01-26-2005, 03:22 PM
Microsoft இன் ஏகபோகத்திற்கெதிராக 497 மில்லியன் யூரோ தண்டம்
வின்டோஸ் பல்லூடக இயக்கி (Windows Media Player) தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய சர்ச்சைகள் ஏற்கனவே தெரிந்தவிடயம்.
இப்பொழுது புதிய செய்தி என்னவெண்ன்றால், இவ்வளவு காலமும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கெதிராக அப்பீல் செய்யும் உரிமையை பயன்படுத்தப்போவதாக அறிக்கை விட்ட மைக்ரோசொப்ட், அப்பீல் எதுவும் செய்யாமல் பின்வாங்கியிருப்பதுதான்.
இந் நீதிமன்ற ஆணைக்கெதிராக அப்பீல் செய்வதில்லையென மைக்ரோ சொப்ட் முடிவெடுத்துள்ளது. இனி மைக்ரோசொப்ட், தனது இயக்குதளமான வின்டோஸ் இனை, Windows Media Player சேர்க்கப்படாத நிலையிலேயே பொதி செய்து வழங்க வேண்டியிருக்கும்.
இவ்வாணையை செயற்படுத்துவதற்கான காலக்கெடு கடந்த மார்கழியோடு முடிவுக்கு வந்துவிட்டது.
எதிர்வரும் வாரங்களில் வின்டோசின் பல்லூடக இயக்கி நீக்கப்பட்ட நிலையிலான புதிய பதிப்பு வெளிவரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40130000/jpg/_40130992_microsoft-box203ap.jpg' border='0' alt='user posted image'>
இச்சர்ச்சையின் பின்னணி, மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட், தனது ஏகபோகத்தை மென்பொருள் சந்தையில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதுதான். தனது இயக்குதளத்தோடு தனசு சொந்தபல்லூடக இயக்கியை பொதி செய்து வழங்குவதன்
மூலம் முறை கேடான வழியில், தனது போட்டிச் செயலிகளான Real Player, Quicktime Player போன்றவற்றை ஓரங்கட்ட மைக்ரோசொப்ட் முயற்சிக்கிறது.
இன்றைய தனி நபர் கணினிகளில், பத்துக்கணினிகளுக்கு ஒன்பது கணினிகள் வின்டோஸ் இயக்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
இச்சந்தை நிலையினை, தனது போட்டி நிறுவனங்களை தோற்கடிப்பதற்கு மைக்ரோசொப்ட் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதம்.
இக்குற்றத்திற்கு தண்டமாக , வியாபாரப் போட்டி வழக்குகளின் வராற்றிலேயே மிக அதிக தொகையான 497 மில்லியன் யூரோ இதற்கான தண்டமாக பங்குனி 2004 இல்
விதிக்கப்பட்டது. வின்டோசினை நிரலவிழ்ப்பு செய்யவேண்டு மென்ற ஆணையும் மேலதிகமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டி நிறுவனங்கள், போட்டிச் செயலிகளை வடிவமைப்பதினை இலகுபடுத்தும் வகையில், தனது வின்டோஸ் மென்பொருளின் ஆணைமூலம் பற்றிய தகவல்களை வெளியிடவேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தான் ஏற்கனவே, வின்டோஸ் மேசைச்சூழலோடு சிறப்பானமுறையில் பணியாற்றும் மென்பொருட்களை வடிவமைப்பதற்கான தகவல்களை வழங்குவதற்கென
சிறப்பான வலைத்தளம் ஒன்றினை உருவாக்கியிருப்பதாக மைக்ரோசொப்ட் கூறுகிறது.
இவ்வ்ழக்கினை, வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான சந்தைபிடிக்கும்
போட்டாபோட்டியின் விளைவுகளில் ஒன்றாகத்தான் பார்க்கமுடியுமே தவிர, தொடுக்கப்பட்ட வழக்கு, சமூக விழிப்ப்ணர்வோடு, மக்கள் நிலை நின்றுதான் தொடுக்கப்பட்டது என்று நம்புவதற்கில்லை.
அரசியலிலும் சரி , வர்த்தகத்திலும்சரி, அமரிக்க ஏகாதிபத்தியத்துக்கு
சவாலாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றுச்சக்தியாக உருவெடுத்துவருவது தெளிவாகவே அவதானிக்கக்கூடிய விடயம்தான்.
மாற்று என்பது ஒரு பேட்டை ரவுடிக்கு பதிலாக இன்னொரு பேட்டை ரவுடி என்றளவிதான் இருக்கிறதேதவிர வேறொன்றுமில்லை.
எவ்வாறெனினும் ஏகபோகமும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படுவது மக்களுக்கு நன்மைபயக்கும். சைபர் அரசியலின் வரலாற்றில் இவ்வழக்கு மிக்கியத்துவமுள்ளதாய்ப் படுகிறது. சைபர் அரசியலின் மக்கள்நிலை முனைப்புகளின்பால் நாமெல்லோரும் புரட்சிகரமாக
திரும்பவேண்டிய காலமும் நெருங்கிவருகிறது.
(செய்தி ஆதாரம் BBC செய்தித்தளம்)
Thanx: mauran

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

:|
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->