Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்நியப் படையை அழைக்கத் தேவையில்லை
#1
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மக்களுக்கான நிவாரணாப் பணிகளை இலங்கை இராணுவம் மூலமாகவோ, அல்லது அந்நிய நாட்டு இராணுவங்கள் மூலமாகவோ மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால், அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

சபை ஒத்துவைப்பு வேளை கலந்துரையாடலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரன் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தையடுத்து அந்நிய நாட்டு இராணுவங்கள் இங்கு படையெடுத்து வருகின்றன. இதையிட்டு நாம் கவலைப்படப் போவதில்லை. இந்த இராணுவத்தினைக் கொண்டு அரசாங்கம் தென்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளட்டும். தேவையானால் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்தால் அவர்களும் தமது படைகளை அரசாங்கத்துக்கு உதவ அனுப்பி வைப்பார்கள். ஆனால் இலங்கை படைமூலமாகவோ, வெளிநாட்டுப் படை மூலமாகவோ வடக்கு,கிழக்கு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு முயன்றால் அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

விடுதலைப் புலிகள் குறித்து பொய்ப் பிரசாரங்களை சில இனவாத ஊடகங்கள் முடுக்கி விட்டுள்ளன. இவ்வாறான செயல்களை நாம் உண்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்த இராணுவத்திடமும் உதவிக்காக கையேந்த தயாராயில்லை என்றார்.

நன்றி தினக்குரல்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)