Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தை அறிவு திறனை மழுங்கடிக்கும் புகைத்தல் நோய்
#1
புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள், அதை பிடிப்பவரை மட்டும் பாதிக்காமல், சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் என்று தெரியும். அதிலும் புகையை சுவாசிப்பவர்கள் குழந்தைகளாக இருந்தால் உடல் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்பதும் அறிந்ததே. ஆனால் புகையிலைப் பொருட்கள் மூலம் உண்டாகும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் மங்கும் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அமரிக்காவில் செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பழக்கத்தால் சிறுவர்களின் அறிவுத் திறன் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது? என்று கண்டுபிடிக்க 4400 சிறுவர்கள் பங்கேற்ற ஒரு ஆய்வு நடந்தது. இந்த சிறுவர்கள் அனைவரும் 6 முதல் 16 வயது வரை நிரம்பியவர்கள். முதலில் புகையிலையில் காணப்படும் நிகோட்டின் எனும் வேதிப்பொருளால் உண்டாகும் மாற்றத்தின் அளவு கணக்கிடப்பட்டது. பின்னர் குழந்தைகளின் அறிவு திறன் சோதிக்கப்பட்டது. இதற்காக வாசிக்கும் திறன், கணித அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது மேற்படி வேதிப்பொருள் அதிகமாக காணப்படும் குழந்தைகளின் அறிவுத் திறன் குறைந்து இருந்தது தெரிய வந்தது.

குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகமாக காணப்படுகிறதென்றhல் அக்குழந்தை செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங்கினால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தம். இதற்கு தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குழந்தைகள் பெரும்பாலும் வீடுகளில் தான் அதிக நேரத்தை கழிக்கிறார்கள். இதுமாதிரி நேரத்தில் அவர்களுக்கு செகண்ட் ஹhண்ட் ஸ்மோக்கிங் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் நெருங்கிய உறவுக்காரர்களாக தான் இருக்க முடியும். அடுத்து குழந்தைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பவர்களும் இதற்கு காரணம்.

இந்நிலையில் தாங்கள் விடும் புகையால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப் படுகிறhர்கள் என்ற அறிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே குழந்தைகளை இப்பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)