Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரயில் விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு
#1
ரயில் விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு
கோவா: இந்தியாவில் ரயில் விபத்துக்களை 100 சதவீதம் தடுக்கும் நோக்கத்தில் "ரக்ஷா கவசம்' என்ற பெயரில் புதிய கருவி ஒன்றை இந்திய ரயில்வே கண்டுபிடித்துள்ளது. முதற்கட்டமாக இந்தக் கருவி கொங்கன் ரயில் பாதையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரயில் விபத்து என்றாலே மக்கள் மொத்தம் மொத்தமாக உயிரிழக்கும் சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்து வந்தன. இனி அதுபோன்ற துயரங்கள் நடக்காத வகையிலும், ரயில் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்கும் வகையிலும் "ஏ.சி.டி.,' என்ற புதிய கருவியை இந்தியாவின் கொங்கன் ரயில்வே தயாரித்து சாதனை படைத்துள்ளது. "ஆண்டி கொலிஷன் டிவைஸ்' எனப்படும் இக்கருவிக்கு உலகம் முழுவதும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. "ரக்ஷா கவசம்' என்றழைக்கப்படும் இக்கருவி அனைத்து ரகமான ரயில் விபத்துக்களையும் தடுக்கும் சக்தி படைத்தது. ரயில் ஓட்டுனருக்கு தோழனாக இருக்கும் இந்தக் கருவி மூன்று கிலோ மீட்டர் வரை ரயில் பாதையை பார்க்கும் திறன் படைத்தது. ரயில் பாதையில் வேறு ஏதேனும் ரயில் வந்து கொண்டிருந்தால் எளிதாக கண்டுபிடித்து விடும். வளைவுகளில் திரும்பும்போது விபத்து ஏற்படாத வகையில் வேகத்தை தானாகவே குறைத்துக் கொள்ளும். அபாயகரமான இறக்கங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். ரயில் பாதையில் வேறு ஏதாவது ரயில் விபத்து நேர்ந்து கவிழ்ந்து கிடந்தாலும் அதனைக் கண்டறிந்து வேகத்தைக் குறைக்கும் திறன் படைத்தது.

ரயில்வே "கேட்' திறந்து கிடந்தாலும் கண்டறிந்து வேகத்தை குறைத்துக் கொள்வதுடன் ரயில் ஓட்டுனரையும் எச்சரிக்கும் திறன் படைத்தது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களுடன் "மைக்ரோபிராசசர்' உதவியுடன் இக்கருவியை கொங்கன் ரயில்வே தயாரித்துள்ளது.

இக்கருவியை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கருவி குறித்து தெரிந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரயில்வே நிர்வாகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. முதல் கட்டமாக இந்த கருவி கொங்கன் ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்பிறகு நாடு முழுவதும் உள்ள நீண்ட ரயில் பாதைகளில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னைஜோலார்பேட்டைஈரோடுபாலக்காடுஷொரனுõர்எர்ணாகுளம் பாதையில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது

நன்றி தினமலர்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)