01-25-2005, 12:59 PM
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/25/others/C125_jjaaaaa.jpg' border='0' alt='user posted image'>
கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பையனுர் பண்ணை வீட்டை படத்தில் காணலாம்
மாமல்லபுரம், ஜன. 25- ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் இடம் பெற்ற ஜெயலலிதாவின் பையனு}ர் பண்ணை வீட்டில் கதவை உடைத்து விலை உயர்ந்த பொருள்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான பையனு}ர் பங்களாவையும், சிறிதாவூரில் ஒரு பங்களாவையும் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா ஆகியோர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வாங்கினர். அரசியல் ரீதியாக ஜெ.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் பையனு}ர் பங்களாவுக்கு ஜெயலலிதா வந்து முக்கிய முடிவுகள் எடுத்து செல்வது வழக்கம்.
மேலும் ஜெ-சசி இருவரும் இப்பங்களாவுக்கு ரகசியமாக வந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். எனவே இது ராசியான இடமாக கருதப்பட்டது. 96 தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் இப்பங்களா ராசியில்லாத பங்களாவாக மாறியது. ஜெயலலிதா மீதுள்ள ரூ.66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கிலும் இந்த பங்களா இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக பங்களா கேட்பாரற்று கிடந்தது. பெயருக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஒழுங்காக சம்பளம் தரப்படாததால் ஏனோ தானோ என இருந்த தாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சிலர் அந்த பங்களாவினுள் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ புகுந்து பங்களா கதவு பூட்டை உடைத்து அங்கிருந்த ஏ.சி மிஷின், டி.வி., சி.டி.க்கள், பிளேயர், பிரிட்ஜ; உள்பட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பங்களாவின் வரவேற்பு அறை அலங்கோலமாக காட்சி அளித்தது. கொள்ளை போன ரொக்கம், பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை. கொள்ளை போன பொருட்கள், பணம் பற்றிய விவரம் சரிபார்க்கப்படுவதாக பரபரப்பாக கூறப்படுகிறது.
கொள்ளை பற்றிய தகவல் அறிந்ததும் ஜெயலலிதாவும், சசிகலாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுதாவூர் பங்களா சீரமைப்பு பணியை பார்க்க வந்த சசிகலா பையனு}ர் பங்களாவையும் பார்த்து செல்ல முடிவெடுத்து அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சசிகலா தற்போது பையனு}ர் பங்களாவை ஒப்பந்த அடிப்படையில் சீரமைப்பு செய்யும் நிர்வாகி சோலையிடம் இதை தெரிவித்து போலீசில் புகார் செய்ய கூறியுள்ளார்.
அவரது புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் பையனு}ர் கிராமத்திற்கு சென்று 20 பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறhர்கள். இதை அறிந்த ஊராட்சி தலைவர் சேகர், காவல் நிலையம் சென்று, எதற்காக அப்பாவி களை பிடித்து வந்தீர்கள். உண்மை குற்றவாளிகளை தேடி கண்டுபிடியுங்கள் என கூறி 12 பேரை விடுவித்து அழைத்து சென்றுள்ளார். இருப்பினும் பையனு}ரை சேர்ந்த காண்டீபன், குமார் உள்பட 7 பேரை பிடித்து ரக சியமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவிலேயே மர்ம ஆசாமிகள் புகுந்து கொள்ளை அடித்து சென்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முதல்வர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் போலீசாரும் கலக்கம் அடைந் துள்ளனர். ஒரு பக்கம் கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை பிடிக்க கோரி வருகின்றனர். மற்றெhரு பக்கம் சசிகலா, நான் சொல்லும் வரை யாரையும் விடக்கூடாது என போலீசாருக்கு கட்டளையிட்டு உள்ளதாக தெரிகிறது.
கொள்ளை நடந்த பையனு}ர் பங்களாவுக்கு முன்பு அரசு நடுநிலைப் பள்ளி இருந்தது. தற்போது உயர்நிலைப் பள்ளியாக மாறியது. ஆரம்பத்தில் ஜெ. -சசி காரில் வரும்போது இந்த பள்ளி வழியாகத் தான் வரவேண்டும். இது ஜெ- சசிக்கு தொந்தரவாக இருந்தது. இதனால், கிராம மக்களிடம் பேசி இந்த பள்ளியை வேறு இடத்தில் நல்ல கட்டிட வசதிகளுடன் கட்டி தருகிறேன். உயர்நிலைப் பள்ளியாக மாற்றி தருகிறேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை நிறைவேற்றhமலே இருந்துவிட்டார்.
இப்பள்ளி வளாகத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால் விளையாடுவார்கள். எனவே அவர்கள்தான் ஆள் இல்லாததை நோட்டம் பார்த்து பங்களாவில் புகுந்து திருடி சென்றிருக்கலாம் என கருதி அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறhர்கள்.
சுனாமி வந்த அன்றும் இங்கு கொள்ளை நடந்து உள்ளது. ஆனால் நேற்று நடந்த கொள்ளைதான் வெளியே தெரிந்து உள்ளது. இதில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வி.சி.டியை திருடி வெறும் ரூ.3 ஆயிரத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டு , அதை போலீசார் மீட்டு உள்ளனர்.
Source : Dinakaran

hock: :roll: