Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹிந்தி கனவு கன்னி நடிகை பர்வீன்பாபி `மர்ம' சாவு
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20050123/babi.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40750000/jpg/_40750157_babi203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40750000/jpg/_40750159_babi66.jpg' border='0' alt='user posted image'>

இந்தி பட உலகின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த
நடிகை பர்வீன்பாபி `மர்ம' சாவு
வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்


மும்பை, ஜன.23-

இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்த நடிகை பர்வீன்பாபி மர்மமான முறையில் வீட்டுக்குள் பிண மாக கிடந்தார்.

நடிகை பர்வீன்பாபி

இந்தி சினிமா பட உலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர் களின் கனவு கன்னியாக திகழ்ந் தவர் நடிகை பர்வீன்பாபி, தீவர், நமகாலால் மற்றும் அமர்அக்பர் அந்தோணி ஆகிய சினிமா படங் களின் மூலம் இந்தி சினிமா உலகில் புகழின் உச்சியில் இருந்த வர் அவர்.

மும்பையில் ஜுகு என்ற இடத் தில் இவரது வீடு இருக்கிறது. கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவு அருகே பால்பாக்கெட், பத்திரிகைகள் எடுக்கப்படாமல் கிடந்தன. பக் கத்து வீடுகளில் இருந்தவர்கள் இதைப்பார்த்து போலீசுக்கு தக வல் கொடுத்தார்கள்.

`மர்ம' சாவு

உடனே போலீசார் விரைந்து சென்று, நடிகை பர்வீன்பாபி வீட்டு கதவை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே போனார்கள். உள்ளே அவர் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் எப்படி செத்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவருக்கு வயது 50. மன நோயால் பாதிக்கப்பட்ட நடிகை பர்வீன் பாபி, வெளிநாடு சென்றார். அங்கு 10 ஆண்டுகள் இருந்த பின்னர், 3 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை திரும்பி வந்தார். அரச பரம்பரையை சேர்ந்த ஜுனாகட் நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் அவர். முக்கியமான வேடங் களில் நடிப்பதை விட, கவர்ச்சி கதாநாயகியாக அவர் அனைவ ராலும் பெரிதும் கவரப்பட்டவர்.

அமிர்தாப்பச்சனுடன் நடித்தார்

கடந்த 1973-ம் ஆண்டு இந்தி சினிமாவில் நடிக்கத் தொடங் கினார். சமுத்ராஹீன் அவரது முதல் படம் அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துர்ரானியுடன் முக்கிய வேடத் தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சஞ் சய் கானின், `சண்டி சோனா' என்ற படத்தில் நடித்தார்.

பின்னர் தீவார் படத்தில் கவர்ச்சியாக அமிர்தாப்பச்சன், சசிகபூர் ஆகியோருடன் நடித் தார். இந்தி சினிமா உலகில் டைரக்டர் மகேஷ் பட், நடிகர்கள் டன்னிடென் ஜோங்பா, கபிர் பேடி ஆகியோர்களுடன் தொடர்பு படுத்தி நடிகை பர்வீன்பாபி பேசப்பட்டார். 1990-ம் ஆண்டு திடீரென்று வெளிநாடுசென்ற அவர் 10 ஆண்டுகளாக அங்கேயே தங்கி விட்டார்.

அமிர்தாப்பச்சன் மீது புகார்

தன்னை நடிகர் அமிர்தாப்பச் சன் மற்றும் வெளிநாட்டில் உள்ள சிலர் கொலை செய்ய முயன்றதாக மும்பை கோர்ட்டில் அவர் புகார் செய்திருந்தார். ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை என்று கூறி அவரது மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரது ஜுகு வீட்டில் தனி யாக வசித்து வந்தார். படங்கள் வரைவது, வீடுகளில் உள் அலங் காரம் செய்வது அவரது பொழுது போக்கு அம்சங்கள். இந்தநிலை யில் நடிகை பர்வீன்பாபி மர்ம மான முறையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

அவர் நடித்த ஒரு சிறிய காட்சியும் BBCயின் செய்தியும். பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்

http://news.bbc.co.uk/media/news_web/video...689_nb_16x9.asx
[url][/url]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)