Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
சூரிய சக்தி கார்
<img src='http://www.jayatvnews.org/news-photos/solar-web.jpg' border='0' alt='user posted image'>
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையத் சஜ்ஜாத் அகமது என்பவர் சூரிய சக்தியினால் இயங்கும் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிருத்வி - 2005 என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு புதிய கண்டுபிடிப்பு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. சையத் சஜ்ஜாத் அகமது என்பவர் வடிவமைத்துள்ள சூரிய சக்தியினால் இயங்கும் கார் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தக் காரை இயக்க, கிலோ மீட்டருக்கு 20 பைசா செலவாகும் என்று சையத் அகமது தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் சூரிய ஒளியினால் இயங்கும் இந்தக் காரின் விலை 25 ஆயிரம் ரூபாய் என்றும் அவர் கூறியுள்ளார்.
Jaya news
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இங்கிலாந்து இளவரசருக்கு அரசாங்க மரியாதை இல்லை - அமெரிக்கா
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், கமீலா பார்க்கஸை திருமணம் செய்த பின் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சார்லஸ்-கமீலா பார்க்கஸ் தம்பதியினர்க்கு வெள்ளைமாளிகையில் அரசாங்க மரியாதை வழங்க முடியாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இளவரசி டயானாவை அமெரிக்க மக்கள் இன்னும் மறக்காமல், நன்மதிப்பு வைத்துள்ளதால்,
சார்லஸ்-கமீலா தம்பதியினர்க்கு அரசாங்க மரியாதை அளிக்க இயலாத சூழ்நிலை நிலவுவதாக அமெரிக்க நிர்வாகம், இங்கிலாந்து அரண்மனைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.
வணக்கம்மலேசியா
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் Melbourne அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்த 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் காத்திருந்த அப்பயணிகளுக்கு திடீரென்று மயக்கம், மூச்சுதிணறல்,
வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லையென மூத்த அதிகாரியான Brooke Lord தெரிவித்தார். இரசாயன வாயுக்கசிவால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வணக்கம்மலேசியா
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வானம்பாடிக்கு ஒரு உலகமா.. சரி சரி நான் என்னவோ என்று நினைச்சன்.. தொடருங்கோ.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
:twisted: :twisted: தனிப்பட்முறை யில உட துறக்கலாமோாாா :mrgreen: :mrgreen: :mrgreen:
இல்லை கொஞ்சம் முதல் ஏதோ சொன்னது போல இருந்தது
:wink: :wink: :wink:
[b]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->:twisted: :twisted: தனிப்பட்முறை யில உட துறக்கலாமோாாா :mrgreen: :mrgreen: :mrgreen:
இல்லை கொஞ்சம் முதல் ஏதோ சொன்னது போல இருந்தது
:wink: :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்பு
தனித்தனிப்பு தலைபுக்களை திறந்து சின்ன சின்ன தாக வித்தியாசமான உலகில் நடக்கும் விடையங்களை வைக்காமல் ஒரே தலைப்பின் கீழ் வானம்பாடியின் உலகம் என அவர் மிக அருமையாக கருத்து வைக்கிறார்.
வானம்பாடி கருத்துக்களை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.... வானம்பாடியின் உலகம் வானளாவ வளர என் வாழ்த்துக்கள். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-2-2005/22charles.jpg' border='0' alt='user posted image'>
சார்லஸ் -கமீலா ஜோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி திடீர் தடை
லண்டன், பிப்.22-
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் திருமணத்துக்குப் பிறகு புதுமனைவி கமீலா வுடன் அமெரிக்கா செல்ல இருக்கிறார். கமீலா விவாக ரத்து செய்தவர் என்பதால் அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைய ஜனாதிபதி புஷ் தடை விதித்து இருக்கிறார்.
இளவரசர் சார்லஸ் தன் மனைவி டயானாவை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு ஒரு விபத்தில் டயானா இறந்து போனார். திருமணத்துக்கு முன்பே கமீலா பார்க்கரைக் காதலித்துவந்த சார்லஸ், அவரை வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொள்ளஇருக்கிறார்.
திருமணத்துக்குப்பிறகு முதல் முறையாக இளவரசர் புதுமனைவியுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார். சார்லஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வது கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது.
அமெரிக்கா செல்லும் சார்லசை வரவேற்று வெள்ளை மாளிகையில் விருந்து கொடுக்கவும் புஷ் திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் சார்லஸ்_ கமீலா திருமணம் முடிவானது.
திருமணத்துக்குப்பிறகு மனைவியையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா செல்ல சார்லஸ் விரும்பினார்.
ஜனாதிபதி புஷ் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு உடையவர். வலதுசாரி எண்ணம் கொண்டவர். அவரால் கருக்கலைப்பு விவாகரத்து ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. விவாகரத்து செய்த கமீலாவை வரவேற்று வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது பொருத்தமற்றது என்று புஷ் தன் உதவியாளர்களிடம் கூறினார்.
மேலும் கமீலாவை வரவேற்று விருந்து கொடுப்பதை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் புஷ் கருதுகிறார்.
இளவரசி டயானாவை அமெரிக்க மக்கள் இன்னமும் நேசிக்கிறார்கள். இளவரசருடன் டயானா மண வாழ்க்கை முறிந்ததற்கு கமீலாதான் காரணம் என்று அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். எனவே கமீலாவை வரவேற்பது அமெரிக்க மக்களின் எண்ணத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று புஷ் அஞ்சுகிறார்.
இதனால்தான் கமீலாவை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பது இல்லை என்று புஷ் தீர்மானித்து இருக்கிறார்.
புஷ்சின் இந்த முடிவு இங்கிலாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது சார்லஸ்-கமீலா ஜோடிக்கு வருத்தத்தை அளித்து உள்ளது. அதனால் சார்லஸ் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்வாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஆபரேசன் மூலம் கால்கள் பிரிக்கப்பட்ட குழந்தை
பெரு நாட்டின் லிமா நகரில் 2 கால்களும் ஒட்டிய நிலையில் பிறந்த குழந்தையின் கால்களை டாக்டர்கள் ஆபரேசன் செய்து பிரித்தனர்.
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-2-2005/22child.jpg' border='0' alt='user posted image'>
கால்கள் தனியாக பிரிக்கப்பட்ட அந்த 10 மாத குழந்தை மிலாகிராஸ் இப்போது உடல்நிலை தேறி வருகிறது. அந்த குழந்தையின் பெற்றோர் ரிச்சார்டோ மற்றும் சாரா ஆகியோர் அதை தூக்கி வைத்திருக்கும் காட்சி
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
கணவர் குணமானதால் நேர்த்திக்கடன்: கழுத்தை அறுத்து உயிர்விட்ட பெண்
நகரி, பிப். 22-
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத் தூரை அடுத்த நிவகாம் பகு தியை சேர்ந்தவர் ஆனந்தராவ் (வயது48). இவரது மனைவி லட்சுமிகுமாரி (45).
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆனந்தராவ் நோயின் பிடியில் சிக்கி படுத்த படுக் கையானார். இதனால் பயந்து போன லஷ்மிகுமாரி அங் குள்ள நீலாத்ரிஅம்மன் கோவி லுக்கு சென்று மணிக்கணக் கில் அமர்ந்து பூஜை செய்தார். அப்போது கணவர் குணம டைந்தால் தனது கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்து வதாக வேண்டினார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த ராவ் குணமடைந்தார். படுக் கையை விட்டு எழுந்த அவர் தனது வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த லஷ்மிகுமாரி காலையில் நேராக அம்மன் கோவிலுக்குச் சென்றார். சிலமணி நேரம் பூஜை செய்த அவர் திடீரென "தாயே என் கணவரை குணப் படுத்தியதற்காக தலையை உனக்கு காணிக்கை செலுத்து கிறேன்" என்றபடியே கத்தி யால் தனது கழுத்தை அறுத் தார்.ரத்தவெள்ளத்தில் அல றியபடியே அம்மன்சிலை முன்பு விழுந்த அவர் சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
மதிய வேளையில் அந்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்கள் லஷ்மிகுமாரி அம்மன் சிலை முன்பு பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கோவிலில் சோதனை நடத்தியபோது லஷ்மிகுமாரி தனது கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அவர் கூறி யிருப்பதாவது:_
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நீங்கள் நோயால் படுத்த படுக்கையாக இருந்தபோது நீலாத்ரி அம்மனிடம், நீங்கள் குணமடைந்தால் என் கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டி னேன். அதனால் அம்மன் உங்களை குணமாக்கி இருக் கிறார்.
நான் வேண்டிக்கொண்ட படிதற்போது அம்மனுக்கு கழுத்தை அறுத்து காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் முடித்து விட்டேன்.
இனி நீங்கள் மகன்கள் ஸ்ரீதர், பிரவீன், மகள் ராஷ்மி ஆகியோரை நன்றாக கவனித் துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நமது கிராமத்து தேவதையான நீலாத்ரி அம்மன் துணையாக இருப்பாள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நேர்த்தி கடன் செலுத் துவதற்காக அம்மன் கோவிலில் லஷ்மிகுமாரி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
காதலியை கைவிட்டார்
இளவரசர் ஹாரி
லண்டன், பிப். 22_
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, 19 வயது காதலி செல்சியை கைவிட்டுவிட் டார். ஆனால் காதலரை மறக்க முடியாமல் செல்சி கண்ணீர் விட்டு அழுதார்.
19 வயது செல்சி
இங்கிலாந்து ராணி எலிசபெத் தின் மூத்த மகன் சார்லஸ். இவ ருக்கும் டயானாவுக்கும் பிறந்த
2 மகன்களில் இளையவர் ஹாரி.
20 வயதான ஹாரி, செல்சி டேவி என்ற 19 வயது பெண் ணைக் காதலித்தார். காதலி யுடன் அவர் சுற்றினார். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, காதலியையும் அங்கு வர வழைத்து அவருடன் சந்தோஷ மாக பொழுது போக்கினார்.
அவரைத்தான் ஹாரி திரு மணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகள் எழுதின.
கைவிட்டார்
இந்த நிலையில், காதலைக் கைவிடும்படி குடும்பத்தில் இருந்து எழுந்த வற்புறுத்தலால் அவர் செல்சியை கைவிட்டார்.
இளவரசர் ஹாரி செல்சிக்கு டெலிபோன் செய்து என்னை மறந்துவிடு என்று கூறி காதல் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
குடிக்கத் தொடங்கினார்
இதனால் மனம் உடைந்த செல்சி, ஹாரியை மறக்க முடி யாமல் குடிக்கத் தொடங்கிவிட் டார் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
கடைசியாக ஒருமுறை ஹாரியை சந்திக்க அனுமதிக் கும்படி கோரி அவர் இளவரசர் சார்லசுக்கு கடிதம் எழுதி இருப் பதாகவும் நண்பர்கள் தெரிவித் தனர்.
எதைப்பற்றியும் லட்சியம் செய் யாமல் எந்த நேரமும் ஹாரியை நினைத்துக் கொண்டே இருக்கி றார். ஹாரியை நினைத்து அழுது, அழுது அவர் கண்கள் சிவந்து போய்விட்டன என்றும் அவர் கள் கூறுகிறார்கள்.
தினதந்தி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
சீனாவின் புதிய முயற்சி
இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க சீனா தீர்மானித்து இருக்கிறது. வருகிற மே மாதம் இதற்கான பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "பூமியின் தட்பவெப்ப மாற்றம் காரணமாக எவரெஸ்டு சிகரத்தின் உயரம் கணிசமாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே, அதன் உயரத்தை மீண்டும் அளந்து பார்க்க தீர்மானித்து இருக்கிறோம்" என்று சீன அதிகாரிகள் தெரி வித்தனர்.
தினதந்தி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஈரானில் நிலநடுக்கத்தால் 400 பேர் பலி
ஈரானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 400 பேர் வரை பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், பல கிராமங்கள் அடியோடு தரைமட்டமாகியுள்ளன. இதுவரை 80 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. கெர்மன் மாநிலத்திற்கு 56 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
ஈரானின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் சுடு மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் தான் என்பதால் அவை சிறிய நிலஅதிர்வுகளையும் தாங்குவதில்லை. இதனால் நிலநடுக்கங்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களின் அளவு இந்நாட்டில் அதிகமாகவே உள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரி ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது. ரிக்டர் கோலில் 6.6 என்ற அளவுக்கு அந்த நிலநடுக்கம் பதிவானது.
vanakkammalaysia
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கணவர் குணமானதால் நேர்த்திக்கடன்: கழுத்தை அறுத்து உயிர்விட்ட பெண்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்னத்தை சொல்ல
[b][size=18]
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பிப்ரவரி 23, 2005
மைசூர் சிறையில் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
மைசூர் சிறையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள (வீரப்பனுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டவர்கள்) 50 தமிழ்க் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ் நாய்கள் என்ற அடைமொழியுடன் இவர்களை அழைக்கும் ஜெயிலர்கள் முறையாக உணவு கூட தராமல் தாக்கி வருகின்றனர். ஆண், பெண் கைதிகளின் செக்ஸ் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது கொடுமைகளும் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் கர்நாடக அரசு, அந்த ஜெயிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக தெரிய வந்தாலும் தமிழக அரசும் மௌனமே சாதித்து வருகிறது.
இந் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகினார் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவர் அனுப்பிய புகாரில்,
மைசூர் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை கன்னட மொழி பேசும் ஜெயிலர்கள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆனால் அந்த அதிகாரிகள் மீது இதுவரை சிறை நிர்வாகம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
இந்த சித்திரவதை குறித்து நக்கீரன் உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்க் கைதிகளை மிகக் கொடுமையாக தாக்குவதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. (கன்னட கைதிகளை விட்டுத் தாக்குவது).
எனவே தமிழர்களின் உயிரைக் காக்க மனித உரிமை ஆணையம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும். 50 பேரின் உயிர்களையும் மனித உரிமைகளையும் காக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராதாகிருஷ்ணன்.
இந்த மனுவை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
மதுரையில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒரே நாளில் 12 கோவில்கள் தரைமட்டம்
மதுரை:
மதுரையில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரமாக மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக மதுரை நகரின் சாலைகள் அகலமாகியுள்ளன, பல தெருக்களும் அகலமாகியுள்ளன. மதுரை நகரமே விசாலமாகி வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 12 சாலையோர கோவில்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இவற்றில் பல கோவில்கள் மாரியம்மன், பிள்ளையார் கோவில்களாகும்.
செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மன் கோவில்கள் இடிக்கப்பட்டதால் பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். நாளைக்கு வந்து இடித்து விட்டுப் போங்களேன் என்று அவர்கள் அதிகாரிகளிடம் கோரினர். ஆனாலும் தங்களது கடைமையைத்தான் செய்வதாக கூறிய அதிகாரிகள் கோவில்களை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளினர்.
பல இடங்களில் கோவில்களில் இருந்த பொருட்களை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே எடுத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற உதவினர்
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/oddnews/C161_calcul.jpg' border='0' alt='user posted image'>
கழிப்பறையில் இசைபாடும் கருவியினை பெண் ஒருவர் அறிமுகப்படுத்தும் காட்சி.
கழிப்பறைக்கு வருபவர்களுக்கேற்ப இசைபாடும் கருவியினை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஒரு நிறு வனம், குஷியாக கழிப்பறைக்கு சென்று வரும் புதிய முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள் ளது. இந் நிறுவனம் …இசட் சீரிஸ் என்ற பெயரில் புதிய கழிப்பறை சாதனங்களை தயாரித்து உள் ளது. இந்த கருவிகள் கழிப் பறைக்கு வரும் மனிதரின் மனநிலைக்கு தக்கவாறு செயல் படுமாம். கழிப்பறைக்கு வரும் நபர் சோகமாக இருந்தால், அவரது சோகம் மறைய இனிமையான இசைகளை பாடும். மேலும் வசந்த காலம், வேனிற்காலம், பனிக் காலம், மழைக்காலம் ஆகிய நான்கு காலத்திற்கும் ஏற்றாற் போல் இனிமையான நறுமணங் களையும் வெளியிடு மாம்.
தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/oddnews/C160_car.jpg' border='0' alt='user posted image'>
தூங்கும் டிரைவரை தட்டி எழுப்பும் காரை படத்தில் காணலாம்.
கார் ஓட்டும் போது டிரைவர் தூங்கி விட்டால் அவரை உஷார்படுத்தும் வகையில் புதிய காரை சுவிட்சர்லாந்து என்ஜினீர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த என்ஜினீயர்கள் அதிநவீன கார் ஒன்றை தயாரித்து உள்ளனர். இந்த கார் டிரைவரின் மனநிலை, உடல்நிலைக்கு ஏற்ப செயல்படுமாம். டிரைவரின் இதய துடிப்பு அதிகமாக இருந் தால், அவரை அமைதிப்படுத்தும் வகையில் இனிமையான இசை எழுப்பும், காரின் நிறத்தை மாற்றும், நறு மணங்களை வெளியிடும். மேலும் காரை ஓட்டும்போது டிரைவர் தூங்கினால் சீட்டை உலுக்கி அவரை தட்டி எழுப்பும். இந்த அதிநவீன கார் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது. விலை ரூ.13 லட்சம்.
தினகரன்
-------------------------
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
சார்லஸ் - கமீலா திருமணம்; ராணி எலிசபெத் புறக்கணிப்பு
லண்டன், பிப். 23-
வின்ட்ஸ்டர் பகுதியில் உள்ள கில்ட் மண்டபத்தில் இந்த திருமணம் நடக்கிறது. மிகவும் எளிமையாக இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். பொதுமக்களும் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் திருமண நிகழ்ச்சிக்கு சார்லசின் தாயார் ராணி எலிசபெத் வர மாட்டார். பக்கிம்ஹாம் அரண்மனை வட்டாரம் இதை தெரிவித்துள்ளது.
திருமணம் முடிந்தபிறகு புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதுமண ஜோடி பிரார்த்தனை மற்றும் பாதிரியார் ஆசி வழங்கும் நிகழ்ச்சியிலும் அதை தொடர்ந்து புதுமண ஜோடிக்கு வரவேற்பு நிகழ்ச் சியிலும் ராணி எலிசபெத் கலந்து கொள்வார். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சார்லஸ் திருமணத்துக்கு அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் வந்திருந்து தனது தந்தையின் திருமணத்தை கண்குளிர பார்ப்பார்கள். மணமகள் கமீலாவின் குழந்தைகளும் இந்த திருமணத்துக்கு வருகிறார்கள்.
மாலைமலர்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
|