Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
60 மாதங்கள் அமெரிக்க சிறையில் வாடிய ஈழத்தமிழ் இளைஞன் விடுதலை
#1
அமெரிக்காவிற்கு அகதியாக சென்ற ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் உட்புக முயற்சித்தார் என்ற காரணத்திற்காக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
அகிலன் நடராஜன் என்கின்ற 25 வயதுடைய இந்த இளைஞர் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.
யாழ். குடாநாட்டைச் சேர்ந்த அவரை விடுதலைப் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அரச படையினர் தன்னை சித்திரவதை செய்யததுதான் அமெரிக்கா வரக் காரணம் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர் மீது எதுவித குற்றச்சாட்டுக்களையும் தாக்கல் செய்யாது விசாரனை என்ற அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளால் நேற்று வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரது வழக்கினை விசாரித்த நீதிபதி, அமெரிக்க உயர் நீதிமன்ற ஆய்வுகளுக்கமைய அவரது சிறைவாசம் அமெரிக்க சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழமையாக இத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை 6 மாத காலம் வரையே சிறையில் அடைக்க சட்டம் அனுமதித்திருந்தும் தமிழ் இளைஞர் 60 மாதங்கள் சிறையில் இருந்தது வேதனைக்குரியது; எந்தவிதமான காரணங்களாலும் இத் தண்டனையை நியாயப்படுத்த முடியாது என்று அவர் தனது தீர்ப்பில் மேலும் கூறியுள்ளார்
http://www.eelampage.com/?cn=24855
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)