண்கள் எழுச்சிநாள் செயற்பாடுகளுக்கு பெரும்பாலான ஆண் சகோதரர்கள் தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தை சேர்ந்த தமிழ்விழி தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அனைத்துலகப் பெண்கள் எழுச்சிநாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

<i>எமது வாழ்க்கையோட்டத்தில் குடும்ப உறவுகளுடன் நாம் இணைந்து வாழுகின்றோம் பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் வெவ்வேறு கோணத்தில் சுதந்திரம் வழங்கப்படுகின்றோம். இந்த நிலை மாறவேண்டும் எனவும் என தனதுரையில் தமிழ்விழி கேட்டுக்கொண்டார்.</i>
...
.......
http://www.sankathi.org/index.php?option=c...a626ca7341d24de
Reply
#11
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

சொ. அமிர்தலிங்கம்

(நேற்றைய தொடர்ச்சி)

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

ஆண்டாண்டு காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு ஒரு சுகபோகப் பொருளாகவே ஆண்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் பாலியல் துஷ்பிரயோகம், வரதட்சணைக் கொடுமை, விபசாரம், வறுமை, வேலைவாய்ப்பின்மை என்பன முக்கிய பிரச்சினைகளாகும். இதிகாசங்களில் கூட பெண்கள் பட்ட அவஸ்தையை நாம் அறிவோம். இராமாயணத்தில் பிறர் மனைவியான சீதையை அபகரிக்க முனைந்தான் இராவணன். இதனால் கடல் கடந்து இந்தியா சென்று சீதையைக் கடத்தி இலங்கைக்கு கொண்டு வந்தான் இராவணன். பாரதத்தில் பஞ்சாலியின் துயிலை உரிந்து சபை முன் நிறுத்த முற்பட்டான் துச்சாதனன். இப்படியாக ஆதிகாலத்திலிருந்து பெண்கள் பிரச்சினைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்தியா- பாகிஸ்தான் போர், பாகிஸ்தான்- பங்களாதேஷ் போர், ஆப்கானிஸ்தான் போர், ஈராக் போர் போன்றவற்றில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும், பலியாகியுமுள்ளனர். பெண்கள் பல பிரச்சினைகளை தம் சிரமேல் கொண்டுள்ளனர். கணவனின் கொடுமைகள், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயம், தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், மனக்கசப்புகள், செக்ஸ் அதிருப்தி, ஆடம்பர, டாம்பீக வாழ்வு, கணவரின் சந்தேகம், பணமோகம், வறுமை, மனஅழுத்தம், போதைவஸ்துகள், வீட்டுச்சுமையும் வேலைச் சுமையும் போன்றன அவர்களது வாழ்வைச் சீரழிக்க முனைகின்றன. எனவே பெண்களை பாலியல் வன்முறைகள் உடல் ரீதியாக, உள ரீதியாகப் பாதித்துள்ளன. இலங்கையில் 1995 க்கும் 2005 க்கும் இடையில் பதினொரு வருடங்களில் 12,000 பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் முறைப்பாடுகள் புலப்படுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட 35 சதவீதத்தினர் முறைப்பாடு செய்வதில்லை. அதற்குக் காரணம் பயம், வெட்கம், ஏழ்மை, சமுதாய இழி சொல், அச்சுறுத்தல் என்பனவாகும். 2004 இல் மாத்திரம் 1432 பாலியல் சம்பவங்கள் பொலிஸில் பதியப்பட்டுள்ளன. ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு 1995 இல் 542 முறைப்பாடுகளே இருந்தன. இலங்கையில் தினமும் 4 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பாலியல் வல்லுறடு என்பது ஒன்றைப் பொறுவதற்காக இன்னொன்றை இழத்தல், பலாத்காரமாக ஈடுபடுதல் என்பனவற்றால் ஏற்படும் உடலுறவாகும். இந்திய நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டு பீகார் இராஜஸ்தான் வழக்கு ஒன்றில் பாலியல் இம்சைகளை பின்வருமாறு கூறுகிறது. "உடல் ரீதியான செயல்கள், துன்புறுத்தல்கள், கோரிக்கைகள், பாலியல் இணக்கத்தன்மைக்கான வேண்டுகோள்கள், பாலியல் தன்மைகொண்ட குறிப்புகள், வரவேற்கத்தகாத உடல், வாய்மூலமான அல்லது மூலமற்ற நடத்தைகள் என்பன பாலியல் தொல்லைகளாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலும் 1995 ஆம் தண்டைனக் கோவை திருத்தச்சட்டத்தின் 22 ஆம் இலக்க 345 ஆவது பிரிவு இதை விளக்குகிறது. இதன்படி பாலியல் ரீதியான தொல்லை தருபவர்களைப் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனைப் பணமாகவோ அல்லது இல்லாமலோ 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் பணிக்கலாம். மேலும் 1998 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க 3 ஆவது பிரிவின் படியும் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு ஏற்படும் பகிடிவதை போன்றவை பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு 7 வருடம் தொடக்கம் 20 வருடம் வரை கடூழியச்சிறைத்தண்டனை, நஷ்டஈடு என்பனவும் தண்டனையாக இறுக்கப்படும். மேலும் வேலைக்கு போகும் பெண்கள் வழிகளிலும், வேலைத்தளங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெண்கள் மன உளைச்சல், உபாதைக்குள்ளாகின்றனர். எனவே இவற்றிற்கு விழிப்புணர்ச்சிக் கருத்தரங்குகள் ஏற்படுத்தப்பட்டு தற்காப்பு நடவடிக்கைகளைப் புகட்ட வேண்டும். அறிவூட்ட வேண்டும்.

கல்வியறிவுமூலமும், வேலைவாய்ப்புமூலமும், சொத்துரிமைகள் மூலமும் ஆண்கள் ஆதிகத்திலிருந்து பெண்கள் விடுதலை பெற முடியும் என்பதை இது உணர்த்துகிறது. அடிமை வாழ்வில் ஏற்பட்ட சலிப்பும், விரக்தியும் விடுதலைக்கு வித்திட்டன. பெண் விடுதலையின் பயனாக விவாகரத்தும், மறுமணம் செய்யும் உரிமையும் பலநாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளன. கற்கும் உரிமை, உயர்கல்விபெறும் உரிமை என்பனவும் உண்டு. உயர்கல்வி பெற்றோர் வேலைவாய்ப்புப் பெறச் சந்தர்ப்பங்களுமுண்டு. கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமையும் இவர்களுக்குண்டு. பெண்களின் வேலைகளில் ஆண்களும் பகிர்ந்து செய்ய முடியும். வீட்டிற்கூட ஒத்துழைப்புக் கொடுக்கலாம். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விடயமாகும். 1995 ஆம் ஆண்டு தண்டனை கோவைத்திருத்தச்சட்டத்தில் ஒரு மனைவியை அவரது விருப்பமின்றி கணவன் பாலியல் உறவில் ஈடுபடுத்த முயன்றால் கடுமையான தண்டனை உண்டு. கர்ப்ப காலத்தில் தாக்கப்பட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனையை கணவன் அனுபவிக்க வேண்டும். மேலும் ஆளொருவர் தாக்குதலின்மூலமாக அல்லது பாரபட்சமான முறையில் அதிகாரத்தைப் பிரயோகிப்பதோ, இன்னொருவர் மீது பாலியல் இம்சைகள் புரிதலோ, வார்த்தைப் பிரயோகம் மூலம் பாலியல் சேஷ்டைகள் புரிவதோ, பாலியல் இம்சைகளாக கருதப்பட்டு சிறைத்தண்டனை அல்லது விதிப்பணம், நட்டஈடு என்பவற்றை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இவையாவும் பெண் விடுதலைக் கோஷங்களால், உருவானவை. போராட்டங்களால் ஏற்பட்ட சட்டமாக்கப்பட்ட பாதுகாப்புக்களாகும். 1870 ஆம் ஆண்டு உலகில் முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. இதனைத் தொடர்ந்து இன்று பல நாடுகளிலும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் கூட அடுத்த தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க உத்தேசித்துள்ளார்கள். குவைத் நாட்டில் முதன்முதலாக பெண்களுக்கு 2006 ஆம் ஆண்டில் தான் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு

பெண் விடுதலைக்காக இன்று சர்வதேச ரீதியில் பல அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தில் சக்தி, பால் சமத்துவ செயற்றிட்டம் இன்று பிரதானமான ஒன்றாகும். இது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றும் பொருட்டு ஏற்பட்ட உடன்படிக்கையாகும். சீடோ (THE CONVENTION ON THE ELIMINATION OF ALL FORMS OF DISCRIMINATION AGAINST WOMEN) என்னும் ஆராய்வாளர் மீது பொறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீர்மானம் 1979 டிசெம்பர் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டது. இது சர்வதேச உடன்படிக்கையாக 1981 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி செய்யப்பட்டது. 1981 ஒக்டோபர் 5 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு பல பாதுகாப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மகளிர் அந்தஸ்து பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம் 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவர்கள் மகளிர் நிலைமையை கண்காணிப்பதும், உரிமைகளை மேம்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேற்றுமை காட்டலை ஒழிக்கும் சாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பெண்களை பாதுகாக்க விசேட அறிக்கையை வெளியிட்டது. 1975 ஆம் ஆண்டு மெக்சிக்கோ நகரில் மகளிருக்கான ஐக்கிய நாட்டு மகாநாடு நடைபெற்று தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டன. 1995 பீஜிங் மாநாடு நடைபெற்றது. 2005 ஆகஸ்ட் 29 ஆம் திகதியும் பீஜிங் மாகாநாடு நடைபெற்றது. எனவே இப்படியாக ஐக்கிய நாடுகள் சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறுமனே தீர்மானங்களாக இராது அதன் அங்கத்துவ நாடுகளில் அமுல்படுத்த அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் பெண்கள் இயக்கம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட, 1922 ஆம் ஆண்டைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் முதலாவது இயக்கமாகும். இது பெண்களின் வாக்குரிமை சுதந்திரத்திற்காகப் போராடியது. இதனாலன்றோ இலங்கையில் 1931 இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. இதன் பின்னர் பெண்கள் அரசியல் ஒன்றியம், இலங்கைப் பெண்கள் அமையம் என்பன உருவாகின. 1946 இல் இலங்கை ஐக்கிய பெண்கள் முன்னணி உருவாகியது. இது சோஷலிச பெண்கள் அணியாகவும் இருந்தது. 1978 இல் இலங்கையில் பெண்கள் பணியகம் உருவாகியது. 1983 இல் பெண்கள் விவகார அமைச்சு ஏற்படுத்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டு ஆண் பெண் பால் நிலை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பால் நிலை சமத்துவ கருத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1993 இல் அமைச்சரவையில் பெண்கள் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படியாக காலத்திற்குக் காலம் பெண்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க பல செயல்முறைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் இலங்கையில் பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்க மூன்று முக்கிய துறைகளில் பெண்கள் பங்களிப்பு 75 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் தொழில்புரிவோர், ஆடை ஏற்றுமதிக் கைத்தொழிலில் ஈடுபடுவோர், பெருந்தோட்ட தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடுவோர் என்போரே அந்த மூன்று பிரிவினராகும். 2003 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலையில் ஈடுபட்டோர் 208,803 அதில் 64.5 சதவீதத்தினர் பெண்களாவர். 2003 ஆம் ஆண்டில் 164,235 பேர் வெளிநாட்டில் வேலை செய்தனர். இதில் 113,316 பேர் பெண்கள். மத்திய கிழக்கில் உழைக்கும் பெண்கள் வருடத்திற்கு 80 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியாகப் பெற்றுத் தருகின்றனர். 1988- 1995 இல் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்ற 422,416 பேரில் 70 சதவீதத்தினர் பெண்களாவர். 1995 இன் ஆய்வுகளின்படி 41.5 சதவீத பெண்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிவோரில் 90 சதவீதத்தினர் பெண்களாவர், மேலும் பெண்கள் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சிறு கைத்தொழில்கள் என்பவற்றிலும் ஈடுபட்டுமுள்ளனர். பெண்கள் சுயதொழில் திறன்மூலம் தமது குடும்பங்களின் வருமானத்தை பெருக்க முனைந்துள்ளனர். இப்படியான ஆற்றல், திறமையுள்ள பெண்களை எப்படி நாம் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் எனக் கூற முடியும்?

(தொடரும்)


http://www.thinakural.com/New%20web%20site...9/Article-2.htm
Reply
#12
சுடர் எழுதியது:

மகளிர் தினம்,
வாழ்த்துத் தெரிவித்து கூடிக்குலவி மகிழ்ந்திருக்கும் நாளல்ல. உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என கருதிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அவர்களின் பிரச்சினையை உலகம் அறிந்து கொள்ளவைப்பதற்காக உருவாக்கியது. இந்நாளில் வாழ்த்து தெரிவித்து மகிழ்வதைவிட பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தி ஒரு விழிப்புணர்ச்சியினை கொண்டு வர முயற்சித்தால் சிறப்பாயிருக்கும்.
சுடர்! இன்றும் பெண்கள் சிலர் அடுப்படியில்தான் இருக்கினம். அவையள் அதை விட்டு சாதனைகள் படைக்கட்டுமே என்று ஓரு ஊக்கம் கொடுத்தேன் அவ்வளவுதான். அதுக்கு இவ்வளவோ பெரிய விளக்கமா அம்மாடியோவ்!! :roll: :roll: :roll: :roll:
Reply
#13
கலோ கலோ.... ஆணும் பெண்ணும் மனிதர்கள் தானே...???! அதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்...! அப்புறம் பெண்களுக்கு மட்டும் ஏன் மகளிர் தினம்...???! பெண்களின் பிரச்சனையை எடுத்துச் சொல்ல என்றால்..ஆண்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல ஏன் ஒரு தினம் இல்லை...??! சோ...இப்பவும் கூட பெண்களை தனியாக சமூகத்துக்கு அடையாளப்படுத்தி; பெண்களின் பிரச்சனையை ஒரு தினத்துக்குள் மட்டும் பேசிட்டு ஓயத்தான் சொல்லுறீங்களே தவிர...ஆணும் பெண்ணும் சாதாரணமாக கலந்து பேசி...விடயங்களை பிரச்சனைகளை உடனுக்குடன் சுலபமாக்க தீர்க்க வழி தேடுறதாத் தெரியல்ல..!

ஏன் கற்பு என்ற உடன பதறுறீங்கள்..மனிதனுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம்... உலகெங்கும் சட்டம் ஒழுங்கு என்று கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் மனிதன் மீது செல்வாக்குச் செலுத்தியபடிதான் இருக்கின்றன...! அந்த வகையில் கற்பு என்பது சமூக வாழ்வியல் ஒழுக்கம்

பண்டைய கால மனித வாழ்வியலில் அடிப்படையில் அமைந்த இலக்கியங்களுக்குள் பிழை பிடிச்சு...தற்கால சமூகத் தவறுகளை சரியென்று நிரூபிக்க முயலாமல்...தற்கால சமூகப் பாதுகாப்புக்கு என்னென்ன அவசியமோ..அவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிக்க வழிகாட்டுங்கள்..! புரட்சி என்பது சில மனிதர்களுக்கல்ல...மொத்த சமூகத்துக்குமானது...! புரட்சியின் விளைவு என்பது சொந்த சமூகத்தை அது வாழும் சூழலுக்கு ஏற்ப பூர்வீகம் சார்ந்து தனித்துவத்தை காப்பாற்ற வல்ல, சமூகத்தை நீண்ட கால நோக்கில் பலமாக்க உதவ வேண்டுமே தவிர சமூகத்தைச் சீரழிக்க வல்லவற்றை தன்மயமாக்க, அநாவசிய அந்நிய கலாசார சமூக நடத்தைகளை உள்வாங்க அது வழிசமைப்பதாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது புரட்சியும் அல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
சுடர் , சாத்திரி , ஸ்ராலின் , குறுக்காலை போவார் எல்லாரும் ஓடுங்கோ குருவிகள் வந்திட்டினம் இனி கொத்து வாங்கியே அழப்போறியள்.
குருவி அண்ணோய் கடந்தகாலங்களில் இது சம்பந்தமான கட்டுரைகளும் உங்கள் அடம்பிடிக்கும் கருத்துக்களும் படிச்சுப்படிச்சே களைச்சுப்போன கள உறவுகளுக்கு இன்னும் சலிப்பைக் குடுக்க உங்கள் தத்துவம்.
:::: . ( - )::::
Reply
#15
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

சொ. அமிர்தலிங்கம்

(நேற்றைய தொடர்ச்சி)

அரசியலில் பெண்கள்

இலங்கை நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதமானவர்கள் பெண்கள். எனினும், மிகக் குறைவானவர்களே அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இன்று இலங்கையில் 88.6 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் கல்வி கற்போரில் 49 சதவீதமானவர்கள் பெண்கள். மனித மேம்பாட்டு வரிசைக் கிரமத்தில் சர்வதேச ரீதியாக 81 ஆம் இடத்தை வகிக்கிறது இலங்கை. யாழ். குடாநாட்டில் உயர்கல்வி பெறும் பெண்கள் 59 சதவீதமாவார்கள். ஆண்கள் 19 சதவீதமே உயர்கல்வி பெறுகிறார்கள். இலங்கையில் பெண்கள் அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் அற்றவர்களாகவே உள்ளனர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் என்னும் அத்தியாயத்தில் உறுப்புரை 12 (2) கூறுவதாவது "இனம் மதம், மொழி,சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுக்குள் எந்தவொரு காரணமாகவும் எந்தப்பிரசைக்கும் ஓரம் காட்டக்கூடாது" என்கிறது. இதன்மூலம் பெண்களுக்கு அரசியலில் பங்கு பற்றும் சம வாய்ப்பு உண்டு. இலங்கையில் வாக்காளர்களிலும் 50 சதவீதத்தினர் பெண்கள். ஆனால், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 4.8 சதவீதமாகவும், மாகாண சபைகளில் 3.4 சதவீதமாகவும், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் 1.97 சதவீதமாகவும் காணப்படுகிறது. கட்சிகளில் பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு சட்ட ரீதியாகச் செய்வதன் மூலம் பெண்கள் பங்களிப்பைக் கூட்ட வாய்ப்புண்டு. பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகளவு பெண்களை தெரிவு செய்வதாயின் அரசியலமைப்பு, பாராளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைகள் (திருத்தப்பட்ட சட்டம்) 1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 13 சதவீதத்தினர் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பின் பங்களாதேஷ் 1.5 சதவீதத்தையும், இந்தியா 8.8 சதவீதத்தையும், பாகிஸ்தான் 21.6 சதவீதத்தையும் கொண்டுள்ளன. எனவே இலங்கையில் 1931 ஆம் ஆண்டு வாக்குரிமைச்சட்டம் மூலம் அரசியலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் இன்னும் சரியான முறையில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவில்லை. ஆசியாவில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கை 14 ஆம் இடத்திலும், சர்வதேச ரீதியில் 73 ஆம் இடத்திலும் காணப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு உலகில் முதலாவது பெண் பிரதமராக திருமதி ஷ்ரீமாவோ பண்டாரநாயக்காவை உருவாக்கிய இலங்கை, 1994 ஆம் ஆண்டு முதல் பெண் ஜனாதிபதியாக திருமதி சந்திரிகா குமாரதுங்கவை உருவாக்கிய இலங்கை இன்னும் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியுள்ளமை கவலைக்கிடமான விடயமாகும்.

எனவே அரசானது பெண்களின் பிரதிநிதித்துவம் போதாமையை மனதிற்கொண்டு பாராளுமன்றத்தில் பிரேரித்து பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்ச்சித் திட்டங்கள்

இன்று இலங்கையில் யுத்த சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆண்களைப் பறிகொடுத்து விதவைகளான பலர் வாழ்கிறார்கள். இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். மேலும், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டுச்சுமை, வேலைச்சுமை என்பன சேர்ந்து மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆண்களும் வீட்டுச்சுமையில் பகிர்ந்து செயலாற்றுவது நல்லது. மேலும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது வீட்டில் தனியாக விடப்பட்ட பெண்பிள்ளைகள் தந்தை, சகோதரர்களால் பாரிய தொல்லைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. தங்கை, சகோதரன் மதுபோதைக்குட்பட்டு நிதானம் இழப்பதாலும், தாய் வெளிநாட்டில் வேலை செய்தாலும் இப்படியான தனிமையான சந்தர்ப்பங்கள் இந்த நிகழ்வுகளுக்கு வழியமைக்கிறது. எனவே, விழிப்புணர்ச்சித்திட்டங்களை ஏற்படுத்தி மது பாவனையைக் குறைக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளையிட்டும், அவர்களின் முக்கியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சித்திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இப்படியான பாலியல் வன்முறைக்குள்ளாகியோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். 1998 இல் 1,096 பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. இதில் 291 சம்பவங்கள் வீட்டுக்குள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் நாட்டிலும் வீட்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனில், அவர்கள் எங்கு செல்வார்கள்? எனவே, விழிப்புணர்ச்சித்திட்டங்கள் மூலம் அவர்களுக்கு வன்முறைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் முறைகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட 129 கொலைகளில் 65 சதவீதமானவை கணவன்மாரால் மதுபாவனையின் காரணமாக ஏற்பட்டவையாகும். எனவே, துன்பப்படும் பெண்களை பாதுகாப்பதும், அவர்களுடைய உரிமைகளினை பெற்றுக் கொடுப்பதும் சமுதாயத்தின் தலையாய கடமையாகும். வெளிநாடுகளில் வேலை செய்யும் பல பெண்மணிகள் கூட துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். வேலை நீக்கம், ஊதியம் வழங்காமை, குறைந்த ஊழியம் வழங்குதல், பாலியல் துன்புறுத்தல், சித்திரவதை, அடி, உதை, சூடு, விபசாரம் எனப் பல விதத்தில் உடல், உள பலவந்தந்துக்குள்ளாகியுள்ளனர். இதை தூதரங்களுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் செய்வதறியாது விரக்தியின் விளிம்பில் நாடு திரும்ப முனைகின்றனர். எனவே, இதற்கான சட்ட நடைமுறைகளை அந்தந்த நாடுகள் சரி வர அமுல் நடத்த வேண்டும். எமது நாட்டுத் தூதரகங்களும் இதற்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இலங்கையின் அந்நியச் செலாவணியில் 65 சதவீதத்தை பெற்றுக் கொடுத்து பொருளாதாரத்தில் வளம் சேர்ப்பவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப் பெண்களின் சுகவாழ்விற்கு தேசிய ரீதியான பங்களிப்பு அவசியம். அவர்களது கூடிய வேலை நேரம், கூடிய உழைப்பு, கல்வி, சுகாதாரம், குடும்பநலன் என்பவற்றில் முன்னேற்றமடைய உதவ வேண்டும். 1910 ஆம் ஆண்டு இரண்டாவது சமூக ஜனநாயக மகாநாட்டில் பங்கு பற்றிய ஜெர்மன் ஜனநாயக கட்சித் தலைவர் திருமதி கிளோராவெட்சின் அம்மையார் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்த வேண்டுமென்று பிரேரித்தார். இது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்கப்பட்டு வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம் மகளிருக்குரிய அந்தஸ்தையும் உரிமைகளையும் வழங்குவதேயாகும். பெண்களின் அடிமை நிலையைப் போக்க, சமூகநலன் பேண, குடும்ப நலன், குழந்தை நலன் பாதுகாக்க, குறைந்த ஊழியம் பெறுவதைத் தடுக்க, சுரண்டலைப் போக்க, உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க, குறைந்த வேலை நேரம் வழங்க, கலை ,கலாசார, அரசியல் விடயங்களில் பங்குபற்ற, தொழில்துறைகளில் ஈடுபட, திறமையை காண்பிக்க ஏற்ற சந்தர்ப்பங்களை உருவாக்க இந்தச் சர்வதேச தினங்கள் வருடாவருடம் இடமளிக்கின்றன.

(தொடரும்)


http://www.thinakural.com/New%20web%20site...0/Article-3.htm
Reply
#16
aswini2005 Wrote:சுடர் , சாத்திரி , ஸ்ராலின் , குறுக்காலை போவார் எல்லாரும் ஓடுங்கோ குருவிகள் வந்திட்டினம் இனி கொத்து வாங்கியே அழப்போறியள்.
குருவி அண்ணோய் கடந்தகாலங்களில் இது சம்பந்தமான கட்டுரைகளும் உங்கள் அடம்பிடிக்கும் கருத்துக்களும் படிச்சுப்படிச்சே களைச்சுப்போன கள உறவுகளுக்கு இன்னும் சலிப்பைக் குடுக்க உங்கள் தத்துவம்.

நீங்களும்...பெண்ணியம்...புரளியம் என்று பேசிப் புளிச்சதைத்தான் இன்னும் பேசிட்டு இருக்கிறீங்கள்...! ஒன்றைத்தான் திரும்ப திரும்ப பிசையுறீங்கள்...! முடிவுதான் ஒன்றுமாக் காணேல்ல...! மேற்குலகில் மார்ச் 8 அப்படி ஒன்றும் விசேசமாக் கழிஞ்சதாவே தெரியல்ல...! அதுக்காக அங்கெல்லாம் பெண்களுக்கு - மனிதர்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் இல்லை..! பிரச்சனைகளை காலத்துக்கு ஏற்ப தேவையான வடிவங்களில் அணுகி தீர்த்துக் கொள்கிறார்கள்...அப்படி உலகம் இருக்க பெண்ணியம் கண்ணீரியம்..எனியும் அவசியம் தானா...?????????????????! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
http://www.internationalwomensday.com/events/
Reply
#18
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்

அரசின்பங்கு

(வெள்ளிக்கிழமை தொடர்ச்சி)

மேலைநாடுகளில் நடைபெறும் திருமணங்கள் கூட நிலைத்து நிற்பதில்லை. ஒவ்வொரு மூன்று திருமணத்திற்கும், ஒரு விவாகரத்து இடம்பெறுகிறது. சுவீடனில் 100 திருமணங்களில் 60 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அமெரிக்காவில் 100 திருமணங்களில் 44 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. எமது நாட்டில் விவாகரத்து அதிகமில்லையெனினும் பெண்கள் துன்புறுத்தப்பட்டு, விரக்தியுடன் வாழ்கின்றனர்.இந்த விரக்தியைப் போக்க கணவன்மாரும் சமுதாயமும் முன் வர வேண்டும். இப்படியான சூழ்நிலைகள் காரணமாக அரசாங்கமானது பெண்களின் கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளின் மூலம், சொத்துரிமை மூலம் அவர்களை ஊக்குவித்து ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். எதற்கும் அவர்களுக்குரிய சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.பல நூற்றாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"மனை மாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித்தாயினும் இல்"

( திருக்குறள் -52) எனக் கூறுகிறார். குடும்பவாழ்வில் கணவன், மனைவி இருவருக்கும் சமவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் கணவன் பெருமைக்கு மனைவியே காரணம் என்கிறார். இப்படியாக கணவனுக்குப் பெருமை சேர்க்கும் மனைவியைப் புறந்தள்ளலாமா?

சர்வதேச பெண்கள் வருடமான மூன்றாம் உலக மாநாடு மெக்சிக்கோவில் 1975 ஜூன் 19 முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை நடைபெற்று, 1975- 1986 வரையான பத்து வருடங்கள் ஐக்கிய நாடுகள் பெண்கள் வருடமெனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதும், ஆண்களுக்கிடையேயான பாகுபாட்டைத் தவிர்ப்பதும் பிரதான நோக்கமாக இருந்தது. முன்னேற்றத்திட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தல், ஒருங்கிணைத்தல் என்பனவும் இதில் அடங்கும். பெண்களைத் தாக்கும் கட்டமைப்புக்களைத்தூக்கியெறிதல், பெண்களின் பிரச்சினை சமூகப் பிரச்சினையாதலால் அதை உலக முன்னேற்றத்திற்கு அணுகுதல், தீர்மானங்களை உருவாக்குபவர்களைப் பெண்களுக்காக குரல் கொடுக்கச் செய்தல் என்பனவும் முக்கியமாக இருந்தன. எனினும், இதன் பின்பு இன்றுவரை பெண்கள் சமப்படுத்தப்படவில்லையென்பது பெரும் குறையாகும். பெண்கள் பத்து மாதங்கள் சுமந்து உருவாக்கும் பிள்ளையைச் சுமந்து அவதியுற்றுப் பல்வேறு கஷ்டங்களையும் உள்வாங்கிப் பிள்ளை பெற்றெடுக்கிறாள். இவர்களது மனோ வலிமை ஆண்களிடம் இல்லையென்றே கூறலாம். இப்படியாக ஆண்கள் வேதனைக்கு உள்ளாகவில்லை. எனவே, மனோ வலிமைமிக்க பெண்களுக்குச் சம சந்தர்ப்பம் அளிப்பதனால் அவர்களும் தம்மை முன்னேற்ற வழியேற்படும். பெண்களைக் காட்சிப் பொருளாக சுகபோகப் பொருளாகக் கருதாது அவர்களால் முடியும் என்ற சிந்தனையை வளர்த்து, ஆண்கள் அவர்களுக்கு விட்டுக் கொடுத்து சம சந்தர்ப்பம அளிக்க முன் வர வேண்டும். வள்ளுவர் கூடத் திருக்குறளில் தலைவனும் தலைவியும் உடலும் உயிரும் போல எனக் கூறியுள்ளார்.

"உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன

மடந்தையொரு எம்மிடை நட்பு"

(திருக்குறள் -1122) எனவே, உடலும் உயிரும் போல உள்ள தலைவனும் தலைவியும் சம சந்தர்ப்பத்துடன் வாழ நாமும் வழியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசாங்கமானது ஏற்றத்தாழ்வுகளை விடுத்து சமமாக சரிநிகராக இருபாலாரையும் பேண வேண்டும். எனவே, பெண்களுக்குரிய அந்தஸ்தை வழங்கி அவர்களது ஆளுமைக்கும் சந்தர்ப்பமளிக்கவேண்டியது அரசின் கடமைப்பாடாகும்.

பெண்களுக்கெதிரான அடக்குமுறைக் கோட்பாட்டை இல்லாதொழிக்க வேண்டும்.இப்படி இல்லாதொழிப்பதில் சகல சிவில் நிறுவனங்களும் இணைய வேண்டும். பெண்ணியம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இயக்கமாகும். பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையில் அவர்களும், ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலை நாட்டுகின்றது. பெண்ணியம் பெண்களின் ஆளுமைத்தன்மையையும் தனித்தன்மையையும் குடும்ப நிர்வாகத்திறனையும் தட்டிக் கொடுத்து அவர்களுக்கு சம சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.பெண்கள் வீட்டில் பொக்கிஷாதிபதி,சிறந்த பொருளாதாரமேதை, வரவு செலவுத்திட்ட முகாமையாளர்.எனவே, அவளிடம் சிறந்த ஆளுமையுண்டு. ஆணாதிக்கம் ஒழிந்து பால் ரீதியாக ஒடுக்குமுறைகள் நசுக்கப்பட வேண்டும். ஆணானவன் தன் ஆதிக்க வேட்கையினால் சமுதாய உற்பத்திக்கும், உரிய ஆதார சக்தியாக விளங்கும் தாயை அடிமைப்படுத்த முனைவது எந்த நிலையிலும் ஏற்கக்கூடியதல்ல. ஆண்டவன் படைத்த இரு பொம்மைகளுள் ஒன்றான ஆண் மேலோங்கியும், பெண் கீழ் நிலையிலும் வாழும் சமுதாயம் மாற்றமடைந்து சரிசமமான சமுதாயம் வாழ முற்பட வேண்டும்.

ஆண் - பெண் சமத்துவம்

ஆசிய நாடுகளில் பெண் விடுதலையானது தேசவிடுதலை, சமூக விடுதலை ஆகியன மூலம் அணுகப்பட்டது. சீனாவில் இயுசின், இந்தியாவில் மகாத்மா காந்தி ஆகியோர் பெண்களின் நிலையை மேம்படுத்த அரும்பாடுபட்டனர். சுப்பிரமணிய பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் பெரிதும் தூண்டுதலாயமைந்தன. "பெண்களுக்கு விடுதலையின்றேல் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை"என்றார் பாரதியார். மேலும், பாரதியார் எழுதிய தமிழ்நாட்டின் விழிப்பு என்னும் கட்டுரையில் ஆண், பெண் சமத்துவம் பற்றிக் கூறுகையில்;" பெண்களுக்கு சீவன் உண்டு, மனம் உண்டு, புத்தியுண்டு, ஐம்புலன் உண்டு, அவர்கள் இயந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடிகளுமல்லர். சாதாரண ஆண், பெண் எப்படியோ அப்படித்தான் பெண் இனம். புறவுறுப்புக்களில்தான் மாற்றம். ஆத்மா ஒரே மாதிரி" என்றார். எனவே, ஆண், பெண் வேறுபாடு பாலியல் ரீதியாக இருந்த போதும் பால்நிலை ரீதியாக ஆண்கள் விட்டுக் கொடுத்துப் பெண்களுக்கும் சம உரிமையளித்து சமத்துவமாக இதுவரை காலமுமிருந்த மரபு ரீதியான மனப்பாங்கை மாற்றி அவர்களுக்கும் உரிமை அளிக்க முனைவார்களாயின் விடுதலை தானாகவே ஏற்படும். பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அண்மைக்காலக் கணிப்பின்படி சமத்துவ உரிமையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. எனினும், சமத்துவம் பேசும் ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள 159 அங்கத்தவர்களில் 10 பேரே பெண்களாவர். இந்துசமய அடிப்படைத் தத்துவத்தின் படி ஒரு உடலில் ஆண் வலது புறமும், பெண் இடதுபுறமும் இருப்பதாகக் கருதும் போது, ஓர் உடல் ஏன் சமத்துவம் பேண அஞ்சுகின்றது? கேட்கவும் கொடுக்கவும் அந்த உடலினால் முடியும். எனவே,ஆண்கள் விட்டுக்கொடுத்துத் தங்கள்உடலின் அங்கமான பெண்ணை சமத்துவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். உடலின் இடது பக்கத்திலுள்ள இதயம் எமது உயிர்நாடி. எனவே, இதயமாக பெண்களை ஏற்று உரிய இடத்தை அளிக்க வேண்டியது ஆண்களின் பொறுப்பாகும்.

எனவே, பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்குச் சளைத்தவர்களல்லர். சரி சமமாக வாழக் கூடியவர்கள். அவர்கள் சரிநிகராகச் செயலாற்றக்கூடியவர்கள். சம அந்தஸ்தை அனுபவிக்கக் கூடிய திறமை படைத்தவர்கள். இன்று அவர்களிடம் அறிவு கல்வியினால் ஊட்டப்பட்டுள்ளது. திறமை ஆண்களுடன் சேர்ந்து சரிநிகராக சமனாக செயலாற்றக் கூடியதாகவுள்ளது. எனவே, மனப்பாங்கிலும் அவர்கள் அவ்வப் போது மாற்றத்திற்கேற்ப மாறும் குணமுமுண்டு. எனவே, இப்படியான அறிவு, திறமை, மனப்பாங்குடைய (KNOWLEDGE, SKILL & ATTITUDE) பெண்களுக்கு ஏன் சம அந்தஸ்து வழங்க முடியாது. ஆண் பலசாலி எனவும் பெண் பூப் போல எனவும், மென்மையானவள் என்ற கருத்தும் இன்றும் நிலவுகின்றது. இந்த மென்மையானவளிடம் பிள்ளையை பத்துமாதம் சுமந்து, வலி தாங்கி, கஷ்டம் தாங்கி பெற்றெடுக்கும் மனோவலிமை கூட ஆண்களிடம் இல்லை என்றே கூறலாம். எனவே, இம் மனோவலிமையுடைய பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்குவதே சாலச் சிறந்தது. அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்புடைய பெண்கள் தமது மனோவலிமையினால் இவற்றுடன் வலிமையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே, அவர்கள் பிள்ளையைப் பெற்றெடுக்கவும் வேண்டும், சுகதேகியாகப் பெறவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மன வலிமையுடன், மனத்திடத்துடன் போராடும் திறமைசாலிகள் என்பதை நிரூபித்துள்ளனர். எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்கும் சரி நிகர் சமமானவர்களே. இன்று கூட பல நாடுகளில் போர்க்களங்களிலும் பெண்கள் முன்னணியில் திகழ்கின்றார்கள். வீரவேங்கைகளாக நாட்டுக்காகப் போராடி மரணித்த பெண்மணிகள் பலர். எனவே, மனோ வலிமையுடைய வீரமுடைய, திறமையுடைய, ஆற்றல் படைத்த பெண்ணுக்கு ஏன் நாம் சம உரிமை, சம அந்தஸ்து வழங்கி அவர்களைத் தேசிய சொத்தாக, செல்வமாக வளர இடமளிக்கக் கூடாது? எதற்கும் அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதையெல்லோரும் உணரும் காலம் வந்துவிட்டது. அரசாங்கம் பெண்களைத் தேசிய சொத்தாக மதிக்கும் காலமும் வந்து விட்டது பாரீர்.

முற்றும்
http://www.thinakural.com/New%20web%20site...3/Article-2.htm
Reply
#19
தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்
முனைவர். மு. பழனியப்பன்

மார்ச் 8. உலக மகளிர் தினம். மகளிர் தமக்கான வாழ்க்கையைஇ கல்வியைஇ கலாச்சாரத்தைஇ இலக்கியத்தைஇ மொழியைஇ இன்னும் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் எவ்விதத் தடையுமில்லாமல் ஏற்படுத்திக்கொள்ளஇ அனுபவிக்கஇ ஆய்வு செய்ய விழிப்புணர்வு தரும் ஒரு தினமாக இந்த மகளிர் தினத்தை மகளிர் எடுத்துக் கொள்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் இந்த விழிப்புணர்வு உள்ளதா? ஏற்பட்டுவிட்டதா? அல்லது இந்த விழிப்புணர்வு அடையப்பட்டு விட்டதா? என்பது அறியப்பட இத்தினம் ஒருவகையில் உதவி செய்யலாம்.


தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில்இ தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் மகளிர் தினம் என்பது குறித்த விழிப்புணர்ச்சி ஓ ரளவிற்கு உள்ளது என்பதை 2006 மார்ச் 8 உணர்த்துகிறது. இத்தினம் கருதி பல கருத்தரங்குகள்இ கூட்டங்கள்இ செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக படித்த பெண்கள் ஓரளவிற்கு விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வருகிறது.


இந்த வளர்ச்சி போதுமா? போதாதா? என்றெல்லாம் கண்டுபிடித்து இவ்வளர்ச்சி போதாது எனக்கருதி அதனைக் கட்டாயமாக வளர்த்தெடுக்கப் பாடுபடுவது என்பதெல்லாம் நடைபெறவேண்டிய செயல்க ள்தாம். அது ஒரு பக்கம். . இதனைத் தாண்டி தமிழகப் பெண்கள் நிலை ஓரளவிற்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஏற்க வேண்டிய கருத்தாகும். கல்விஇ வேலைவாய்ப்பு முதலிய துறைகளில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி தமிழ்நாட்டுச் சூழலில் வியக்கத்தக்கதாக உள்ளது. இதனை அடைவதற்குப் பெண்களும் முயன்றுள்ளனர். ஆண்களும் முயன்றுள்ளனர்.


பாரதியார் இந்த முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளி ஆவார். அவரின் கூற்றுப்படிப் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்த நிலை என்ன என்றபோது பாரதியைத் தாண்டி சிந்திக்க வேண்டியுள்ளது. பெரியார் இதற்கான ஒரு வளர்புள்ளி. அவரின் பெண் குறித்த புதிய எண்ணங்களைப் படித்தஇ கேட்ட பெண்களைக் கவர்ந்தன. அவ்வெண்ணங்கள் புதிய சிந்தனைகளைத் தூண்டின என்றால் அது மிகையாகாது.


பாரதியார்இ பெரியார் ஆகிய ஆண்களின் செயல்பாடுகள் ஒருபுறம். இவர்கள் காலத்திலேயே பெண்களின் விடுதலைக்காகப் போராடிய பெண்களும் உண்டு. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் சுப்புலெட்சுமி அம்மையார்இ மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் பெயர் தெரிந்த தெரியாத பெண்களும் உண்டு.


இந்த வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமுதாய வளர்ச்சி என்றே அக்காலத்தில் கருதப்பட்டது. இந்த ஒட்டுமொத்தச் சமுதாய வளர்ச்சியிலிருந்துப் பிரிந்துத் காலப்போக்கில் தனித்துப் பெண்வளர்ச்சி என்பது வளர்ந்தது.

இந்த 2006ஆம் ஆண்டை ஒரு எல்லையாக வைத்துப் பார்த்தால் அதன் பின்னோக்கிய இருபது ஆண்டுப்பயணம் தமிழ்ப் பெண்ணியத்தின் தனித்த தொடக்கக் காலப்பகுதியாகக் கொள்ளலாம்இ.


இந்த இருபது ஆண்டுகளில் பெண்களை முன்வைத்துஇ இலக்கியங்களை முன்வைத்துத் தமிழ் உலகில் பெண்ணின் நிலைப்பாடுஇ பெண்ணின் அடையாளம் ஆகியன அறியப்பட்டன. இந்தப் புரிதலில் ஒட்டிய பெண்படைப்பாளர்கள்இ ஒட்டாத பெண்படைப்பாளர்கள் படைப்புகள் அவ்வப்போது வெள§வந்து கொண்டிருந்தன. பெண்திறனாய்வாளர்கள் பெண்ணிய விழிப்புணர்வோடு ஆய்வு செய்யத் தலைப்பட்ட்னர். மேல்நாட்டுப் பெண்ணியக் கொள்கைகளின் தாக்கத்தால் ஓரளவிற்கு பெண்ணியத்திறனாய்வுகள் தமிழில் கிளைத்தன. இந்த வருகை தமிழிலக்கியத்தின் புதிய பக்கங்களைத் திறந்தனஇ


இதன்விளைவால் கீழ்க் கண்ட முக்கிய மாற்றங்கள் தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்தன.


1இ தமிழ் மொழியின் நீண்ட இலக்கியப் பரப்பில் பெண்படைப்பாளிகள் இனம் காணப்பட்டனர்.

2இ புதிய பெண்படைப்பாளிகள் எழுதத் துவங்கினர். அவர்களுக்கிருந்த எழுத்துத் தடைகள் சற்று விலகின. பெண்களின் படைப்புகளை வெள§யிட ஆண்வயப்பட்ட வெள§யீட்டுலகம் முன்வந்தது. அவர்களின் படைப்புகளை விமர்சிக்கவும் ஆண்உலகம் வந்தது. பெண்படைப்பு என்பதற்கு ஒரு தனி மதிப்பு வந்தது. பெண்படைப்பாளர்களுக்கு மட்டுமான போட்டிகள் வைக்கப்பெற்றன.

3. பெண்படைப்பாளிகளின் வாழ்க்கை தெரியவந்தது. இதற்கு பத்திரிக்கைகள்இ தொலைக்காட்சிகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் உதவின.



இவை பெண்ணிய விழிப்புணர்வால் பெண் படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட விடுதலை வழிகள். இந்த வழியை ராஜபாட்டையாக்க தற்காலப் பெண்படைப்பாளிகள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.



இதே இருபதாண்டு சூழலில் பெண்ணின் சமுதாய இருப்பும் சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது கவனிக்கத்தக்கது. பெண்களின் பள்ளிக்கூடம்இ கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. பெண்கள் மட்டும் வேலை பார்க்கும் அலுவலகங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக மகளிர் காவல ¤ நிலையங்கள். இது தவிர பெண்கள் மட்டுமே வேலை பார்க்கும் வங்கிகள் உருவாகியுள்ளன. பெண்களின் கூட்டமைப்புகள் உருவாகியுள்ளன. மகளிர் சுய முன்னேற்ற உதவிக்குழுக்கள். இந்தக் குழுக்களை வளமையாக்க மாநில அரசோ மத்திய அரவோ உதவிய செய்தியில் அரசியல் இருந்தாலும் கடன் பெற்று அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுடையது என்பது குறிக்கத்தக்கது.



பெண்ணாசிரியர்களால் நடத்தபப்டும் பெண்களுக்கான பத்திரிக்கைகள்இ பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊடகங்களிலும் குறிப்பிடத்தக்க இடம் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதையும் எண்ணிப்பார்க்கலாம். பெண்களின் அரசியல் பங்கேற்பில் ஆண்களைச் சார்தல் என்ற பண்பு அதிகம் இருந்தாலும் இதனையும் ஒரு முன்னேற்றப் படியாகவே கொள்ளவேண்டும்.. இந்த அளவிற்கு வளமை பெற்ற இக்காலத்திலும் தினத்தாள்களில் நாள்தோறும் பெண்ணிழிவுச் செய்திகள் வராமல் இல்லை. முன்னேற்றம் ஒரு புறம் பின்னேற்றம் ஒரு புறம் என்ற ஏற்ற இறக்கத்திற்கு என்ன பதில் சொல்வது? எப்படி பதில் சொல்வது என்பதை பெண்ணியவாதிகள் சிந்திக்க வேண்டும்.




இந்த வளர்ச்சியில் கண்ணுக்குத் தெரிந்த மிகப் பெரிய மாற்றம் பெண்களின் ஆடை அணிகலன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும்இ நகரத்தில் பரவலாகி வந்த இந்த மாற்றங்கள் தற்போது கிராமங்களிலும் புகுந்து விட்டனஇ இதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த ஆடை அணிகலன் மாற்றங்களினால் பெண்களின் சமுதாயக் கட்டுப்பாடு சற்று தளர்ந்திருக்கிறது. பெண்களின் உடலை இறுக்கிய ஆடைகள் சற்று இறுக்கம் தவிர்த்து இருக்கின்றன. இறுக்கம் தவிர்த்தல் என்ற இந்த வசதி பெண்களுக்கு வசதி அளித்ததோ இல்லையோ ஆண்களின் கண்களுக்கு புதுக்கவர்ச்சியை உண்டு செய்து இருக்கின்றன. ஆண்களின் கண்கள் ?? ஆடை அணிகளிலே இவ்வளவு நெகிழ்வுத் தன்மை உள்ளதென்றால் ஆண்களிடம் பழகுவதிலும் இத்தகைய நெகிழ்வை எதிர்பார்க்கலாம ¤ ?? என்ற எண்ணத்திலேயே பெண்களைக் கவனிக்கின்றன. இச்சூழலில் பெண்களுக்கு வசதி தரும் ஆடைகள் அதே நேரத்தில் ஆண்களின் கண்களைக் கவராத ஆடைகள்இ அணிகள் இவற்றை பெண்ணியவாதிகள் முன்வைக்கலாம்இ ஆண்கள் அணிகளைத் தவிர்த்ததுபோல (குடுமிஇ காதுகடுக்கண்இ கழல்) பெண்களும் அணிகளைத் தவிர்த்துவிடலாம்இ இதனால் இழப்பு ஏதுமில்லை. பல திருட்டுகளைத் தவிர்க்கலாம். இது குறித்துப் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது தேவை.


பெண்களின் சமுதாய வாழ்வில் காதல்இ திருமணம் இவற்றில் தற்போது சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துவரின் ஒத்துவருவதாகவும்இ ஒத்து வராவிடில் ஒத்துவராததாகவும் வாழும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ளப் பெண்கள் தயாராக உள்ளனர். இந்த வாழ்க்கை முறை குறித்துப் பிறர் கருத்து என்பதைவிட தன்கருத்து என்ற அளவில் பெண்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் தயாராகுதலுக்கும் இந்தச் சிந்திப்புக்கும் பெண்கள் வந்திருப்பது ஒரு முக்கயமான மாற்றமே ஆகும்இ வழக்கு மன்றங்களில் வரும் பெண்களுக்கு எதிரான பெண்களுக்குச் சாதகமான வழக்குகள்இ தினத்தாள்களில் வரும் பெண்களுக்கு எதிரான செய்திகள் சாதகமான செய்திகள் இவை பெண்களின் விழிப்புணர்விற்குச் சான்றுகள். இவற்றில் இடம் பெறும் உண்மை நிலை நாளொரு மேனியும் பொழுதொ ரு வண்ணமுமாகத் திரிக்கப் படுவது ஏன் என்று எண்ணிப்பார்க்கையில் வழக்கு மன்றங்கள் ஆனாலும் சரி தினத்தாள்கள் ஆனாலும் சரி இவற்றில் வேலை பார்ப்பவர்கள் முற்றிலும் ஆண்கள் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் பெண்கள் மட்டுமே பெண்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களை நடத்தும் நிலை ஏற்படும்வரை இந்தச் சாதக பாதகங்கள் தொடரும்.


இச்சூழலில் பெண்களுக்கு எதிரான நச்சுக்காற்றைச் சுட்டிக்காட்டும் விலக்கும் நிறுவனங்கள் தேவை. அவற்றின ¤ தன்னலமற்ற பெண்குல விழிப்புணர்ச்சிச் செயல்கள் மேலும் பெண்களை முன்னேற்றும். அதற்குத் தக்க தருணம் இதுவே. அதுவரை மார்ச் 8 என்பது ஒரு குறியீட்டுத் தினமே அன்றி வேறு இல்லை.

நன்றி..

http://www.thinnai.com/pl0324069.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)