01-09-2005, 07:42 PM
சர்வதேச படைகளுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கிறது: ஜே.வி.பி!
ஜ க.கீர்த்திகா ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 09 சனவரி 2005 21:38 ஈழம் ஸ
இலங்கைத் தீவகத்தில் ஆழிப்பேரலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக கப்பல்களையும் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் மட்டுமின்றி தமது நாட்டுப் படைகளையும் வழங்கிய உலக நாடுகளுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக ஜே.வி.பியினர் அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் கொஃபி அனானின் வருகைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவுக்கு உதவியளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி.
இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஜேர்மனியும் ஐப்பானும் எழுச்;சிபெற ஐக்கிய நாடுகள் சபையும் மேற்குலக நாடுகளும் வழங்கிய ஒத்தழைப்பு போன்று ஒத்துழைப்பை சிறிலங்காவுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
சர்வதேச நிதி உதவிகள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக வழங்கக்கூடாது.
இதற்குரிய சகல ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கு பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கும் குற்றச்;சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை.
சர்வதேச தேர்தல் விதிகளுக்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்கள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த தேவையில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஜே.வி.பியினர் 1987களில் இலங்கைக்கு இந்தியப் படை வருகை தந்த போது அந்நிய படைகளின் ஆக்கிரமிப்பு என அதனை விமர்சித்த ஜே.வி.பியினர் அதற்கு தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை நினைவு கூரத்தக்கது.
நன்றி நிதர்சனம்

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>