01-25-2005, 01:19 PM
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு வெள்ளவத்தை 33வது ஒழுங்கைமுகப்பில் காலிவீதியில் நேற்றிரவு 9.45 மணியளவில் காளிக்கொடி ஜெகதீஸ்வரன் (ஜெகன்) வயது 32 சுடப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட இவர் வவுனியாவில் திருமணம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை பொலிஸ்நிலையத்திற்கு சமீபமாக சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள சைவக்கடை ஒன்றின் முன்பாகவே இச்சூட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டின்போது படுகாயமடைந்த இவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.